இரத்தினங்கள் மற்றும் நகை (Gems & Jewellery )தொழில்துறையிலிருந்து 300க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் & 650பிராண்டுகள் பங்கேற்கும் Delhi Jewellery and Gem Fair (DJGF) 2019 ன் 8வது பதிப்பு
- 28 - 30 செப்டம்பர் 2019- பிரகதி மைதான், புதுடெல்லி
புது டெல்லி, Aug. 21, 2019 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி B2B நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரான மற்றும் சமீபத்தில் Informa Markets உடன் இணைந்த UBM India Pvt Ltd., வட இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச நகை வர்த்தக கண்காட்சியின் 8வது பதிப்பை - The Delhi Jewellery & Gem Fair (DJGF) ஐ டெல்லியில் 28 ஆம்தேதி - 30ஆம்தேதி செப்டம்பர் 2019, பிரகதி மைதான், புதுடெல்லியில் - ஹால் எண் 7,8,9,10 மற்றும் 11 (காலை 10மணி – மாலை 06.00மணி) நடத்த தயாராக உள்ளது.
300க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் மற்றும் 650க்கும் அதிகமான பிராண்டுகள் பங்கேற்கும், DJGF 2019 , முதன்மையான ஜுவல்லர்கள் மற்றும் முக்கிய தொழில்துறை பங்குதாரர்களிடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகர்களின் சந்திப்பிற்கு வழிவகுக்கிறது. மூன்று நாள் நடைபெறும் கண்காட்சி தனிப்பட்ட மற்றும் நவீன நகைகளை காட்சிப்படுத்தும் மற்றும் துபாய், சிங்கப்பூர்,நேபாளம், மலேசியா மற்றும் சீனாவிலிருந்து அதிகளவு வாங்குபவர்களின் பங்கேற்பை காணும்.
Mr. Yogesh Mudras, Managing Director, Informa Markets in India-ல் 8வது பதிப்பை அறிவிக்கையில் பின்வருமாறு கூறினார் , 'நகை வாங்குபவர்களுக்கு நம்பிக்கை, பல வகைகள், நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அளிப்பதன் மூலம் இணையில்லாத தரத்தை அமைப்பு சார் கட்டமைப்பில் அமைத்து இந்த தொழில்துறையை Delhi Jewellery and Gem Fair காட்சிப்படுத்த உள்ளது. இந்தியாவில் இரத்தினங்கள் மற்றும் நகை தொழில்துறை என்பது மிகப்பெரிய வர்த்தகங்களில் ஒன்றாகும், இது இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, நாட்டின் ஜிடிபியில் 7சதவீதமும் இந்தியாவின் மொத்த வணிக ஏற்றுமதியில் 15.71 சதவீதமும் பங்களிக்கிறது. விரைவாக வளர்ந்துவரும், ஏற்றுமதி-சார்ந்த மற்றும் தொழிலாளர் செறிவான இந்த துறை மிகப்பெருமளவு அந்நிய செலாவணியைக் கொண்டு வருகிறது மற்றும் 4.64 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களுக்கு அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்பை வழங்குகிறது. 2017ல் தோராயமாக $ 60 bn ஆக இருக்கும் ஒட்டுமொத்த சந்தை அளவு 2022க்குள் $ 110 bn ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது'.
அவர் மேலும் பின்வருமாறு கூறினார், 'நுகர்வோர் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறன் கொண்ட தொழில்துறையின் ஒருங்கிணைந்த வெற்றியாளர்கள், அடிப்படை உறுப்புகளாக தொடர்ந்து செயல்படுவர். டிஜிட்டல் மயமாக்கல், அமைப்பு சார்ந்த பிரிவில் மட்டுமே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் ஆண்டு வருமானம் ரூ.5 இலட்சம் கொண்ட நபர்களுக்கு பூஜய் வரிவிதிப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் டயர் I மற்றும் டயர் II (முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம்) நகரங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தனிச்சிறப்புமிக்க வடிவமைப்புகள் மற்றும் நகையின் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அதிகரித்துவரும் தேவையுடன் மாறிவரும் நுகர்வோரின் முன்னுரிமைகளையும் துறையானது கண்டு வருகிறது. முகலாய தொல்பொருள், தங்கம், வைரம், மாணிக்கம், மரகதம், போல்கிஸ் மற்றும் குந்தன் நவரத்தினம் உள்ளிட்ட ஒளிரும் மற்றும் பிரகாசமான நகைகளுடன் அதன் தொடர்பு காரணமாக வட இந்தியா நாட்டின் முக்கிய சந்தையாக திகழ்கிறது. இது, வரப்போகும் திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் ஜுவல்லர்கள் அதிக விற்பனை மற்றும் வாடிக்கையாளர் வருகையை காண்பார்கள் என ஆருடம் தெரிவிக்கிறது'.
இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகியவற்றின் பங்களிப்பை இந்த கண்காட்சியில் நீங்கள் காணலாம்.
DJGF நகை மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்,நகை உற்பத்தியாளர்கள், வைரம், இரத்தினங்கள்,முத்து சப்ளையர்கள் மற்றும் வியாபாரிகள், விலைமதிப்புமிக்க உலோகம் மற்றும் ஜுவல்லரி மௌன்டிங் வர்த்தகர்கள் மற்றும் சப்ளையர்கள் மற்றும் வியாபாரம் மற்றும் அரசாங்க நிறுவனங்களிலிருந்து வரும் பிரதிநிதிகள் அனைவரும் ஒரே குடையின் கீழ் சந்திக்க, இணைக்க, நெட்வொர்க் மற்றும் வியாபாரத்தை வளர்க்க வாய்ப்புகளை வழங்கும்.
