மும்பை, June 6, 2018 /PRNewswire/ --
இந்தியாவில் முன்னணி வகிக்கும் தனிப்பட்ட ரியல் எஸ்டேட் சர்வீசஸ் நிறுவனமான ANAROCK Property Consultants இன்று, நிபுணத்துவமிக்க ரீட்டெய்ல் கன்சல்டன்சி சர்வீசஸ் மூலம் இந்தியாவின் $700 பில்லியன் ரீட்டெய்ல் சந்தைக்குள் நுழைவதற்காக பிரத்யேக புதிய நிறுவனமான ANAROCK Retailஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இந்தப் புதிய நிறுவனம் ANAROCK மற்றும் Faithlane Property Consultantsக்கு இடையிலான பார்ட்னர்ஷிப்பின் விளைவாகும். ரீட்டெய்ல் ரியால்டி துறையின் நிபுணரான Anuj Kejriwal, ANAROCK Retailஇன் CEO & MDஆக இணைந்து தலைமையேற்கிறார்.
(Logo: https://mma.prnewswire.com/media/701435/ANAROCK_Logo.jpg )
"ANAROCK நிச்சயமாக ரியல் எஸ்டேட் துறைக்குள் நுழைகிறது," என்று ANAROCK Property Consultantsஇன் தலைவர் Anuj Puri கூறினார். திரு. Puri பிரபல ரீட்டெய்ல் ரியல் எஸ்டேட் நிபுணராவார். இவர் முன்பு இந்தியாவில் முன்னணி வகிக்கும் IPCஇன் தலைவராக இருந்துள்ளார், இவர் Global Retail Leasing Boardஇன் தலைவராகவும் இருந்திருக்கிறார். "நாங்கள் இந்தத் துறையில் மிகப் பெரியளவில் வெற்றிப் பெறுவோம், ANAROCK Retail சரியான நேரத்தில் துவங்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் களத்தில் பல நிறுவனங்கள் சுறுசுறுப்பாக இயங்கினாலும், ரீட்டெய்லர்களுக்கும் அவர்களுக்கு தேவையான இடங்களுக்கும் இடையிலான தொடர்பின்மை அதிகமாக இருந்ததில்லை. பல மால் உரிமையாளர்களால் அவர்களின் ப்ராடக்ட்களையும் உத்திகளையும் புதிய ரீட்டெய்ல் சூழலுக்கு ஏற்ப பொருத்திக்கொள்ள இயலவில்லை. மிகவும் அறிவார்ந்த சந்தை நிபுணர்களின் குழுவைப் பயன்படுத்தி Anuj Kejriwalஇன் Faithlane, வெற்றிகரமாக இந்த இடைவெளியை சரிசெய்துள்ளது. அதன் வளஆதாரங்களை ANAROCKஇன் உயர் தொழில்நுட்பத்தால் இயங்கும் ப்ராப்பர்ட்டி கன்சல்டன்சி சர்வீசஸில் சேர்ப்பதன் மூலம், நாங்கள் 'கச்சிதமானப் பொருத்தத்தை" உருவாக்கியுள்ளோம்."
"2017இல் அதிகளவில் மால்கள் மூடப்பட்டுள்ளன மற்றும் கிட்டத்தட்ட 5 மில்லியன் சதுரடி ரீட்டெய்ல் இடம் அழிக்கப்பட்டன. இந்த மால்கள் 'அழிந்துவிட்டதாக' கருதப்படுகின்றன. இப்போது டெவலப்பர்கள் இந்த ரீட்டெய்ல் இடங்களை அலுவலகங்கள், பல பயன்பாட்டிற்கான இடங்கள், மருத்துவமனைகள் போன்றவையாக மாற்றுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றன," என்று Poori கூறினார். "பெரும்பாலான சூழ்நிலைகளில், டெவலப்பர்கள் குத்தகை சமன்பாடு, போதுமான குத்தகை நிபுணத்துவம் மற்றும் சரியான மால் நிர்வாக பார்ட்னர்கள் ஆகியவைக் குறித்து உத்திப்பூர்வ ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை. ANAROCK போன்ற நிபுணத்துவமிக்க நிறுவனம் அடிமட்டத்திலிருந்து சமன்பாட்டை சரிசெய்தால் மால்களைப் புதுப்பிக்க முடியும். வேறு சூழ்நிலைகளில், பல்வேறு பயன்பாட்டிற்காக குத்தகைக்குவிடுதல், 'ரிவர்ஸ் மாடலிங்' அல்லது பிசினஸ் மாடலை முழுவதுமாக மாற்றுதல் ஆகியவற்றின் மூலம் இந்த இடத்தை இலாபகரமானதாக மாற்றலாம்."
Faithlaneஐ துவங்குவதற்கும், ANAROCK குழுமத்துடன் சேர்த்து புதிய முயற்சியை மேற்கொள்வதற்கும் முன், Anuj Kejriwal பிரபல IPCஇல் ரீட்டெய்ல் சர்வீசஸின் தேசிய இயக்குனராக இருந்தார். இந்தத் திறனைக் கொண்டு, அவர் தனது ரீட்டெய்ல் பிரிவிற்கு உத்திப்பூர்வமான திசையை அமைத்து, மேற்கிந்திய சந்தையின் வருவாய் வளர்ச்சியை அதிகப்படுத்தினார். அதே நேரம், அவர் பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தாவில் சில்லறை வணிகத்தைக் கண்காணித்தார். மேலும் இவர் இந்தியாவின் மிகப்பெரிய, முன்னணி ரீட்டெய்ல் நிறுவனங்கள் மற்றும் ரீட்டெய்ல் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு முக்கியமான தொடர்பு மேலாளராக இருந்திருக்கிறார். 13 ஆண்டுகால தொழில்வாழ்க்கையில், Kejriwal ரீட்டெய்ல் மூலதன சந்தைகளிலும் ஆழமான நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் கொண்டிருக்கிறார். இதில் நிறுவனங்களை வாங்குபவர்கள் மற்றும் HNI ஆகியோருக்கான ரியல் எஸ்டேட் சொத்துக்களை உத்திப்பூர்வமாக விற்பனை செய்வதும் அடங்கியிருக்கும்.
