புது தில்லி, August 23, 2016 /PRNewswire/ --
புது தில்லியில் தொடங்கிவைக்கப்படுகின்றது
- இந்திய துணைக்கண்டத்தில் உணவு மற்றும் ஆரோக்கிய உட்பொருட்கள், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் துறைக்கான மிக விரிவான B2B கண்காட்சி
- புது தில்லியில் முதல் முறையாக நடத்தப்படும் கண்காட்சி; இந்தியாவில் Fi India and Hi உடைய 11வது நிகழ்வு.
- 200க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய கண்காட்சியாளர்கள்
- 12 பங்கேற்கும் நாடுகள்
- மும்பை மற்றும் புது தில்லிக்கு இடையே ஆண்டுதோறும் சுழலும்
- முதன் முதலான Fi Pre-Connect Congress
- ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் பேக்கரி தொழிற்பட்டறைகள் மீதான தொழில்நுட்ப விரிவுரைகள்
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் இந்திய துணைக்கண்டத்தில் உணவு மற்றும் ஆரோக்கிய உட்பொருட்கள், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் துறைக்கான மிக விரிவான B2B கண்காட்சியானFood ingredients India and Health ingredients (Fi India & Hi) உடைய 11ஆம் நிகழ்வை இன்று தொடங்கிவைத்தனர். 2006 முதல் மேற்கு இந்தியாவிற்கு வெற்றிகரமாக சேவை செய்த பிறகு,Fi Indiaவின் 2016ஆம் ஆண்டு நிகழ்வானது புது தில்லியில் பிரகதி மைதானில் நடைபெறுகின்றது. மூன்று நாள் வணிக கண்காட்சியானது (22 -24 ஆகஸ்ட்) முக்கிய பிரமுகர்களான Shri. Sagar Kurade, தலைவர், All India Food Processers Association ( AIFPA ); Dr. R. B Smarta, மரியாதைக்குரிய செயலாளர் - HADSA & MD, Interlink Marketing Consultancy; Mr. John van der Valk, மேலாண்மை இயக்குநர், UBM EMEA;
Mr. Michael Duck, நிர்வாக துணைத் தலைவர், UBM Asia மற்றும் Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India ஆகியோரால் பெரும் தொழிற்துறை கூட்டத்தின் நடுவே தொடங்கிவைக்கப்பட்டது.
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160822/399941 )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20160822/399946 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160728/10151487 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
இந்த கண்காட்சியானது இப்போது ஆண்டுதோறும் இந்தியாவின் இரண்டு தனித்துவமான நம்பிக்கைக்குரிய உணவு கேந்திரங்களான மும்பை மற்றும் புது தில்லிக்கு இடையே சுழற்சி அடையும். புது தில்லியில் Fi India and Hi உடைய 2016 ஆம் ஆண்டின் நிகழ்வானது துறைசார்ந்த நிறுவனங்கள் வட இந்தியாவில் வளர்ந்து வரும் உணவு உற்பத்தி கேந்திரத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.
11 ஆண்டு துறைசார்ந்த அனுபவத்தினால் ஆற்றல் பெற்ற Fi India, ஆரோக்கியமான உட்பொருட்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜ்ங்கில் 3 நாள் இலவச ஆன் - சைட் விரிவுரைகளை நடத்துகின்றது. பல்வேறு வகையான இந்திய கழகங்களின் துணையோடு கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு சந்தை போக்குகள் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பற்றியும் பேசப்படுகின்றன. நாள் 1இல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தொழில்நுட்ப அமர்வுகளை Health Foods & Dietary Supplements Association (HADSA)நடைபெற்றது. முதல் முறையாக, Fi India மாநாட்டில் ஒமேகா 3 சார்ந்த தயாரிப்பு பயிற்சியை HADSA வழங்கியது. நாள் 2இல் All India Food Processors' Association (AIFPA) நடத்தும் தேசிய கருத்தரங்கு நடைபெறும். நாள் 3இல் உணவு பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங்கில் புதுமைகள், புதிய மற்றும் வளர்ந்துவரும் போக்குகள் குறித்த அமர்வுகள் இடம்பெற்றது.
ஆற்றல்மிக்க கருத்தரங்குகளோடு கூடுதலாக, இந்த கண்காட்சியில் உணவுத் தொழில் நுட்பம்-பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங் நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட Expo Foodtec Pavilionனும் இடம் பெறுகிறது, இது CCCHMPIE நடத்தும் ஒரு சீன அரங்கம் மற்றும் ஒரு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் இடம் பெறுகிறது AIFA அரங்கமும் நடைபெறுகிறது.
