இந்தியப் பிளாட்டினம் அணிகலன் சில்லறை விற்பனை 2015 ஆம் ஆண்டில் 24% வளர்ச்சி
மும்பை, April 11, 2016 /PRNewswire/ --
பன்னாட்டுப் பிளாட்டினம் வர்த்தகக்குழு (PGI) மூன்றாவது ஆண்டு பொருளியல் நிலைமானியை இன்று அறிவித்தது. இந்த ஆய்வு ஸ்டார்ட்வென் வணிக ஆலோசனை நிறுவனம் (StratWon Business Consulting) என்ற மூன்றாவது முகமையால் நடத்தப்பட்டது. இந்த பொருளியில் நிலைமானி சில்லறை வர்த்தகப் பார்வையிலிருந்து பிளாட்டினத்தின் ஒரு தனித்தன்மையான தேவையையும் இனிவரும் ஆண்டில் நிலவும் வர்த்தக நிலைமையையும் வழங்குகிறது.
இந்த ஆய்வு கணக்கெடுப்பு 21 சில்லறை விற்பனை கம்பெனிகளின் இந்தியா முழுவதுமுள்ள பிளாட்டினம் விற்பனைச் சந்தையின் எறக்குறைய 310 சில்லறை விற்பனைக் கடைகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்டது.
அறிக்கையின் முக்கிய அம்மசங்கள்
- பிளாட்டினம் அணிகலன் 2015 ஆம் ஆண்டு +24% வளர்ச்சிக் கண்டு தொழிற்துறையின் ஒளிமயமான தீப்பொறியாக விளங்கியது. ஒவ்வொரு காலாண்டும் வளர்ச்சிக் காண்கின்ற ஒரே வகையாக இது இருந்தது.
- PGI-யின் வியூகத்திறன் சார் பங்காளிகள் அனைந்திந்திய அளவில் 25% வளர்ச்சியை வழங்கியுள்ளனர்.
- வாடிக்கையாளர் வரவேற்பில் வளர்ச்சி, வினியோகம் மற்றும் வெற்றிகரமான வணிகச் சின்னத்தாலான திட்டங்கள் ஆகியவற்றோடு பிளாட்டினம் அணிகலன் வளர்ச்சி வளைகோட்டில் உள்ளது.
- PGI சில்லறை வணிகப் பங்காளிகள் 2016 ஆம் ஆண்டு எல்லா அணிகல வகைகளை பொறுத்தமட்டில் குறிப்பாக பிளாட்டினம் மற்றும் வைர அணிகலன்களை பொறுத்தமட்டில் நேர்மறைக் கருத்துக் கொண்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட 23% வளர்ச்சி வீதத்தைவிட அதிகமாக 25% வளர்ச்சி இருக்குமென வியூகத்திறன் சார் பங்காளிகள் மதிப்பிடுகின்றனர்.
இந்தியாவின் சில்லறை வர்த்தகப் பொருளியில் நிலைமானியின் முக்கிய கண்டுபிடிப்புகள்:
பிளாட்டினம் அணிகலன் (PJ) 2015-இன் பாணியாதல்
- 2009 ஆம் ஆண்டு அன்பின் பிளாட்டினம் நாளின் பின்னணியில் வெளியிடப்பட்ட பிளாட்டினம் மோதிரங்களும் பட்டைகளும், நுண்ணிய மாற்றத் தொகுதிகளாக தூண்டுதல் பெறுவதற்கு இன்னும் வாய்ப்பு இருந்தாலும் பிரதானமாக நிலைத்து நிற்கும் வகையாக இப்போதும் கருதப்படுகிறது. PDOL பரப்புரை மூலமாக இரட்டைப் பட்டைகள் வகைக்கு அதிக வரவேற்பு உள்ளது.
- மணப்பெண் அணிகலனான பிளாட்டினம் இவாரா (Evara) கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அணிகலனின் எடை. இலாபங்கள் மற்றும் பிளாட்டினம் வர்த்தகத்தின் அளவை அதிகரிக்கும் வாய்ப்பை இவாரா சில்லறை வணிகர்களுக்கு வழங்குகிறது.
