மும்பை, September 7, 2018 /PRNewswire/ --
UBM இந்தியாவின் உணவு மற்றும் விருந்தோம்பல் துறைக்கான
இந்தியாவின் முதல் உலக B2B நிகழ்ச்சி
இந்தியாவின் முன்னணி B2B நிகழ்வின் அமைப்பாளரான UBM இந்தியா, Food and Hotel India (FHIn) Expo (செப்டம்பர் 5முதல் -7வரை) அதன் முதல் பதிப்பை மும்பையில் உள்ள Sahara Star ல் இன்று திறந்து வைத்துள்ளது. இந்த முன்னோட்ட கண்காட்சியின் தொடக்க விழாவில் திரு. Param Kannampilly, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், Concept Hospitality; திரு. Manjit Singh Gill- கார்ப்பரேட் செஃப், ITC மற்றும் தலைவர் IFCA; திரு. Vernon Cohelo - செஃப், தலைவர் WICA; திரு. Thomas Schlitt, நிர்வாக இயக்குனர், Messe Dusseldorf India; திரு.Paul March, நிர்வாக இயக்குனர், UBM AllWorld; திரு.Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM இந்தியா மற்றும் திரு.Abhijit Mukherjee, குழு இயக்குனர், UBM இந்தியா ஆகியோர் தொழில்துறை கூட்டத்தில் இடம்பெற்றனர்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/736032/Food_and_Hotel_India_Infographic.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/739538/Inaugration_of_FHIn.jpg )
இந்நிகழ்வு 12 நாடுகளில் 20 சந்தையில் முன்னணியில் உள்ள உணவு மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் முதன்மையான வகையிலானது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்களான UBM AllWorld மூலம் ஆசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் Food and Hotel Asia Singapore, HOFEX and Hotelex, ஆகியவை அடங்கும். எக்ஸ்போவின் மூன்று நாள் இந்திய பதிப்பானது உலகெங்கிலும் இருந்து பிரீமியம் பொருட்கள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தியது, தங்கள் வணிகத்தை வளப்படுத்தவும் அடுத்த நிலைக்கு கொண்டு சென்று வளர்ச்சியடையவும் தொழிற்துறைக்கான புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகளை வழங்கியது. முன்னணி இந்திய மற்றும் சர்வதேச விருந்தோம்பல் சங்கிலிகள், ஆலோசகர்கள், சப்ளையர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், ஆகியோருடன் கூட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இது விளங்கும் அதே நேரத்தில் அவர்களின் வாங்கும் சக்தியை பொருத்து முதன்மை வாங்குனர்கள் மற்றும் முடிவு செய்பவர்களை தேர்ந்தெடுத்து இணைக்கின்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட FHIn இன் முதல் வெளியீட்டில் பேசுகையில், திரு.Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM இந்தியா, "இந்தியாவில் உணவுத் துறை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதிக லாபம் தரும் துறையாகவும் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, உணவு பதப்படுத்தும் தொழிலுக்குள்ளேயே, அதன் மதிப்புக்கு கூடுதலான திறன் உள்ளது. வேளாண் தொழிற்துறையில் உலகளாவிய வர்த்தகத்திற்கான பெரும் வாய்ப்பு நம் நாட்டில் உள்ளது. இது மட்டுமல்லாது, நன்கு பயணித்துள்ள இளம் மற்றும் உழைக்கும் மக்கள் தொகையில் அதிகமானோர் இரட்டை வருமானம் கொண்டவர்களாக உள்ளனர், மேலும் தொழில்நுட்ப ஆர்வலராக இருப்பதுடன், தங்களது முன்னோடிகளை விட அதிகமாக சாப்பிடுவது, உணவு சேவைகள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகியவை சந்தைகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. FHIn18 க்குப் பின்னால் உள்ள முயற்சிகள் இந்தியாவின் உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா தொழில் ஆகியவற்றிற்கான ஒரு தளத்தை வழங்குகின்றன. இது ஆசியாவில் கிடைக்கக்கூடிய பெரிய சந்தை வாய்ப்புகளை ஆராய்வதற்கான சிறந்த சேனலை நிறுவனம் வழங்குகிறது மற்றும் வாடிக்கையாளர்களுடன் இந்தியாவில் முடிவெடுக்கும் தயாரிப்பாளர்களையும், விவரக்குறிப்பாளர்களையும், இறுதி பயனர்களையும் அடங்கிய மிகப்பெரிய கூட்டத்துடன் இணைக்க உதவுகிறது" என்று கூறினார்.
அதன் முதல் ஆண்டில், FHIn இல் 60 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களைக் கண்டது, இதில் அடங்குபவை - FnS, Feather Touch, Pascati Chocolates, Saimex Foods, Varahi, DL Corporation, Pam Hygiene, Metal Fabricator of India, Ace Technologies மற்றும் பல. Spain, USA, Thailand, Turkey, Switzerland, Canada, Peru, மற்றும் UK போன்ற 10 நாடுகள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்றன.
