உணவு மற்றும் ஹோட்டல் இந்தியா 2019இன் அற்புதமான துவக்கம்
- இந்தியாவின் நிஜமான சர்வதேச தரமிக்க உணவு மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி வர்த்தக நிகழ்ச்சி
- 18 – 20 செப்டம்பர், 2019; The Bombay Exhibition Centre, மும்பை
மும்பை, Sept. 23, 2019 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரான Informa Markets in India (இதற்கு முன்பு UBM India), Food & Hotel India Expo (FHIn)இன் 2வது நிகழ்ச்சியைத் துவங்கியது. இது இன்று மும்பையில் உள்ள Bombay Exhibition Centreஇல் நடைபெற்ற உணவு, பானம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையின் B2B மேடையாகும்.
இந்தக் கண்காட்சியை மாண்புமிகு விருந்தினர் Mr Anurag Katriar, தலைவர், NRAI துவங்கிவைத்தார். பிற மாண்புமிகு விருந்தினர்களில் Mr. Param Kannampilli, சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் Concept Hospitality; சிறப்பு விருந்தினர் Chef Manjit Singh Gill – கார்ப்பரேட் செஃப் ITC & தலைவர் IFCA; Mr. Thomas Schlitt, MD, மெஸி டஸெல்டோர்ஃப் இந்தியா; Mr. Pankaj Shende, சீனியர் போர்ட்ஃபோலியோ டைரக்டர், இந்தியாவில் உள்ள Informa Markets மற்றும் Mr. Abhijit Mukherji, க்ரூப் டைரக்டர், இந்தியாவில் உள்ள Informa Markets ஆகியோர் ஆகஸ்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.
மூன்று நாள் சம்மேளனத்தின் முதல் அமர்வில் பங்கேற்ற Subhajit Mazumder, இயக்குநர் (டிரான்ஸ்ஃபர்மேஷன்: கஸ்டமர் & ஆப்பரேஷன்ஸ்) KPMG India, 'இடையூறுகளைத் தாண்டி முன்னேறுவது மற்றும் புதிய நுகர்வோர் போக்குகளில் முன்னிலை வகிப்பது' பற்றிய கலந்துரையாடலை நடத்தினார், குழு உறுப்பினர்கள் Rajneesh Malhotra, VP ஆப்பரேஷன்ஸ் & அசெட் மேனேஜ்மெண்ட், Chalet Hotels and Zia Sheikh, CEO, Svenska Design Hotels ஹாஸ்பிட்டாலிட்டி சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு பதிலளித்தனர். "ஆடம்பரம் என்பது 5 நட்சத்திர ஹோட்டல் மட்டுமல்ல," என்று திரு ஷேக் கூறி, நவயுக இளைஞர்கள் எப்படி பிரத்யேக, மாறுபட்ட அனுபவங்களை விரும்புகின்றனர் என்று விவரித்தார். "அதிவேகமாக மாறிவரும் பிசினஸின் வேகம் – புதிய கருத்தாக்கங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் மிகவும் போட்டிகரமான துறை, நுகர்வோருக்கு சுவாரஸ்யமான அனுபவங்களை அளிப்பது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது."
"தன்மயமாக்கல் – வாடிக்கையாளர்களின் ரசனைகள் மற்றும் ஸ்டைல்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்வது அவசியம். ஒருவர் அவர்களின் சமூக ஊடகம் மூலம் அவர்களின் ஆளுமை பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம்," என்று ஷேய்க் மேலும் குறிப்பிட்டார்.
உணவு & பானம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி போக்குகளைக் கருவாகக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி துறையில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் பானங்கள், தேநீர் மற்றும் காபி, பீர், ஒயின் மற்றும் ஸ்பிரிட், கடல் உணவு, இறைச்சி, பேக்கரி, வர்த்தக சமையலறை உபகரணங்கள், ஹாஸ்பிட்டாலிட்டி தொழில்நுட்பம் மற்றும் இன்டீரியர் டிசைன்கள், ஹவுஸ்கீப்பிங், டேபிள்வேர், சில்லறை மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி உணவு சேவைகள் ஆகிய மொத்த ப்ராடக்ட்களையும் தீர்வுகளையும் ஒரு பெரிய குடையின் கீழ் அளிக்கிறது.
