மும்பையில் நடந்த Food & Hotel India (FHIn)-வின்இரண்டாவதுகண்காட்சி 2019 சிறப்பாக நிறைவடைந்தது
பார்வையிட வந்த வாங்குபவர்களின் எண்ணிக்கையில் 64% வளர்ச்சியைக் கண்டது
மும்பை, Oct. 14, 2019 /PRNewswire/ -- Food and Hotel India Expo (FHIn)-ன் 2-வதுமாநாடு 2019 ஒரு முன்னணி B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக உள்ள Informa Markets in India-வினால் (முன்னர் UBM India) வெற்றிகரமாக நடத்தப்பட்டு 20 செப். 2019 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 64% வளர்ச்சியடைந்திருக்கிறது.
இதில்கலந்துகொண்டவர்களுக்கு HORECA (Hotel/Restaurant/Catering) தொழில்துறைக்குள் உள்ள சிறந்த தயாரிப்பு & தீர்வு வழங்குபவர்கள் மற்றும் திட்டங்களை வைத்திருப்போரை அறிமுகம் செய்தது. உணவு & பானங்கள், டீ & காப்பி, பியர், ஒயின் & ஸ்பிரிட், கடல் உணவு, இறைச்சி, பேக்கரி, வர்த்தக சமையலறை மற்றும் ரெஃப்ரிஜெரேஷன் சாதனங்களிலும்; ஹோட்டல் ஹவுஸ்கீப்பிங், விருந்தோம்பல் தொழில்நுட்பம் மற்றும் உட்புற வடிவமைப்புகள், சில்லறை வர்த்தகம் & விருந்தோம்பல் உணவுச் சேவைகள் மற்றும் பலவற்றில் இந்தியாவின் தொழிலையும் சந்தைப் பங்கையும் இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கண்காட்சி கெளரவ விருந்தினரா அழைக்கப்பட்ட NRAI-யின் தலைவரான திரு. Anurag Katriarஅவர்களால்தொடங்கிவைக்கப்பட்டது. பிறகெளரவவிருந்தினர்களில்திரு. Param Kannampilli, Chairman and Managing Director Concept Hospitality; சிறப்பு விருந்தினர் Chef Manjit Singh Gill - Corporate Chef ITC & President IFCA; திரு. Thomas Schlitt, MD, Messe Dusseldorf India;திரு. Pankaj Shende, Senior Portfolio Director, Informa Markets in India மற்றும்திரு. Abhijit Mukherji, Group Director, Informa Markets in India ஆகியோர் குறிப்பிடத்தக்க விருந்தினர்களாக இருந்தனர்.
FHInகண்காட்சியில்பெரியஹோட்டல்கள், உணவகங்கள், கேட்டரிங், ஃபுட் ரீட்டெய்லர்ஸ் செய்ன்ஸ், நிறுவனங்கள் உட்பட்ட பல வாங்குபவர்கள் வந்து கலந்துகொண்டனர். சரியான தயாரிப்புகளை வாங்குவதற்காக, ஹோட்டல் முதலாளிகள், ஆலோசகர்கள், துறைத் தலைவர்கள், மற்றும் உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள், நவீன வர்த்தகர்கள், உணவு மின்னணுவர்த்தக நிறுவனங்கள் போன்ற உணவு சில்லறை வர்த்தகத் துறையிலுள்ள பலரும் இந்தக் கண்காட்சியினால் கவர்ந்திழுக்கப்பட்டனர். இது, சரியான ஆடியன்ஸையும் விரைவாக வளர்ந்துவரும் HORECA சந்தையையும் குறிவைக்க சர்வதேச மற்றும்உள்நாட்டுபிராண்டுகளுக்குஉதவியது.
இந்தியமக்கள்தொகைமற்றும்இந்தியபொருளாதாரவளர்ச்சிக்குஏற்பஎப்படிஉணவுமற்றும்பானங்களுக்கானதேவைஅதிகரித்துள்ளதுஎன்பதுபற்றிதிரு. யோகேஷ் முத்ராஸ் பங்கேற்பாளர்களிடம் விளக்கினார். ஆசியாவில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைக்கு FHIn19 போன்ற பிளாட்ஃபார்ம்களின் வாய்ப்புகள் பற்றி அவர் விளக்கினார். ஏனெனில், சர்வதேச பிராண்டுகளை இந்தியாவில் அதன் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்களுடனும், இறுதிப் பயனர்களுடனும் இவை இணைக்கின்றன.
