சோனிபட், இந்தியா, March 23, 2017 /PRNewswire/ --
-தரமான உயர்கல்வி மூலம் அறிவாற்றலை ஒருங்கிணைப்பது நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகும்; Shri Pranab Mukherjee, இந்திய ஜனாதிபதி
- Aspire India Scholars Programme திட்டம் (கோடை பள்ளி) மற்றும் Jindal School of Journalism and Communication தொடங்கப்பட்டது
- மக்கள்தொகைசார் பங்காதாயத்தை, மக்கள்தொகைசார் பேரழிவாக மாறுவதிலிருந்து நாம் தடுக்க வேண்டும் - அதிபர், Naveen Jindal
-முன்னணி 25 ஆசிய பல்கலைக்கழங்களில் இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்ல, ஆனால் சீனாவின் 5 பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன - துணை வேந்தர், பேராசிரியர். Raj Kumar
இந்திய ஜனாதிபதி,Shri Pranab Mukherjee, ஆராய்ச்சி, அறிவாற்றலை உருவாக்குவது, நிறுவனம்சார் தனிச்சிறப்பு மற்றும் உலகளாவிய தரநிலைப்படுத்துதல் போன்ற இன்றியமையாத கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு உயர்கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்காக நாட்டின் பல்கலைக்கழங்களுக்கும் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார். நாட்டில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழங்களை நிறுவ இவையனைத்தும் அடிப்படைத் தேவைகள் என்றும் அவர் கூறினார்.
(Photo: http://mma.prnewswire.com/media/481213/O_P__Jindal___Universities_of_the_Future.jpg )
சமீபத்தில் முடிவடைந்த, 21-ஆம் நூற்றாண்டில் இந்தியப் பல்கலைக்கழங்களின் எதிர்காலத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 3 நாள் கருத்தரங்காகிய'எதிர்காலத்தின் பல்கலைக்கழகங்கள்: கல்வி புதுமைகள் மற்றும் பொறுப்புடைமை' பற்றிய சர்வதேச மாநாட்டில் Mukherjee உரையாற்றினார்.O. P. Jindal Global University (JGU)-யின் இன்ட்ர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன் ரிசர்ச் அன்டு கெப்பாசிட்டி பில்டிங் (IIHEd)-ஆல்ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சர்வதேச கருத்தரங்கு, 2017, மார்ச் 18 - 20 வரை ஜெஜியு பல்கலைக்கழக வளாகம் சோனிபட், ஹரியானாவில் நடத்தப்பட்டது.
விழாவில் பேசிய ஜனாதிபதி Mukherjee, வலுவான தொழில்-கல்வியாளர் கூட்டிற்கு ஊக்கமளிக்கும் அதே சமயத்தில் 'மக்கள்தொகைசார் பங்காதாயத்தையும் கல்வித்துறை ஊக்குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். "தரமான உயர்கல்வி மூலம் அறிவாற்றலை ஒருங்கிணைப்பது நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகும். புதுப்புனைவும் எதிர்கால நோக்குள்ள பல்கலைக்கழங்களுமே இதன் பின்னனியில் இருக்கும் உந்துசக்திகளாக்கும்." என்று கூறினார்.
மேலும் இந்த எதிர்காலப் பல்கலைக்கழங்கள் சமூகத்தின் பல்வேறு பங்குதாரர்களுடனும் வலிமையான பிணைப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி Mukherjee அவர்கள் சுட்டிக்காட்டினார். "அடிப்படை ஆராய்ச்சியின் வலுவான அடித்தளம் நம்மிடம் இல்லாதபட்சத்தில், நமது எதிர்கால நோக்குள்ள பல்கலைக்கழகத் திட்டங்கள் தீவிரமாக பாதிக்கப்படும்." என்றும் கூறினார்.
இந்திய உயர்கல்வித் துறை, அதன் சர்வதேச போட்டித்திறனை காலப்போக்கில் இழந்துவிட்டதென்றும், உலகின் முன்னணி 200 பல்கலைக்கழங்களில் தற்போது ஒரு இந்தியப் பல்கலைக்கழகம் கூட இல்லையென்றும் அவர் கவலை தெரிவித்தார். "757 பல்கலைக்கழங்களும், 36000 கல்லூரிகளும், 30 என்ஐடி-க்களும், 116 IIT-க்களும் இந்த நாட்டில் இருந்தபோதிலும், சர்வதேச ஆராய்ச்சியில் அவர்களுடைய பங்கேற்பு புறக்கணிக்கத்தக்கதாகவே உள்ளது. கற்றுக்கொடுக்கும் தரம், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கல்விமுறையை மேம்படுத்தவேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது," என்று Mukherjee கூறினார்.
