அரசியல் சாசன ஜனநாயகம் அரசியல் சாசன தாராளமயத்தை ஏற்படுத்தும் என்கிற அவசியமில்லை: உச்சநீதிமன்ற நீதிபதி
புது டெல்லி மற்றும் சோனிபட், இந்தியா, August 10, 2017 /PRNewswire/ --
முக்கிய குறிப்புகள்:
- O.P. Jindal Global University தனது 6வது ஆண்டு பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியது. இளங்கலை மற்றும் முதுகலை கல்வியை வெற்றிகரமாக முடித்த 401 மாணவர்களுக்கு பட்டமளித்தது.
- இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி Dr. Justice D.Y. Chandrachud, பட்டமளிப்பு விழா உரையை நிகழ்த்தினார், இவர் பாலின வேறுபாடற்ற குழந்தை வளர்ப்பு, வேலை இடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு வெளிகள் மற்றும் மாறிவரும் மனநிலைகள் குறித்து பேசினார்.
- மாநில திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் Rajiv Pratap Rudy, மற்றும் Axis Bankன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி Ms. Shikha Sharma, ஆகியோர் சிறப்பு உரைகளை நிகழ்த்தினர்.
வெவ்வேறு படிப்புகளை உள்ளடக்கிய O.P. Jindal Global University (JGU) தனது 6வது பட்டமளிப்பு விழாவை டெல்லியில் Siri Fort அரங்கில் நடத்தியது. இங்கு பட்டம்பெறும் 401 மாணவர்களுக்கு பட்டங்கள், தங்கப் பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக நிறுவனர் தின கொண்டாட்டமாகவும் அமைந்த இந்த கண்கவர் நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி Dr. Justice D.Y. Chandrachud, இந்திய அரசின் மாநில திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் Rajiv Pratap Rudy, மற்றும் Axis Bankன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி Ms. Shikha Sharma ஆகியோர் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி Dr. Justice D.Y. Chandrachud பாலின வேறுபாடற்ற குழந்தை வளர்ப்பும் உணர்வாக்கமும்தான் தற்போதைய தேவை என்பதை முன்னிலைப்படுத்தினார். "நாம் கடந்த சில ஆண்டுகளில் முன்னேற்றமடைந்திருந்தாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் ஏன் குறையவில்லை என்பதை ஆராய்வதற்கான நேரம் வந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பான வேலை இடத்தை உருவாக்கித் தருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களும் பொது வாழ்வில் ஆண்களுக்கு சமமாகப் பங்கேற்க முடியும். பணியிடங்கள் பாதுகாப்பானதாகவும், பொது போக்குவரத்து எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை நமது மனப்பான்மை மாற வேண்டும். பாலின வேறுபாடற்ற குழந்தை வளர்ப்பும் உணர்வாக்கமும்தான் தற்போதைய தேவை. உங்களின் தலைமுறை இந்த மாற்றத்தை ஏற்படுத்துமென்று நான் நம்புகிறேன்," என்று கூறினார்.
ஜனநாயக அமைப்புகளில் தாராளமயம் மற்றும் சம உரிமை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி பேசிய, Dr. Justice D. Y. Chandrachud கூறியதாவது, "தாரளமய கொள்கையில் மனிதர்களுக்கிடையிலான வேறுபாட்டை ஏற்றுக் கொள்வதும், ஜனநாயக அமைப்புகளின் மூலம் அவற்றை கையாளும் திறனும் அவசியம். இது பல்வேறு, முரண்பாடான உண்மைகளை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது. அரசியல் சாசன ஜனநாயகம் என்பது அரசியல் சாசன தாராளமய கொள்கையை ஏற்படுத்தும் என்கிற அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜனநாயகம் என்பது அதிகாரம், பெரும்பான்மையானவர்களின் அதிகாரம் ஆகியவற்றைத் திரட்டுவதாகும். தாராளமய கொள்கை என்பது அதிகாரத்தைப் பன்முகப்படுத்துவதாகும்."
பட்டம்பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர் கூறியதாவது, "O.P. Jindal Global University மாணவர்களுக்கென்று சமூகத்தில் தனி மதிப்பு உள்ளது. என்னிடம் பயிற்சி பெறும் சிறந்த மாணவர்கள் சிலர் Jindal Global Law Schoolஐ சேர்ந்தவர்கள். இந்தப் பல்கலைக்கழகம் துறைகளுக்கிடையிலான பரிமாற்றங்களைக் கொண்டு கற்றலில் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இதில் நீங்கள் முழுமையான கல்வியையும், நிஜமான உலக அனுபவத்தையும் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்."