இந்த மூன்று நாள் வர்த்தகக் கண்காட்சியல் கலந்து கொண்டதற்காக தொழில்முனைவோர், F&B மற்றும் விருந்தோம்பல் தொழில்துறை நிபுணர்களுக்கு நன்றி தெரிவித்து திரு. முத்ராஸ் பேசும்போது, "தங்களுடைய தனித்துவமான ஊக்கத்தையும், வேலையையும், அறிவையும் அளித்த HORECA, F&B துறையைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு என்னுடைய சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுக்கு அதிக முதலீட்டைப் பெற்றுத் தருவதும், இந்தியாவின் F&B சந்தை வாய்ப்பைப் பற்றி உலகுக்கு எடுத்தியம்புவதும், அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதுமே நம்முடைய முக்கியமான கவனமாக இருந்தது. உள்நாட்டுச் சந்தையைத் தவிர்த்து, தன்னுடைய வளமிக்க சந்தைகளில் சர்வதேச பிராண்டுகளுக்கும் அளவுகடந்த தொழில் வாய்ப்புகளை இந்தியா அளிக்கிறது. FHIn19 வழியாக, நாம் வர்த்தக உறவுகளையும் தொழில்களையும் மட்டும் வளர்க்கவில்லை, உலகளாவிய, வட்டார அளவிலான மற்றும் உள்ளூர் அளவிலான எதிர்கால ஆராய்ச்சியையும் புத்தாக்கத்தையும் நாம் இயலச் செய்திருக்கிறோம்" என்று கூறினார்.
FHIn 2019-ல்கீழ்க்காணும்கருத்துப்பரிமாற்றஅமர்வுகள் இருந்தன:
· ஹாஸ்பிட்டாலிட்டி ஸ்டிராடஜி சம்மிட் (Hospitality Strategy Summit) (HSS2019) (துறை சார்ந்த அறிவைப் பரிமாறிக்கொள்ள): இதில் 'Leading through Disruption: Staying Ahead of New Consumer Trends', 'New age trends in coffee technology', 'Time To Whet Your Appetite', 'Extending hospitality to the Environment - Is it easy being Sustainable?' மற்றும் 'Recruiting, Staffing & Training For Profitability' போன்ற தலைப்புகளில் அமர்வுகள் இருந்தன.
· ஹாஸ்பிட்டாலிட்டி டெக்னாலஜி கான்க்ளேவ் (Hospitality Technology Conclave):இதில் 'Embracing Smart Technology in Hospitality - Tech Gurus Bring in Reality Check' என்ற தலைப்பில் அமர்வு இருந்தது.அதிக நெருக்கடியான மற்றும் போட்டிமிக்க இந்தத் துறையில், உலகெங்கும் உள்ள ஹோட்டல் குழுமங்கள் புதுமையான மற்றும் ஆச்சரியமூட்டும் அனுபவத்தை அளிக்க ஹோட்டல்களில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கின்றன என்பது பற்றி இந்த அமர்வில் பேசப்பட்டது.
· 'Sustainable Kitchens - Designing for Energy Efficiency & Reduced Foot Print' என்ற தலைப்பில் ஒரு அமர்வு இருந்தது. ஒரு மிகச்சிறந்த சமையலறைத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்ப பற்றி இதில் பேசப்பட்டது. ஹோட்டல்கள், உணவகங்கள், உணவு வழங்கும் சமையலறைகள், மருத்துவமனைகள் மற்றும் கஃபேட்டீரியாக்கள் இன்றைய தொழில் வளர்ச்சிக்கு எப்படி உதவுகின்றன என்பது பற்றியும், பல ஆண்டுகளுக்கு எப்படி உதவ உள்ளன என்பது பற்றியும் அமர்வில் விவாதிக்கப்பட்டது. அதிகரித்துவரும் தொடக்க மற்றும் இயக்கச்செலவுகள் காரணமாக, இடப் பயன்பாடு, தொழிலாளர் தேவைகள் மற்றும் ஆற்றல் செலவுகளைப் பொருத்தவரை சமையலறைகள் அதிக திறன்மிக்கதாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் பேசப்பட்டது. FSSAI மற்றும் தொடர்ச்சியான சமூக ஊடக கண்காணிப்பு காரணமாக, சமையலறை வடிவமைப்பு அதிகபட்ச உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஃபிரீ ஃபிட் அவுட் காலத்தைக் கடக்காமல் திட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதற்கு ஸ்டான்டர்டைசேஷனின் கட்டாயத் தேவை பற்றியும்கூட அமர்வில் பேசப்பட்டது. நீடித்த BOH MEP வடிவமைப்பு & கட்டுமானம் பற்றியும் ஒரு மாஸ்டர் கிளாஸ் அமர்வும் இதில் இடம் பெற்றது.
