ஹைதராபாத், June 6, 2017 /PRNewswire/ --
முத்து நகரத்தில் UBM India நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் மூன்று நாள் வர்த்தக நிகழ்ச்சி
தென்னிந்தியாவின் சிறப்பு வாய்ந்த நகைக் கண்காட்சியாகிய ஹைதராபாத் நகை, முத்து மற்றும் மாணிக்கக் கற்கள் கண்காட்சி (HJF 2017) முத்து நகரத்தைச் சேர்ந்த மிக உயரிய நகை வியாபாரிகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகர்கள், மற்றும் தொழிற் சங்கங்கள் ஆகியோரின் பங்கேற்புடன் கோலாகலமாக மீண்டும் தொடங்கியுள்ளது.
(Logo: http://mma.prnewswire.com/media/519488/Hyderabad_UBM_Event_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/519489/UBM_Event_RJGA_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகிய UBM India நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கையொப்பக் கண்காட்சி Hitech Jewellery Manufacturers Association (HJMA)உடன் இணைந்து நடத்தப்படுகின்றது.
HJF இன் 10வது ஆண்டு விழா HICC, Novotel, Hitech City-யில் ஜூன் 9 - 11 தேதிகளில் மூன்று நாள் கண்காட்சியாக நடத்தப்படும் மற்றும் அது மனதில் பதியத்தக்க ஒரு பெரிய செயற்களத்தில் காலத்தால் அழியாத நேர்த்தியையும் இந்தியாவின் மிகச்சிறந்த வேலைப்பாட்டையும் வெளிப்படுத்தும். இந்த ஆண்டு நகை பிராண்டுகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், நகை மற்றும் இயந்திரத் தயாரிப்பாளர்கள், வைரம், மாணிக்கக் கல் மற்றும் முத்து வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலைமதிப்பற்ற உலோகங்களையும் நகைகளையும் பதிக்கின்ற வர்த்தகர்கள் மற்றும் வழங்குநர்கள், மற்றும் வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றோர் உள்ளடங்கலாக, 150 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள். ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களைச் சார்ந்த 35 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களால் காட்சிப்படுத்தப்பட உள்ள வியக்கத்தக்க விக்டோரியா, நிஜாம் மற்றும் பழங்கால நகைச் சேகரிப்புகள் இந்த ஆண்டின் கண்காட்சியில் மனதைக் கவர்வதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியின் இதர சிறப்புக்கூறுகளாக, Gem and Jewellery Skill Council India (GJSCI) ஆல் நடத்தப்படுகின்ற 'திறன் மேம்பாடு' மற்றும் Gemological Institute of America (GIA) ஆல் நடத்தப்படுகின்ற 'செயற்கைக் கற்கள் மீதான தனிக்கவனம்' ஆகிய தலைப்புகளிலான அறிவுக்கூர்மை மிகுந்த தொழில்நுட்பக் கருத்தரங்குகள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சி இந்திய நகைச் சந்தைக்கான ஒரு நுழைவாயிலாக உள்ளது, இதில் தென்னிந்திய டிசைனர் நகை வகைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது மற்றும் இது வாங்குபவர்களுக்கும் வழங்குநர்களுக்கும் தொடர்புகொள்வதற்கும், பிணைப்பை ஏற்படுத்துவதற்கும், யோசனைகளைப் பரிமாறிக்கொள்ளவும், எதிர்காலப் போக்குகளைக் கண்டறியவும், வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் ஒரு மிகச் சிறந்த களத்தை வழங்குகிறது. தொழில்துறைக்கான ஒரு நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பகமான ஆதாரமாக கண்காட்சியின் நிலையை வலுப்படுத்துவதன் மூலம், இந்தக் கண்காட்சி உள்நாட்டிலுள்ள மற்றும் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற வாங்குபவர்களை தொடர்ந்து கவர்ந்திழுக்கிறது.
இந்த ஆண்டு கண்காட்சியில் Anmol Jewellers, Swaroop Jewellers, Chintamani Gold, Sri Shubam Jewellers, Gupta Gold, Jai Gulab Dev Jewellers, J K S Jewels, Mehta Gold & Diamonds, Vinati Jewellers, Shanti Gold International, Shree Kalptaru Jewellers, Vithraag Jewels, Ozone Overseas நிறுவனங்களை உள்ளடக்கிய இதர பல குறிப்பிடத்தக்க கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள். இந்தக் கண்காட்சிக்கு Hitech City Jewellery Manufacturers Association (HJMA); AP Gold, Silver and Diamond Merchants Association; All India Gems and Jewellery Trade Federation மற்றும் 300 க்கும் மேற்பட்ட நகைத் தயாரிப்பாளர் சங்கங்கள் ஆதரவளித்துள்ளன. HJF ஆனது பல மாநகரங்கள், மற்றும் விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரி போன்ற அடுக்கு II நகரங்களிலிருந்து நகைத் தொழிலின் படைப்புத்திறனையும் புத்துருவாக்கத்தையும் முன்னுக்குக் கொண்டுவருகின்றது.
