மும்பை, February 23, 2017 /PRNewswire/ --
தனது முகவர் வலைப்பின் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும் வகையில் 116 புது வங்கிகளைச் சேர்த்துள்ளது
இந்தியாவிலேயே மிகப்பெரிய மொபைல் பணம் செலுத்தும் தளங்களில் ஒன்றான தளத்தை MoneyOnMobile, அறிமுகம் செய்தது, அத்தளத்தின் வாயிலாக இப்போது இந்தியா முழுவதிலும் உள்ள கூடுதல் 116 வங்கிகளை அணுகலாம்; இது அத்தளத்தினுடைய சாத்தியமான வாடிக்கையாளர் அடிப்படையையும், சாத்தியமான வருவாயையும் அதன் செயல்பாட்டு திறனையும் இரட்டிப்பாக்கியுள்ளது. இந்தப் புதிய வங்கிகளுடன் தொடர்பு கொள்ள முடிவதன் அர்த்தம் என்னவென்றால், நாடெங்கிலும் உள்ள அதிகமான வாடிக்கையாளர்கள், MoneyOnMobile-இன் 325,000 சில்லறை வர்த்தக மையம் ஏதாவது ஒன்றிலிருந்து நிதிப் பரிமாற்றங்களை டிஜிட்டலாகச் செய்து கொள்ளலாம் என்பதேயாகும்.
(Photo: http://mma.prnewswire.com/media/470735/MoneyOnMobile_Quote.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
"சிறிய அளவிலான நிதி உள்கட்டமைப்பு உள்ள சிறு நகரங்கள், டவுன்கள் மற்றும் கிராமங்களுக்கு விரிவாக்கம் செய்தது, MoneyOnMobile-லின் தரப்பில் ஒரு அற்புதமான நடவடிக்கை ஆகும்," என்று சிஇஓ மற்றும் MoneyOnMobile-லின் சேர்மேனுமாகிய Harold Montgomery, கூறினார். "இந்தியாவில், 155,000 வங்கிக் கிளைகளும், கிட்டத்தட்ட 200,000 ஏடிஎம்-களுமே உள்ளன - இது அமெரிக்காவின் தனிநபர்-வங்கி எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பத்தில் ஒரு பங்கே ஆகும். அதாவது 600,000 கிராமங்களில் வங்கிச் சேவைகள் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. MoneyOnMobile-ஐ நாம் கிராமத்தில் உள்ள ஒரு சில்லறை விற்பனைக் கடைக்கு கொண்டு சென்றால், அந்தக் கடை உண்மையிலேயே ஒரு நிதிச் சேவை மையமாக மாறிவிடுகிறது."
MoneyOnMobile-லின் முதல்வர் மற்றும் சிஓஓ-வாகிய Ranjeet Oak, "எங்களுடைய கடைசி மைல் நிதி வலையமைப்பின் மூலம் இந்தியாவின் தொலைக்கோடிப் பகுதியில் உள்ள அனைவருக்கும் கூட நிதிச் சேவைகள் கிடைக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஜனநாயகமாக்குவதே எங்கள் நோக்கமாகும். வங்கிகளுக்கு அதிக வைப்புத் தொகை கிடைப்பதால், நாங்கள் வழங்கும் சேவைகளை வங்கிகளுக்குப் பயனளிக்கும், மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்குத் தொலைதூரப் பணப்பரிமாற்றங்கள் செய்வதற்கு ஒரு புதிய வாய்ப்பாகவும் அமையும்." என்று கூறினார்.
MoneyOnMobile-லின் சில்லறை வர்த்தக நிலையத்திற்கு வாடிக்கையாளர் செல்லும்போது, அவர் தன்னுடைய வங்கிக் கணக்கிலோ அல்லது தனக்கு பரிச்சயமானவரின் வங்கிக் கணக்கிலோ பணம் செலுத்த விரும்பினால், அவர் அந்த வணிகரிடம் பணம் கொடுக்கவேண்டும். இன்றைய அறிவிப்பிற்கு முன்பு வரை, உடனடி பணப்பரிமாற்ற சேவை (ஐஎம்பிஎஸ்) உள்ள வங்கிகளில் மட்டுமே வாடிக்கையாளர்களால் பணம் செலுத்தமுடியும். பண ஓட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஐஎம்பிஎஸ்-ஐ விட பெரியதாகிய தேசிய மின்னணு நிதிப் பரிமாற்ற (என்இஎஃப்டி) அமைப்பில் இணைந்திருப்பதால் இந்த விரிவாக்கம் சாத்தியமாகி உள்ளது.
இத்தகைய பெரிய அளவிலான பணப்பரிமாற்ற அமைப்புடன் இணைந்துள்ளதால், தன்னுடைய செயல் திறன் அளவும் இரட்டிப்பாகும் என்று MoneyOnMobile நம்புகிறது. மேலும், வணிகர்கள் முன்பு செய்யமுடியாத புதிய வகையான பணப்பரிமாற்றங்களை MoneyOnMobile இப்போது ஆதரிப்பதால், சில்லறை வர்த்தகப் பங்குதாரர்களும் இப்போது அதிக வருவாய் ஈட்டலாம்.
MoneyOnMobile-ஐப் பற்றி
MoneyOnMobile, வீதியில் நடக்கும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் தொந்தரவில்லாத பணப்பரிமாற்றம் செய்யும் திறனைக் கொண்டுவந்த, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மொபைல் பணப்பரிமாற்றத் தளங்களில் ஒன்றாகும். எங்களுடைய பணப்பரிமாற்றத் தளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள 300,000 சில்லறை வணிகர்களின் மூலமாக 170 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் வாடிக்கையாளர்கள் எளிதில் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்.
MoneyOnMobile, பதிவு செய்த பயனர்கள் பதிவு பெற்ற வணிகர்களிடமிருந்து தயாரிப்புகளையும் சேவைகளையும் வாங்குவதை அனுமதிக்கும் வகையில் ஒரு பணப்பரிமாற்ற அமைப்பை உருவாக்க, Reserve Bank of India (RBI) அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் உட்பட, எல்லா தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் எளிமையான மற்றும் அதிக வசதியான முறையில் வாங்குவதற்கான ஒரு பாதுகாப்பான, வலுவான மற்றும் நம்பகமான மொபைல் பணப்பரிமாற்றத் தளத்தை MoneyOnMobile, பணப்பரிமாற்றத் தளம் வழங்குகிறது.
தொடர்பு கொள்ள
Navaz Damania
துணை முதல்வர், கார்பரேட் தொலைத் தொடர்பு
MoneyOnMobile
ஈ-மெயில்: [email protected]
தொலைபேசி : +91-22-45021520
http://www.moneyonmobile.in சென்று பார்க்கவும்.
Share this article