கொல்கத்தா, July 3, 2017 /PRNewswire/ --
கிழக்கிந்தியாவின் முதன்மை மேலாண்மை கல்வி நிறுவனங்களுள் ஒன்றான Globsyn Business School, 'மேலாண்மை கல்வியில்' ஆன்மீகம் என்கிற தலைப்பில் முதல் சர்வதேச மாநாட்டை நடத்தியது. Dasho Karma Ura, தலைவர், The Centre for Bhutan Research and GNH Research, திம்பு, பூட்டான்; Dr. Anil Sahasrabudhe, சேர்மன், AICTE; Dr. H. P. Kanoria, நிறுவனர் சேர்மன், SREI Group of Companies; பத்மஸ்ரீ Dr. S. M. Cyril, Loreto House; Mr. Aloke Mookherjea, முன்னாள் சேர்மன், Howden Solyvent India Limited; Mr. Sandipan Chakravortty, சேர்மன், TMILL & Mjunction Services Limited மற்றும் Swami Atmapriyananda, துணைவேந்தர், Ramakrishna Mission Vivekananda University ஆகியோர் இந்த விழாவை சிறப்பிப்பதற்காகக் கலந்துகொண்டனர்.
(Photo: http://mma.prnewswire.com/media/530050/Spirituality_in_Management_Education_Globsyn_Knowledge.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/530052/Dr__H__P_Kanoria.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/530051/Mr__Bikram_Dasgupta.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/530049/Spirituality_in_Management_Education.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160729/10151576-a )
இளைஞர்களுக்கான கட்டமைந்த மேலாண்மை கல்வியின் ஒரு பகுதியாக மேலாண்மை அறிவியலை நடைமுறைப்படுத்துவதில் சமுதாய அக்கறை மற்றும் மகிழ்ச்சி ஆகிய மதிப்புகளை மனதில் பதிய வைப்பதும், மகிழ்ச்சி குறியீட்டெண், இந்த கார்ப்பரேட் உலகில் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விவரிப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
"இன்றைய உலகில் மகிழ்ச்சி குறியீட்டெண் முக்கிய பேசுபொருளாக உள்ளது. நாங்கள் இளைஞர்களுக்கான மேலாண்மைக் கல்வியில் ஆன்மீகமும் மகிழ்ச்சி குறியீட்டெண்ணும் எப்படி நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற விஷயம் குறித்து விவரிக்க ஒரு கருத்தரங்கை நடத்தினோம். எங்களுடன் Dasho Karma Ura பங்கேற்றது குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். GNH மற்றும் மகிழ்ச்சி குறியீட்டெண்ணின் முக்கியத்துவம் பற்றி அவர் பேசியதைக் கேட்டு அனைவரும் தெளிவாகியிருப்பார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்," என்று Mr. Bikram Dasgupta, நிறுவனர் மற்றும் எக்சிக்யூட்டிவ் சேர்மன், Globsyn Group கூறினார்.
Mr. Dasgupta "Globsyn Business School கல்வியையும் தாண்டி கற்றலில் நம்பிக்கைக் கொண்டுள்ளது. இந்தத் தத்துவத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க நாங்கள் கல்யாணி எனப்படும் MBA மாணவர்களின் மிகப்பெரிய அரசுசாரா அமைப்பை (NGO) நடத்துகிறோம். எங்களின் B-Schoolன் மேலாண்மை மாணவர்கள் முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்கள், மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் ஆகியோரின் வாழ்வை சிறக்கச் செய்வதற்கான சமுதாய நடவடிக்கைகளில் அக்கறையுடன் பங்கேற்கின்றனர். இந்த நடவடிக்கைகள் இளம்வயதிலேயே சமுதாயத்திற்கு உதவி செய்யும் பழக்கத்தை மாணவர்கள் கடைபிடிக்க அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், கார்ப்பரேட் உலகின் அர்ப்பணிப்புள்ள, இரக்க குணமுள்ள மேலாளர்களாக வளரவும் உதவுகிறது. எதிர்கால மேலாளர்களுக்கான பாடத்திட்டத்தில் GNH-ஐ சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுவருகிறோம்" என்று கூறினார்.
