மும்பை, August 30, 2018 /PRNewswire/ --
10ஆம்தேதி -11ஆம்தேதி செப்டம்பர் 2018- சஹாரா ஸ்டார் ஹோட்டல்
இந்திய மற்றும் உலகளாவிய அழகு சமுதாயத்திற்கான ஒரு திருப்பு-முனை நிகழ்வு
Bologna, Las Vegas மற்றும் Hong Kong போன்ற இடங்களில் 370,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள 7,000 நிறுவனங்கள் பங்கு கொண்ட வெற்றிகரமான கண்காட்சிகளினால், Cosmoprof தளமானது Cosmoprof India உடன் இந்தியாவில், ஒரு புதுமையான, வளரும் சந்தையுடன் நுழைகிறது. மும்பை, சஹாரா ஸ்டார் ஹோட்டிலில் செப்டம்பர் 10 & 11 ஆம்தேதிகளில் முன்னோட்ட காட்சியின் வடிவில் நடைபெறும் இந்த கண்காட்சியானது, இந்திய அழகுசார் வியாபார சமுதாயத்திற்கு மட்டுமின்றி, சர்வதேச அழகுசார் தொழில்துறைக்கும் ஒரு மூல நிகழ்ச்சியாக அமையும்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/736740/Cosmoprof_India_Preview_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/684196/Cosmoprof_India_Preview.jpg )
அழகு வர்த்தக தொழில்துறையில் அதன் நீண்டகால அர்ப்பணிப்புடன்கூடிய ஆதரவு மற்றும் விரிவடைதலுடன், UBM India மற்றும் BolognaFiere ஆல் நடத்தப்படும் Cosmoprof India சர்வதேச அழகு சமுதாயத்திற்கு ஒரு திருப்புமுனை-நிகழ்ச்சியாக அமையும். பரந்த அளவிலான நுகர்வோர்களினால் விரும்பப்படும் பூர்த்தி செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அழகு தயாரிப்புகளை இந்திய துணைகண்டம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது. மேலும், முன்னணி சர்வதேச பிராண்டுகள்மற்றும் சப்ளையர்களுடன் உடனான நெட்வோர்க்கிங்கானது புதிய தொழில்துறை,சேவை மற்றும் பேக்கேஜிங் தீர்வுகளை வழங்குவதை உறுதி செய்துசர்வதேச அளவிலான உள்ளூர் தயாரிப்பு, இந்திய கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களின் அறிமுகம் மேலும் சிறந்த தரநிலைகள் போன்றவற்றை விரிவுபடுத்துகின்றன.
Cosmoprof India அறிவிப்பில் பேசுகையில் , Mr. Yogesh Mudras, Managing Director, UBM India பின்ருமாறு கூறினார், ' பிரத்தியேகமாக Las Vegas, Bologna (Italy) மற்றும் Hong Kong போன்ற இடங்களில் நடைபெற்ற ஆழ்ந்த அறிவு மற்றும் Cosmoprof Worldwide போன்ற சர்வதேச பிராண்டுகளின் சிறந்த நிபுணத்துவம் கொண்ட கண்காட்சிகளை, நான்காவது நகரமான மும்பைக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அழகு மற்றும் காஸ்மெடிக்ஸ் தொழில்துறையை ஆய்வு செய்தல், போக்குகளை முன்னறிவித்தல் மேலும் மேம்பாடுகள் ஆகியவற்றுடன் வர்த்தக வளமைக்கு உதவவும் நோக்கம் கொண்டுள்ள இரண்டு நாட்களுக்கு நடைபெறும் The Cosmoprof India வின் முன்னோட்டம், ஆக்கப்பூர்வமானதாக மட்டுமல்லாமல், தகவல்களை அளிப்பதாகவும் இருக்கிறது. கட்டமைக்கப்பட்ட முறையில் இந்தியாவில் அழகு மற்றும் காஸ்மெடிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நன்மைகளைத் தரும் சந்தையிலிருந்து பலன்களை அளிக்கிறது. முன்னோட்டத்திற்கு கிடைத்த பதிலால் இந்தியாவில் அதன் மெய்டன் பதிப்பு உச்சியைத் தொட்டுள்ளது.'
