தொழில்துறைக்கான சிறந்த பயணம் மற்றும் சுற்றுலாவிற்கான சேவைகளை வழங்க SATTE 2020 தயாராக உள்ளது
போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தலும் கூட்டாண்மையை வளர்ப்பதும் தெற்காசியாவின் முன்னணி வாய்ந்ததுமான புகழ்வாய்ந்ததுமான பயண காட்சியின் 27 வது பதிப்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்படுகிறது
புது தில்லி, டிசம்பர்., Jan. 2, 2020 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி பி 2 பி கண்காட்சி அமைப்பாளரான Informa Markets (முன்னதாக UBM இந்தியா) 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை Delhi - NCR - Greater Noida, India Expo Centre ல் SATTE(South Asia Travel and Tourism Exchange) ன் 27 வது பதிப்பை கொண்டு வர தயாராக உள்ளது. இந்த ஆண்டு, 50 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 104 இந்திய நகரங்களைச் சேர்ந்த 1,050 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் மற்றும் பயண வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட உள்ளனர். உலகெங்கிலும் உள்ள பயண, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நிபுணர்களுக்கு இந்த எக்ஸ்போ ஒரு விரிவான தளத்தை தொடர்ந்து வழங்குகிறது. இந்நிகழ்ச்சியானது உள்வரும், உள்ளூர் மற்றும் வெளிச்செல்லும் வியாபாரிகளுக்கு சமமாக தளங்களை வழங்குகிறது.
புதிய வணிக கூட்டாண்மை மற்றும் அறிவிப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், மூன்று நாள் எக்ஸ்போ தொழில்துறையின் தற்போதைய போக்குகளை வழங்குவதற்கும் விவாதிப்பதற்கும் உறுதியளிக்கிறது. அவர்களின் வருடாந்திர வாக்குறுதியைக் கடைப்பிடித்து, இந்திய சுற்றுலா வழங்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் தொழில்துறையை அறிவூட்டுவதற்காக SATTE 2020 ஒரு அற்புதமான மாநாடுகளின் தொடர் வரிசைகளை வழங்கும். SATTE 2020 பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச பயண மற்றும் வர்த்தக சங்கங்கள், திருமணத்தை திட்டமிடுபவர்கள், கார்ப்பரேட் பயண முடிவெடுப்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து தொடர்ந்து தீவிர ஆதரவைப் பெற்று வருகிறது. SATTE 2020 இன் பிரீமியம் கூட்டாளர் நாடாக இந்தோனேசியா இருக்கையில், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இலங்கை ஆகியவை கூட்டாளர் நாடுகளாக இருக்கின்றன. மொரிஷியஸ் SATTE 2020 க்கான சிறப்பம்சம் வாய்ந்த நாடாகும். ராஜஸ்தான், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் மற்றும் கோவா ஆகியவை கூட்டாளர் நாடுகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் சில இதில் சேர உள்ளன. SATTE 2020 இனை வழங்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. தவிர, பல நாடுகளும் மாநிலங்களும் பல்வேறு திறன்களில் பங்கேற்கின்றன.