பட்டமளிப்பு விழாவில் முக்கிய உரையாற்றிய இந்திய அரசின் மாநில திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் Rajiv Pratap Rudy கூறியதாவது, "உள்நாட்டு மற்றும் உலகளாவிய சமூகப் பொறுப்பிற்கும் எதிர்கால வேலை வாய்ப்பிற்கும் அவசியமான திறன்களைப் பட்டதாரிகளுக்கு அளித்து நமது பலதரப்பட்ட பொருளாதாரத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல்வேறு துறைகளின் நவீன தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் நம்முடைய கல்விசார்ந்த இலக்கு. இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்கள் 'மேக் இன் இந்தியாவை' சாத்தியப் படுத்துவார்கள். உற்பத்தியாளர்களின் திறன்களும் வல்லமையும்தான் இந்தத் திட்டங்களை வெற்றிப் பெறச் செய்யும்."
மேலும் அவர், "நான் இன்று இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பட்டதாரிகளையும் மனதாரப் பாராட்டுகிறேன். O.P. Jindal Global Universityயின் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் இந்தியாவிற்கும் மனித இனத்திற்கும் அளித்துவரும் சேவைக்காக நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்."
இந்த நிகழ்ச்சிக் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட, Axis Bank-ன் MD & CEO, Ms. Shikha Sharma, கூறியதாவது, "இன்றைய உலகில், ஒருவரின் தொழில்சார் இலக்குகளுக்கும் அக இலக்குகளுக்கும் இடையிலான தெளிவு இல்லாமல் உள்ளது. அக இலக்குகள் என்பவை ஒருவரின் குணத்தை வரையறுக்கும். ஒருவரின் தொழில் வாழ்க்கையில் நீங்கள் பல அசெளகரியமான, தர்மசங்கடமான சூழ்நிலைகளைச் சந்திக்கலாம். இதனை சமாளிக்க நிறைய தைரியம் தேவை. இதனை கடப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் உங்களின் 'உள்ளுணர்வு' உங்களை எப்போதும் கைவிடாது. இதனை சிறப்பாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்."
மாணவர்களிடம் பேசிய, JGU Chancellor, Mr. Naveen Jindal, பட்டம் பெறும் மாணவர்களை அவர்கள் விரும்பும் இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளச் சொன்னார். அவர் கூறியதாவது, "ஜிந்தாலை" சேர்ந்த நான் 2017இல் பட்டம் பெறும் நீங்கள் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், உதவியும் ஆதரவும் தேவைப்படுபவர்களுக்கு உதவியையும், ஊக்கத்தையும் அளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். எப்போதும் உங்களைச் சுற்றி நடப்பவற்றிற்கு நீங்கள் பொறுப்பேற்றிடுங்கள், மாற்றத்தை ஏற்படுத்த உங்களால் முடிந்ததை செய்யுங்கள். நீங்கள் விரும்பும் இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்."
மேலும் அவர் கூறியதாவது, "ஆர்வமும், சாகச உணர்வும் எப்போதும் உங்களின் உற்ற தோழனாக இருக்கட்டும். உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் தவறை செய்யாதீர்கள். வாழ்க்கை ஒவ்வொரு சூழ்நிலையிலும உங்களுக்கு ஒரு சவாலை அளிக்கும். நீங்கள் இங்கு என்ன கற்றுக்கொண்டிருந்தாலும், நிஜ உலகில் அடியெடுத்து வைத்ததும் மேலும் அதிகமாகக் கற்றுக்கொள்வீர்கள்."
இந்த நிகழ்ச்சியில் பேசிய Professor (Dr.) C. Raj Kumar, Founding Vice Chancellor, இந்தியாவில் மிகத் தரமான உயர்க் கல்வியைத் தருவதற்காக JGU மேற்கொண்டுள்ள முயற்சிகளை எடுத்துரைத்தார், "கல்விசார் சுதந்திரம் என்னும் கொள்கையும், சிறந்த நிறுவனம் என்று பெயரெடுக்க வேண்டுமென்கிற ஆர்வமும் JGUயின் வெற்றிக்கு காரணமாக உள்ளது. துவக்கத்திலிருந்தே 'பொது சேவை அளிக்கும் ஒரு தனியார்ப் பல்கலைக்கழகமாக' இருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் குறிக்கோள். பொது சேவையையும் தேசிய முன்னேற்றத்தையும் அளிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள ஒரு கல்வி நிறுவனமாக JGU பொது சேவை கடமைகளை நிறைவேற்றவும், இந்தியாவில் உயர் கல்வி துறையில் உள்ள சில மிகப் பெரிய சவால்களைத் தீர்க்கவும் விரும்புகிறது."
"நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளோம். நாங்கள் உயர் கல்வியில் தரம், அணுகல், சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று நான் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மிகப்பெரிய JGU சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு உறுதி செய்ய விரும்புகிறேன்," என்று மேலும் தெரிவித்தார்.
பேராசிரியர் குமார் ஆசிரியைகளையும், அவர்கள் தலைமைப் பதவிகளை வகிப்பதையும் ஊக்குவிக்கும் பொறுப்பினை JGU கொண்டிருப்பதை எடுத்துரைத்தார். "45 சதவிகித முழு நேர ஆசிரியர்கள் பெண்கள்தான், கிட்டத்தட்ட 40 சதவிகித பெண்கள் எங்களின் கல்வி நிறுவனம் முழுவதிலும் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர் என்பதிலேயே ஆசிரியர் பணியிலும், தலைமைப் பதவிகளிலும் பெண்கள் இருக்க வேண்டுமென்பதை ஊக்குவிப்பதில் JGU கொண்டிருக்கும் கடமை பிரதிபலிக்கிறது," என்று கூறினார்.
சிறப்பு விருந்தினர்களும் உயர் பதவியில் உள்ளவர்களும் முற்போக்கு சிந்தனையைக் கொண்ட தலைவரும் வள்ளலுமான Mr. O.P. Jindalக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இவருடைய நினைவாக இவரின் 87வது பிறந்தநாளன்று JGU துவங்கபப்ட்டது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் சட்டத் துறையிலும் கல்வித் துறையிலும் உயர் பதவியில் உள்ள பலர் கலந்துகொண்டனர். இவர்களில் முன்னாள் சட்ட அமைச்சர், திரு. ஷாந்தி பூஷன், இமாச்சல உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், மெட்ராஸ் மற்றும் கர்னாடகா உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.
பட்டம்பெறும் மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெருமையும் ஆச்சரியமும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.
O.P. Jindal Global University பற்றி
JGU என்பது ஹரியானா பிரைவேட் பல்கலைக்கழகங்கள் (இரண்டாவது சட்டத்திருத்தம்) சட்டம், 2009ஆல் நிறுவப்பட்டுள்ள லாபநோக்கமற்ற உலகளாவிய பல்கலைக்கழகம். JGU திரு. O.P. Jindal-யின் நினைவாக, தலைமை வேந்தர் திரு. Naveen Jindal பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இதனை உருவாக்கினார். உலகளாவிய பாடங்கள், உலகளாவிய பாடநிகழ்ச்சிகள், உலகளாவிய பாடத்திட்டம், உலகளாவிய ஆராய்ச்சி, உலகளாவிய உடனிணைவுகள், மற்றும் உலகளாவிய ஆசிரியர் மூலம் உலகளாவிய உரையாடலை ஊக்குவிப்பது JGU-யின் நோக்கமாகும். JGU டெல்லியில் நேஷனல் கேப்பிட்டல் ரீஜியனில் 80 ஏக்கரிலான அற்புதமான தங்குமிடத்தைக் கொண்ட வளாகத்தில் அமைந்துள்ளது.
JGU 1:15 என்கிற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தைக் கொண்டிருக்கும் ஆசியாவில் உள்ள சில பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிகச் சிறந்த கல்வித் தகுதிகளையும் அனுபவத்தையும் கொண்ட பேராசிரியர்களை நியமித்துள்ளது. JGU ஆறு கல்லூரிகளை நிறுவியுள்ளது: Jindal Global Law School, Jindal Global Business School, Jindal School of International Affairs, Jindal School of Government and Public Policy, Jindal School of Liberal Arts & Humanities மற்றும் Jindal School of Journalism and Communication.
மேலும் விவரங்களுக்கு, http://www.jgu.edu.inஐ பார்க்கவும்.
ஊடகத் தொடர்பு:
Kakul Rizvi
Additional Director
Communications and Public Affairs
O.P. Jindal Global University
[email protected]
+91-8396907273
Share this article