மும்பை, December 3, 2015 /PRNewswire/ --
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழில்துறை கண்காட்சி; 97 நாடுகளுக்கு மேல், 1100 கண்காட்சியாளர்கள் மற்றும் 32000 பிரதிநிதிகள்
UBM இந்தியா இன்று தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மருந்தக நிகழ்ச்சியான CPhI மற்றும் P-MEC 2015 -யினை மும்பையில் தொடங்கியது. உலக அளவில் மருந்துத் துறையில் முக்கியமான நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்காகக் கூடும் துணை நிகழ்வான P-MEC-யுடன், CPhI இந்தியா ஒரு சிறந்த வர்த்தக தளமாக விளங்குகிறது. நிகழ்ச்சிக்கு முன்னோடியாக, ப்ரி-கணெக்ட் காங்கிரஸின் இந்தியப் பதிப்பினையும் (உலக அளவில் 7வது), India Pharma Awards-ம் UBM இந்தியா நிகழ்த்தியதோடு, இத்துறைக்கே உரிய வெளியீட்டு அறிக்கைகளையும் வெளியிட்டது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20151201/10135758-a )
(Photo: http://photos.prnewswire.com/prnh/20151201/10135758-b )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20141117/10111012 )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
AGR Knowledge Services உடன் இணைந்து Indian Pharma Exporters & The World Of PMEC - Collector's Edition' வெளியிட்டது. இந்திய மருந்து ஏற்றுமதிகள் பற்றிய மிகச் சிறந்த விஷயங்களையும், பெரிய ஏற்றுமதி நிறுவனங்களையும், FY15-ல் அவர்களின் வெற்றியையும் செயல்திறன்களையும் இந்த வெளியீட்டு அறிக்கை அளிக்கிறது. P-MEC-யில் உலகளாவிய பாணிகள் உட்பட துறையைப் பற்றிய மேலோட்டமான பார்வையை இந்த வெளியீடு அளிப்பதோடு, உற்பத்தி, தேவையும்- அதை நிவர்த்தி செய்வதும், ஏற்றுமதி வாய்ப்புகள், முதலீடு, துறைக்கான முக்கிய வளர்ச்சி ஊக்கிகள், இத்துறைக்கான அரசின் முன்முயற்சிகள் மற்றும் எதிர்கால பார்வை ஆகிய மருந்துத் துறையின் உலகளாவிய & இந்திய போக்குகள் இந்தியாவில் P-MEC நிலவரத்தில் உள்ளன. (சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
Pre-Connect Congress என்பது தொழில்துறையின் முன்னணியாளர்கள் மத்தியில் நடந்த குழு விவாதமாகும். மருந்துத் துறையில் M&A, ஒழுங்குமுறைப் பிரச்சனைகள் மற்றும் ஒருமித்ததன்மையை மேம்படுத்துவது, உற்பத்தி மையமாக உள்ள இந்தியாவை புதுமை மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் இடமாக உயர்த்துவது, இலாபத்தைப் பாதிக்கும் விலை நிர்ணய கொள்கை, தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் இந்திய மருந்துச் சந்தைக்கான அடுத்த பிரகாசமான பிரிவாக உள்ள பயோசிமிலர்ஸ் சார்ந்த தலைப்புகளில் உரைகளும் விவாதங்களும் நடந்தன.
டைட்டில் ஸ்பான்சரான TAKE Solutions உதவியோடு நடத்தப்பட்ட UBM India Pharma Awards நிகழ்ச்சி 10 பல்வேறு வகைகளில் புதுமைகளை நோக்கிய நிர்வாக திறன்களை காட்சிப்படுத்தினார்கள். இதில் நாட்டிலிருந்தும் ஆசியா மற்றும் ஐரோப்பாவிலும் இருந்து வந்த இத்துறை சார்ந்த கொள்கைகளைத் தாரிப்பவர்கள் கலந்து கொண்டனர்.
