கிரேட்டர் நொய்டாவில் 27-வது SATTE கண்காட்சியை Informa Markets in India தொடங்கியது
- தெற்காசியாவின் முன்னணி பயண மற்றும் சுற்றுலாக் கண்காட்சி
- சுற்றுலாவின் போக்கினைக் கண்டறிவதிலும் கூட்டாளித்துவத்தை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டது
புதுடெல்லி, Jan. 14, 2020 /PRNewswire/ -- NCR-ல் உள்ள கிரேட்டர் நொய்டாவின் India Expo Mart-ல் முன்னணி B2B பயண வர்த்தக கண்காட்சியான 27-வது SATTE கண்காட்சியை Informa Markets in India தொடங்கியது. ஜனவரி 8 முதல் ஜனவரி 10, 2020-வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 1,050-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும், 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,200-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிறுவனங்களும் கலந்துகொள்கின்றனர், 104 இந்திய நகரங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு கொள்முதல் நிறுவனங்களும் கலந்துகொள்கின்றனர். 30,000-க்கும் மேற்பட்ட பயண மற்றும் சுற்றுலா துறையினர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட உள்ளனர்.
இந்த மாபெரும் கண்காட்சியானது தலைமை விருந்தினரான இந்திய அரசின் Tourism & Culture (I/C) துறைக்கான Union Minister for State-ஆன திரு. Prahalad Singh Patel Ji அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய அரசின் Shipping அமைச்சகத்தின் Minister of State (I/C) திரு. Mansukh L Mandaviya Ji, மலேசிய Tourism, Arts and Culture-ன் துணை அமைச்சரான YB Tuan Muhammad Bakhtiar bin Wan Chik, இந்தோனேசியாவின் Deputy Minister of Tourism Marketing, Ministry of Tourism of the Republic of Indonesia-வான செல்வி Nia Niscaya அவர்கள், Genting Cruise Lines, Dream Cruises & Head of International Sales-ன் President-ஆன திரு. Michael Goh அவர்கள், FAITH-ன் Hony Secretary-யான திரு. Subhash Goyal அவர்கள், Informa Markets - Asia-ன் Executive Vice President-ஆன திரு. Michael Duck அவர்கள், Informa Markets in India-வின் Managing Director-ஆன திரு. Yogesh Mudras மற்றும் Informa Markets in India-வின் Group Director-ஆன செல்வி Pallavi Mehra ஆகியவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர்கள்.
புதி தொழில் கூட்டாளித்துவங்களைக் கட்டமைப்பதிலும் அறிவிப்பதிலும் கவனம் செலுத்தும் இந்த மூன்று நாள் கண்காட்சியில் இத்துறையில் உள்ள நடப்புப் போக்குகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்படும். இந்திய சுற்றுலா வழங்கும் வாய்ப்புகள் பற்றியும் அது சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வளிக்கும் வகையில் வருடாந்திர உறுதிமொழியில் தெரிவித்தவாறு பல மாநாட்டு அமர்வுகளும் SATTE 2020-யில் இடம் பெறும்.
இந்த ஆண்டும், Indian Association of Tour Operators (IATO), Travel Agents Association of India (TAAI), Association of Domestic Tour Operators of India (ADTOI), Travel Agents Federation of India (TAFI), IATA Agents Association of India (IAAI), India Convention Promotion Bureau (ICPB), Universal Federation of Travel Agents Association (UFTAA), Pacific Asia Travel Association (PATA), Skal and Enterprising Travel Agents Association (ETAA) போன்ற சர்வதேச நிறுவனங்கள் / சங்கங்கள் மற்றும் இந்திய பயண வர்த்தக சங்கங்களின் ஆதரவை SATTE பெற்றது.
SATTE 2020-யின்போது பல கருத்தரங்குகளும் அமர்வுகளும் இடம்பெறும். இத்துறையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய தலைப்புகளில் இத்துறையின் வல்லுனர்களும் முக்கிய பேச்சாளர்களும் இந்த அமர்வுகளை நடத்துவார்கள். முதல் நாளன்று, "குளோபல் எக்கானமிக் சினாரியோ, டூரிசம் டிரெண்ட்ஸ் அன்டு இன்டியா ('Global Economic Scenario, Tourism Trends and India') என்ற தலைப்பில் முதல் குழுவிவாதம் நடைபெறும். இந்தியாவில் உலகளாவிய பயண மற்றும் சுற்றுலாத் துறையில் இன்றைய போக்கு பற்றி விவாதிக்கப்படும். இரண்டாவது குழுவிவாதம்: 'அடவென்சர் டூரிசம்: அன்லாக்கிங் நியூ அவன்யூஸ்" (Adventure Tourism: Unlocking New Avenues') என்ற தலைப்பில் நடைபெறும் குழுவிவாதம் அட்வென்சர் டூரிசத்தில் உள்ள முக்கிய சவால்கள் பற்றி விவாதிக்கும். SATTE 2020 Corporate Travel Community (CTC)-யினால் நடத்தப்படும் மாநாட்டின் 2-ஆம் நாளானது, மீண்டும் கார்ப்பரேட் டிராவல் டே-யாக அமையும். ஏர்லைன் புரோகிராம்ஸ் + NDC எஜூகேஷன் ஃபோரம் (Airline Programmes + NDC Education Forum) மற்றும் "தி அக்காமடேஷன் அவுட்லுக் அன்டு டெக்னாலஜி எஜூகேஷன் ஃபோரம்" ('The Accommodation Outlook and Technology Innovations Education Forum') என்ற முக்கியமான இரு தலைப்புகளில் அமர்வுகள் இருக்கும். இவை தவிர்த்து, Network of India MICE Agents (NIMA) 5 அமர்வுகளையும் MICE டூரிசம் பற்றிய 2 கருத்துப்பட்டறைகளையும் நடத்தும்.
