மும்பை, December 13, 2018 /PRNewswire/ --
S.P. Jain Institute of Management and Research (SPJIMR) 13 ஆம்தேதி மற்றும் 14 ஆம்தேதி டிசம்பர் 2018 இருநாட்களும் பொறுப்பான மேலாண்மை கல்விக்கான கொள்கை ((PRME) மீதான முதல் இந்திய அத்தியாய மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. மாநாடு, ஆசிய-பசிபிக் பகுதிகளிலிருக்கும் பல்கலைக்கழகங்கள், மேலாண்மை பள்ளிகள், பெருநிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றிலிருந்து தலைமைகளையும் மேலாண்மையையும் இணைக்கிறது. கல்வி, பெருநிறுவன மற்றும் சமுதாயப் பிரிவு பார்வையாளர்கள் கருத்துக்களத்தில் பங்கேற்கலாம், மேலும் இது UN- ஆதரவு PRME கையொப்பமிட்டவர்கள் அல்லது PRME அத்தியாயத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் என்ற வரம்பு கிடையாது.
(Logo: https://mma.prnewswire.com/media/688342/SPJIMR_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/797274/PRME_Conference.jpg )
மாநாட்டின் கலந்துரையாடல்கள் மாறிவரும் உலகில், 21 ஆம் நூற்றாண்டில் பெரு நிறுவனங்கள் கொள்கை ரீதியான தலைமையை ஏன் வழங்க வேண்டும் எவ்வாறு வழங்க முடியும், அர்த்தமுள்ள வேலை மற்றும் நிலையான வேலை போன்றவைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக SPJIMR இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் கல்வி, பெருநிறுவன குடியுரிமை மற்றும் நிலையான எதிர்காலங்கள் போன்றவற்றை சுற்றி விவாதங்கள் மற்றும் கூட்டிணைவுகளை மேம்படுத்தியது, இதன்மூலம் இந்த வார இறுதி மாநாட்டிற்கு வழிவகுத்துள்ளது.
'பல்வேறு வகையான குரல்கள் மற்றும் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக உணர்திறன் ஆகியவற்றுக்கான அனுமதியைத் தரும் தேர்வுகளை மாநாடு வெளிப்படுத்தும். பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் வழியில் எவ்வாறு வித்தியாசத்தை உருவாக்கினர் என்பதை வெளிப்படுத்தும் வழிகளை நாங்கள் நம்புகிறோம்.' இவ்வாறு மாநாட்டின் தலைமை மற்றும் SPJIMR ன் ஆசிரிய உறுப்பினர், டாக்டர், சந்திரிகா பர்மர் கூறினார்.
அவர் மேலும், 'எதிர்காலத்திற்கான ஒன்றாக அல்லாமல், இன்றைய வாழ்க்கையின் வழியாக நிலைத்தன்மையை, நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டியிருக்கும் இந்த தருணத்தில் முடிவெடுப்பதற்கு முன் ஆழ்ந்து யோசித்தல் மிகவும் முக்கியமானதாகும். இந்தக் கருத்துக்களத்தை ஒருங்கிணைப்பதில் SPJIMR ல் உள்ள நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம், சமூக உணர்திறன் மற்றும் மாறிவரும் நமது நேரங்களின் அடிப்படையில் தேவைகளை பூர்த்தி செய்யும், மதிப்பு அடிப்படையிலான தலைவர்களை நாளைக்காக உருவாக்குதல் என்ற பெரிய கருத்தில் நிறுவனம் ஆழமான அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால வேலை வழங்கியுள்ளது.' என்று கூறினார்.
'இன்றைய பெருநிறுவனங்கள் சமுதாயத்தின் மிக ஆற்றல்மிக்க பாகமாக விளங்குகின்றன. கல்வியாளர்கள் மற்றும் வர்த்தக உறுப்பினர்கள் தங்களுக்குள் விவாதிப்பது மிகவும் முக்கியமானது அதன் மூலம் அவர்கள் நிலையான பெருநிறுவனங்கள் தங்களுக்கான சிறந்த விளைவுகளை மட்டும் உருவாக்குபவையாக அல்லாமல் சமுதாயத்திற்கும் சிறந்ததை அளிக்கும் முழுமையான நிறுவனமாக எவ்வாறு உருவாக்குவது அதற்கான வழிகள் எவை என்பதை கண்டறிய இயலும். PRME மாநாடு மாதிரியான கருத்துக்களத்தில் இந்த பிரச்சினைகளைப் பற்றி பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு எண்ணிகையிலான மக்கள் கலந்தாலோசிக்க வாய்ப்பு கிடைக்கிறது இது மிகவும் உதவிகரமானது மேலும் உலகை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றும் கருத்துகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.' என்று SPJIMR Dean, டாக்டர், ரஞ்சன் பானர்ஜி கூறினார்.