வகைப்பாடுகள்: வெற்றியாளர்கள் 1. ஒப்பந்த ஆராய்ச்சியில் தனிச்சிறப்பு Accutest Research Laboratories India 2. CSR-ல் தனிச்சிறப்பு Sun Pharmaceuticals Industries Ltd 3. EHS-ல் தனிச்சிறப்பு Zydus Takeda Healthcare Pvt Ltd and Cadila Healthcare Ltd (Zydus Cadila) 4. பேக்கேஜிங்கில் தனிச்சிறப்பு Zydus Cadila Healthcare Ltd 5. ஃபார்மா மெஷினரியில் தனிச்சிறப்பு Image Provision Technology Pvt Ltd 6. விநியோகச் சங்கிலி மேலாண்மை & சரக்குப் போக்குவரத்து Piramal Enterprises Limited 7. செயல்திறனில் தனிச்சிறப்பு Eisai Pharmaceuticals India Pvt Ltd and Abbott Healthcare Pvt Ltd 8. கிராமப்புறத்தை அடைவதில் தனிச்சிறப்பு Cipla Ltd 9. ஆராய்ச்சி & மேம்பாட்டில் தனிச்சிறப்பு Bharat Biotech International Ltd and Shilpa Medicare Limited 10. பிராண்டு/தயாரிப்பில் தனிச்சிறப்பு Cipla Ltd நடுவர்களின் தேர்வ: வகைப்பாடுகள்: வெற்றியாளர்கள் 1. வாழ்நாள் சாதனையாளர் விருது Ms. Samprada Singh 2. ஆண்டின் பிரபலமானவர் Ms. Vineeta Gupta 3. தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர் Mr. Nick Israni 4. ஆண்டின் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் Mr. Mehul Shah (Encube Ethicals)
UBM India-வின் மேலாண் இயக்குனரான Yogesh Mudras பேசுகையில், "பல ஆண்டுகளாக உலகளாவிய மருந்துத் தொழில்துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக UBM இருந்து வந்துள்ளது. இந்தியாவில் இந்தத் துறை சார்ந்த 30-க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த மாநாடுகளை நடத்திய நாம், இந்தியாவில் பகுப்பாய்வு, ஒப்பந்த சேவை மற்றும் பயோடெக் துறைக்கான வருடாந்திர நிகழ்வான Pharmalytica Expo-வையும் ஹைதராபாத்தில் நடத்துகிறோம். CPhI India-வின் வெற்றிகரமான 10-வது பதிப்பு வரும் 2016-ஆம் ஆண்டில் வர உள்ளது. இந்த சாதனையைக் குறிக்கும் விதத்தில், UBM இந்தியா PHARMA WEEK 2016-னை நடத்தும். பாம்பே கன்வென்ஷன் & எக்சிபிஷன் சென்டர் மற்றும் BKC, PHARMA WEEK 2016 ஆகியவற்றில் Expo, CEO Power Breakfast, Pre-Connect Congress, Nextgen Pharma Roundtable, Plant visits, Exhibitor Showcase மற்றும் Knowledge Forums, India Pharma Awards மற்றும் Innovation Gallery போன்றவை மும்பை முழுவதும் நடத்தப்படும்."
Indian Pharma Exporters & The World Of PMEC - Collector's Edition' பதிப்பு.
அறிக்கையின் சிறப்பம்சங்கள்
•உலகளாவிய மருந்து சந்தை ஏறக்குறைய USD 1 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 40% USA-விடமும் ஐரோப்பிய யூனியன்(EU) மற்றும் ஜப்பான் அதைத் தொடர்ந்த இடங்களிலும் உள்ளன.
• வளர்ந்த நாடுகளில் மருந்துகளுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. வளரும் நாடுகளில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவது இந்தத் துறையின் முக்கியமான விஷயமாக தொடர்கிறது.
• The pharma sector is projected to increase at a CAGR of 5% during 2015-2020 and expected to be over USD 1.3 trillion by 2020.
2015-2020-ல் 5% CAGR அளவிற்கு மருந்துத் துறை வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2020-ல் USD 1.3 டிரில்லியன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• உலக மருந்துச் சந்தையில் பல மாற்றங்கள் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை வரும் ஆண்டுகளில் இதன் வளர்ச்சியல் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்த சந்தையின்மீது இருந்த கவனம் வளரும் சந்தைகளை நோக்கித் திரும்பும் வளர்ச்சி, சிறு மூலக்கூறு மருந்துகளோடு ஒப்பிடுகையில் பயோஃபார்மசூட்டிக்கல்ஸ் மீது கவனம், மற்றும் பிராண்டு மருந்துகளுக்குப் பதில் பொது மருந்துகளின்மீது ஏற்படும் நாட்டம் போன்றவை இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் சில விஷயங்களாகும்.