FHIn ல் இடம்பெறும் கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் சில:
நாள் 1 ல் Odd Box ன் ஒத்துழைப்புடன்,நடந்த 'Hospitality Strategy Summit'ல் , சிறந்த உழைப்பு கலாச்சாரத்தை கட்டமைப்பதற்கான உகந்த உத்திகளை வளர்க்கவும், அதே சமயத்தில் அதன் வளர்ச்சியின் போது ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் இது நோக்கமாக கொண்டிருந்தது. உச்சிமாநாட்டில் 1 நாளில் 4 பாதை நிகழ்வுகளை உள்ளடக்கியது, இதில் - Hospitality Begins at Home - creating a thriving company culture; The Rise of the Sharing Economy - has the hotel industry got a new 'frenemy'; Brand, Operations Or Design - who rules the roost?; Embracing The Health Conscious Traveler இது போன்ற விருந்தோம்பல் தொழிற்துறையின் சில முக்கிய தலைப்புகளை உள்ளடக்கியது. எக்ஸ்போவில் ProWein India இடம்பெற்றது, மூன்று நாள் நிகழ்வான இதில் வைன் மற்றும் ஸ்பிரிட்டின் மதிப்பிடல், வைன், ஸ்பிரிட் மற்றும் விருந்தோம்பல் நிபுணர்களுக்கான புலனுணர்வில் கவனம் செலுத்தும் விவாதங்கள் மற்றும் விளக்கக்காட்சிகள் போன்ற பலதரப்பட்ட கருத்தரங்குகள் நிகழ்ந்தன. . ProWein India, வைன் மற்றும் ஸ்பிரிட் உலகின் முன்னணி அறிவு பகிர்வு மேடையான WSET (Wine and Spirit Education Trust) & All things NICE ஆகியவற்றுடன் இணைந்து UBM இந்தியா & Messe Dusseldorf னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் 2 மற்றும் 3 ல், விருந்தோம்பல் தொழிற்துறை தலைவர்கள் அடங்கிய விருந்தோம்பல் தலைவர்கள் வட்டமேசை மாநாடு, இதில் மத்திய சந்தை பிரிவு, இந்தியாவில் எதிர்கால விருந்தோம்பல் திட்டம் மற்றும் தொழிற்துறை தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் போன்ற இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் வரிசையை கொண்டுள்ளது. இந்த எக்ஸ்போவில் சமையலறை திட்டமிடல் மற்றும் வடிவமைத்தலின் முக்கிய வகுப்பினையும் காணலாம். இது மாஸ்டர்க்ளாஸ் ஒரு ஊடாடும் அமர்வு ஆகும், இதில் வீட்டின் சமையலறைகளில் பின்புறம் மற்றும் முன்புறம் சிறந்த சமையலறை வடிவமைப்பு செயல்முறைகள், சமையலறை இடத்தை மேம்படுத்த வடிவமைப்பு விதிகள், உயர் ஆற்றல் திறன் மற்றும் உணவு பாதுகாப்பு போன்றவை விவரிக்கப்படும். நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று 'International Culinary Classic' ஆகும் - IFCA (India Federation of Culinary Association) மற்றும் WICA (West India Culinary Association) ஆகியவையால் ஆதரவளிக்கப்பட்டு இது ஏற்பாடு செய்யப்பட்டது, 'Chocolate Showpiece', 'Plated Appetizers', 'Individual Plated Desserts', 'Bread Display' மற்றும் 'Live Cooking' என்று வகைப்படுத்தப்படும் உயர்தர சமையல் வல்லுனர்களால் விரிவான உணவு வகைகளை காட்சிப்படுத்தும் ஒரு தொடக்க சமையல் சவால் ஆகும். நேரடி சமையல் சவாலை அதிகரிக்க, FHIn ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவிற்கு மூலப்பொருட்களின் INTERPORC & USA Egg and Poultry Council உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த அம்சங்களைத் தவிர, FHIn வணிக விவகாரங்களிலும் குழு கலந்துரையாடல்களிலும் விற்பனையாளர் ஹோட்டல் உறவுகள் மற்றும் தூய்மையாக்க கருத்தரங்குகள் நடைபெறும்.
Food and Hotel India பற்றி:
B2B முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும் Informa PLC உடன் இணைந்து ஜூன்2018ல் UBM ஆல் Food and Hotel India (FHIn) ஒருங்கிணைக்கப்படும். Food & Hotel India காட்சி பற்றிய மேலும் தகவலுக்கு http://www.foodandhotelindia.com/index.html தயவுசெய்து செல்லவும் மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்குச் செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். எங்கள் இருப்பை அறிய https://www.ubm.com/global-reach/ubm-asia க்கு தயவுசெய்து செல்லவும்.
மேலும் தகவலுக்கு , http://www.foodandhotelindia.com/international-shows.html
எந்த ஊடக கேள்விகளுக்கும் தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article