மாநாடுகளின் ஒரு அற்புதமான வரிசையுடன், உயர் தர பேச்சாளர்கள் மற்றும் தொழில்துறை முக்கியஸ்தர்களால் வழங்கப்பட்டு வழிநடத்தப்படும் SATTE 2020 தொடர்ச்சியான அமர்வுகள் மற்றும் பட்டறைகளை வழங்குகின்றது, இது தொழில்துறையின் அனைத்து அம்சங்களிலிருந்தும் தலைப்புகளை உள்ளடக்கும். நாள் 1 அன்று 'உலகளாவிய பொருளாதார காட்சி மற்றும் சுற்றுலா போக்குகள்' குறித்த முதல் குழு விவாதமானது உலகளாவிய பயண மற்றும் சுற்றுலாத் துறையிலும் இந்தியாவிலும் வளர்ந்து வரும் சூழ்நிலை பற்றி விவாதிக்கும். இரண்டாவது குழு விவாதம்: 'சாகச சுற்றுலா: புதிய வழிகளைத் திறத்தல்' சாகச சுற்றுலாவின் முக்கிய சவால்களின் மீது கவனம் செலுத்தும். SATTE 2020 மாநாட்டின் 2 வது நாளில் மீண்டும் கார்ப்பரேட் டிராவல் கம்யூனிட்டி (சி.டி.சி) ஆல் இயக்கப்படும் ஒரு கார்ப்பரேட் டிராவல் தினமாக இருக்கும், அவை விமான திட்டங்கள் + என்.டி.சி கல்வி மன்றம் மற்றும் 'தங்கும் விடுதி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கல்வி மன்றம்' ஆகியவற்றில் இரண்டு சக்திவாய்ந்த அமர்வுகளை ஏற்பாடு செய்ய உள்ளன. SATTE 2020 மாநாட்டின் 2 வது நாள் மீண்டும் கார்ப்பரேட் டிராவல் கம்யூனிட்டி (சி.டி.சி) ஆல் இயக்கப்படும் ஒரு கார்ப்பரேட் டிராவல் தினமாக இருக்கும், அவை விமான திட்டங்கள் + என்.டி.சி கல்வி மன்றம் மற்றும் 'The Accommodation Outlook and Technology Innovations Education Forum' ஆகியவற்றில் இரண்டு சக்திவாய்ந்த அமர்வுகளை ஏற்பாடு செய்ய உள்ளன. இவை தவிர, நெட்வொர்க் ஆஃப் இந்தியா MICE முகவர்கள் (NIMA) MICE சுற்றுலா குறித்து 5 அமர்வுகள் மற்றும் 2 பட்டறைகளை அமைக்கும்.
சுற்றுலா அமைச்சகம் மற்றும் அனைத்து மாநில சுற்றுலா அமைச்சகங்கள் / வாரியங்கள் மற்றும் இந்திய பயண மற்றும் சுற்றுலா சகோதரத்துவத்தின் தொடர்ச்சியான ஆதரவோடு SATTE கைகோர்த்து வளர்ந்துள்ளது. World Tourism Organisation (UNWTO), Indian Association of Tour Operators (IATO), Travel Agents Association of India (TAAI), Association of Domestic Tour Operators of India (ADTOI), Travel Agents Federation of India (TAFI), IATA Agents Association of India (IAAI), India Convention Promotion Bureau (ICPB), Universal Federation of Travel Agents Association (UFTAA), Pacific Asia Travel Association (PATA) மற்றும் Enterprising Travel Agents Association (ETAA) போன்ற இந்திய பயண வர்த்தக சங்கங்களின் தொடர்ச்சியான ஆதரவு, SATTE இன் முயற்சிகளை அதிகரிக்க உதவியது.
SATTE 2020 இன் எதிர்பார்ப்புகளைப் பற்றி பேசிய Informa Markets ன் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras அவர்கள், "ஒவ்வொரு ஆண்டும், SATTE ஐ பெரிதாக்க எங்களது சிறந்த முயற்சிகளை மேற்கொண்டோம், இந்த ஆண்டு எங்கள் கண்காட்சியாளர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகள் மற்றும் மாநிலங்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் புதிய மைல்கற்களை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். 2018 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயண மற்றும் சுற்றுலாத் துறைகளின் பங்களிப்பு 16.91 லட்சம் கோடி ரூபாய் (240 பில்லியன் டாலர்) மற்றும் 2028 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 6.9% வீதம் 32.05 லட்சம் கோடி ரூபாயாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை இந்தியாவில் அதிக செலவு செய்ய ஊக்குவிப்பதற்கும் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசு சுற்றுலாப் பயணிகளுக்கான வரி திருப்பிச் செலுத்துதலையும் (டிஆர்டி) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா புவியியல் பன்முகத்தன்மையை வழங்குகிறது மற்றும் முக்கிய சுற்றுலா தயாரிப்புகள், கப்பல் சாகசங்கள், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் கிராமப்புற மற்றும் மத சுற்றுலா ஆகியவற்றின் பல்வேறு இலாகாக்களைக் கொண்டுள்ளது. எங்கள் உள்நாட்டு, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சுற்றுலாவானது கடந்த சில ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது."