இந்த மூன்று நாள் FHIn கண்காட்சி முதன்மை ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள், இந்தியாவின் முன்னணி உணவகங்கள், துறையின் தலைவர்கள், முதலிடம் வகிக்கும் தொழில்முனைவோர், தரமான புது நிறுவன முதலீட்டாளர்கள், உலகளாவிய நிபுணர்கள் மற்றும் மற்ற தனிப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய 10 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் நெட்வொர்க்கை ஏற்படுத்திக் கொள்ள அற்புதமான வாய்ப்பை அளிக்கிறது. இந்தக் கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 70 கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். இதில் முக்கிய உணவு, ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி உபகரண நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்தியாவில் Informa Markets, நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras "இந்திய மக்கள்தொகை வளர்ச்சியடைந்ததால், பொருளாதாரமும் உணவு மற்றும் பானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இது உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு மற்றும் பானம் துறைக்கு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியையும் அளித்துள்ளது. இது துறையில் தொடர்ச்சியான புதுமைக்கான வாய்ப்பை அளித்துள்ளது. இந்த திடமான 1.30 பில்லியன் மக்கள் தொகையின் திருப்திப்படுத்தமுடியாத நுகர்வால் ஈர்க்கப்பட்டு, ஹாஸ்பிட்டாலிட்டி உணவு துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து, 2019-2023இல் $0.5-0.6 பில்லியன் ஆண்டு முதலீடை செய்து, 2023க்குள் $2.8 பில்லியன் வரை மொத்த முதலீடை அதிகப்படுத்த உள்ளது. மேலும், நமது நாட்டில் விவசாய துறையிலும் உலகளாவிய வர்த்தகத்துக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்த FHIn19 சர்வதேச பிராண்டுகளுக்கும் வணிக வாய்ப்புகளை நிலைநாட்ட இந்தியாவின் உணவு, ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் சுற்றுலா துறைக்கான மேடையை வழங்குகிறது. இது நிறுவனங்கள் ஆசியாவில் சிறந்த சந்தை வாய்ப்பை ஆராய சிறந்த வழியை அளிக்கிறது மற்றும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள முடிவெடுப்பவர்கள், குறிப்பிட்ட நபர்கள் மற்றும் இறு தி பயனர்கள் ஆகிய மிகப் பெரிய கூட்டத்தில் இணைய உதவுகிறது. நாங்கள் துறை நிபுணர்களுக்கு அவசியமான ஆற்றலும் முக்கிய போக்கும் இருப்பதைக் காண்கிறோம்" என்று கூறினார்.
FHIn 2019இல் இந்தக் காட்சி நடைபெறும் அடுத்த மூன்று நாட்களில் கட்டாய கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெறும். இதில் ஹாஸ்பிட்டாலிட்டி உத்தி சம்மேளனம்: HSS2019 (துறை அறிவு பரிமாற்றம்); ரா டு ரெஃப்ரெஷ்: (உணவுப்பொருட்களை நேர்த்தியான உணவுகளாக மாற்றுவதற்கான பயிலரங்கு); ப்ரோவெய்ன் கல்வி பிரசாரம் இந்தியா: (எதிர்காலத்திற்கான மது வணிக போட்டித் திட்டம் பற்றி கலந்துரையாடுதல்; ஹாஸ்பிட்டாலிட்டி டெக் கான்க்ளேவ் ஹாஸ்பிட்டாலிட்டியில் ஸ்மார்ட் டெக்னாலஜியைக் கடைபிடித்தல் பற்றிய குழு கலந்துரையாடல்; இந்திய சர்வதேச கலினரி கிளாஸிக்: (IICC – இதில் இந்தியா முழுவதிலும் உள்ள சமையற்கலை நிபுணர்கள் அவர்களின் உணவு திறனைக் காட்டுகின்றனர்); இந்தியா பரிஸ்டா சேம்பியன்ஷிப்:(IBC – காபி நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் அவர்களின் அறிவைப் பகிர்வர்; தொழில்முனைவோருக்கான பயணம்: (மிகச் சிறந்த புதிய முதலீட்டாளர்கள் நடத்தும் கலந்துரையாடல் அமர்வு), தி பர்சேஸ் பஞ்ச் (இதில் 2030இல் கொள்முதல் செயல்பாடு எப்படி இருக்கும்), ஹவுஸ்கீப் செமினார் (லாண்ட்ரி பாடங்கள் – முன்னணி ஹவுஸ்கீப்பர்கள் எது முக்கியமானது, எது முக்கியமானது அல்ல என்று நம்மிடம் கூறுவார்கள்), உணவு போக்கு (உணவு துறையில் முக்கிய நிகழ்வு என்ன?); சமையலறை வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் ஆகியவை இவற்றில் சில. இந்தக் கண்காட்சி செப்டம்பர் 20, 2019 அன்று IICC விருது வழங்கும் விழா, மற்றும் உணவு, பானம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு முடிவடையும்.
