சோனிபட், இந்தியா, November 3, 2017 /PRNewswire/ --
O.P. Jindal Global University (JGU) யின் Jindal Global Business School (JGBS) கல்வி, கலாச்சார மற்றும் பணியாளர்கள் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக நட்பு மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை உருவாக்கும் பொருட்டு United States, Quinnipiac பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது,
(Photo: http://mma.prnewswire.com/media/595912/O_P_Jindal_JGU_and_Quinnipiac_University.jpg )
புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU, JGBSன் டீன் மற்றும் தலைவர், Dr. Tapan Panda, Quinnipiac பல்கலைக்கழகத்தின், John L. Lahey ஆகியோருக்கிடையே கையெழுத்திடப்பட்டது. இரண்டு உலகளாவிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இந்த கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், அதே போல் புத்தகங்கள், ஆராய்ச்சி மற்றும் குறிப்புப் பொருட்கள் ஆகியவற்றின் பரிமாற்றத்தை அனுமதிக்கும்.
நிறுவன துணை வேந்தர், Professor (Dr.) C Raj Kumar விழாவில் பேசுகையில், ''ஒரு உலகத்தரமான வணிக பட்டமளிப்புத் திட்டத்தை உருவாக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஒரு கருவியாகிறது. இன்றைய போட்டிச் சூழ்நிலைக்கு ஏற்ற கல்வி சூழ்நிலையை வழங்குவது, கற்றலில் கூட்டுறவுகளை ஊக்குவிப்பதோடு, உலகளாவிய வெளிப்பாடு மூலம் கற்றல் எல்லைகளை விரிவுபடுத்துவதன் நோக்கமாக உள்ள ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பது என மாணவர்களை சிறந்த தொழிலாளர்களாக மாற்ற பலவகையான மற்றும் உலகளாவிய முன்னோக்குகள் அவர்களுக்கு அவசியம் தேவை. Jindal Global Business School மற்றும் Quinnipiac பல்கலைக்கழகங்களிடையே உள்ள கல்வி புரிதல் இரு தரப்பு மாணவர்களுக்கும் ஒரு உலகளாவிய சிறந்த அனுபவத்தை அளிக்கும்", என்று கூறினார்.
JGBS, இன் டீன், திரு. Dr. Tapan Panda, "USA இன் University of Quinnipiac பல்கலைக்கழகத்துடனான எங்கள் உறவு, Jindal Global Business School ன் மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுக்கான புதிய முயற்சிகளை அமெரிக்கா திறக்கப் போகிறது. இந்த புரிந்துணர்வு மூலம் இப்போது எங்கள் மாணவர்கள் அமெரிக்காவில் எம்.எஸ். திட்டம் மற்றும் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்க முடியும். நாம் JGBS மாணவர்களுக்கு ஒரு உலகளாவிய தளத்தை உருவாக்குவதை நோக்கி நகர்கிறோம், இதனால் ஒரு மாணவருக்கு கல்விகற்பதற்கும் மற்றும் கண்டங்களைப் பற்றி முழுவதும் கற்று கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த உறவு ஆசிரிய உறுப்பினர்களிடையே உலகத் தரமான ஆராய்ச்சி செய்ய ஒரு வாய்ப்பினையும் மற்றும் மிகவும் மதிப்பான இதழில் வெளியிடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த உறவு பொது கொள்கை மற்றும் பெருநிறுவன ஆளுமை, நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தின் பகுப்பாய்வு மற்றும் வருங்கால வாழ்வில் அதன் தாக்கம் போன்ற நடப்பு களங்களில் வாய்ப்புகளை திறக்கிறது. Quinnipiac பல்கலைக் கழகத்துடன் இந்த உறவு மூலம் JGBS கல்வி மற்றும் தொழில்துறை உலகிற்கு கணிசமான பங்களிப்பை வழங்க முடியும்."
தலைவர், Quinnipiac பல்கலைக்கழகம் John L. Lahey, "Jindal University மற்றும் Quinnipiac University கல்வி புரிதலில் இணைந்திருக்கும் இந்த உறுதிப்பாட்டுக்கு கையெழுத்திடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன்மூலம் இந்த இரு நாடுகளுமே கல்வி பிரச்சினைகள் மற்றும் பரஸ்பர நலன்களோடு, பல்கலைக்கழகங்களும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்." என்று தெரிவித்தார்.
O.P. Jindal Global University தற்போது 200 வளர்ச்சியுற்ற சர்வதேச கூட்டமைப்பின் மூலம் உலக அளவில் ஐம்பது நாடுகளில் நூற்று ஐம்பத்து ஐந்து பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் கொண்டுள்ளது.
O.P. Jindal Global University பற்றி -
O.P. Jindal Global University (JGU) என்பது ஹரியானா அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இலாபமற்ற உலகளாவிய பல்கலைக் கழகம் ஆகும், இது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டது. JGU, அதன் நிறுவனர் வேந்தர், திரு.நவீன் ஜின்டால் தனது தந்தை திரு O.P. Jindal அவர்களின் நினைவாக ஒரு தொண்டு நிறுவனமாக நிறுவப்பட்டது. தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டுக் கவுன்சில் (National Accreditation & Assessment Council) (NAAC) மூலமாக JGU மிக உயர்ந்த தரமான 'A' வழங்கப்பட்டது. ஆசியாவின் சில பல்கலைக்கழகங்களில் ஒன்றான JGU ஆனது 1:13 பேராசிரியர்-மாணவர் விகிதத்தை பராமரித்து இந்தியாவிலுள்ள ஆசிரிய உறுப்பினர்களையும், சிறந்த கல்வித் தகுதிகளையும் அனுபவங்களையும் உலகின் பல்வேறு பகுதிகளிளும் நியமித்துள்ளது. JGU ஒரு ஆராய்ச்சி தீவிர பல்கலைக்கழகம் ஆகும், இது பல்துறை மற்றும் புதுமையான கல்விமுறைகளால் முக்கிய நிறுவன மதிப்பீடுகளுக்கு மிகவும் உறுதியளிக்கிறது; பன்முகத்தன்மை மற்றும் கடுமையான புலமைப்பரிசில்; மற்றும் உலகமயமாக்கல் மற்றும் சர்வதேச ஈடுபாடு. Jindal Global Law School (JGLS), Jindal Global Business School (JGBS), Jindal School of International Affairs (JSIA), Jindal School of Government and Public Policy (JSGP), Jindal School of Liberal Arts & Humanities (JSLH), Jindal School of Journalism & Communication (JSJC) and Jindal School of Art & Architecture (JSAA) ஆகிய ஏழு பள்ளிகளை JGU நிறுவியுள்ளது.
மேலும் தகவலுக்கு தயவுசெய்து பார்க்கவும்- https://www.jgu.edu.in/.
ஊடகத் தொடர்பு:
Ms. Kakul Rizvi
[email protected]
+91-8396907273
Additional Director
Communication and Public Affairs
O.P. Jindal Global University
Share this article