"Bologna, Las Vegas உடன் Cosmoprof North America மற்றும் Hong Kong உடன் Cosmoprof Asia கண்காட்சிகளில் 370,000 க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் 7000 நிறுவனங்கள் பங்குபெற்றனர்" என்று Cinzia Barbieri, Board Member of BolognaFiere Cosmoprof and BolognaFiere Group கூறுகிறார். 'மேலும் இப்போது Cosmoprof India தென்-கிழக்கு ஆசியாவில் ஒரு மேற்கோள் காட்டப்படும் B2B அழகு நிகழ்ச்சியாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக Cosmetics & Toiletries, ப்யூட்டி சலூன், தலை, நகம் மற்றும் அதன் துணைப்பொருட்கள், சப்ளை செயின் மற்றும் மூலப்பொருட்கள் மற்றும் உட்பொருட்களில் தலைவர்கள், கான்டிராக்ட் தயாரிப்பு மற்றும் பிரைவேட் லேபிள்கள், அப்ளிகேட்டர்கள், பிரைமரி மற்றும் செகன்டரி பேக்கேஜிங் இவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கான புதிய வாய்ப்புகளையும் இந்த கண்காட்சி அளிக்கிறது. இதனுடன் முக்கிய சர்வதேச வல்லுநர்கள் மற்றும் கருத்து தலைவர்கள் பங்கேற்கும் Cosmotalks மூலம் பங்கேற்பாளர்கள் அழது உலகில் புதிதாக என்ன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்வர்' என்றும் அவர் கூறினார்.
காஸ்மெடிக் தொழில்துறையின் அனைத்து அடுக்குகளும் பின்வருமாறு: மேக் அப், தோல் பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு, தலைமுடிபராமரிப்பு, வாசனை திரவியங்கள் மற்றும் காஸ்மெடிக்ஸ், பியூட்டி சலூன் மற்றும் ஸ்பா, நகம், துணைப்பொருட்கள், சலூன்களுக்கான ஃபர்னிச்சர் மற்றும் சப்ளைஸ். 97 நிறுவனங்கள் - உள்ளூர் மற்றும் சர்வதேசம் இரண்டும் -மும்பையில் தங்கள் தயாரிப்புகளை வாங்குபவர்களுக்கு கண்காட்சியில் அவற்றை காட்சிப்படுத்தும். நிகழ்ச்சியின்போது வியாபார வாய்ப்புகளை அதிகரிக்க, Cosmoprof Worldwide Bologna ஆல் முன்னோட்டத்தில் International Buyer Program சேர்க்கப்பட்டுள்ளது, அது இந்தியா, யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருக்கும் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், வாங்குபவர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் ஆகியோர்களுக்கு இடையே B2B சந்திப்புகளுக்கு உதவும்.
