கர்நாடகாவின் ஹூப்ளியில் 5-வது Renewable Energy Growth Forum-ஐ நடத்த இருப்பதாக Informa Markets in Indiaஅறிவித்துள்ளது
- Renewable Energy India (REI) எக்ஸ்போவின் ஏற்பாட்டாளர்கள்
ஹூப்ளி, இந்தியா, Nov. 12, 2019 /PRNewswire/ -- சோலார் துறையில் அரசுத் துறைகளுடனும் தனியார் துறைகளுடனும் இணைந்து செயலாற்றும் வாய்ப்பை ஆராய்ந்தறியவும், சாத்தியக்கூறுகளை காட்சிப்படுத்தவும் கர்நாடகாவின் ஹூப்ளியில் புகழ்பெற்ற வருடாந்திர Renewable Energy India exposition (REI)-ன் 5-வது Renewable Energy Growth Forum-ஐ நடத்த இருப்பதாக Informa Markets in India அறிவித்துள்ளது. இந்த ஒருநாள் அறிவுசார் பொதுமன்றம் வரும் நவம்பர் 8-ஆம் தேதி Hotel Naveen Lakeside, Hubli (Dharwad)-ல் நடத்தப்படவுள்ளது.
சங்கங்கள், மற்றும் தொழில்துறை தலைவர்கள், கட்டட உரிமையாளர்கள், ஆலோசகர்கள், தயாரிப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள், அரசுகள் மற்றும் உயர் மட்ட முடிவெடுக்கும் அதிகாரிகள், கிரீன் பவர் புரொவைடர்ஸ், பிராஜெக்ட் மற்றும் டெக்னாலஜி டெவலப்பர்கள், பெரிய கார்ப்பரேட் SME-கள் மற்றும் வங்கிகள், சிஸ்டம் இன்டகிரேட்டர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு சோலார் துறையில் தொழில் வாய்ப்புகள் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் Renewable Energy Growth Forum ஒரு தொழில்சார் தளத்தை அளிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய முடிவெடுப்பவர்கள் சந்தித்துக் கொள்ளவும், உரையாடவும், தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கை ஏற்படுத்திக்கொள்ளவும் இந்த பேரவை உதவும்.
இதை அறிவித்துப் பேசிய Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr. Yogesh Mudras, "கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளராக கர்நாடகா வளர்ந்திருக்கிறது. சுமார் 12.3 GW இன்ஸ்டாலேஷன் கெப்பாசிட்டியைக் கொண்டு தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பின்தள்ளி முன்னிலை பெற்றிருக்கிறது. அதிகரித்துவரும் நிலக்கரி விலை ஏற்றம் மற்றும் அரசின் சில புதுமையான கொள்கைகளே இதற்குக் காரணம். Informa Markets in India தன்னுடைய புதுமையான Renewable Energy India எக்ஸ்போ வழியாகவும் இந்த Growth Forum வழியாகவும் கர்நாடகாவில் காலூன்றுவதன் மூலம் தொழிற்சாலைகளில் ஒரு பசுமையான சூழலமைப்பை கட்டமைக்கும் தேவையை நிறைவேற்ற மாநிலத்துக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தருவதோடு, தடையற்ற மின்சாரத்தை வழங்கும் அரசின் திட்டத்திற்கு உதவும் வகையில் தங்களுடைய மின்சாரத் தேவையை திறம்பட தொழிலகங்கள் நிர்வகிக்கவும் இது உதவும்.''
இந்தப் பெருமன்றத்தில் ஐந்து அமர்வுகள் இருக்கும். அவற்றில் பேசப்படவிருக்கும் தலைப்புகளில் அடங்குவன:
- 'ஷேப்பிங் த ஃபியூச்சர் ஆஃப் சிட்டீஸ்' ('Shaping the Future of Cities), 'இன்ஃப்ராஸ்டிரக்சர் அன்டு அர்பன் சர்விசஸ்" (Infrastructure and Urban Services'). இந்த அமர்வுகளின்போது கர்நாடகாவின் முக்கிய தொழில்துறை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு ஒரு நீடித்த தொழில் சூழலை ஏற்படுத்துவதன் சாதகங்கள், பலன்கள் மற்றும் கொள்கைகள் பற்றி கலந்துரையாடுவார்கள்.