அறிவிப்பு பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது, Mr. Yogesh Mudras, Managing Director, UBM India கூறியதாவது, "இந்திய கற்கள் மற்றும் நகைத் தொழில் இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. ஆண்டொன்றுக்கு ரூ. 3 இலட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ள இந்தத் துறை IT துறைக்கு அடுத்தபடியாக அதிகமான வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக விளங்குகிறது, இத் தொழில் தோராயமாக 2.5 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. தொழில்துறை அறிக்கைகளின் படி, இது உலகளவில் நுகர்வோர் முன்னுரிமைகளில் மாற்றங்களையும் சந்தித்து வருகின்றது. இந்தியாவில் உள்ள நுகர்வோர்கள் புகழ்பெற்ற வடிவமைப்புகள், பருவகாலத்துக்கேற்ப மாறும் ஸ்டைல்கள் ஆகியவற்றைத் தேடுகின்ற இளைஞர்களைக் கொண்டுள்ளது மற்றும் இது பலதரப்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்களையும் உள்ளடக்கியுள்ளது - வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையிலும் பொருள் வாங்குகிறார்கள் மற்றும் கடைகளுக்குச் சென்று நேரடியாகவும் வாங்குகிறார்கள். குறிப்பாக GST போன்ற முற்போக்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது ஒழுங்கமைக்கப்பட்ட நகைத் தயாரிப்பாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத நிறுவனங்களைக் காட்டிலும் தங்களது எதிர்பார்ப்புகளை விடச் சிறப்பாகப் பூர்த்தி செய்ய முடிகிறது."
அவர் மேலும் கூறியதாவது, "ஹைதராபாத் என்றாலே அது பெரிய மற்றும் வளர்ந்துவரும் தென்னிந்திய உற்பத்தி மற்றும் சில்லறை வணிகச் சந்தைகளைக் குறிக்கிறது, மேலும் HJF மூலம் விற்பனையை உருவாக்குவதல் மற்றும் சிறப்பான வணிக உறவுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் வாயிலாக இந்தப் பிராந்தியத்தில் மிக முக்கியமான பங்காற்றுவதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டு, நாங்கள் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளோம். எங்களது கண்காட்சியின் 10 வது ஆண்டுவிழா மூலம் ஒரு புதிய உந்துசக்தியை நாங்கள் அடைந்துள்ளோம். 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கண்காட்சியாளர்களைக் கொண்ட இந்தக் கண்காட்சி இத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை மேலும் வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது."
HJF 2017 பற்றிப் பேசும்போது, HJMA தலைவர் மற்றும் GJEPC மண்டல இயக்குநர் Mr. Mahender Tayal கூறியதாவது, "ஹைதராபாத் நகை, முத்து மற்றும் மாணிக்கக் கற்கள் கண்காட்சி 2017 (HJF 2017) இன் 10வது பதிப்புக்கு ஏற்பாடு செய்துள்ள UBM India நிறுவனத்துக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த பத்தாண்டுகளாக, இந்தப் பயனுள்ள களமானது இதன் வகையில் இந்தப் பிரதேசத்தில் நடத்தப்படுகின்ற ஒரே ஒரு நிகழ்ச்சியாக விளங்குகிறது மற்றும் அது சில்லறை வர்த்தகத் துறையில் உள்ள வர்த்தகர்களை இணைப்பதோடு மட்டுமல்லாது, அவர்களுக்கிடையே ஒரு நீண்ட கால உறவையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், HJF ஆனது மாறிக்கொண்டே இருக்கின்ற பொருளாதாரச் சூழ்நிலையில் மிகவும் தேவைப்படுகின்ற அறிவுப் பகிர்வு மற்றும் வணிகம் நடத்துதலை ஊக்குவித்துள்ளது. HJF 2017 இன் பார்வையாளர்கள் முத்து, மாணிக்கம், மரகதம் மற்றும் வைரக் கற்கள் பதித்த மிகச் சிறந்த நகை வரிசையை எதிர்நோக்க முடியும்."