தலைமை விருந்தினரான இந்திய அரசின் Tourism & Culture (I/C) துறைக்கான Union Minister for State-ஆன திரு. Prahalad Singh Patel Ji அவர்கள் பேசும்போது, "SATTE 2020 என்பது 27-வது கண்காட்சி என்பதே சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக நாம் தொடர்ந்து சிந்தித்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சாட்சியாக உள்ளது. இந்த சாதனையைச் செய்திருப்பதற்காக SATTE-யைப் பாராட்டுகிறேன். இந்த மதிப்புமிக்க நிகழ்ச்சியில் லே-லடாக் போன்ற பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா பரிமாணங்களிலும், புவியியல் அம்சங்களிலும் பல்வேறு கலாச்சார அடையாளங்களைக் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியாதான். இது போன்ற நிகழ்ச்சிகள் நம்முடைய அருமையான கலாச்சாரத்தை சிறந்த முறையில் வெளிக்காட்டுகின்றன. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்களும், பார்வையாளர்களும் நம்முடைய நாட்டைப் பற்றிய ஒரு பார்வையைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
இந்திய அரசின் Shipping அமைச்சகத்தின் Minister of State (I/C) திரு. Mansukh L Mandaviya Ji பேசும்போது, "இந்த மாபெரும் பயண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நான் பாராட்டுகிறேன். ஷிப்பிங் அமைச்சகத்தின் கண்ணோட்டத்தில், இந்தியர்கள் மத்தியில் க்ரூய்ஸ் டூரிசம் என்பது மிகப் பிரபலமாக உள்ளது. இந்தியாவின் கடற்கரை 7,500 கி.மீ அளவுக்கு நீண்டது. இது க்ரூய்ஸ் டூரிசத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இதை மனதில் கொண்டு, மும்பையில் உள்ளதைப் போன்று சர்வதேச க்ரூய்ஸ் முனையங்களை நாம் கட்டமைத்திருக்கிறோம். கோவா, மங்களூரு, கொச்சி, பாராடித் மற்றும் கொல்கத்தா என சில அடுத்து வரவிருக்கின்றன. எமது அமைச்சகமும், பங்காளர்களும் சுற்றுலாத் துறையைக் கட்டமைக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம்" என்றார்.
27-வது SATTE 2020 கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறை பற்றி Informa Markets in India-வின் Managing Director-ஆன திரு. Yogesh Mudras பேசும்போது, "நடப்பு பொருளாதார மற்றும் அரசியல் குழப்ப நிலையிலும், மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளுள் ஒன்றாக சுற்றுலாத் துறை உள்ளது. இதற்கு, gல்வேறு சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்க உதவும் இ-வீசா போன்ற அரசின் முன் முயற்சிகள் காரணமாக இருக்கலாம். Swadesh Darshan திட்டத்தின்கீழ், சுற்றுலா உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 13 தீமாட்டிக் சர்க்யூட்கள் கண்டறியப்பட்டுள்ளன" என்றார்.
மேலும் அவர் பேசும்போது, "மிக அதிகமான பங்கேற்பு காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் SATTE-தான் மிகப் பெரியதாக உள்ளது. இதன் பேரார்வ இயல்பு காரணமாக எப்போதுமே ஒரு சிறந்த கண்காட்சியாக இருந்து வந்திருக்கிறது. பல்வேறு உலகளாவிய பயணத்திற்கும், சுற்றுலா தயாரிப்புகளையும் சேவைகைளயும் காட்சிப்படுத்த உலகெங்கிருந்தும் வரும் கண்காட்சியாளர்களும் நுகர்வோரும் கலந்துகொள்ளும் தெற்காசியாவின் மிகப்பெரிய பயணக் கண்காட்சியாக இது வளர்ந்திருக்கிறது. சுற்றுலா மட்டுமல்லாது, கிராமப்புற வளர்ச்சியை ஈட்டவும் SATTE-வினால் இயலும். கண்காட்சியாளர்களிடமிருந்து கிடைக்கும் மாபெரும் ஆதரவு மற்றும் "டூரிசம் அன்டு ஜாப்ஸ், கார்ப்பரேட் டிராவல், சிம்ப்ளிஃபிகேஷன் ஆஃப் இ-வீசாஸ், டெஸ்டினேஷன் வெட்டிங்ஸ்" போன்ற நவீன தலைப்புகள் பற்றி மாநாட்டில் வரும் கலுந்துரையாடல்கள் இத்துறை பற்றிய நல்ல கண்ணோட்டத்தை அளிக்கும். SATTE வழியாக, இந்த மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியானது, தொடர்ந்து வளர்ச்சியடைந்துவரும் சுற்றுலாத் துறையில் தொழில்கள் பெருக சிறந்த தீர்வுகளை அளிக்க இயலும் என்று நம்புகிறோம்" என்றார்.
T3 ஆதரவளிக்கும் 4-வது SATTE விருது வழங்கும் நிகழ்ச்சியையும் Informa Markets நடத்துகிறது. பயண மற்றும் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்காளர்களின் செயல்திறனையும், வெற்றிகளையும், புதுமைகளையும் அங்கீகரித்து அவர்களைப் பாராட்டும். SATTE-யின் மதிப்பீடுகளை உள்வாங்கிய ஒரு தத்துவத்தின் அடிப்படையில் சரியான வரைகூறுகளையும், புதுமைகளையும், செயல்திறனையும் கொண்டு இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
ரோஷினி மித்ரா - [email protected]
மிலி லால்வாணி - [email protected]
+91-9833279461
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1063339/SATTE_Informa_Markets.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1063340/SATTE_Informa_Markets_2020.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1059716/SATTE.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article