பொருளாதாரம், உளவியல், கருத்துகணிப்பு பகுப்பாய்வு மற்றும் தேசிய புள்ளி விவரங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் நாடுகளின் முன்னேற்றத்தை மதிப்பிட நலன் என்கிற அளவீடுகளை எப்படி திறமிக்க முறையில் பயன்படுத்தலாம் என்று விவரிக்கின்றனர். இந்த மகிழ்ச்சி குறியீட்டெண் நாட்டின் தலைவீத ஒட்டுமொத்த உற்பத்தி, சமுதாய ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், தனக்கு பிடித்ததைச் செய்யும் சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் பற்றிய புரிதல் ஆகிய அளவுருகளின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.
உலக மகிழ்ச்சி அறிக்கை 2017, மகிழ்ச்சிக்கான சமுதாய அடித்தளங்களின் முக்கியத்துவத்தையும், வேலையில் மகிழ்ச்சிக்கான முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. வேலை என்பது மகிழ்ச்சியை பாதிக்கும் முக்கிய காரணி. பெரும்பாலான மக்கள் வேலை செய்வதிலேயே அவர்களின் வாழ்வில் நிறைய நேரத்தை செலவிடுவதால், உலகம் முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் சமுதாயத்தினரின் மகிழ்ச்சியை உருவாக்குவதில் வேலையும் வேலை இடமும் கொண்டுள்ள பங்கை திடமாகப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வேலையும் வேலை இடமும் மகிழ்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கிறது, அந்த மகிழ்ச்சி வேலை சந்தை விளைவுகள், உற்பத்தித்திறன் மற்றும் திடமான செயல்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தவும் உதவுகிறது.
மகிழ்ச்சி குறியீட்டெண்ணை ஏற்றதில் பூட்டான் முன்னோடியாக விளங்குகிறது. 1979ல், நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி (GNH) என்கிற சொல்லை பூட்டான் அரசர், Jigme Singye Wangchuk அறிமுகப்படுத்தினார். அவர் நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் GNH-ஐ அளவுகோலாகக் கொண்டு அளவிடப்பட வேண்டுமே தவிர GNP-யால் அல்ல என்று குறிப்பிட்டார். பூட்டான் உலகளாவிய சமுதாயத்துடனான தனது ஈடுபாட்டை அதிகரிக்க துவங்கியதும், GNH-ஐ வரையறுக்க, விவரிக்க மற்றும் அளவிட கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறியீட்டெண்கள் உருவாக்கப்பட்டன, அளவீடுகள் பதிவு செய்யப்பட்டன மற்றும் அரசாங்க கொள்கைகளுக்கான பரிசோதனைக் கருவிகள் உருவாக்கப்பட்டன. GNH-ன் வளர்ச்சியின் இரண்டாவது கட்டமாக, ஆட்சிசெய்யும் முறையில் இது பயன்படுத்தப்பட்டது. 2012ல், பூட்டானின் பிரதம மந்திரி Jigme Thinley 'மகிழ்ச்சியும் நலனும்: புதிய பொருளாதார கருத்தியலை வரையறுக்கிறது' என்னும் முதல் ஐ.நா. உயர்மட்ட கூட்டத்தில் தலைவராகப் பங்கேற்றபோது GNH உலகளவில் அங்கீகாரம் பெற்றது.