- இவாரா (Evara) விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சி வாடிக்கையாளர் அதுபற்றி விசாரிப்பதையும் இவாரா (Evara) வின் விற்பனையையும் தூண்டியுள்ளது. ஆண்களின் அணிகலன் விற்பனையைத் தூண்டுவதில் நேர்மறை விளைவையும் இது வழங்கியிருக்கிறது.
- உற்பத்திப் பொருளிள் வாழ்க்கை வட்டத்தில் இவாரா (Evara) இன்னும் குழந்தைப் பருவத்திலே இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வணிகப்பொருளின் சின்னத்தை புகழ்பெறச்செய்ய 2 ஆண்டுகள் ஆகும் என்ற எண்ணத்திலேயே சில்லறை வர்த்தகர்கள் உள்ளனர்.
- பிளாட்டினம் ஆண்களால் வரவேற்கப்படுவதில் உருவாகியுள்ள மேம்பாடானது வர்த்தகத்தில் தற்போது 47% பங்கை வழங்கிவரும் சாதாரண பிளாட்டின வர்த்தகத்தில் வளர்ச்சியை தூண்டி ஆண்களின் அணிகலன்களில் வளர்ச்சியையும் உறுதிச்செய்கிறது.
- பிளாட்டினம் அணிகலன் விற்பனை 24% காண்பதில், 53% பிளாட்டினம் பதித்த அணிகலன்கள் ஆதிக்கம் செலுத்தின.
ஒட்டமொத்த அணிகலன்கள் வகை
- அணிகலன்களின் தேவை H2 CY15-னில் மீளுயர்வுக் கண்டது. Q4 வத்தகத்தைப் பெருக்கி வாடிக்கையாளர் கரிசனையை மேம்படுத்தியுள்ளது. என்றாலும், மணப்பெண்களுக்கான அதிக அணிகலன்களின் இணைகளில் பெரும்பாலான சில்லறை வர்த்தகர்களின் முக்கிய ஆதாரம் 2015 ஆம் ஆண்டு மிகவும் குறைவு.
- இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக 60% பங்களிக்கும் மணப்பெண் அணிகலன் பகுதியே சில்லறை வர்த்தகர்களின் முக்கிய கவனமாக இருந்து வந்துள்ளது.
- தங்க அணிகலன்களின் வளர்ச்சி 8% என குறிப்பிடும் சில்லறை வர்த்தகர்கள், வைர அணிகலன்களின் வளர்ச்சிக் குறைவாக இருந்ததாக குறிப்பிட்டனர்.
பன்னாட்டுச் சில்லறை வர்த்தக பொருளியல் நிலைமானி கண்டுபிடிப்புகள்
இந்த ஆய்வுக் கணக்கெடுப்பு 400 சில்லறை விற்பனைக் கம்பெனிகளின் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் நான்கு முக்கிய பன்னாட்டு பிளாட்டினம் விற்பனைச் சந்தையின் எறக்குறைய 23,000 சில்லறை விற்பனைக் கடைகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்டது.
- பிளாட்டினத்தின் குறைவான விலை அதிக வாடிக்கையாளர்கள் வாங்குகின்ற வாய்ப்பையும் சில்லறை வர்த்தகர்கள் இலாபம் பெறுவதற்கான வாய்பையும் வழங்குகிறது.
- சீனாவில் சில்லறை விற்பனைத் தொடரும் PGI-யின் வியூகம் சார் பங்காளிகளும் சந்தைவிட அதிகமாக முக்கிய செயலாற்றி வருகின்றனர்.
- ஜப்பானில் கனமான உற்பத்திப் பொருட்களை பங்கிடுவதில் எற்பட்ட திருப்புமுனையோடு சேர்ந்துக் கொண்ட பிளாட்டின அணிகலன்களுக்கான தேவை ஒட்டுமொத்தமாக +2.7% வளர்ச்சி கண்டுள்ளது.