"சுற்றுலாத்துறையில் முதலீட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக முயற்சிகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. Incredible India 2.0 பிரச்சாரத்தில் அதன் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது, இது இந்தியாவில் ஒரு பயணிக்கு உதவுவதோடு நாட்டினுள் பயணம் செய்யும் அனுபவங்களை வெளிப்படுத்தும். இத்துறையில் இத்தகைய நம்பமுடியாத வளர்ச்சியுடன், பயண மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் SATTE மிகவும் முக்கியமானது. உண்மையில், இலக்கு திருமணங்களின் போக்கானது இந்த ஆண்டு எங்கள் கண்காட்சியாளர்களால் நன்கு தழுவப்பட்டுள்ளது, இதனால் SATTE 2020, இத்தகைய போக்குகளை துறைகளில் முன்னேற்றங்களை முன்னறிவிப்பதோடு பகுப்பாய்வு செய்து, எப்போதும் வளர்ந்து வரும் தொழிலில் வணிகம் செழிக்க உதவும் சாத்தியமான தீர்வுகளை வழங்குகிறது," என்று திரு. Mudras கூறினார்.
பயண மற்றும் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்குதாரர்களின் சிறப்பையும், வெற்றிகளையும், புதுமைகளையும் அங்கீகரித்து கொண்டாடுவதற்கு, டி 3 ஆல் இயங்கும் SATTE விருதுகளின் 4 வது பதிப்பையும் Informa Markets வழங்கவிருக்கிறது. இது SATTE இன் மதிப்புகளில் நன்கு பதிந்த ஒரு தத்துவமாகிய, பயண மற்றும் சுற்றுலாத் துறையில் உண்மையான மற்றும் நம்பத்தகுந்த அளவுருக்களுடன் புதுமை மற்றும் சிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக தாய்லாந்தைப் பற்றி பேசிய தாய்லாந்தின் சுற்றுலா ஆணையத்தின் இயக்குநர் திரு IsraStapanaseth அவர்கள், "2018 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 38.27 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை தாய்லாந்து பெற்றது, இது 7% அதிகரித்துள்ளது, மேலும் 2019 ஆம் ஆண்டில் 39.8 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என நாங்கள் கணித்துள்ளோம். 2018 ஆம் ஆண்டில் 1.59 மில்லியன் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்திருந்தனர், மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 1.63 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். பல்வேறு நகரங்களில் Royal Thai Embassy மற்றும் Thai Consulates ஆகியவற்றால் வழங்கப்படும் சாதாரண விசாக்களும் தாய்லாந்தின் வந்திறங்கிய பிறகு விசா (visa on arrival) வழங்கப்படும் வசதிகளுமே வெளிநாடு மற்றும் இந்திய சுற்றுலாப்பயணிகள் அதிகரித்து வருவதற்கான போக்கின் காரணமாகும். இந்தியர்களுக்கான இலவச வந்திறங்கிய பிறகு விசா (visa on arrival) விண்ணப்பத்தின் விளைவாக தாய்லாந்திற்கு இந்திய சுற்றுலாப் பயணிகளில் 25% வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது 2018 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். தாய்லாந்தை பார்வையிட வழங்கப்படும் VOA வசதி மற்றும் E-Visa ஆகியவற்றால் எளிமையான மற்றும் மலிவான விசா செயல்முறையின் விளைவாக, சிக்கலற்ற விடுமுறை மற்றும் கடைசி நிமிட பயண திட்டத்தை சுற்றுலா பயணிகளால் திட்டமிட முடிகிறது.
புதுடில்லியில் நடைபெறவுள்ள South Asia Travel and Tourism Exchange 2020 (SATTE 2020) இல் சுமார் 80 தாய் கண்காட்சியாளர்களுடன் இணைந்து தாய்லாந்து சுற்றுலா ஆணையம் (TAT) ஆனது கூட்டாளர் நாடாக பங்கேற்க இருக்கிறது. SATTE 2019ல் மொத்தமாக பங்குபெற்ற 70 தாய் கண்காட்சியாளர்களுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய தாய் கண்காட்சியாளர்களின் குழுவாக SATTEயில் இருக்கும். இந்த ஆண்டு SATTE இல் 12 வது ஆண்டைக் தாய்லாந்தின் இருப்பு குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே, மேலதிகமான ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள், டி.எம்.சிக்கள் மற்றும் ஈர்ப்புகள் ஆகியவற்றை இந்திய பயண வர்த்தகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் TAT நம்பிக்கை கொண்டிருக்கிறது. 'Open to the New Shades' என்ற எங்கள் பிரச்சாரம் தொடர்ந்து வலுவாக நடந்துகொண்டிருக்கிறது. SATTE 2020 இன் போது, முக்கிய நகரங்களை வளர்ந்து வரும் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களுடன் இணைக்கும் 'Amazing Thailand Destination Plus' யினை TAT அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஆண்டு SATTE இல் எங்களது இடத்தில் தாய் குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு குடை ஓவியத்தையும் காட்சிப்படுத்த உள்ளோம்." என்று கூறினார்.
