மும்பை, August 29, 2018 /PRNewswire/ --
இந்தியாவின் உணவு மற்றும் விருந்தோம்பல் தொழில்துறைக்கான சர்வதேச B2B கண்காட்சியில் 90க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள், 15 பங்கேற்கும் நாடுகள், 10 சர்வதேச கண்காட்சிக்கூடங்கள், மேலும் 8 சிறப்பு நிகழ்ச்சிகள்
2018, செப்டம்பர் 5ஆம்தேதி முதல்- 7 ஆம்தேதி வரை-
சஹாரா ஸ்டார் ஹோட்டல்- மும்பை, இந்தியா
இந்தியாவின் முன்னணி B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான UBM India , இந்திய துணைக்கண்டத்தில் தங்கள் முதல் உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியான Food and Hotel India Expo (FHIn) அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறார்கள். 12 நாடுகளிலிருக்கும் 20க்கும் அதிகமான சந்தை முன்னணி உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சிகளில் இது மிகவும் பிரதான மற்றும் செல்வாக்கான கண்காட்சியாகும், இது UBM Allworld நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் ஆசியாவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் Food and Hotel Asia Singapore, HOFEX and Hotelex, மற்றும் பலரும் இணைந்துள்ளனர். Food & Hotel India தொடக்க விழா மும்பையில் சஹாரா ஸ்டார் ஹோட்டலில் 5ஆம்தேதி முதல் 7 ஆம் தேதி செப்டம்பர் 2018 வரை நடைபெறும்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/736032/Food_and_Hotel_India_Infographic.jpg )
தங்கள் வாங்கும் திறனுடன் முடிவெடுப்பவர்கள் மற்றும் முதன்மை வாங்குபவர்களாக இருப்பவர்களை இணைப்பதுடன் , தொழில்துறை வல்லுநர்கள் தங்கள் சிறந்த தயாரிப்புகளை காண்பிக்கவும் சந்தைக்கான தீர்வுகளை தரவும் மேலும் இந்திய மற்றும் சர்வதேச முன்னணி விருந்தோம்பல் இணைப்புகளில் கூட்டணிகளை உருவாக்கவும், ஆலோசகர்கள், சப்ளையர்கள், முதலீட்டாளர்கள் போன்றவர்களை இணைக்கவும் FHIn ஒரு சிறந்த சேவை செய்கிறது. கண்காட்சியானது, ஆசியாவில் உணவு மற்றும் விருந்தோம்பல் பிரிவில் வலுவான வளர்ச்சியை காண முயலும் மையப்பகுதியில் இருக்கும், அதன் வகைகளிலேயே மிகவும் விரிவான சர்வதேச வர்த்தக கண்காட்சியாக பரவலாக கருதப்படுகிறது. FHIn, ஆசியாவில் இருக்கும் சிறந்த சந்தை வாய்ப்புகளை கண்டறிய நிறுவனங்களுக்கு வழிகாட்டுகிறது மேலும் முடிவெடுப்பவர்கள், வரையறுப்பவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இறுதி பயனர்கள் போன்ற மிகப்பெரிய கூட்டத்துடன் நுகர்வோரை இணைக்க உதவுகிறது.
Venus Industries, FnS, Feather Touch, Pascati Chocolates, Saimex Foods, Varahi, DL Corporation, Pam Hygiene, Metal Fabricator of India, Ace Technologies & இன்னும் பல, 15 நாடுகளிலிருந்து ஸ்பெயின், யுஎஸ்ஏ, தாய்லாந்து, துருக்கி, ஸ்விட்சர்லாந்து, கனடா ,பெரு மற்றும் யுகே போன்ற 90க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் முன்னோட்ட கண்காட்சியில் இடம்பெற்றார்கள்.
நிதி ஆண்டு 2020ல் இந்திய உணவு தொழில்துறை 482 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்புகளில் சர்வதேச வியாபாரத்திற்கான சிறந்த வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. மறுபுறம் பார்த்தால், மிக அதிக Foreign Direct Investment (FDI) ஐ ஈர்க்கும் இந்தியாவின் முதன்மையான 10 பிரிவுகளில் இந்திய சுற்றுலா மற்றும் விரும்தோம்பல் பிரிவும் இடம்பெற்றுள்ளது. சர்வதேச பிராண்டுகளுக்கான வியாபார வாய்ப்புகளை விரிவாக்க இந்தியாவின் உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறைக்கான சிறந்த தளத்தை வழங்க FHIn18 முன்முயற்சியாக இயங்கியுள்ளது.
சிறந்த வொர்க் ஷாப்கள், செஃப்(சமையல்காரர்கள்) போட்டிகள், தயாரிப்பு கண்டுபிடிப்புகள், மாநாடுகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் தயாரிப்பு அறிமுக பேடுகள் போன்றவை உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் நிகழ்ச்சியில் அடங்கியுள்ளன. மூன்று நாள் கண்காட்சியானது, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆற்றல் நிறைந்த போட்டியுடன் நிரம்பியுள்ளது.