FHIn 2019க்கு HPMF (Hospitality Purchase Managers Forum) PHA (Poona Hoteliers Association), iPHA (i Professional Housekeepers Association), FIFI (Forum of Indian Food Importers), WICA (Western India Culinary Association), AFSTi - Association of Food Scientists and Technologists (India), மற்றும் AHP (Association of Hospitality Professionals) போன்ற பல முக்கிய சங்கங்களும் ஆதரவளிக்கின்றன.
Informa Markets பற்றி
Informa Markets, துறைகளுக்கும் சிறப்பு சந்தைகளுக்கும் வர்த்தகம் செய்ய, புதுமையாகச் செயல்பட மற்றும் வளர்ச்சியடைய மேடைகளை உருவாக்கியுள்ளது. எங்களின் போர்ட்ஃபோலியோவில் 550க்கு மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் மார்க்கெட்டுகளில் உள்ள பிராண்டுகள் உள்ளன. இதில் உடல்நல பராமரிப்பு மற்றும் மருந்தியல், கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் ஆடை, ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, ஆகியவை சில. நாங்கள் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் நேரடி கண்காட்சிகள், நிபுணர் டிஜிட்டல் பொருளடக்கம் மற்றும் நடவடிக்கை எடுக்கத்தக்க டேட்டா தீர்வுகள் ஆகியவற்றின் மூலம் ஈடுபட, அனுபவம் பெற மற்றும் பிசினஸ் செய்ய வாய்ப்புகளை அளிக்கிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக, நாங்கள் பல வகையான தனித்துவமிக்க சந்தைகளுக்கு உயிர்கொடுத்து, வாய்ப்புகளைப் பெற்று, ஆண்டின் 365 நாட்களும் உழைக்க அவர்களுக்கு உதவுகிறோம். மேலும் தகவலுக்கு, www.informamarkets.comஐ காணவும்
Informa Markets மற்றும் இந்தியாவில் எங்கள் பிசினஸ் பற்றி
Informa Markets, Informa PLCக்கு சொந்தமானது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழுவாகும் மற்றும் உலகிலேயே மிகப் பெரிய B2B நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளராகும்.
இந்தியாவில் உள்ள Informa Markets (முன்பு UBM India) இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது தனிப்பட்ட சந்தைகள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகம் செய்ய, புதுமையாகச் செயல்பட மற்றும் வளர்ச்சியடைய கண்காட்சிகள், டிஜிட்டல் பொருளடக்கம் மற்றும் சேவைகள், மற்றும் கலந்தாய்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உதவுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவிலான கண்காட்சிகள், 40 கலந்தாய்வுகள் ஆகியவற்றை நாடு முழுவதிலும் துறை விருதுகள் மற்றும் பயிற்சிகளுடன் சேர்த்து நடத்துகிறோம்; இதன் மூலம் பல துறை முழுவதிலும் வணிகம் செய்கிறோம். இந்தியாவில் Informa Markets மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகத்தைக் கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.informa.comஐ காணவும்.
எந்த ஊடகம் பற்றிய தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
Informa Markets in India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-6172700
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/997579/FHIn_Inaugration.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/997580/Special_Guest_FHIn.jpg
புகைப்படம்:https://mma.prnewswire.com/media/961654/FHIn_INDIA_Logo.jpg
புகைப்படம்:https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article