தொழில்துறை போக்குகளைப் பற்றி பேசிய Tirun Travel Marketing நிர்வாக இயக்குநரான திரு Varun Chadha அவர்கள், "வளர்ந்து வரும் நடுத்தர மக்களின் பெரியளவிளான மக்கள்தொகையை இந்தியா கொண்டுள்ளது, இவர்கள் பாரம்பரியமாக விமானத்தில் செல்லும் சுற்றுலா பேக்கேஜ்களை தவிர்த்து புதுமையான விடுமுறை தெரிவுகளை எதிர்பார்க்கின்றனர். இன்று, இந்திய நுகர்வோர்களுக்கிடையில் வளர்ந்து வரும் விழிப்புணர்வும் கப்பலில் செல்வதற்கான ஈர்ப்பும் உள்ளது. பல தலைமுறை குடும்பக் குழுக்கள், கார்ப்பரேட் குழுக்கள் மற்றும் திருமணக் குழுக்களாக பயணம் செய்ய விரும்பும் இந்தியர்களை எங்கள் பிராண்ட் கவர்ந்திழுப்பதால், நாங்கள் வழங்குவது போன்ற குடும்பம் சார்ந்த புதுமையான கப்பல் பயணங்களானது கப்பலில் செல்வதற்கான அவர்களின் தேவையை பூர்த்தி செய்து திருப்திபடுத்துகிறது. இது வரவிருக்கின்ற பிரபலமான போக்காகும்.
SATTE 2020 இல், எங்கள் நெட்வொர்க்கை வளர்ப்பது, தற்போதுள்ள எங்கள் கூட்டாளர்களுடன் உறவுகளை உருவாக்குவது, கூட்டுப்பணியாளர்களைக் கண்டறிவது மற்றும் சந்தையின் ஒட்டுமொத்த உணர்வைப் பெறுவது ஆகியவற்றைப் எதிர்நோக்குகிறோம். நாங்களும் Royal Caribbean Cruises Ltd நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியாக இருப்பதால், Boutique Azamara Club மற்றும் ultra-luxury Silversea விற்கு செல்வதற்கு சமகால பிராண்டான Royal Caribbean International முதல் Modern luxury Celebrity Cruises வரை எங்கள் பயணக் கப்பல்களின் முழு விவரங்களையும் SATTE 2020 இல் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளோம்." என்று கூறினார்.