தொழில்துறை முன்னோக்கியுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கலந்தாலோசிக்கவும் அறிவு பகிர்வுக்காகவும் தளத்தை வழங்க மூன்று புதிய, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, புதுமையான சந்திப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
India International Culinary Classic - IFCA (India Federation of Culinary Association) and WICA (West India Culinary Association) ஆல் ஆதரவு அளிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது 'Chocolate Showpiece', 'Plated Appetizers', 'Individual Plated Desserts', 'Bread Display' and 'Live Cooking' என்ற தலைப்புகளில் முன்னணி செஃப்களால் தலைப்பிடப்பட்ட உணவுபதார்த்தங்கள் காட்டப்படுவதே தொடக்க சமையல் சவால் நிகழ்ச்சியாகும். லைவ் குக்கிங் சவாலை விரிவுபடுத்த, ஸ்பெயின் மற்றும் யுஎஸ் உட்பொருட்களுக்காக INTERPORC & USA Egg and Poultry Council உடன் FHIn இணைந்துள்ளது.
UBM India & Messe Dusseldort in Association உடன் WSET (Wine and Spirit Education Trust) & All things NICE ஆல் ஒருங்கிணைக்கப்பட்ட ProWein India, wine மற்றும் spirits களுக்கான உலகின் முன்னணி தகவல் பகிர்வு தளமாகும். Food & Hotel India கண்காட்சியின் தொடக்க விழாவில், அது இப்போது பல செமினார்களை நடத்துதல் , wine மற்றும் spirit ருசித்தல், கலந்தாலோசனைகள் மற்றும் wine, spirit மற்றும் விருந்தோம்பல் தொழில்வல்லுனர்களுக்கான புலனுணர்வு மையப்படுத்திய வழங்கல்களை அளித்தல் போன்றவற்றை நடத்துகிறது.
Odd Box உடன் இணைந்த Hospitality Strategy Summit ஆனது, சிறப்பான பணிக் கலாச்சாரத்தை உருவாக்க உகந்த உத்திகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மேலும் அதனை மேம்படுத்துவதில் ஏற்படும் சவால்களை தீர்க்கவும் முயல்கிறது. இந்த மாநாடு, ஒரு நாளில் 4 டிராக் நிகழ்ச்சிகளை வழங்கி, விருந்தோம்பல் துறையின் முக்கிய தலைப்புகளை விளக்கியது.
சமையல் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் ஒர்க்ஷாப்புகள் தவிர, முதன்முறையாக இந்தியாவில் USA Egg and Poultry Council & INTERPORC தண்ணிரையும் பரிசோதிக்கிறது. இந்த ஒரு வாரகால வர்த்தக நடவடிக்கையில் இந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களையும் சந்திப்பதற்கு யுஎஸ் மற்றும் ஸ்பானிஷ் ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
Food & Hotel India பற்றிய அறிவிப்பில், Yogesh Mudras, Managing Director of UBM பேசும்போது, இவ்வாறு கூறினார், "இந்திய சந்தையில் அதிக வாய்ப்புகளை காண்பதால் நாங்கள் இந்திய சந்தையில் அறிமுகமானதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். உணவு மற்றும் பானங்கள் பிரிவின் வளர்ச்சியை தூண்டும் தொழில்துறைகளில் மிக முக்கியமானதாக இந்திய உணவு மற்றும் விருந்தோம்பல் தொழில்துறை உருவாகியுள்ளது. எளிதில் மனநிறைவு கொள்ளாத அதன் 1.30மில்லியன் வலுவான மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் நடுத்தர வர்க்கம் மற்றும் அதிகரித்த பகிர்ந்தளிப்பு வருமானம் ஆகியவற்றால் இந்தப் பிரிவு தொடர்ந்து வளர்கிறது.இந்தியா அதன் செழிப்பான சந்தைகளில் சர்வதேச பிராண்டுகள் வளர சிறந்த வியாபார வாய்ப்புகளையும் வழங்குகிறது. நாம் சேகரித்த நிபுணத்துவத்தையும் வரிசைப்படுத்தியுள்ள நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு இந்த காட்சியின் முன்னோட்டத்தை தொழில்துறை எதிர்நோக்குகிறது."
Food and Hotel India பற்றி:
B2B முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும் Informa PLC உடன் இணைந்து ஜூன்2018ல் UBM ஆல் Food and Hotel India (FHIn) ஒருங்கிணைக்கப்படும். கண்காட்சி பற்றி அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் http://www.foodandhotelindia.com/index.html மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி தெரிந்துகொள்ள வருகை தரவும் https://www.ubm.com/global-reach/ubm-asia.
UBM Asia பற்றி:
B2B முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்கும் Informa PLC உடன் சமீபத்தில் UBM Asia ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் https://www.ubm.com/global-reach/ubm-asia
மேலும் தகவல்களுக்கு , http://www.foodandhotelindia.com/international-shows.html.
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
ஊடக தொடர்பு :
Prachi Kumar
[email protected]
91-7718866668
UBM India
Share this article