The Cosmoprof India Preview பல நேர்த்தியான விளக்கக்காட்சிகள் மற்றும் அம்சங்களை பயன்படுத்தி கருத்துகளை தெளிவாக்கும். உதாரணத்திற்கு, Cosmotalks ன் ஆழ்- கலந்தாலோசணைகள் மற்றும் செமினார்கள், Cosmoprof India Preview ல் இடம்பெற அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது, இது சர்வதேச புகழ்பெற்ற பங்குதாரர்களுடன் கூட்டு செயல்பாட்டிற்கு உதவும். ஆலோசணை திட்டங்கள் மற்றும் சந்தைப்பாதைகளின் மேம்பாட்டில் சிறப்பான Beautystreams, 'Spring/Summer 2019 beauty trend forecast' ஐ வழங்கும். இது அடுத்த பருவநிலையில் அழகு தொழில்துறைக்கான நிறம், டெக்ஸ்ச்சர்(இழைவுநயம்) மற்றும் தோற்றத் தூண்டுதலை விளக்கும். உயர் மேற்கோள் காட்டப்படும் சந்தை ஆய்வு நிறுவனமான Euromonitor, 'New consumer values and novel concepts in beauty' என்ற தலைப்பில் ஒரு கருத்தாய்வை நடத்தும், இதில் நுகர்வோர் எவ்வாறு அர்த்தமுள்ள நுகர்விற்கு மாறுகிறார்கள், தரம், வெளிப்படைத்தன்மை, எளிமை மற்றும் தனிப்பட்ட அனுபவம் போன்ற பரிசுக்குரிய மதிப்புகள் பற்றி மேற்கோள் காட்டப்படும். அமெரிக்க தயாரிப்பு தொழிற்சாலைகளின் அசோசியேஷனான ICMAD - Independent Cosmetic Manufacturers and Distributors ஆல் 'The top 10 most important things you need to know to do business in India' என்ற கருத்தரங்கு நடத்தப்படும். மிகப்பெரிய உலகளாவிய பெருநிறுவனங்களுடன் கூட்டிணைந்துள்ள வடிவமைப்பு ஏஜென்சியான Centdegrés, 'Designing the next generation of Indian beauty brands' என்ற தலைப்பில் உலக சந்தைகளின் மீதான இந்திய பிராண்டுகளின் தாக்கம் பற்றி ஆய்வு செய்யும். மிக முக்கிய தொழில்துறை குழுமங்களின் ஆலோசணை ஏஜென்சியான Kline & Company, 'The challenges and opportunities of the Indian salon hair care market' என்ற தலைப்பில் தன் கருத்தை விளக்கும், இது தொழில்நுட்ப உலகத்தை, குறிப்பாக நாட்டில் மேம்பட்டுக்கொண்டிருக்கும் தொழில்துறையின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான தலைமுடி பிரிவை பற்றி கவனம்செலுத்தும் .
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான, Cosmoprof OnStage காஸ்மெடிக்ஸ் தொழில்துறைக்கான சிறந்த புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் படைப்புத்திறனை வெளிப்படுத்தும். மேடையின் மையத்தில் Live demonstrations, hair shows, spectacular nail art, make-up techniques, cutting-edge beauty treatments மற்றும் புதியதயாரிப்புகள் ஆகியவை பங்குகொள்ளும் நிறுவனங்களால் வெளிப்படுத்தப்படும். இதற்கடுத்து, உலகளாவிய வடிவமைப்பு ஏஜென்சியான centdegrés உடன் பங்குதாரராகி Cosmoprof India, #VibrantIndia ஐ உருவாக்கும், இது இந்திய அழகு கலாச்சாரத்திற்கு வாய்ப்புகளை வெளிப்படுத்தும் தனிப்பட்ட இடமாக இருக்கும். வண்ணங்கள் மற்றும் இழைநயங்கள் நிறைந்த இந்திய கலாச்சாரமானது அழகு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எல்லையில்லாத வாய்ப்பை நல்கும், மேலும் காட்சிப்படுத்தும் நிறுவனங்களின் தயாரிப்புகளிடையை போக்குகளை தீர்மானிக்கும் காட்சி தளமாக Beautystreams இருக்கும்.
கண்காட்சியின்நிறைவுக்கு பிறகு, Cosmoprof India Trends வெளியிடப்படும் மேலும் Cosmoprof Indiaவின் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய பொருட்களை வெளிப்படுத்தும்.