24x7Rooms.com யின் மொது மேலாளரான திரு. Danish Fairoz அவர்கள், "தற்போதைய உலகளாவிய மந்தநிலை நிச்சயமாக சுற்றுலாத் துறையை ஒட்டுமொத்தமாக பாதித்துள்ளது. டிக்கெட் மதிப்பு குறைந்தாலோ, அதனால் தங்கியிருக்கும் காலம் அல்லது ஹோட்டலின் வகை குறைந்தாலோ, எப்படி இருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் முக்கிய விமான நிறுவனங்கள் வெளியேறுவதன் மூலம் ஒரு வெற்றிடம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் விமானத் துறையை முழுவதுமாக உயர்த்தி கைத்தூக்கி விட அரசு அல்லது தனியார் அமைப்புகளின் ஆதரவு எங்களுக்குத் தேவைப்படும். B2B மொத்த விற்பனையாளராக இருப்பதால், எங்கள் வணிக தொகுதிக்கு மதிப்பளிப்பதற்காக விருந்தோம்பல் துறையிடமிருந்து புரிந்துணர்வையும் உதவியையும் பெறும்போது B2Cயின் ஆதிக்கம் குறித்த எங்கள் கவலைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
எல்லா ஆண்டுகளையும் போலவே, SATTE 2020 நடக்கவிருக்கும் மூன்று நாட்களில் எங்களது அன்பான கூட்டாளர்களை ஒரே கூரையின் கீழ் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம், கூட்டத்திற்குப் பிறகு எங்களுடன் கைகோர்க்கும் வருங்கால கூட்டாளர்களை வரவேற்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வணிக விரிவாக்க வாய்ப்புகளின் அடிப்படையில் SATTE ஒருபோதும் எங்களை ஏமாற்றியதில்லை. நாங்கள் இப்போது சில ஆண்டுகளாக இந்த எக்ஸ்போவில் பங்கேற்று வருகிறோம், வெற்றி மற்றும் வர்த்தகத்தம் செய்ததிலிருந்து கிடைத்த ஊக்கமளிக்கும் வகையிலான பலனே SATTE உடன் எப்போதும் இருக்கும் ஒரு விஷயமாகும். இந்த ஆண்டு SATTE 2020 இல், எங்கள் இரண்டு புதிய டிஎம்சி அலுவலகங்களுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் துனிசியாவில் SATTE மூலம் நிறுவப்படும் இத்துடன் நாங்கள் சமீபத்தில் டிசம்பர் 2019 இல் காங்கோ நாட்டில் திறக்கப்பட்ட ஒரு புதிய கிளையை அறிவிப்போம்."
Genting Cruise Lines, இந்தியா மற்றும் தெற்காசியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் ட்ரீம் குரூஸின் திரு. Naresh Rawal அவர்கள் கூறுகையில், "இந்திய வெளிச்செல்லும் பயணச் சந்தையனது அதிவேக விகிதத்தில் வளர்ந்து வருகிறது, அடுக்கு II மற்றும் அடுக்கு III நகரங்களில் இருந்து வெளிச்செல்லும் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். பெரும்பாலான சர்வதேச இடங்கள் இந்தியாவின் அனைத்து அடுக்கு I மற்றும் அடுக்கு II சந்தைகளுடன் அதிகளவில் இணைக்கப்பட்டிருந்தாலும், பிற நகரங்களுடனான அதிகரித்த இணைப்பானது வெளிச்செல்லும் ஆர்வமுள்ள பயணிகளுக்கு அறிவுறுத்த உதவும். பெருகிய எண்ணிக்கையிலான இந்திய பயணிகள், ஓய்வுக்காகவோ அல்லது MICE பயணத்திற்காகவோ, எதுவாக இருந்தாலும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களைத் தேடுகிறார்கள். கப்பலில் பயணம் செய்து விடுமுறையை கழிக்க விரும்பும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையும் நாங்கள் கவனிக்கின்றோம். இவ்வகையான பயணிகள் மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அனுபவமிக்க இடங்களைத் தேடுகிறார்கள். அனுபவங்களைத் தனிப்பயனாக்குவது தொழில்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க பரிணாமத்திற்கு உட்பட்டுள்ளது மற்றும் பயண கூட்டாளிகள் ஒவ்வொரு கட்டத்திலும் வழங்குதல்களைத் தனிப்பயனாக்குகிறார்கள்: ஆராய்ச்சி முதல், முன்பதிவு, பயண விரிவுரை வரை.
ட்ரீம் குரூஸ் SATTE 2020 இல் உலகளாவிய சிறப்பம்சங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது. ட்ரீம் க்ரூஸின் கப்பற்படையில் சேர்ப்பதற்கு எங்களது முதல் உலகளாவிய தரம் வாய்ந்த கப்பலை அறிமுகப்படுத்தியதே இந்த ஆண்டின் பெரிய அறிவிப்பாகும், இது சமீபத்தில் 'Global Dream' எனப் பெயரிடப்பட்டது. உலகின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய கடல் உலாவு கப்பல்களில் குளோபல் ட்ரீம் ஒன்றாகும். SATTE 2020 இன் போது எங்களது இடத்தில் வந்து அனுபவத்தைப் பார்க்க எங்கள் கூட்டாளர்களை ஊக்குவிக்கிறோம். நெட்வொர்க்கிங் மற்றும் எங்கள் தொழில்துறைக் கூட்டாளர்களுடனான சந்திப்பு என்று வரும்போது SATTE எப்போதும் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்துவருகிறது. இந்திய சந்தையில் மேலும் வளர எங்களுக்கு உதவும் வகையில் புதிதாக கண்காட்சிக்கு வருபவர்களையும் புதிய சாத்தியமான கூட்டாளர்களையும் சந்திப்போம் என்று நாங்கள் நம்புவதால், இந்த ஆண்டு கண்காட்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.