மூன்றாவது ஆண்டாக, Fi India & Hiவில் Assocom Institute of Bakery Technology & Management (AIBTM) என்னும் பேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் துணை பாடங்களுக்கான ஒரு விரிவான போதனை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணையோடு ஒரு இரண்டு நாள் இலவச பேக்கரி தொழிற்பட்டறை 'All about Doughnuts' நடைபெற்றது. இந்த தொழிற்பட்டறையிலே உணவு பாதுகாப்பு, உணவு சுகாதாரம் மற்றும் தர கட்டுப்பாடு, அலங்கரிப்பின் முக்கியத்துவம், டோனட்டுகளைக் கையாளுதல் மற்றும் பேக்கேஜிங் மற்றும் டோனட்டுகளை உண்பதற்கான செயல்முறைவிளகம் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் செயல்முறைவிளக்கம் ஆகிய இரண்டும் நடைபெறுகின்றது. மூன்றாம் நாளில், பேக்கர்கள் மத்தியிலுள்ள திறன்களை ஊக்கபப்டுத்தவும் கௌரவிக்கவும் நேரலை போட்டிகள் மூலமாக பேக்கரி சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் துறையின் புதுமைப்புகுத்தலில் முன்சென்று வழிநடத்தும் கண்காட்சியாளர்களை சிறப்பித்துக் காட்டும் ஒரு புதுமையான தயாரிப்பு காட்சியகமும் ஒரு புதுமையான உட்பொருட்கள் சாம்பியன்ஷிப்பும் இடம்பெறும்.
Fi India and Hi 2016 தொடக்கவிழாவின் போது பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "உணவு உட்பொருட்கள் என்பது உலகெங்கும் வளர்ந்து வரும் ஒரு பல பில்லியன் டாலர் தொழிற்துறை ஆகும். உணவு மற்றும் பானம் துறையின் புரட்சி, குறிப்பாக பதப்படுத்திய உணவுத் துறையிலே புதிய தயாரிப்பு உருவாக்கப்படுவதற்கான எண்ணற்ற சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. வட இந்தியாவில் உணவு பதனிடும் துறை பெரும் வளர்ச்சியை கண்டுவருகையில், புது தில்லி, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு & காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இது ஒரு அதிக முக்கியத்துவமான பிரிவு ஆகும். இந்த சந்தையை பயன்படுத்திக்கொள்ள, முதல் முறையாக நாங்கள் புது தில்லியில் இந்நிகழ்வை நடத்துகிறோம் மற்றும் மும்பைக்கும் தலைநகருக்கும் இடையே ஆண்டுதோறும் இது சுழற்சி அடையும், இவை இந்தியாவின் நம்பகமான உணவு கேந்திரங்கள் ஆகும்."
அவர் மேலும் கூறியதாவது, "Fi India and Hi உடைய 11 ஆம் நிகழ்விலே UBM India ஒரே கூரையின் கீழ் வர்த்தகங்களைக் கண்டறியவும் வளர்க்கவும் மூன்று நாட்கள் உணவு உட்பொருட்களுக்கான உண்மையான சர்வதேச கண்காட்சியை வழங்குகிறது. ஆரோக்கியம் மீது கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களால் வளர்ந்து வரும் மதிப்பைப் பெறும் இது நலவாழ்வு மற்றும் இயற்கை உட்பொருட்கள் போன்ற முக்கிய பிரிவுகளின் போக்குகளோடு இணங்குவதற்கும் இது உதவும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்."
இக்கண்காட்சிக்கு முன்னோட்டமாக, UBM India மற்றும் Fi India முதன் முதலாக Fi Pre-Connect Congressஐ தொடங்கிவைத்தன, இது இந்திய உணவு உற்பத்தியாளர்களின் வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை பரிமானங்களில் சந்திக்கும் சவால்கள், புதிய தொழில்நுட்பங்கள் மீதான நவீன கண்ணோட்டங்கள், புதுமையான தொழில்-விற்பனை உக்திகள் மற்றும் பிற பேசப்படும் தலைப்புகள் குறித்து விவாதிப்பதற்கும் கருத்து பரிமாறுவதற்குமான் ஒரு தளம். Fi Pre-Connect Congress துறை நிபுணர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் அறிவு சார்ந்த முறையிலே, தங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைத்து இந்திய உணவு-பாண துறையின் மிக முக்கியமான பிரச்சனைகளுக்கு மூடப்பட்ட கதவுகளுக்குள் தீர்வு கண்டது. மூடப்பட்ட கதவு விவாதங்களில் உணவு-பாணம் மற்றும் உட்பொருள் பிரிவின் தரம், பாதுகாப்பு, ஒழுங்குமுறை, விநியோக சங்கிலி, செயல் முறைகள் மற்றும் சில்லரை வர்த்தக பரிமானங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறை உக்திகள் உள்ளடங்கி இருந்தன.
UBM India பற்றி
UBM India என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்அது கண்காட்சிகளின் தொகுப்பு, உள்ளடக்கங்களினால் வழி நடத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், மூலமாக உலகெங்கும் இருந்துவாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்று சேர்க்கும் தளங்களைஅளிக்கிறது. UBM India ஆண்டுதோறும் நாடு முழுவதும் 25 பெரிய அளவுகண்காட்சிகளையும், 40 மாநாடுகளையும் அளிக்கிறது; இதன் மூலம் பலநிறுவன பிரிவுகளில் வணிகத்தை செயல்படுத்துகின்றது. ஒரு UBM Asia நிறுவனமான, UBM இந்தியாவுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு மற்றும்சென்னையில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஆசியா லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plcக்கு சொந்தமானது. UBM Asiaவின்முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராகவும் சீனாவின் பெருநிலப்பகுதியிலும், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து வருகைதாருங்கள்ubmindia.in.
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article