மேலும் அதிக தகவல்களுக்கு, எங்களது வலைதளத்திற்கு வருகை தரவும் , http://www.cosmoprofindia.com/
தொழில்துறை பேச்சுகள் (Industry speaks):
Ronald Jean, Managing Director, Pevonia Global Spa Consulting: "கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக, உலகெங்கிலும் இயற்கையான தோல்பராமரிப்பு தீர்வுகளை finest spas மற்றும் professional aestheticians களுக்கு வழங்குவதில் முன்னணியாக Pevonia இருந்துவந்துள்ளது. இந்தியாவில் Pevonia ன் பிரத்தியேக புதிய கண்காட்சியாளராக Cosmoprof's முதன் முதல் இந்திய கண்காட்சியில் Ozone Group அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எங்களது நிறுவனங்களின் கோட்பாடுகள் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. Pevonia'வின் பச்சை தோல்பராமரிப்பு தயாரிப்புகள் & in-spa treatments, உயர்தரமான தொழில்நுட்பம் மற்றும் டெலிவரி அமைப்புகளுடன் சிறந்த இயற்கை தாவரம் மற்றும் கடல் உட்பொருட்கள் கூட்டிணைந்துள்ளன."
Samir Srivastav, Chief Executive Officer, Jean Claude Biguine Salon & Spa: "கடந்த 14 வருடங்களாக அழகு தொழில்துறையில் இருப்பதால், இந்திய அழகு மற்றும் உடல்நலம் தொழில்துறை பல மாற்றங்களை அடைந்ததை நான் கண்டுள்ளேன், அது மேலும் வளர்ச்சியடைந்து வளர்ச்சிக்கு சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. உண்மையில், இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளைவிட இருமடங்கு வேகமாக வளர்ந்துவருகிறது என கூறப்படுகிறது. சில்லறை விற்பனையும் அதிகரித்து வரும்நிலையில், இந்தியாவில் அழகு தொழில்துறை, மெட்ரோ நகரங்கள் மேலும் டையர் 2 நகரங்களிலும் வளர்ச்சியடைந்த ஷாப்பிங் மால்களுடன், ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறைப் பிரிவை நோக்கி நகர்ந்துள்ளது, இந்த சூழ்நிலை Cosmoprof போன்ற கண்ணியமான சர்வதேச தளம் இந்தியாவில் தன் கால்தடத்தை பதிக்க மிகச்சரியான காலமாகும், இதனால் வியாபாரத்தை தூண்டும் புதிய கருத்துகள், போக்குகள் மற்றும் கூட்டிணைப்புகளுக்கான பாதை திறக்கப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம். உண்மையில், இந்திய அழகு தொழில்துறைக்குள் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பிரதிபலிப்பே Cosmoprof India ஆகும், மேலும் நேர்மையாக கூறினோமென்றால் இது சரியான நேரத்தில் வந்த கருத்தாகும்"
Vikram Bhatt, Founder & Director, Enrich Hair & Skin Solutions Pvt. Ltd: "பல வருடங்களாக உலகளவில் பல இடங்களில் Cosmoprof ல் கலந்துகொண்டு, குறிப்பிட்ட விதத்தில் நாங்கள் பலனடைந்துள்ளோம், போக்குகளை புரிந்துகொண்டு சாத்தியமான நிறுவனங்களுடன் இணைய இது வழிவகுத்துள்ளது, மேலும் இப்போது அவர்கள் இந்தியாவிற்கு வந்ததை பற்றி நான்மகிழ்கிறேன். செப்டம்பர் மாதத்தில் முதல் கண்காட்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் நான் வெற்றிகரமான அறிமுகத்திற்காகவும் மற்றும் சிறந்த கண்காட்சிக்காகவும் அவர்களை வாழ்த்துகிறேன்"
Sandhya Chipalkatti, Editor & Publisher, StyleSpeak: "Cosmoprof உடனான எங்களது நீண்ட இணைப்பு எங்களுக்கு இந்திய பதிப்பானது இந்திய மற்றும் அதைப் போன்ற சர்வதேச பிராண்டுகளுக்கு சிறந்த வாய்ப்புகளை திறக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது"