• முதலில், உலக மருந்துச் சந்தை காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்கள் மற்றும் பொது மருந்துகள் என்று பிரிக்கப்படலாம். பொது மருந்துகள் உலக மருந்துச் சந்தையில் அதன் அளவைப் பொருத்தவரை தற்போது 45% அளவுக்கும், மதிப்பைப் பொருத்தவரை 20% அளவுக்கும் உள்ளது.
• இந்தியாவில், இத்துறையின் வருவாயில் ஏறக்குறைய 70% பொது மருந்துகள் வழியாகவும், OTC-களிலிருந்து 21% அளவுக்கும் 9% காப்புரிமை பெற்ற மருந்துகளிடமிருந்தும் கிடைக்கிறது.
• பொது மருந்துகளுக்கான உலகளாவிய தேவை அதிகரிக்கையில், இந்தத் துறையில் அதிக முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மருந்துத் துறையில் முக்கிய பங்காற்றும் இந்தியா, மேலும் வளர்ச்சியடைந்து மருந்துத் துறையில் அதிக முதலீடுகளைப் பெறும்.
• 'உலகின் மருந்தகம்' என அறியப்படும் இந்தியா, உலக அளவில் 2020-ல் முதல் 10 சந்தைகளில் ஒன்றாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• இந்திய மருந்துத் துறை கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதே போன்ற வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• இந்திய மருந்துச் சந்தை உலகில் அளவைப் பொருத்தவரை மூன்றாவது பெரியதாகவும் மதிப்பைப் பொருத்தவரை 13-வது பெரியதாகவும் இருக்கிறது.
• இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்றுமதிகள் பெரிய காரணமாக உள்ளது.
• மொத்த மருந்து உற்பத்தியில் 72% ஏற்றுமதி செய்யப்படும் என்றும் இது 2020-ல் USD 40 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• USA கூட 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஜெர்மனிதான் மிகப்பெரிய விநியோகிப்பாளர். மதிப்பைப் பொருத்தவரை இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. USAவிற்கு USD 4 பில்லியன் மதிப்புள்ள மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய மருந்து ஏற்றுமதியைப் பொருத்தவரை அமெரிக்காதான் பெரிய இலக்காக உள்ளது.
• பொது மருந்து உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. முதல் 20 மருந்து ஏற்றுமதி நாடுகளுள் ஒன்றாக உள்ளது. தடுப்பு மருந்து தயாரிப்பிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த்த் தடுப்பு மருந்துகள் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பொது மருந்துத் துறையில் US, UK, போன்ற வளர்ந்த முக்கிய சந்தைகள் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன. வளர்ச்சியடைந்த சந்தைகள் தவிர, இந்திய மருந்து நிறுவனங்கள் ரசியா, மற்றும் பல ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பொன்ற பிற மிக வேகமாக வளரும் ஓரளவு ஒழுங்குபடுத்தப்பட்டட சந்தைகளிலும் இந்திய மருந்து நிறுவனங்கள் பலமாக கால் பதித்துள்ளன.
• Contract Research and manufacturing services (CRAMS) என்பது மருந்துச் சந்தையில் மிக வேகமாகவும் நவீனமாகவும் வளரும் துறையாகும். பல மருந்துத் தயாரிப்புகளின் உற்பத்தி மையமாக உள்ள இந்தியா, நாட்டில் அடுத்த வேகமாக வளரும் துறையாக CRAMS-னை ஆக்கியுள்ளது.
• 2014-ல் USD 9.3 பில்லியன் மதிப்புள்ள இந்திய CRAMS பிரிவு, 20% வளர்ச்சியடைந்து 2018-ல் USD 19 பில்லியனைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய CRAMS பிரிவில் இந்திய தயாரிப்பாளர்கள் 5% அளவிற்கு உள்ளனர் இது 7-8% அளவிற்கு உயர் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• US FDA-யின் அனுமதி பெற்ற தொழிலகங்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாவதாக இந்தியா உள்ளது இந்தியாவில் 22% US FDA அனுமதி பெற்ற தொழிலகங்கள் உள்ளன.
• ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்படாத துறையில் 20,000-க்கும் மேற்பட்ட உற்பத்தி தொழிலகங்கள் இந்திய மருந்துத் துறையில் உள்ளன. மகாராஷ்டரா, குஜராத் மாநிலங்களில் பெரும்பான்மையான மருந்து நிறுவனங்களின் உற்பத்தி தொழிலகங்கள் குவிந்துள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த மருந்து தயாரிப்பு தொழிலகங்களில் 45% இந்த மாநிலங்களில் உள்ளன. மும்பை, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகியவை இந்தியாவின் பெரிய மருந்துப் பொருள் மையங்களாகும்.
• இந்தியாவில் M&A செயல்பாடுகள் USD 25.6 பில்லியனைத் தொட்டது. இதில் மருந்து மட்டும் USD 1.7 பில்லியன் ஆகும். US சந்தையைப் பிடித்துள்ள முதல் பத்து நாடுகளில் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை முதல் இடங்களில் உள்ளன. இந்தியாவில் 2015-ல் முதல் 9 மாதங்களில் USD 25.62 பில்லியனைத் தொட்டது M&A செயல்பாடுகள். இதில் USD 1.7 பில்லியன் அளவுக்கு 16 ஒப்பந்தங்கள் மருந்துத் துறையில் செய்யப்பட்டன.
• உலக அளவில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் பிரிவில் ஜெர்மனிதான் முன்னணியில் உள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலியும் ஸ்விட்சர்லாந்தும் உலக அளவில் அடுத்த முக்கிய சந்தைகளாகும் ஆசியாவில், மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் பிரிவில் தொழில்நுட்ப அளவில் மிகவும் மேம்பட்ட உற்பத்தியாளராகும். மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் அதிகமாகக் குவிந்துள்ள நாடுகளில் அடுத்த இடங்களில் USA-வும் இஸ்ரேலும் உள்ளன.
• தற்போது, இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் மற்றும் கருவிகள் உற்பத்திப் பிரிவில் 800 யூனிட்டுகள் உள்ளன. இவை மருத்துவ சாதனங்களையும் கருவிகளையும் உற்பத்தி செய்கின்றன.
• இவற்றுள் பெரிய, நடுத்தர மற்றும் சிறய அளவிலான நிறுவனங்கள் அடங்கும். இவை மொத்தமாக USD 920 மில்லியன் வருமானத்தை 2015-ஆம் நிதி ஆண்டில் அளித்தன. ஆனால், இது 2008-ல் USD 350 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. 2020-ல் இந்தச் சந்தை USD 1780 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மருந்து தயாரிப்புகள் மற்றும் புதிய ஏற்றுமதிச் சந்தைகளுக்கு விற்பனை ஆகியவை இந்த 14% CAGR-க்கு திறன் மேம்பாட்டுக்கான இரு காரணிகளாகும்.
• இந்தியா தற்போது மருத்துவ கருவிகள் மற்றும் சாதனங்களை உலக அளவில் 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சாதனங்களுக்கான முக்கிய ஏற்றுமதி இலக்குகள் USA, இங்கிலாந்து(UK), மத்திய கிழக்கு(ME) நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன்(EU) ஆகியவைகளாகும். பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கும் இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
• குஜராத், மும்பை ஆகியவை முக்கிய உற்பத்தி மையங்களாகும். ஹரியானா, கூர்காவ், ஃபரிதாபாத் மற்றும் அம்பாலா ஆகியவை வளரும் இடங்களாகும்
UBM India பற்றி
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM ஆசியா என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக நடத்துபவராகும். மேற்பட்ட விவரங்களுக்கு தயவுசெய்து எமது வலைதளத்தைப் பார்க்கவும் http://www.ubmindia.in.
ஊடகத் தொடர்பு:
Priya Badshah,
[email protected],
+91-22-61727000,
UBM India
Share this article