OSH இந்தியா 2019: தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான விழிப்புணர்வை உருவாக்கவும் தக்கவைக்கவும் Informa Markets in India-வின் பிரச்சாரம்
- தொழில் பாதுகாப்பு & சுகாதாரத் துறைக்கான தெற்காசியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சி
மும்பை, Nov. 27, 2019 /PRNewswire/ -- ஒரு முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), மும்பையின் தொழில் மையத்தில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்கான தெற்காசியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சியான 8-வது OSH India கண்காட்சியை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள Bombay Exhibition Centre-ல் வரும் 28 மற்றும் 29 நவம்பர், 2019-ல் நடத்தப்பட உள்ள இந்தக் கண்காட்சியில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பற்றிப் பேசவும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த விஷயங்களில் அத்தியாவசியமான சவால்களில் சிலவற்றுக்கு தீர்வுகளைத் தேடவும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஒரே குடையின்கீழ் கூடி விவாதிப்பார்கள்.
நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாதுகாப்புத் துறையின் வருடாந்திரக் கண்காட்சியான OSH India 2019-வில் உலகளாவிய 150-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. National Small Industries Corporation (NSIC), International Powered Access Federation (IPAF), Indian Society of Ergonomics (ISE), Indian Technical Textiles Association, Safety Appliances Manufacturers Association (SAMA), Air India Engineering Services Ltd (AIESL), National Accreditation Board of Certifying Bodies (NABCB), Board of Certified Safety Professionals (BCSP), MRO Association, Safety Training institutes மற்றும் பல நிறுவனங்கள் இதில் பங்கேற்கும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகள் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பங்களிக்கும் நிலைக்கு பொருளாதாரம் ஏற்கனவே வளர்ந்திருக்கிறது. ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானம் போன்ற உற்பத்தி மற்றும் சார்புடைய துறைகளில் உள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே தொழில் இடர்கள் பற்றி வழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாக நிறுவனங்கள் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளனர். இந்திய நிறுவனங்கள் மத்தியில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதன் காரணமாக, உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றியும், வேலையிடப் பாதுகாப்பு அளிப்பது பற்றியும், அதனோடு அதிகரிக்கும் உலகளாவிய முதலீடுகள் பற்றியும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் உள்ள கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள், மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஒரே தளத்தில் அமர்ந்து உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பற்றி கலந்துரையாடுவதையும், பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதராம் பற்றிய தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதையும் இந்தக் கண்காட்சி குறிக்கோளாக வைத்திருக்கிறது. OSH India-வில் இந்தியா முழுவதிலுமிருந்தும் உலகளாவிய சந்தையிலிருந்தும் பாதுகாப்பு மேலாளர்கள், ஆலோசகர்கள், பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், விநியோகிப்பாளர்கள் மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்பு சாதனங்களின் தயாரிப்பாளர்கள், மின் ஒப்பந்ததாரர்கள் / பொறியாளர்கள், ஃபசிலிட் மேலாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிபுணர்கள், நகராட்சி அதிகாரிகள், சிஸ்டம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நகரத்தைத் திட்டமிடுபவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
OSH India 2019 பற்றி அறிவித்து Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr Yogesh Mudras பேசும்போது, "தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் சுகாதாரம் என்பது நிறுவனத் திறனில் ஒரு முக்கியமான காரணியாகியுள்ளது. பாதுகாப்பற்ற பணியிடங்களில் ஏற்பட்டுள்ள அதிகரித்த உயிரிழப்புகளானது உலகளாவிய நிறுவனங்கள் மத்தியில் தொழில் பாதுகாப்பு & சுகாதார விதிகளுக்குக் கட்டுப்பட்டிருப்பதன் முக்கியத்துவத்தின்மீது கவனம் செலுத்தத் தூண்டியிருக்கிறது. இத்துறையில் உலகளாவிய முதலீடுகள் அதிகரித்து வருகையில் உட்கட்டமைப்பு வளர்ச்சியின்மீதும், பணியிடப் பாதுகாப்பை அளிப்பதன்மீதும் அரசு தொடர்ந்து வலியுறுத்தும் இந்த சமயத்தில், உலகெங்கிலும் உள்ள சப்ளையர்கள் மற்றும் சேவையாளர்கள் தங்களுடைய புத்தாக்கங்களையும் அறிவையும் இந்தியச் சந்தையில் பரந்து கிடக்கும் இத்துறையினர் மத்தியில் எடுத்துக் காட்டுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. நம்முடைய கண்காட்சி, OSH India இந்த முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்தத் தேவைக்கு உரிய சரியான தீர்வுகளை இந்த சப்ளையர்களும் சேவையாளர்களும் வழங்க வாய்ப்பாக உள்ளது. துறையில் உள்ள புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பப் புதுமையாக்கங்களுக்கு இந்தத் துறையில் அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன. சப்ளையர்களும் சேவையாளர்களும் நம்முடைய கண்காட்சியில் பரஸ்பரம் அறிந்து நெட்வொர்க் செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்."