- 'சோலார் எம்பவர்டு ஸ்மார்ட் சிட்டீஸ்: எக்கனாமிக்ஸ் & இன்வெஸ்ட்மெண்ட் லேண்ட்ஸ்கேப்'. தொழில்துறை சார் வர்த்தகங்களில் செயல்முறைச் செலவுகளைக் குறைப்பதற்கு சிறந்த வழியாக உள்ள சூரியஒளி மின்னாற்றல் பற்றியதாக இந்த அமர்வு இருக்கும். இந்த அமர்வின்போது இந்தியாவின் ரூஃப்டாப் நிபுணர்கள் அதன் பலன்களையும், பல்வேறு வாய்ப்புகள் பற்றியும், அவற்றின் தொழில்நுட்ப சாதக அம்சங்கள் பற்றியும் பேசுவார்கள்.
- 'கமர்ஷியல் அன்டு இன்டஸ்ட்ரியல் சோலார்: ஃபோர்காஸ்டிங் தி பிஸினஸ் ஆப்பர்சூனிட்டி வித் த மார்க்கெட் கிரியேட்டர்ஸ்', இந்த அமர்வின்போது சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் தங்களுடைய செயல்முறைச் செலவுகளை எப்படிக் குறைக்க முடியும் என்பதை அரசு, தனியார் மற்றும் லாப நோக்கமில்லா அமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு முடிவெடுப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் உரையாடல்கள் இடம்பெறும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உதவுவதற்கு தொழில்துறை அமைப்புகள் எடுத்துள்ள முன் முயற்சிகள் பற்றியும் பேசப்படும்.
- தொழிற்சாலைகளில் சோலார் கூரை வெற்றிகரமாக அமைக்கப்பட்டதும் 'வாங்குபவர்களின் கருத்துக்களும் தொழில்களுக்கான தீர்வுகளும்'என்பது நிகழ்வு ஆய்வுத் தலைப்பாக அமையும். ஓப்பன் அக்சஸ், குரூப் கேப்டிவ் மற்றும் BOO(T) ஆகியவற்றைப் பயன்படுத்தி 3-ஆம் தரப்பு விற்பனை போன்ற தொழில்துறைகளுக்குக் கிடைக்கும் பல்வேறு தொழில் மாடல்கள் பற்றிய உரையாடல் அமர்வுகளும் இருக்கும். தொழில்துறை நிபுணர்கள் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றியும் பேசுவார்கள், எப்படி நிறுவுவது, ரூஃப்டாப் சோலார் பிளான்டுகளை எப்படி நிர்வகிப்பது, மற்றும் வரி மற்றும் கட்டண அமைப்புகள் பற்றிய உரையாடல்களும் இருக்கும்.
- 'ஆல் அபவ்ட் ஃபினான்ஸ்: எ டெம்ப்ளேட் டு டீகோட்!' என்ற தலைப்பிலான அமர்வில் நிதித்துறை நிபுணர்கள் கலந்துகொண்டு ஒருவருடைய தொழிலில் பசுமை நீடிப்புத்திறனை எப்படி உருவாக்குவது என்பதற்கான பல்வேறு நிதி மாடல்கள் பற்றிப் பேசுவார்கள்.
இந்த அமர்வுகளில் கலந்துகொள்ளும் முக்கியமான தொழில்துறை சார்ந்த தலைவர்களில், Sri Sundaresh Babu, IAS, Managing Director, Hubli - Dharwad Smart City Limited (HDSCL), Sri Mahendra H Ladhad, President, Karnataka Chamber of Commerce and Industry (KCCI), Hubli, Sri Ninganna S Biradar, President, North Karnataka Small Scale Industries Association (NKSSIA), Hubli, Mr M A Jayachandra Head - Rooftop & Distribution Solar Division, Sterling & Wilson, Mr Vinay, CEO, Varp Power, Mr Ravi Kumar, CEO, Dexler Energy Pvt Ltd and Mr Santosh Khatelsal, MD, Enerparc Energy Pvt Ltd ஆகியோர் அடங்குவர்.
Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் (Informa Markets) மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றியும்
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1025093/RE_Growth_Forum_Logo.jpg
Share this article