Cosmoprof India பற்றி:
BolognaFier மற்றும் UBM கூட்டு முயற்சியான Cosmoprof Asia Ltd ஆல் Cosmoprof India ஒருங்கிணைக்கப்படும், முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் இணைந்து இதனை ஜூன் 2018ல் ஒருங்கிணைக்கிறது. CosmoprofIndia கண்காட்சி பற்றி அதிகம் தெரிந்துகொள்ள தயவுசெய்து வருகை தரவும் http://www.cosmoprof.com/about-us/cosmoprof-network/cosmoprof-india/ மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை தெரிந்துகொள்ள வருகை தரவும் https://www.ubm.com/global-reach/ubm-asia
UBM Asia பற்றி:
B2B முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும் Informa PLC உடன் சமீபத்தில் UBM Asia ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் https://www.ubm.com/global-reach/ubm-asia
BolognaFiere Group பற்றி (http://www.bolognafiere.it)
காஸ்மெடிக்ஸ், ஃபேஷன், ஆர்க்கிடெக்சர், பில்டிங், ஆர்ட் அன்ட் கல்ச்சர் ஆகியவற்றின் உலகின் முன்னணி வர்த்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக BolognaFiere குழு விளங்குகிறது. இந்த குழு அதன் சுயவிவரத்தில் 80க்கும் அதிகமான சர்வதேச கண்காட்சிகளை கொண்டுள்ளது அதில், 1976ல் Bologna, Italy நிறுவப்பட்ட அழகு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான முக்கிய சந்திப்பு புள்ளியான மிகவும் முக்கியமான Cosmoprof Worldwide Bologna வும் அடங்கும். ஒவ்வொரு தொழில்நுட்ப இலக்கின்படியும் வெவ்வேறு திறப்பு தேதிகளை, Cosmoprof 2019 பதிப்பிற்காக உறுதிப்படுத்தியுள்ளது. 14 ஆம்தேதி வியாழன்கிழமை முதல் 17 ஆம்தேதி ஞாயிறு 2019 வரை, Cosmopack and Cosmo|Perfumery& Cosmetics திறந்திருக்கும், இது ஒருபக்கம் சப்ளையர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கிடையே வியாபார சந்திப்புகளை வசதிப்படுத்தும், மேலும் மறுபுறம் நிறுவனங்களின் பூர்த்திசெய்யப்பட்ட தயாரிப்புகள் , வாங்குபவர்கள் மற்றும் சில்லறை வணிகர்களை ஒருங்கிணைக்கும், Perfumery & Cosmetics, Green & Organic and Cosmoprime கவனம் செலுத்துவதுடன் உயர்தர gamme perfumeryக்கும் தனியிடத்தை ஒதுக்கும்.15 ஆம்தேதி வெள்ளிக்கிழமை முதல் 18ஆம்தேதி மார்ச் வரை, Cosmo|Hair& Nail & Beauty Salonன் தொழில்நுட்ப விநியோகத்திற்காக கதவுகள் திறந்திருக்கும், beauty salons மற்றும் spa, hairdressers, hairstylists, nail artists மற்றும் distributors முதலாளிகளுடன் இது இணைந்திருக்கும். Cosmoprof ஆல் வழங்கப்பட்ட சர்வதேச பிளாட்ஃபார்மானது , Hong Kong (1996ல் உருவாக்கப்பட்டது), Las Vegas(2003ல் உருவாக்கப்பட்டது) மேலும் இப்போது 2018ல் மும்பையில் தொடங்கும் கண்காட்சிகளுடன் , பிராண்டுகள் வளரக்கூடிய அழகுத்துறைக்கான உலக சந்தையிடத்தை அளிக்கிறது.
மேலும் தகவல்களுக்கு , http://www.cosmoprof.com/cosmoprof/cosmoprof-worldwide-bologna/.
ஊடக தொடர்பு:
ASIA:
UBM India Pvt. Ltd.:
Ms. RoshniMitra
P: +91-7506183888
[email protected]
Ms. MiliLalwani
P: +91-9833279461
[email protected]
WORLDWIDE:
BolognaFiere Cosmoprof Spa:
Mr. Paolo Landi
P: +39-02-45-47-08-320
[email protected]
Ms. Arianna Rizzi
P: +39-02-45-47-08-253
[email protected]
.
Share this article