OSH India-வில் ஒரு Innovation Zone இருக்கும். இங்கு, கண்காட்சியாளர்கள் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் தங்களுடைய புத்தாக்கத் தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம். மிகவும் புதுமையான தயாரிப்புகள் / சேவைகள் அல்லது தொழில்நுட்பத்திற்கு 'Best Product Innovation Award' அந்த இடத்திலேயே வழங்கப்படும். இதனோடு, கண்காட்சியின்போது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய தனியானதொரு மாநாடு நடத்தப்படும். அப்போது, 7-வது OSH India Awards வழங்கப்படும்.
இந்த ஆண்டு மாநாட்டில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிப் பகிர்ந்துகொள்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதனோடு இணைந்து கண்காட்சியானது பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் உள்ள மிக முக்கியமான சவால்களுக்குத் தீர்வுகளை அடையாளம் காண உதவும். மாநாட்டில் உள்ள முக்கிய அமர்வுகளிலும் குழுவிவாதங்களிலும் துறையில் நாடு முழுவதிலும் உள்ள நிபுணர்களும் முன்னணி சர்வதேச நிறுவனங்களும் கலந்துகொள்ளும். மாநாட்டில் பேசிய உரைகளின் தலைப்புளில் சில: 'லீடர்ஷிப் இன் ஹெல்த் அன்டு வெல்பீயிங்: ஸ்டாப்பிங் த ரைஸ் இன் பிரசன்டீயிசம்'; 'OSH விஷன் ஜீரோ'; 'லேட்டஸ்ட் ரிஃபார்ம்ஸ் இன் ஆக்குப்பேஷனல் சேஃப்டி அன்டு ஹெல்த லாஸ் இன் இன்டியா அன்டு த வே ஃபார்வர்டு: கீ சேலஞ்சஸ் இன் தெயர் இம்ப்ளமென்டேஷன்'; 'எ பவர்டாக் ஆன் இம்ப்ரூவிங் ஹியூமன் பெர்ஃபார்மன்ஸ் அன்டு சேஃப்டி'; கருத்துப் பட்டறைத் தலைப்பு "எலக்ட்ரோஸ்டாட்டிக் ஹசார்ட்ஸ் ரிஸ்க் அசெஸ்மெண்ட் அன்டு தெயர் அலிவியேஷன்'; 'த நீடு ஃபார் பெர்மிட் டு ஒர்க் சிஸ்டம்ஸ் ஃபார் கிரிட்டிக்கல் ஆப்பரேஷன்ஸ்'; 'ரோல் அன்டு நீட் ஃபார் அக்ரெடிட்டேஷன் இன் HSE பை NABCB' போன்ற தலைப்புகளில் அமர்வுகள் இருக்கும்.
இந்த ஆண்டு OSH India-வில், NEBOSH அதனுடைய புதிய திட்டங்களான இன்டர்நேஷனல் ஜெனல் சர்ட்டிஃபிகேட் இன் ஆக்குபேஷனல் ஹெல்த் அன்டு சேஃப்டி மற்றும் ஒரு புதுமையான சந்தைக்கு புதிய படிப்பான சேஃப்டி சிம்ப்ளிஃபைடு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும்.