GNH தத்துவத்தை பொது கொள்கையுடன் ஒருங்கிணைப்பதற்கான நீளமான, தொடர் நிகழ்முறையின் ஒரு பகுதியாக, பூட்டான் சமுதாயத்தின் வளர்ச்சியை அளவிட உதவுவதற்காக Bhutan Studies (CBS), GNH குறியீட்டெண்ணை உருவாக்கியது. Dasho Karma Ura, தலைவர், The Centre For Bhutan Studies (CBS), நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி என்னும் பூட்டான் நாட்டில் உருவான வளர்ச்சி தத்துவத்தைப் பிரபலப்படுத்துவதிலும், இதனைப் பற்றிய தேசிய அளவிலான மற்றும் உலகளவிலான புரிதலை அதிகப்படுத்துவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார். இவர் GNH-ன் ஒன்பது மண்டலங்களை முறைப்படுத்தும் நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி (GNH) என்னும் கருத்தாக்கத்தை ஒழுங்குப்படுத்தி, 2010 மற்றும் 2007ல் நடத்தப்பட்ட கருத்துகணிப்பிற்கு தலைமையேற்றார். இவர் பூட்டானின் முதல் அரசியலமைப்பை வரைவு செய்வதிலும் உறுப்பினராக உள்ளார் (2008ல் இயற்றப்பட்டது). இவர் ஒரு கல்விமான், வரலாற்று அறிஞர், எழுத்தாளர், ஓவியரும்கூட. இவருக்கு டிசம்பர் 2006ல் பூட்டானின் நான்காவது அரசர் Red Scarf-ஐ விருதாக அளித்து, Dasho (வீரத்திருத்தகை பட்டம்) என்னும் பட்டத்தை அளித்தார். இலக்கியத்திலும் நுண்கலையிலும் இவரின் பங்களிப்பிற்காக அரசர், Druk Khorlo (டிராகன் அரசாட்சியின் சக்கரம்) என்னும் பட்டத்தை வழங்கி கெளரவித்தார்.
Globsyn Business School பற்றி:
கல்வியில் தொடர்ந்து புதுமையான முயற்சிகளை Globsyn மேற்கொண்டுவருகிறது. இன்று Globsyn Business School (GBS), வேகமாக வளர்ந்துவரும் கார்ப்பரேட் உலகின் வலிமையையும் மாறுபட்ட தன்மையையும் கொண்ட இந்தியாவின் ஒரே 'கார்ப்பரேட் B-School' என்னும் இடத்தைப் பிடித்துள்ளது. AICTE அங்கீகாரத்தைப் பெற்று புதிய பொருளாதார பின்னணியைக் கொண்டிருக்கும் இந்தக் கல்லூரி, இன்று இந்தியாவிலுள்ள முற்போக்கு சிந்தனைக் கொண்ட கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
புதுமை, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, 'கல்வியையும் தாண்டி' கற்றல் என்னும் தத்துவத்தையும் சேர்த்து, Globsyn உலகளவில் பரவியிருக்கும், கார்ப்பரேட் புரிதல் உள்ள, ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் மேலாண்மை கல்வி முறையை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது இன்றைய தொழில்நுட்பத்தால் இயங்கும் வணிகச் சூழலில் செயல்படுவதற்கான திறனைக் கொண்ட சுறுசுறுப்பான 'துறைக்கு உகந்த மேலாளர்களை' உருவாக்க, பரவியிருக்கும் பாரம்பரிய மேலாண்மை அறிவையும் தாண்டி ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பை அளிக்கிறது.
Globsyn Business School அவ்வப்போது கல்வி அமைப்புகளிடமிருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளது. Business India-வின் Best B-Schools கருத்துகணிப்பு 2016ன்படி, IIM-Calcutta, XLRI-Jamshedpur, XIM-Bhubaneswar and IIT-Kharagpur (VGSM) போன்ற கிழக்கிந்தியாவில் உள்ள முதல் 5 B-Schoolsல் இதுவும் இடம்பிடித்துள்ளது.
ஊடகத் தொடர்பு:
Shabbir Akhtar
[email protected]
+91-9830031847
Globsyn Knowledge Foundation
Share this article