அறிவு மற்றும் எதிர்காலம், வாழ்க்கைச்சூழல், நலம் மற்றும் நிலைத்தன்மை, 21 ஆம் நூற்றாண்டுக்கான தலைவர்களுக்காக உள்ளடங்கிய பொருளாதாரங்கள் மற்றும் CSRன் சவால்களை கட்டமைத்தல் போன்றவை தொடர்புடைய பல்வேறு தலைப்புகள் மாநாட்டில் விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் நான்கு முழு பேனல்கள் மற்றும் 15 டிராக் தலைப்புகள் உள்ளன. அவை மேலாண்மை கல்வி மற்றும் கற்பிக்கும் கலை; சமுதாய சுய வேலை வாய்ப்பு; நிலையான நகரங்கள்; மிகை நிகழ்வுகள்; ஆசிய வழி யோசனை; CSR மற்றும் நிலைத்த வர்த்தகம் மறுயோசனை ஆகியவை ஆகும். பல்வேறு பொது அறிவாளர்கள், சுற்றுப்புற வல்லுநர்கள் மற்றும் தொழிற்சாலை தலைவர்களுடன் மாநாட்டில் மகசேசே விருது வெற்றியாளர்களான Aruna Roy மற்றும் T M Krishna ஆகியோரும் பேசுகிறார்கள். பேச்சாளர்களில் Ashis Nandy, Shiv Visvanathan, Aseem Shrivastava, Saamdu Chettri, Santosh Desai மற்றும் Anirban Ghosh ஆகியோரும் அடங்குவர்.
2007ல் உருவாக்கப்பட்ட United Nations ஆல் ஆதரிக்கப்படும் ஒரு முயற்சிதான் PRME ஆகும் இது உலகெங்கும் உள்ள பள்ளிகளில் நிலைத்தன்மைக்கான சுயவிவரத்தை உயர்த்தும் ஒரு தளமாகும். மேலும் நாளைய மாற்றத்திற்கேற்ப இன்றைய வர்த்தக மாணவர்களை புரிந்துகொள்ளுதல் மற்றும் திறனை அளிக்கும விதமாக மாற்றுவதில் உதவுகிறது. பொறுப்பான மேலாண்மை கல்வியின் மூலம், நிலையான மேம்மாட்டு குறிக்கோள்கள்-ஐ அடைதலை அது நோக்கமாக கொண்டுள்ளது. உலகெங்கும் 650க்கும் அதிகமான முக்கியமானவர்களால் தன்னார்வமாக நடத்தப்படும் இந்த PRME முயற்சியானது, United Nations மற்றும் மேலாண்மை தொடர்பான பட்ட மேற்படிப்பு நிறுவனங்களுக்கும் இடையே மிகப்பெரிய ஒருங்கிணைந்த உறவை உருவாக்குகிறது.
மாநாடு இந்தியாவில் மேலாண்மை பள்ளியில் முதல் மதிப்பு பெற்ற SPJIMR ல் முதல்முறையாக நடத்தப்படுகிறது, இந்நிறுவனம் பயிற்சியை தூண்டுவதையும் மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
SPJIMR பற்றி
S.P. Jain Institute of Management & Research (SPJIMR) (http://www.spjimr.org) , Bharatiya Vidya Bhavanன் ஒரு அங்கமாகும் மேலும் இது இந்தியாவின் டாப் பத்து வர்த்தக பள்ளிகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலாண்மைக்கான முதன்மை பள்ளியான SPJIMR, ஆசிரியர் சார்ந்த புதுமைகள் மற்றும் முன்னோடி புரோகிராம்களுக்காக குறிப்பாக பெயர் பெற்றது, இவை மேலாண்மை கல்வியில் நிறுவனம் அதன் தனித்தன்மையான மற்றும் சிறப்பான வழியை உருவாக்க உதவின. 'பயிற்சியை தூண்டுதல்' மற்றும் ' மதிப்பு -அடிப்படையிலான வளர்ச்சியை மேம்படுத்துதல்' போன்றவை SPJIMR's நோக்கங்களாக உள்ளன. நிறுவனம் தற்போது மும்பையில் உள்ள அந்தேரியில் 45-ஏக்கர் வளாகத்தில் இயங்குகிறது மேலும் புது டெல்லியில் ஒரு வளாகம் உள்ளது. பிற எந்த நிறுவனங்களுடனும் எங்களது குழப்பத்தை தவிர்க்க ஐந்து ஸ்ட்ரோக் லோகோவை காணவும் மேலும் இது Bharatiya Vidya Bhavan அசோசியேஷன் ஆகும்.
ஊடக தொடர்பு :
Prof. Abbasali Gabula
[email protected]
+91-9821362495
Associate Director
External Relations
S.P. Jain Institute of Management & Research
Share this article