புதுதில்லி, September 18, 2017 /PRNewswire/ --
இந்த தரவரிசைப்படுத்தும் செயல்பாடு இந்திய அரசின் தூய்மை இந்தியா இயக்க முயற்சியின் ஒரு பகுதியாகும்
இந்தியாவின் 3500 கல்வி நிறுவனங்களில் உள்ள எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்துறை O.P. Jindal Global University (JGU) தூய்மைத் தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசைகள் இன்று புதுடில்லியில் நடந்த தூய்மைத் தரவரிசை விருது நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன. இந்த விருது, O.P. Jindal Global University-ன் நிறுவனர் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) C. Raj Kumar அவர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் Mr. Prakash Javadek அவர்களால் வழங்கப்பட்டது.
(Photo: http://mma.prnewswire.com/media/556737/JGU_No_1_Swachhta_Ranking_2017.jpg )
அறிவிக்கப்பட்ட அளவுருக்களின் மூலம் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், JGU, MHRD - யால் களப் பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலுள்ள 174 கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும், ஹரியானாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கல்வி நிறுவனமாகும். பின்னர் ஒரு மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு வளாகத்திற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த வளாகத்தின் பராமரிப்பு, அத்தியாவசிய சேவைகளின் தரம், பசுமை, கழிவகற்றும் வழிமுறைகள் மற்றும் JGU அண்டை சமூகங்களில் மேற்கொண்ட விரிவாக்கப் பணிகளையும் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியது.
பல்கலைக்கழகத்தின் இந்தச் சாதனைக்காக பாராட்டு தெரிவித்த JGU நிறுவனர் துணைவேந்தர், Mr. Naveen Jindal கூறுயதாவது, "ஜிண்டால் சர்வதேசப் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான பல்கலைக்கழகம் என்ற விருது வழங்கப்பட்டது ஒரு பெருமைக்குரிய தருணமாகும். ஒரு சுத்தமான வளாகத்தின் தேவையை நாங்கள் எப்போதும் வலியுறுத்தியுள்ளோம், மேலும் எல்லா முன்னெடுப்புகளிலும் நிறுவனங்களிலும் தூய்மைக்கு மிக உயர்ந்த முன்னுரிமை மற்றும் கவனம் செலுத்தியுள்ளோம்... நான், ஜிண்டால் சர்வதேசப் பல்கலைக்கழத்தில் உள்ள குழு மற்றும் இந்தச் சாதனை புரிய பங்களித்த எல்லோருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
பல்கலைக்கழக வளாகத்தில் பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் ஒரு நிலையான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. வளாகத்தில் ஏறக்குறைய 50%, 7000-த்திற்கும் மேலான மரங்களுடன் பசுமைப்போர்வையுடன் திகழ்கிறது. வளாகத்தில், கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் கழிவுநீர் சுத்துகரிப்பு நிலையங்கள் உள்ளன. சூரிய ஆற்றல் அலகுகள் பல்கலைக்கழத்தை ஆற்றல்திறனுள்ளதாக ஆக்குகிறது. எல்லா வசதிகளின் பாதுகாப்புமற்றும் பராமரிப்பு பணிகளும் தகுந்த கால இடைவெளிகளில் செவ்வனே செய்யப்படுகின்றன.
நிறுவனர் துணைவேந்தர் மற்றும் நற்பணியாளர், Mr. Naveen Jindal அவர்கள் மற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்தச் சாதனையை எட்டுவதற்கு அவர்கள் அளித்த அபரிமிதமான பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், Professor (Dr.) C. Raj Kumar, Founding Vice Chancellor, O.P. Jindal Global University அவர்கள், "இந்நாள் ஜெஜியு-வின் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய ஒரு நன்னாள் ஆகும். நாம் இந்தியா அரசால் நாட்டிலேயே மிகவும் தூய்மையான பல்கலைக்கழகமாக அடையாளம் காணப்பட்டுள்ளோம். இது ஒரு உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழக வளாகத்தை உருவாக்க ஜெ ஜி யு-வின் அற்பணிப்பையும் அயராத முயற்சியையும் சுட்டிக்காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும். ஜெ ஜி யு-வைப் பொறுத்தவரையில், இது, சமூக அளவிலும், சுற்றுச்சூழல் அடிப்படையிலும் நிலைப்புத்தன்மையுள்ள, படைப்புத்திறனுக்கு ஊக்கமளிக்கும், ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கிறது, எல்லாவற்றையும் உள்ளடக்கிய உணர்வளிக்கும் மேலும் ஒரு பன்முகப்பட்ட சமூகத்திற்கு உறைவிடமாகத் திகழும் ஒரு இயல்பியல் சூழலை அளிப்பதேயாகும். இது நமக்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்மதிப்பை அளிக்கின்றது, மேலும் நாம் இந்த அங்கீகாரத்தைப் பராமரித்து, இந்த விருது உண்டாக்கியுள்ள எதிர்பார்ப்பை எப்போதும் ஈடு செய்யும் வகையில் பணிபுரிய வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்று கூறினார்.
இந்த முன்னேற்றத்தைக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த JGU, Prof. Y.S.R. Murthy அவர்கள் கூறியதாவது, "ஒரு கல்வி நிறுவனமாக, எங்களது மாணவர்களில் சரியான மதிப்புகளை வித்திடுவதே JGU-வின் பெருமுயற்சியாக இருந்து வந்துள்ளது. நாடு முழுவதிலும் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய ஒரு தீவிர விழிப்புணர்வு தேவைப்படுகிறது. நிலையான முயற்சிகளால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர JGU தொடர்ந்து முயற்சிக்கும்."
JGU-வின் தலைமை நிர்வாக அதிகாரி, Lt. Gen. Kochhar அவர்கள், "தூய்மை உட்பட எல்லா பிரிவுகளிலும் மிக உயர்ந்த தொழில்முறைத் தரநிலைகளைப் நிலைநிறுத்த நாங்கள் விழைந்துள்ளோம். இந்த அங்கீகாரம் எங்களுக்கு உற்சாகமளித்துள்ளது." என்று கூறினார்.
ஊடகத் தொடர்பு:
Ms Kakul Rizvi
[email protected]
+91-8396907273
Additional Director, Communications and Public Affairs
O.P. Jindal Global University
Share this article