"அறிவாற்றல், புதுப்புனைவு மற்றும் பொறுப்பு ஆகியவை பண்டைய காலத்திலிருந்தே இந்தியக் காப்புரிமையாகவே இருந்துள்ளன.அறிவாற்றல் நமது இறந்தகாலம் மட்டுமல்ல, அதுவே நமது எதிர்காலமுமாகும்," என்று Shree Rambilas Sharma, கல்வி அமைச்சர்,ஹரியானா கூறினார்.
"எதிர்காலத்து பல்கலைக்கழங்கள் புத்திசாலியான மனங்களை மட்டுமல்லாமல் வலுவான அறிவாற்றலையும் உருவாக்கும் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் மையத் தூண்களாக இருக்கவேண்டும். நமது பல்கலைக்கழங்கள் புதுப்புனைவு மற்றும் புரட்சிகரமான யோசனைகளின் பிறப்பிடங்களாக அமைந்த, செயல்திறன்மிக்க கற்றல் மற்றும் ஆராய்ச்சியின் தளங்களாக மாற்றப்படவேண்டும்," என்று Mr. Naveen Jindal, ஸ்தாபக அதிபர், JGU கூறினார். அவர் மேலும் கல்வித்துறையின் முக்கியப் பங்கையும் சுட்டிக்காட்டியபடி, "இந்தியா உயர்ந்த வளர்ச்சி விகிதத்தையும் மனித வளர்ச்சிக் குறியீட்டில் தனது நிலையையும் மேம்படுத்தவேண்டுமென்றால், நாட்டின் கல்வித்துறை கவனமாக பேணிக் காக்கப்படவேண்டும்," என்றும் கூறினார்.
"மக்கள்தொகைசார் பங்காதாயத்தை, மக்கள்தொகைசார் பேரழிவாக மாறுவதிலிருந்து நாம் தடுக்க வேண்டும், நமது பல்கலைக்கழங்கள் வெறும் படங்களை மட்டும் வழங்காமல் அறிவாற்றலை உருவாக்க்குவதையும், திறனை வளர்ப்பதையும் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்,"என்று Mr. Jindal கூறினார்.
அதிபர் Jindal,Jindalஜர்னலிசம் மற்றும் கம்யூனிகேஷன் பள்ளி (JSJC)மற்றும் Aspire India Scholars Programme (AISP) ஆகியவற்றை தொடங்கிவைத்தார்.
JSJC, JGU-வின் 6-வது பல்துறைப் பள்ளியாகும், இது மீடியா மற்றும் கம்யூனிகேஷன் கல்வியில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும்.
AISP,Law, Justice and Democracy (LJD); Business Management, Leadership மற்றும் Entrepreneurship (BLE); Diplomacy International Relations மற்றும் Peace (DIP); Economy, Public policy மற்றும் Development (EPD); Liberal arts, Culture மற்றும் Humanities (LCH); Media Communication மற்றும் Public Affairs (MCPA)ஆகிய 6 பல்துறை பிரிவுகளில் கருத்து அடிப்படையிலான அனுபவ கற்றலை, சர்வதேச கண்ணோட்டம், முழுமையான கற்றல், நெறிமுறை ஈடுப்பாட்டுடன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த கோடைப்பள்ளியாகும்.
இந்தியாவின் முதல் குடிமகனை JGU வளாகத்திற்கு வேரவேற்று பேசிய பேராசிரியர்
C Raj Kumar, துணை வேந்தர், "116-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டுள்ள ஜனாதிபதி Mukherjee அவர்கள், உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக சமூக மற்றும் அறிவார்ந்த விழிப்புணர்வை ஒருமுகப்படுத்தியுள்ளார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான அவருடைய தனிப்பட்ட பங்களிப்பு அவருடைய குடியரசு தலைமைத்துவத்தைவரையறுக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரை இன்று நம் மத்தியில் வரவேற்பத்தில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைகிறோம்." என்று கூறினார்.
மாநாட்டின் மையக்கருத்தை அறிமுகப்படுத்திப் பேசிய துணைவேந்தர் Kumar, "தரம், அளவு அணுகல் மற்றும் சமநிலை ஆகிய பிரச்சினைகளுக்கு ஒரே நேரத்தில் தீர்வு காண்பதற்காக இந்திய உயர்கல்வி அமைப்பு பல சவால்களை சந்தித்து வருகிறது. விரிவாக்கம் மற்றும் உயர்கல்வியை அணுகும் வாய்ப்புகளை வழங்கும் சவால்களை சந்திக்க முயற்சிகள் செய்யப்பட்டுவந்தாலும், செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது."