மேலும் HJF 2017 இல் சில்லறை நகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறப்புச் செயல்பாடுகளையும் முயற்சிகளையும் அங்கீகரித்து கௌரவிக்கும் விதமாக UBM India நிறுவனத்தின் பிரத்தியேக முயற்சியாகிய Retail Jewellers Guild Awards, ஹைதரபாத் -இன் இரண்டாவது விருது வழங்கும் நிகழ்ச்சியும் இடம்பெறும். இந்த விருதுகள் ஒரு முறைப்படியான தொழில்சார்ந்த நடைமுறை வாயிலாக சில்லறை நகைத் தொழிலில் பிராந்திய அளவிலான மிகச் சிறந்த திறமைகளை வெளிக்கொணரும். இந்த ஆண்டுக்கான விரிவான விருதுப் பிரிவுகள் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சில்லறை நகைத் தொழிலின் வடிவமைப்புச் சிறப்புத்தன்மை, செயல்பாட்டுச் சிறப்புத்தன்மை மற்றும் சந்தைப்படுத்தல் சிறப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான செயல்பாடுகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் கூட, விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொழில்துறைப் பிரபலங்கள் கலந்துகொண்டு அசத்தலான நகைகளில் பற்றிய தொழில் மற்றும் பிரத்தியேக ஃபேஷன் வரிசைகளைப் பற்றிய தங்களுடைய ஆழ்ந்த கருத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான நடுவர் குழுவில் Mr. Mahendra Tayal, தலைவர், GJEPC தெற்குப் பிரிவு தலைவர், Mr. Avinash Gupta, தலைவர், FTAPCCI; Mr. Kailash Charan தலைவர், Twin Cities Jewellers Association மற்றும் Ms. Bijal Doshi Shah, Solitaire Diamond Institute, ஹைதராபாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
UBM நிறுவனம் சுமார் முப்பது ஆண்டுகளாக நகைத் தொழிலின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வந்துள்ளது, உலகளவில் இதே போன்ற நகைக் கண்காட்சிகளை நடத்தியுள்ளது. HJF ஆனது UBM India -வால் வருடம் முழுவதும் நான்கு நகரங்களில் நடத்தப்படுகின்ற (கொல்கத்தா, சென்னை, ஹைதரபாத் மற்றும் தில்லி) நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். 2008 இல் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016 இல் நடத்தப்பட்ட HJF இன் 9வது நிகழ்ச்சி சரியான வணிக அலைகளை உருவாக்கியது மற்றும் இந்தக் கண்காட்சி ஆரவாரமிக்க எதிரொலியுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து கண்காட்சியாளர்களைக் கவர்ந்திழுத்தது. கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சி எண்ணற்ற வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் கவர்ந்திழுத்தது.
UBM India பற்றி
UBM India, கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் நிறைந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்றது. UBM India ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. UBM Asia நிறுவனமாகிய UBM India வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டு நிறுவனமாகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் ubmindia.in.
UBM plc பற்றி:
UBM plc ஆனது உலகின் மிகப் பெரிய பியூர்-பிளே B2B நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஆகும். பெருகிய டிஜிட்டல் மயமாக்க உலகில், பொருளார்ந்த, மனித நிலைத் தொடர்பின் மதிப்பு ஒருபோதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததில்லை. UBM இல், நாங்கள் செயல்படும் தொழில்துறைப் பிரிவுகளின் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஆர்வமும் மக்கள் வெற்றிபெறக்கூடிய மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளையும், நெருங்கிய வியாபாரங்களையும் உருவாக்கிக் கொண்டு அவர்களது வணிகங்களை வளர்க்கிறார்கள். 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த எங்களது 3,750க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஃபேஷன் முதல் மருந்துத் தயாரிப்பு உட்பொருட்கள் வரை, 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள். இந்த உலகளாவிய பிணைப்பு, பயிற்சி பெற்ற, ஆர்வமிக்க பணியாளர்கள் மற்றும் சந்தையின் முன்னணி நிகழ்வுகள் ஆகியவை வணிகர்கள் தங்களுடைய குறிக்கோள்களை அடைவதற்கான அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
கூடுதல் தகவல்களுக்கு, பார்வையிடவும் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு, Twitter இல் @UBM , LinkedIn இல் UBM Plc வாயிலாக எங்களை பின்தொடருங்கள்.
ஊடகத் தொடர்புநபர்
Roshni Mitra
UBM India
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
UBM India
[email protected]
Share this article