OSH India-ல் NEBOSH-ன் ஷோகேஸ் பற்றிப் பேசிய அதன் Chief Executive Ian Taylor: "NEBOSH உலகம் முழுவதும் 132 நாடுகளில் சுமார் 300,000 பொதுச் சான்றிதழ்களை வழங்கியிருக்கிறது. NEBOSH International General Certificate இந்தியாவில் மிகவும் மதிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே OSH India-வில் நாங்கள் எங்களுடைய பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது. பரவலாக மக்கள் அதிகம் பயன்படுத்துவதால், மக்களை அவர்கள் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள சரியான கருவிகளை மறு உற்பத்தி செய்வதை உறுதிசெய்வதற்கு பல்வேறு நிபுணர்களுடனும் நாங்கள் இணைந்து வேலை செய்வது முக்கியமாகிறது.
KARAM-ன் பங்கேற்பு பற்றி KARAM-ன் President - Global Marketing-ஆன Mr. Hemant Sapra பேசும்போது, "OSH India என்பது அது தொடங்கப்பட்டதிலிருந்து KARAM-க்கு ஒரு சிறந்த சந்தைப்படுத்தும் தளமாக இருந்து வந்துள்ளது. தெற்காசியாவில் மிகப்பெரிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிகழ்வாக இது வெற்றிகரமாக வளர்ந்திருக்கிறது. OSH India-வானது தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், யோசனைகளை பரிமாறிக்கொள்ளவும், சிறந்த மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் ஒத்தநிலையினரை ஒன்றிணைப்பதில் சிறப்பான பங்கினை ஆற்றியிருக்கிறது. இந்த ஆண்டு, பணித்தளங்களை பாதுகாப்பானதாகவும் நீடித்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மிக மேம்பட்ட, தொழில்நுட்ப ரீதியில் மிகச் சிறந்த Mobile Studio-வின் மூன்றாவது எடிஷனை KARAM வெளிக்கொண்டு வருகிறது. மூன்றாவது KARAM Mobile Studio-வானது நாடு முழுவதும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயணத்தைத் தொடங்குவதற்கு, OSH India ஒரு சரியான வழியாக இருக்கும்" என்றார்.
இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பாதுகாப்பை ஊக்குவிக்க, OSH India 2019-வில் ஒரு SAFETY FASHION WALK நடத்தப்பட இருப்பதோடு, பெருமைமிக்க OSH India AWARDS 2019-ம் வழங்கப்படும். இந்த விருதுகள் சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகளை எடுத்திருக்கும் இந்தியாவில் இயங்கும் தொழில்கள், நிறுவனங்கள், அலையன்ஸ் மற்றும் பொது அல்லது தனியார் துறைகளில் உள்ள தனிநபர்களுக்கு வழங்கப்படும். கட்டுமானம், பார்மா, கெமிக்கல்ஸ், FMCG, BPO, வங்கித்துறை, சுத்திகரிப்பு நிலையங்கள், ஆயில் & எரிவாயு, ஆட்டோமொபைல்ஸ், லாஜிஸ்டிக்ஸ் & போக்குவரத்து, மின்சாரத்துறை, SME-கள், அக்ரோ, சுகாதாரப் பராமரிப்பு, உணவு, இரும்பு & ஸ்டீல், ஐடி, ரப்பர் தொழில்துறை பல துறைகளிலிருந்து இந்த ஆண்டு OSH Awards-கான விண்ணப்பங்கள் வந்திருந்தன. விண்ணப்பதாரர்கள் மத்தியில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்குள் சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் இந்த விருதுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. நவம்பர் 28 அன்று நடைபெறவிருக்கும் இந்த விருது இரவு நிகழ்ச்சியானது தொழில்துறையின் நிபுணர்களும் முன்னோடிகளும் இணைந்த கொண்டாட்டமாகவும், கவர்ச்சிகரமான பொழுதுபோக்கு மிக்க இரவாகவும் இருக்கும்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் (Informa Markets) மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றியும்
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும்.
Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
ரோஷினி மித்ரா
[email protected]
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
மிலி லால்வாணி
[email protected]
+91-22-61727000
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
லோகோ: https://mma.prnewswire.com/media/1034992/OSH_India.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article