"முன்னணி 25 ஆசிய பல்கலைக்கழங்களில் இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்ல, ஆனால் சீனாவின் 5 பல்கலைக்கழங்களும் ஹாங்காங், சிங்கப்பூர், தைவான் மற்றும் பல நாடுகளின் இந்தத் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நமக்கு பங்கேற்க அதிகாரமாளித்து வழிவகுக்கும் வகையிலான பல்கலைக்கழங்களின் எதிர்காலத்தைப் பற்றி நாம் அகநோக்கோடு சிந்திக்கவேண்டும்," என்றும் பேராசிரிய Kumar கூறினார்.
"இந்தியாவில் உருவாக்குவோம் என்னும் குறிக்கோள் வர்த்தக மேம்பாட்டிற்கும் பொருளாதார வாய்ப்புகளை முன்னேற்றுவதற்கும் முக்கியமாக இருந்தாலும்,இந்தியாவை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் வாயிலாக உருவாக்குவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை நான் எப்போதுமே அறிவுறுத்தியுள்ளேன்," என்று கூறினார்.
ஒப்பீட்டு அளவிலும்சர்வதேச பரிமாணங்களிலும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழங்களை உருவாக்கும் இந்தியக் கணவிற்கு உருவமளிக்கும் நோக்கத்திற்கான யோசனைகள் மற்றும் கண்ணோட்டங்களின் உச்சக்கட்டமாக இந்த மாநாடு திகழ்ந்தது.
இந்தியாவிலேயே உலகத் தரம் வாய்ந்த கல்வியை, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு எதிர்கால மாணவர் தலைமுறைக்கு வழிவகுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். தனிப்பட்ட அறிஞர்கள் சர்வதேச தனிச்சிறப்பைப் பெற்றுவிட்டாபோதிலும், இந்தியப் பல்கலைக்கழகம், ஒரு நிறுவனமாக அந்த அறிவார்ந்த தகுதிநிலையையும் மாண்பையும் எட்டுவதற்கு தேவையான சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும்.
O.P. Jindal Global University-யைப் பற்றி
JGU,ஹரியானா பிரைவேட் யுனிவர்சிடி (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2009-ஆல் நிறுவப்பட்ட லாபநோக்கமில்லாத சர்வதேச பல்கலைக்கழகமாகும்.JGU,Mr. O.P. Jindal அவர்களின் நினைவில்,Mr. Naveen Jindal, ஸ்தாபக அதிபர் அவர்களால் சமூக சேவை முயற்சியாக நிறுவப்பட்டது.யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன்,O.P. Jindal Global University-க்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச ஆசிரியர்களுடன், சர்வதேச பாடங்கள், சர்வதேச திட்டங்கள், சர்வதேச பாடத்திட்டங்கள் சர்வதேச ஆராய்ச்சி, சர்வதேச கூட்டுத்தொடர்பு மற்றும் சர்வதேச பரிமாற்றத்தை வழங்குவதே JGU-வின் நோக்கமாகும். தில்லியின் தேசத் தலைநகரப் பகுதியில் 80 ஏக்கர் அதிநவீன வசதியுள்ள வளாகத்தில் JGU அமைந்துள்ளது.
ஆசியாவிலேயே 1:15 ஆசிரியர்-மாணவர் விகிதம் உள்ள, மிகச்சிறந்த கல்வித் தகுதிகளும் அனுபவமும் உள்ள உலகெங்கிலுமிருந்து ஆசிரியர்களை பணிக்கு அமர்க்த்திக்கொண்டுள்ள சில பல்கலைக்கழகங்களில் JGU ஒன்றாகும். JGU ஆறு பள்ளிகளை நிறுவியுள்ளது: Jindal Global Law School, Jindal Global Business School, Jindal School of International Affairs, Jindal School of Government மற்றும் Public Policy, Jindal School of Liberal Arts & Humanities மற்றும் Jindal School of Journalism மற்றும் Communication.
மேலும் விவரங்களுக்கு http://www.jgu.edu.in-ஐப் பார்க்கவும்.
ஊடகத் தொடர்பு:
KakulRizvi
[email protected]
+91-8396907273
துணை நிர்வாகி
தகவல் தொடர்பு மற்றும் பொதுப்பணித்துறை
O.P. Jindal Global University
Share this article