- பிளாட்டினத்தின் விலை குறைவால் அமெரிக்கச் சந்தை ஒட்டு மொத்தமாக +10% வளர்ச்சிக் கண்டது.
PGI செயல் அலுவலர், Huw Daniel, கருத்துக் கூறியதாவது, "பொதுவாக செகுசு வகைகளுக்கும் அணிகலன்களுக்கும் ஒரு கடினமான ஆண்டாக பல சவால்களை கொண்டிருந்தாலும், பிளாட்டினத்தில் நிலையாக வர்த்தகம் செய்த சில்லறை வர்த்தகர்கள் அவர்களின் இணையானோருக்கு அதிகமாக வளர்ச்சியை கண்டுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிளாட்டினம் உலோக விலை குறைவானது மிகவும் விரும்பிய சிறந்த அணிகலனை பெற்றுக் கொள்வதற்கு தனிச்சிறப்பு மிக்க வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கும், சில்லறை வர்த்தகர்களுக்கும் வழங்கியுள்ளது. இந்தியா மெய்சிலிர்க்கச் செய்யும் சந்தையாக உள்ளது. PGI இங்குள்ள எதிர்கால வாய்ப்புக்களை குறிப்பாக புதிய மணப்பெண் பகுதியை, பிளாட்டினம் இவாரா (Evara) வெளியிடுவதன் ஒளியில் மதிப்பேற்றுகிறது. எங்களுடைய தொடர் முயற்சிகளால் இந்திய பிளாட்டினம் சந்தை எதிர்பார்த்ததைவிட அதிகமாக 24% அதிக வளர்ச்சிக் கண்டுள்ளது." நாம் 2016 இல் வலுவான வளர்ச்சி எண்களை எதிர்நோக்குகிறோம் "
PGI-யின் இந்திய நாட்டு மேலாளர் Vaishali Banerjee, "மிகவும் சவாலான ஆண்டாக இருந்தபோதிலும் பிளாட்டினம் 24% என்ற சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது. உள்ளுணர்வு அடிப்படையிலான குவிமைய வியூகங்கள் கடந்த ஆண்டு வளர்ச்சி காண எங்களுக்கு உதவியுள்ளது. புதிய அணிகலன்களை வாங்குவதற்கான தருவாயை உருவாக்கி எங்களுடைய ஒவ்வொரு வணிகச் சின்னப் பொருட்களினாலும் இதுவரை யாரும் சந்திக்காத வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவுச் செய்து பிளாட்டினத்தை வாங்கும் ஆசையை தூண்டினோம். எங்களுடைய செய்தித் தொடர்புகள் மூலமாக இவாராவை (Evara) திருமண அணிகலனாக நிலைநாட்டுவதில் முழு கவனம் செலுத்தினோம். நாங்கள் அனைவரையும் சென்றடைவதை மேம்படுத்தும் விதமாக, எங்களுடைய இலக்குக் குழுக்களை ஈடுபடுத்துவதில் மிகவும் முக்கியமான வலுவான எண்ணியல் வியூகத்தை அணிகலன் வெளியில் உருவாக்கினோம். கடைசியாக, அவர்களின் வியூகம் சார்ந்த மற்றும் ஒட்டுமொத்த என இருவித வியாபாரத்திலும் பிளாட்டினம் உருவாக்குகின்ற வர்த்தகம் எங்களுக்கு அதிக இலாபம் தரும் உணர்வுபூர்வ அணிகல உலோகமாக நிலைநாட்டினோம்," என்ற கூறினார்.
மேலும் "இளம் இந்தியா பிளாட்டினத்தோடு ஒத்ததிர்வாக 2016 ஆம் ஆண்டுக்கு கொடுத்திருக்கும் கண்ணோட்டம் நேர்மறையானது. எங்களுடைய தன்னார்வ மற்றும் வியூக முயற்சிகளால் உத்வேகத்தை தொடர்ந்து கட்டியமைப்போம் என்று அவர் கூறினார்."