ANAROCK Retailஇன் CEO மற்றும் நிர்வாக இயக்குனரான Kejriwal 30க்கும் அதிகமான ரீட்டெய்ல் ரியல் எஸ்டேட் நிபுணர்களின் குழுவிற்கு தலைமையேற்றிருக்கிறார். அவர் அடுத்த 12 மாதங்களில் 100 பேர் வரை இந்தப் பணியில் சேர்க்க திட்டமிட்டிருக்கிறார்.
"இந்திய ரீட்டெய்ல் வளர்ச்சி வேகம் எந்தளவிற்கு இருக்கிறதென்றால், மால் டெவலப்பர்களும் பெரும்பாலான ரீட்டெய்லர்களும் அதிவேக மாற்றத்தை சமாளிக்க இயலாத அளவிற்கு இருக்கிறது," என்று Anuj Kejriwal கூறினார். "ANAROCK Retail's services மிகவும் நேர்மறையான பல்வேறு சந்தைத் தாக்கங்களைக் கொண்டிருக்கும், இதனால், மால்கள் 'மூடப்படுவது' குறையும் மற்றும் நிறைய மால்கள் திறக்கப்படும். பிரத்யேக ரீட்டெய்லர்கள் அளவிடும் ஆப்ஷன்களுடன் அவர்களுக்கு தேவையான கச்சிதமான இடங்களைப் பெறுவதையும், ஒருங்கிணைக்கப்பட்ட மால் இடங்கள் உகந்த திறமிக்க முறையில் வாடகைக்கு விடப்படுவதையும், சிறந்த வசதிகள் இருப்பதையும் மற்றும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு திருப்தியை அளிப்பதையும், அதிகம் பேரை வரவைப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம்."
மிகப் பிரபலமான உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீட்டெய்லர்களும் மால் உரிமையாளர்களும் இது போன்ற இலக்குகளை அடைய உதவுவதற்கான ஒட்டுமொத்த அனுபவத்தையும் இந்த ANAROCK Retail குழு கொண்டுள்ளது. மேலும், பல்வேறு முன்னணி பிராண்டுகள் ஏற்கனவே இவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
ANAROCK Retail, ஒட்டுமொத்த நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக இதுவரை இந்தத் துறையில் இல்லாத புதிய பிசினஸ் மாடல்களுக்கேற்ப புதிய பிசினஸை துவங்கியுள்ளது. இதன் விளைவால் ரீட்டெய்ல் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சேவையை வழங்க உள்ளது. இந்தப் புதிய ரீட்டெய்ல் பிரிவு ANAROCKஇன் 10 இந்திய நகர அலுவலகங்களிலும், சர்வதேச அளவில் துபாயிலும் செயல்படும். மேலும், இந்த நிறுவனம் பல புதிய எல்லைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
ANAROCK பற்றி:
ANAROCK என்பது இந்திய அளவில் முன்னிலை வகிக்கும் தனிப்பட்ட ரியல் எஸ்டேட் சர்வீசஸ் நிறுவனமாகும். இது தொடர்பான பல்வேறு பிசினஸ்களிலும் இது ஈடுபட்டு வருகிறது. ANAROCK க்ரூப்பின் சேர்மனான Anuj Puri, இந்தத் துறையில் மிகவும் மரியாதை உள்ள நபர், இவர் இந்திய மற்றும் உலகளாவிய ரியல் எஸ்டேட் வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதில் 30 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். இவர் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆழமாகப் புரிந்துள்ள, நிறுவனத்தில் திடமான ஈடுபாட்டைக் கொண்டுள்ள திறன்மிக்க குழுவிற்கு தலைமையேற்றிருக்கிறார். ANAROCK முதலீட்டாளர்கள், டெவலப்பர்கள், வாடகைதாரர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் பொதுத் துறை ஆகியவற்றின் தேவைகளை நிறைவேற்றுகிறது. எங்களின் முக்கியமான உத்திப்பூர்வ பிசினஸ் யூனிட்டுகள் Residential Transactions & Advisory, Retail Transactions & Advisory, Capital Markets covering debt, equity and mezzanine funding, Investment Management managing proprietary funds and Research & Consulting ஆகியவை ஆகும். ANAROCK மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது, இதில் 1,500க்கும் அதிகமான தகுதிவாய்ந்த, அனுபவமிக்க பணியாளர்கள் வேலை செய்கின்றனர். நாட்டின் அனைத்து முக்கிய சந்தைகளிலும் அலுவலகங்களைக் கொண்டு, துபாயில் பிரத்யேக சேவைகளை அளிக்கும் ANAROCK, 80,000க்கும் அதிகமான சேனல் பார்ட்னர்களுடன் உலகளவிலும் தடம்பதித்துள்ளது. ANAROCKஇன் ஒவ்வொரு சிறப்பம்சமும் லாபத்தைவிட நன்னெறி அவசியம் என்னும் அடிப்படை உறுதிமொழியையும், அது வாடிக்கையாளர்களிடமும் பார்ட்னர்களிடமும் காட்டும் அக்கறையையும் பிரதிபலிக்கிறது.
பார்க்கவும்: http://www.anarock.com
ஊடகத் தொடர்பு:
Arun Chitnis
[email protected]
+91-9657129999
Head - Media Relations
ANAROCK Property Consultants
Share this article