மும்பை, November 2, 2017 /PRNewswire/ --
MoneyOnMobile, Inc. (OTCQX: MOMT) இன்று Infinity Business Partners உடன் தான் பங்குதாரர் இணைந்தது குறித்து அறிவித்தது, இது இந்தியாவின் முன்னணி காப்பீட்டு வழங்குநர்களிடம் இருந்து நுகர்வோர் வாங்கிய மோட்டார்சைக்கிள்கள் மற்றும் மொப்படுகள் ஆகியவற்றிம் இரண்டு சக்கர வாகன காப்பீட்டை வசூலிப்பதற்கு MoneyOnMobile சில்லரைவர்த்தகர்களுக்கு உதவுகிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20170328/483548LOGO )
(Photo: http://mma.prnewswire.com/media/594932/MoneyOnMobile_and_Infinity_Business_Partners.jpg )
"தங்கள் மொபைல் பேமண்ட் தளத்தின் மூலமாக மிகவும் தேவையான காப்பீட்டு தயாரிப்புக்கான 'கடைசி மைல்' பேமண்ட் தெரிவை அளிப்பதற்காக MoneyOnMobile உடன் பணிசெய்வதில் நாங்கள் உற்சாகமடைகிறோம். தற்போது குறைந்தபட்சம் 150 மில்லியன் இரண்டு சக்கர வாகனங்களாகிலும் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டு இருக்கின்றன, 2017 ஆம் ஆண்டில் மட்டும் 17.7 மில்லியன் வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது, மற்றும் தொழிற்சாலை உத்தேசங்களின் அடிப்படையில், சந்தையின் அளவு சுமார் $1 பில்லியன் இருக்கும்," என்றார் Sorabh Bhandari, நிறுவனர் பங்காளர், Infinity Business Partners LLP.
"அனைத்து மோட்டார் வாகனங்களையும் காப்பீடு செய்ய வேண்டியதை கட்டாய கடமையாக அரசாங்கம் கட்டாயமாக்கி இருக்கும் நிலையில், சமீபத்திய ஆய்வு 60 சதவிகித வாகனங்கள் இன்னும் காப்பீடு செய்யப்படாமல் இருப்பதைக் காட்டுகின்றது. காப்பீட்டை செலுத்துவதற்கான தடைகளை நீக்குவதன் மூலம், MoneyOnMobile தனது 335,000 சில்லரை வர்த்தக இடங்களிலும் நிறைவேற்றல் செயல்முறையை எளிமைப்படுத்தியதன் மூலம் சுலபமான நுகர்வோர் அணுகலை வழங்குகிறது," என்றார் Suvendu Prusty, நிறுவனர் பங்காளர், Infinity Business Partners LLP.
Ranjeet Oak, இந்தியாவில் MoneyOnMobile உடைய இணை மேலாண்மை இயக்குநர் , இவ்வாறு கூறினார், "இரண்டு சக்கர வாகன காப்பீட்டு ப்ரீமியம் வசூல், தொலைப்பேசி ரீசார்ஜிங், பண பரிவர்த்தனைகள், பிரயாண டிக்கெட்டுகள் மற்றும் பலவற்றை MoneyOnMobile பேமண்ட் தளத்தின் மூலம் செய்வதற்கான சாதகத்தன்மை எங்கள் சில்லரைவர்த்தகர்களிடம் உள்ளது. அதேநேரம், இந்தியா முழுவதிலுமுள்ள வங்கியில்லாத மற்றும் வங்கியில் குறைந்த தொகை வைத்துள்ள குடிமக்களுக்கு எங்களுடைய கடைசி கட்ட நிதி சேவைகள் ஒரு பெரிய வசதியான வாய்ப்பை அளிக்கிறது. "
"Infinity Business Partners உடனான எங்கள் கூட்டணி MoneyOnMobile சில்லரைவர்த்தக நெட்வொர்க் மூலம் கிடைக்கும் அடிப்படை பணம்செலுத்துவதற்கான வாடிக்கையாளர்களுக்கு அதிகரித்துக் கொடுப்பதற்கான எங்கள் யுக்தியின் ஒரு பகுதியாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து முக்கிய கட்டணம் செலுத்துதல்களுக்குமான ஒரே இடத்தை வழங்குவதே எங்கள் யுக்திக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான காரணி ஆகும்," என்றார் Harold Montgomery, MoneyOnMobile உடைய சேர்மேன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. "பல்வேறு சேவை வழங்குநர் இடங்களில் நடைபெறும் ரொக்க கட்டணம் செலுத்துதல்களுக்கு பிரயாணம் செய்வதற்கும் வரிசையில் காத்திருப்பதற்கும் அதிக நேரம் தேவைப்படும். MoneyOnMobile உடன் நுகர்வோர் ரொக்கத்தை டிஜிட்டல் கட்டணங்களாக மாற்றி ஒரே MoneyOnMobile சில்லரைவர்த்தகரிடம் பல சேவை வழங்குநர்களுக்கு கட்டணம் செலுத்தலாம் - இது வசதியை மட்டும் அல்லாமல், சில்லரை வர்த்தகர்களுக்கு கூடுதல் சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் அளிக்கிறது."