கென்யாவின் மராசா ஆபிரிக்காவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் Kandarp Amin அவர்கள் கூறுகையில், "மராசா ஆப்பிரிக்கா 9 ஆண்டுகளுக்கும் மேலாக SATTE உடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது, மேலும் இந்த கூட்டாண்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஹோட்டல் உரிமையாளர்களாக நாங்கள், தரம் மற்றும் சாத்தியமான வாங்குபவர்களைச் சந்திப்பதற்கும், கண்காட்சியில் பங்கேற்பாளர்களுடன் உரையாடுவதற்கும் 2020 பதிப்பை எதிர்நோக்குகிறோம், இதன் மூலம் நேரடியாக வணிகக்கேள்விகளை பெறுகிறோம், இது ஒரு சுவாரஸ்யமான விளைவாகும். SATTE தொடர்ந்து வளர்ச்சியடையும், குறிப்பாக அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள விருந்தோம்பல் வர்த்தக கண்காட்சியாக தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் உறுதியாக உள்ளோம்." என்றார்.
Informa Markets பற்றி
தொழில்துறை மற்றும் சிறப்பு சந்தைகள் வர்த்தகம் செய்யவும், புதிதாக துவங்கவும், வளரவும் Informa Markets தளங்களை உருவாக்குகிறது. எங்கள் போர்ட்ஃபோலியோவானது 550 க்கும் மேற்பட்ட சர்வதேச பி 2 பி நிகழ்வுகள் மற்றும் ஹெல்த்கேர் & மருந்துகள், உள்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, விருந்தோம்பல், உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட சந்தைகளில் உள்ள பிராண்டுகளை உள்ளடக்கியது. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் நேருக்கு நேர் கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் செயல்படக்கூடிய தரவு தீர்வுகள் மூலம் ஈடுபடவும், அனுபவத்தை பெறவும் மற்றும் வணிகம் செய்வதற்கான வாய்ப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக, நாங்கள் பலவிதமான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம், வாய்ப்புகளைத் அவிழ்த்துவிட்டு ஆண்டின் 365 நாட்களும் செழிக்க உதவுகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.informamarkets.com என்ற வலைதளத்தை பார்வையிடவும்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எங்களது வணிகத்தை பற்றி
Informa Markets என்பது ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவும், உலகின் மிகப்பெரிய வ் நிகழ்வுகள் அமைப்பாளருமான Informa PLC க்கு சொந்தமானதாகும். இந்தியாவில் Informa Markets (முன்னதாக UBM India) இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், இது சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கு, உள்நாட்டிலும், உலகெங்கிலும், கண்காட்சிகள், டிஜிட்டல் உள்ளடக்கம் & சேவைகள் மற்றும் மாநாடுகள் & கருத்தரங்குகள் மூலம் வர்த்தகம் செய்யவும், புதிதாக துவங்கவும், வளரவும் உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தொழில்துறை விருதுகள் மற்றும் பயிற்சிகளுடன் நாடு முழுவதும் 25 க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கண்காட்சிகள், 40 மாநாடுகளை நாங்கள் நடத்துகிறோம்; இதன்மூலம் பல்வகையான தொழில்துறை முழுவதும் வர்த்தகத்தை செயல்படுத்துகிறது. இந்தியாவில், Informa Markets க்கு மும்பை, புது தில்லி, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் அலுவலகங்கள் உள்ளன. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.informamarkets.com என்ற வலைதளத்தை பார்வையிடவும்.
எந்த விதமான ஊடக கேள்விகளுக்கும் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்:
Mili Lalwani
[email protected]
+91-9833279461
Informa Markets in India
RoshniMitra
[email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/1059716/SATTE.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article