ORRA செயல் அலுவலர் Vijay Jain கூறியதாவது,"2015 ஆம் ஆண்டு தங்க மற்றும் வைர அணிகல விற்பனையில் ஒட்டுமொத்தச் சரிவு இருந்தாலும், 2015 ஆம் ஆண்டு பிளாட்டினம் விற்பனை முக்கிய ஆதாரமான அன்பின் பட்டைகளுக்கு அப்பாற்பட்டு 24% வளர்ச்சிக் கண்டது. ஆண்களின் அணிகல விற்பனையில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவாராக்கு (Evara) கிடைத்திருக்கும் சிறந்த வரவேற்பை கண்டிருக்கிறோம். குழந்தைப் பருவமாக இருந்தாலும் பிளாட்டினம் இவாரா (Evara) சில்லறை வர்த்தகர்களுக்கு அவர்களின் அணிகலத் தொகுதயின் சராசரி விலை மற்றும் ஒட்டுமொத்த பிளாட்டினம் விற்பனையை மேம்படுத்தும் மாபெரும் வாய்ப்பை வழங்குகிறது."
Joy Alukkas குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான Joy Alukkas பேசியதாவது, "இந்தியாவில் முதலில் வௌயிட்ட வணிகச்சின்ன பிளாட்டினம் அணிகலன்களில் ஒன்று Joyalukkas. பிளாட்டினம் அணிகலனாக அறிமுகப்படுத்தப் பட்டபோது வெளியான மோதிரங்கள், பிரதானமாக திருமணம் மற்றும் வார்த்தைபாட்டிற்கான பட்டைகள் புகழ்பெற்றவையாக இருந்தன. என்றாலும் இப்போது, நம்முடைய கடைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிகளவில் பிளாட்டினம் அணிகலன்களை விற்கின்றன. இவாராவை (Evara) வெளியிட்ட பின்னர், கடந்த ஆண்டு நம்முடைய கடைகளில் குறிப்பாக மணமகள் அணிகலன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களில் இருந்து பிளாட்டினம் அணிகலன்களின் விற்பனையில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளோம். இவாரா (Evara) உற்பத்தியின் புதிய சின்னமாக இருக்கிறது. அதனால். இதனை பற்றிய விரிவான விழிப்புணர்வு நீண்டகாலத்தில் சிறந்த வளர்ச்சி வாய்ப்பை உருவாக்கும் என நம்புகிறோம். கடந்த ஆண்டு எங்களுடைய கடைகளில் 30% பிளாட்டினம் அணிகலன்களின் விற்பனை வளர்ச்சியை கண்டோம். 2016 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும்."
Ahmedabad I H ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் Kalpanik Choksi, "சிறிய பிளாட்டினத் தோற்றத்தோடு அமையும் நவீன வடிவமைப்புகள் இளைஞர்களை ஈர்த்துள்ளதால் எங்களுடைய கடைகளில் ஆண்களின் அணிகலன்களின் தேவை அதிகரித்துள்ளது. மணமகள் அணிகலன்களின் வெளியில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற தெரிவை அதிகரிக்க இவாரா (Evara) உதவியிருக்கிறது. இவாராவுக்கு (Evara) வாடிக்கையாளர்கள் வழங்கியுள்ள மறுமொழியை பார்த்து மெய்சிலிர்த்துப் போயிருக்கிறோம். ஆண்களின் அணிகலன்கள் மற்றும் இவாராவின் விற்பனையில் அதிகரிப்போடு, பிளாட்டினம் விற்பனையில் 50% வளர்ச்சியை நாங்கள் கண்டுள்ளோம்," என்று கூறினார்.