பார்வைக்கு:
இரண்டு சர்க்கர வாகனங்களின் எண்ணிக்கை: http://knowindia.net/auto.html
வருடாந்திர இரண்டு சர்க்கர வாகன விற்பனை: http://timesofindia.indiatimes.com/auto/bikes/india-is-now-worlds-biggest-2-wheeler-market/articleshow/58555735.cms
காப்பீட்டு விலை/ஆணை: http://sites.ndtv.com/roadsafety/60-of-vehicles-in-india-are-not-insured-and-most-of-these-are-two-wheelers-3027/
MoneyOnMobile குறித்து
MoneyOnMobile, Inc. என்பது ஒரு உலகளாவிய மொபைல் கட்டணம்செலுத்தும் தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைப்படுத்தும் நிறுவனம், இது தனது இந்திய துணைநிறுவனத்தின் மூலம் மொபைல் பேமண்ட் சேவைகளை வழங்குகிறது. MoneyOnMobile இந்திய நுகர்வோர் சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் அல்லது ஒரு செல்ஃபோனில் இருந்து மற்றொன்றுக்கு கட்டணம் செலுத்துவதற்கு தங்கள் மொபைல் ஃபோன்களை பயனபடுத்த உதவுகின்றது. இது ஒரு எளிய எஸ்எம்எஸ் உரை செயல்பாடாக அல்லது MoneyOnMobile பயன்பாடாக அல்லது இணையதளமாக பயன்படுத்தப்படலாம். MoneyOnMobileக்கு இந்தியா முழுவதிலும் 335,000க்கும் மேற்பட்ட சில்லரை வர்த்தக இடங்கள் உள்ளன.
Infinity Business Partners LLP குறித்து
Infinity Business Partners LLP. நிறுவனம் 65 ஆண்டுக்கும் மேற்பட்ட அனுபவமுள்ள நான்கு தேர்ச்சிபெற்ற வங்கி மற்றும் நிதிநிலை சேவைகள் துறை மற்றும் ஆலோசனை நிபுணர்களால் நிறுவப்பட்டது. இவர்கள் முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் / என்பிஎஃப்சி-களுடன் பணிசெய்கிறார்கள், அவர்களுக்கு ஆலோசனை வழங்கி விற்பனையை செயல்படுத்தி உக்திகளை விநியோகித்து, கூட்டணிகளை வென்று ஊக்கப்படுத்தி, புதிய தயாரிப்புகள் மற்றும் இன்ஸ்யூர்டெக்கை உருவாக்குகின்றனர்.
தற்காப்பு அறிக்கை
இந்த வெளியீடு எந்த பொருளின் பாதுகாவலையும் விற்பதற்கான முன்வைப்பு அல்லது வாங்குவதற்கான கோரிக்கைகளையும் கொண்டு இருக்கவில்லை. இந்த வெளியீட்டில் இடர்களும் நிச்சயமற்றத்தன்மைகளும் இருக்கும் எங்களுடைய தற்போதைய எதிர்பார்ப்புகள், கணிப்புகள் மற்றும் யூகங்களின் அடிப்படையிலான சில முன்னோக்கு அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வெளியீட்டில் இருக்கும் முன்னோக்கிய அறிக்கைகள் இன்றைய தேதியில் எங்களுக்குக் கிடைத்து இருக்கும் தகவல்களின் அடிப்படையிலானவை. ஜூலை 6, 2017அன்று பூர்த்திசெய்யப்பட்ட படிவம் 10-K இல் வெளியிடப்பட்ட இடர் காரணங்கள் உள்ளிட்ட எங்கள் தொழிலோடு தொடர்புடைய இடர்கள் மற்றும் நிச்சயமற்றத்தன்மைகளின் காரணமாக இத்தகைய முன்னோக்கு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது குறிப்பால் உணர்த்துகின்றவற்றில் இருந்து எங்கள் உண்மையான முடிவுகள் பொருளாதார ரீதியாக வேறுபடலாம். முன்னோக்கு அறிக்கைகளில் எதிர்காலம் குறித்த எங்கள் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், உள்நோக்கங்கள் அல்லது உக்திகள் உள்ளடங்கும் மற்றும் அவை "எதிர்பார்க்கிறோம்", "நம்புகிறோம்", "எதிர்நோக்குகிறோம்", "முற்படுகிறோம்", "ஒருவேளை நடக்கலாம்", "வேண்டும்" மற்றும் "செய்யும்" அல்லது அது போன்ற முன்னோக்கு வார்த்தைகளினால் அடையாளம் காணப்படலாம். புதிய தகவல்கள், எதிர்கால நிகழ்வுகள் அல்லது வேறு எவற்றின் முடிவினாலும் இந்த அச்சு வெளியீட்டிலே இந்த தகவல்களை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நாங்கள் யூகிக்கிறோம்.
இணையதளம்: http://www.moneyonmobile.in
டிவிட்டர்: https://twitter.com/MoneyOnMobile
ஃபேஸ்புக்: https://www.facebook.com/MoneyOnMobile.Official/
லிங்க்டின்: https://www.linkedin.com/company/moneyonmobile
யூடியூப்: https://www.youtube.com/channel/UCxqO4N1z9acnQmEysjqfBaQ
ஊடக தொடர்பு:
Navaz Damania
[email protected]
+91-9167122661
Vice President - Corporate Communicaton
MoneyOnMobile
Share this article