· இன்ஃபோக்கஸ் - நார்த்ஈஸ்ட் (Infocus - North East): இந்த அமர்வில், விருந்தோம்பல் மையமாகும் வாய்ப்புள்ள வட கிழக்கு இந்தியாவின்மீது கவனம் செலுத்தப்பட்டது.
· தி பர்சேஸ் பஞ்ச் (The Purchase Punch): 'வரும் 2020-ல் கொள்முதல் பணி எதை நோக்கிச் செல்லும்' என்பதில் கவனம் செலுத்தியது.
· ஹவுஸ்கீப்பிங் கருத்தரங்கம் (Housekeeping Seminar): லாண்டரி பாடங்கள் பற்றி இதில் முன்னணி வீட்டுப் பாரமரிப்பாளர்கள் பேசினார்கள். The Godrej Food Trend Report-யை எடுத்துக்கொண்டு ஃபுட் ஸ்பேஸில் எது சிறந்த பாணியாக உள்ளது, எது அப்படிப்பட்டதாக இல்லை என்பது பற்றிப் பேசினார்கள்.
· ஜர்னி டு ஆன்டர்பிரனர் (Journey to Entrepreneur) - 'Journey to Entrepreneurship' என்ற தலைப்பில் Chef Rahul Akrekar பேசினார். பொறியியலில் பத்து ஆண்டுகள் செலவிட்ட பின்னர் தான் எப்படி ஒரு செஃப்-ஆக மாறினேன் என்பது பற்றி விளக்கமாகப் பேசினார்.
· ரா டு ரிஃப்ரெஷ் (Raw to Refresh): சிறந்த தலைமைச் சமையல் கலைஞர்கள் இணைந்து மிகமிகப் புதுமமையான சமையல் முயற்சியில் இறங்கினார்கள்.
· இன்டியா இன்டர்நேஷனல் குலினரி கிளாசிக் (India International Culinary Classic) 2019 (IICC): சர்வதேச சமையல் போட்டிகளுக்கான மதிப்புமிக்க இடம். இங்கு உணவுத் துறையின் தனிச்சிறப்பு மட்டும் எடுத்துக் காட்டப்படவில்லை, மாறாக, புகழ் பெறுவதற்கான விரும்பத்தக்க சமையல் திறனையும் வெளிக் கொண்டுவந்தது. இந்தியா முழுவதிலுமுள்ள சமையல் திறமைசாலிகள் தங்களுடைய செயல்திறன் அளவை மேலும் உயர்த்த தங்களுக்கு சான்றளிப்புகளையும் பெருமையையும் பெறும் வகையில் தங்களுடைய உணவுக் கலைத்திறனை வெளிப்படுத்தினர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற செஃப்-களால் பங்கேற்பாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். IICC-யின்முதல்ஐந்துபிரிவுகளில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: The Oberoi-யிலிருந்துChef Ruchika Khedkar, The Sofitel-லிருந்து Chef Deepak Bhatt& Sahara Star-லிருந்துAshish Rajbhar, The Oberoi-யிலிருந்துChef SamruddhiSalunkeமற்றும்Taj Sats-லிருந்து Chef Ram Singh, மற்றும் The Grand Hyatt-லிருந்து Chef Rajesh Sajvan.
· தி பாரிஸ்டா சேம்பியன்ஷிப் (The Barista Championship): FHIn-ல்இதுஒருதனித்த நிகழ்வாக அமைந்தது.இத்துறையின் சிறந்த நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு தொழில்முறைப் போட்டியாக இது அமைந்தது. காப்பி நிபுணர்களும் ஆர்வலர்களும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு ஒரு தளத்தை இது அளித்ததோடு, இந்த காப்பி விஷயத்தில் போட்டியிடவும் கொண்டாடவும் ஒரு வாய்ப்பை இது அளித்தது.
· Messe Dusseldorf India-வுடன் இணைந்து Prowein Education Campaign India-வானது எதிர்காலத்திற்கான இந்திய மதுத் தொழில் யுத்தி பற்றிய சிறப்புக் கவனத்தை ஈர்த்தது.
உணவு, பானம் & விருந்தோம்பல் நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களின் வாழ்த்துடன் FHIn19 நிறைவடைந்தது.
Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் (Informa Markets) மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றியும்
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
ரோஷினி மித்ரா
[email protected]
மிலிலால்வாணி
[email protected]
+91-9833279461
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
பகைப்படம் - https://mma.prnewswire.com/media/1009494/Conference_FHIn_2019.jpg
லோகோ - https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article