IndiaOnline.in பெண்களுக்கானப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரை மாரத்தானை நடத்துவதற்காக டெல்லி போலீஸ் மற்றும் Ladli Foundation உடன் கைகோர்த்துள்ளது
புது டெல்லி, December 18, 2017 /PRNewswire/ --
www.IndiaOnline.in நெட்நொர்க், 'Run for Laadli' - அரை மாரத்தானை நடத்த கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. காலங்காலமாக நம் சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருந்துவரும் பெண்களுக்கானப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவமின்மை போன்றவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் டெல்லி காவல் துறை மற்றும் Ladli Foundation ஆகியவை இணைந்து இதனை நடத்துகின்றன.
'Run for Laadli' என்னும் அரை மாரத்தான், டிசம்பர் 17, ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனை இந்திய உள்துறை அமைச்சர் Shri Rajnath Singh துவங்கிவைப்பார். இதில் பல கேபினட் அமைச்சர்கள், பாலிவுட் பிரபலங்கள் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாரத்தான் காலை 8 மணிக்கு 21 கி.மீ., 11 கி.மீ. மற்றும் 5 கி.மீ. என்னும் மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஒரு வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும். மிகப் பெரிய பரிசுத் தொகையான ரூ. 1 லட்சம், 21 கி.மீ. பிரிவு ஓட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது.
பல கார்ப்பரேட் நிறுவனங்கள், NGOக்கள் மற்றும் அமைப்புகள் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. அவற்றில் Ola Cabs, Accessible India, ONGC, Indian Oil Corporation, OGL Gopal Corp, NBCC, EIL போன்றவையும் அடங்கும்.
இந்த முயற்சி குறித்து பேசிய, www.IndiaOnline.in நெட்நொர்கின் தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குனர், Mr. Raj Kumar Jalan, "சமூகத்தின் நலனில் அக்கறைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமாக, நாங்கள் பாலின சமத்துவமின்மையைத் எதிர்த்து நடத்தப்படும் 'Run for Laadli'யில் பங்கேற்பது குறித்து பெருமைப்படுகிறோம். எங்களின் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை வரவேற்கிறோம்" என்று கூறினார்.
Ladli Foundation Trustயின் நிறுவனரும், தேசிய விருதுபெற்றவரும், சமூக ஆர்வலருமான Mr. Devendra Kumar கூறியதாவது, "பெரும்பாலும் தினந்தோறும், உள்ளூர் செய்தித்தாள்களில் கற்பழிப்பு அல்லது பாலியல் வன்கொடுமைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. 12 முதல் 18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில், சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகள் நடைபெறுகின்றன. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சில மாதங்களாக கொடுமையான குழு கற்பழிப்புக்களுடன் சேர்த்து 25 கற்பழிப்புகளும், 42 பாலியல் தொல்லைகளும் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கற்பழிப்பின் தலைநகரம் என்கிற பெயரை பெற்றிருப்பது டெல்லியைச் சேர்ந்த அனைவருக்கும் மிகப் பெரிய அவமானமாக உள்ளது. நாங்கள் நாடு முழுவதிலும் Laadli Rakshak குழுவை உருவாக்குவதன் மூலம் இந்தச் சூழ்நிலையை மாற்ற விரும்புகிறோம்."
மாரத்தான் பற்றிய மேலும் தகவல்களைப் பெற www.runforlaadli.org என்னும் வலைதளத்தைப் பார்க்கவும். இது www.IndiaOnline.in நெட்வொர்க்கால் உருவாக்கப்பட்டு, விளம்பரப்படுத்தப்படுகிறது.
IndiaOnline.in Network பற்றி:
Pan India Internet Private Limited-ன் ஒரு முயற்சியான www.IndiaOnline.in நெட்வொர்க் என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் / நகரத்திற்கும் / ஊருக்கும் பிரத்யேக வலைதளத்தைக் கொண்ட உலகிலேயே மிகப் பெரிய வலைதள நெட்வொர்க்காகும். இது டெல்லிக்கு www.DelhiOnline.in, மும்பைக்கு www.MumbaiOnline.in என்பவைப் போன்று தனித்தனியே வலைதளங்களைக் கொண்டுள்ளது. இது ஆன்லைனில் வணக நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பினை உருவாக்கித் தருவதற்கு, மிகவும் மேம்பட்ட டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை தனது வணிக வலைதளம் போன்றவற்றைப் பயன்படுத்தி வழங்குகிறது.
ஊடகத் தொடர்பு:
Rudradeep Ghosh
E - [email protected]
M - +91-9643105045
Pan India Internet Private Limited (New Delhi)
Share this article