Abaran Timeless ஜூவல்லரி பிரைவெட் லிமிடெட். நிர்வாக இயக்குனர் Pratap Madhukar Kamath பேசுகிறபோது, "தங்க மற்றும் வைர அணிகலன்கள் விற்பனை குறைந்தபோது பிளாட்டினம் விற்பனை ஒரு வகையாக வளர்ச்சியை வழங்கி மகிழ்ச்சித் தந்துள்ளது. எங்களுடைய கடைகளில் ஒரு நேர்மறையான இருப்பு நிலையை பராமரித்துள்ளோம். PGI வழங்கிய சிறந்த சந்தைப்படுத்தல் ஆதரவு நல்ல விற்பனையை சாதிக்க உதவியிருக்கிறது. சிறந்த விற்பனை காலத்தை நாங்கள் எதிர்ந்நோக்கியிருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
சென்கோ தங்கம் & வைரங்கள் நிறுவன செயல் இயக்குனர் Suvankar Sen பேசுகிறபோது, "நாங்கள் எங்களுடைய இருப்பை மும்பை & பெங்களூரு என விரிவாக்கியபோது, இந்த நகரங்களுக்கு பிளாட்டினத்தை எடுத்துச் செல்வதை உறுதிச் செய்தோம். எங்கள் கடைகளில் 25% விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மோதிரங்கள் மிகவும் விரைவாக விற்பனையாகும் வகைகளாக இருக்க, காதணிகள் மற்றும் தொங்கல் இணைகள் அதற்கு அடுத்தாக வருகின்றன. ஆண்கள் பிளாட்டினம் செயினும் மணிக்கட்டைப் பட்டையையும் வாங்குவதில் வளர்ச்சிக் கண்டுள்ளோம். 2 அல்லது 3 அடுக்கு நகரங்களில் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு பெருகும்போது, இந்த ஆண்டு இந்த நகரங்களில் உள்ள எங்கள் கடைகளில் பிளாட்டின அணிகலன்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்புக்களை பார்க்கிறோம்," என்றார்.
சில்லறை வர்த்தகப் பொருளியல் நிலைமானிப் பற்றி
சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா என நான்கு முக்கிய பன்னாட்டுப் பிளாட்டினம் அணிகலச் சந்தைகளின் இனிவரும் ஆண்டு சில்லறை வர்த்தகம் மற்றும் வர்த்தகக் கரிசனையை குறிப்பாக பகுப்பாய்வுச் செய்து PGI வழங்கும் ஆண்டறிக்கை சில்லறை வர்த்தகப் பொருளியில் நிலைமானி ஆகும். இந்த ஆய்வு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பெரிய மாதிரி சில்லறை ஜூவல்லரிகளிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சந்தையிலுமுள்ள சிறப்பு ஆய்வு நிறுவனங்களால் பகுப்பாய்வுச் செய்து அறிக்கையிடப்பட்டது.
பன்னாட்டுப் பிளாட்டின வர்த்தக்குழு (PGI) பற்றி
1975 ஆண்டு நிறுவப்பட்ட PGI, உலகளவில் பிளாட்டினம் அணிகல வர்த்தகத்தை வளர்ப்பதற்கு தன்னை அர்பணித்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு மேலாக PGI உலகளவிலுள்ள முக்கிய அணிகலன்களின் சந்தைகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் இந்திய அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்திய அளவில் பிளாட்டின சந்தையை தூண்டுகின்ற ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தும் திட்டங்களை இது நடத்தி வருகிறது. பிளாட்டினம் சில்லறை விற்பனைப் பயிற்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகத்திற்கும் இடையில் பிளாட்டினம் அணிகலன்களின் தரத்தையும், தூய்மையையும் உறுதிப்படுத்துவதற்கான தனிச்சிறப்பு வாய்ந்த தர உறுதித் திட்டத்தையும் இது வழங்குகிறது. அதிக தவல்களுக்கு, http://www.preciousplatinum.in இணைய முகவரியில் உலா வரவும்.
ஊடகத் தொடர்பு:
Alita D'souza
[email protected]
022-6682 3312
Actimedia Pvt. Ltd.
Share this article