இந்த ஆண்டும் கூட கண்காட்சி, தொழில்துறை வல்லுநர்களால் வழங்கப்படும் உள்நோக்குகள் நிறைந்த கருத்தரங்குகளை கொண்டிருக்கும். சோர்சிங், வியாபாரம் செய்தல், அறிவுத்திறன் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு ஒப்பிட முடியாத தளமாக கண்காட்சி இருக்கும், இந்திய மற்றும் சர்வதேச சந்தை போக்குகளை காட்சிப்படுத்தும், முக்கியமாக சமீப காலங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள இந்தத் துறையை மேம்படுத்த உதவும். இவற்றுடன், முக்கிய பங்குதாரர்களால் வழங்கப்படும் ஒர்க்ஷாப்ஸ் மற்றும் ஃபேஷன் ஷோ போன்ற உலகத்தரம் வாய்ந்த அம்சங்களும் கண்காட்சியில் இடம்பெறும்.
இந்த வருடம் இடம்பெற உள்ள கண்காட்சியாளர்களின் பட்டியலில் Shree Balaji Gold, Beera Jewellers, I P Jewellers, The Bank Street Jewellers, Vijay Enterprises, Goel Jewellers, N.K. Chain Pvt. Ltd., Unique Chain, Swaranshilp, Vikas Chain & Jewellery Pvt. Ltd., Uphaar, Zar, Rohtak Chain & Jewellery, Royal Chain, Blue Stone and Vimal Diamond ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒரு புதிய முயற்சியாக, Informa Markets in India வட இந்திய நகரங்களான Haldwani (UK), Varanasi (UP), Ambala (Haryana) ஆகியவற்றில் ரோடு ஷோக்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது மற்றும் Gwalior (MP), Jodhpur (Rajasthan) மற்றும் Meerut (UP)ல் நடத்த திட்டமிட்டுள்ளது. முன்- நிகழ்ச்சி நடவடிக்கைகளின் ஒரு பாகமாக இந்தியாவெங்கும் 150க்கும் அதிகமான நகரங்களில் ஆன்கிரௌன்ட் ஷாப்-டூ ஷாப் நடவடிக்கைகளும் நடைபெற்றது.
DJGF 2019-ல் Retail Jewellers Guild Awards ( RJGA )ன் ஐந்தாவது பதிப்பும் நடைபெற உள்ளது, இது இந்திய அளவில் சில்லரை நகை வர்த்தகத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிபுணத்துவம் மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்க மற்றும் மரியாதை அளிக்க Informa Markets in India ஆல் செய்யப்படும் தனிப்பட்ட முயற்சியாகும். இந்த ஆண்டு, 'வடிவமைப்பில் நிபுணத்துவம்', 'செயல்பாட்டுத்திறமை' , 'சந்தைப்படுத்தல் திறமை', 'இந்த ஆண்டுக்கான சிறந்த கடை' மற்றும் 'இந்த ஆண்டுக்கான சிறந்த முதலாளி' போன்றவை அடங்கிய சில்லரை நகை தொழில்துறையின் பல்வேறு நடவடிக்கைகளை மனதில் வைத்து விரிவான விருதுப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியானது பெரிய தொழில்துறை நிறுவனங்களால் நகைப்பிரிவில் ஒருங்கிணைந்த பாகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது அதற்கு 150க்கும் மேற்பட்ட அசோசியேஷன்களின் ஆதரவு கிடைத்தது அவற்றில் முக்கியமான சில அமைப்புகள் - The Bullion & Jewellers Association; Delhi Jewellers Association; Maliwara Jewellers Association, Delhi; Karol Bagh Jewellers Association மற்றும் Meerut Traders Association ஆகும்
Informa Markets பற்றி
Informa Markets, தொழில்துறைகளுக்கான தளமாகும் மேலும் இது வியாபாரம் செய்ய, தொழிலைப் புதிதாக துவங்க மற்றும் வளர்ச்சியடையத் தேவையான சிறந்த சந்தையிடங்களை உருவாக்குகிறது. ஹெல்த்கேர், ஃபார்மாசூட்டிகல்ஸ், உட்கட்டமைப்பு, கட்டமைப்பு & ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, மருத்துவத்துறை, உணவு &குளிர்பானங்கள் மற்றும் ஹெல்த் & ஊட்டச்சத்து, மற்றும் பல சந்தைகளின் 550க்கும் அதிகமான சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகள் எங்களது போர்ட்ஃபோலியோவில் அடங்கியுள்ளன. நேரில் காணும் கண்காட்சிகள், ஸ்பெஷலிஸ்ட் டிஜிட்டல் உட்கருத்து மற்றும் செயல்படுத்தக்கூடிய தரவு தீர்வுகள் மூலமாக வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு உலகில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த, அனுபவிக்க மற்றும் வியாபாரம் செய்ய நாங்கள் வாய்ப்பை உருவாக்குகிறோம். உலகின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளரான நாங்கள் வாழ்க்கைக்கான பல்வேறு சிறப்பு சந்தை வரம்புகளை கொண்டு வருகிறோம், வாய்ப்புகளை திறந்துவிடுகிறோம் மற்றும் ஆண்டின் 365 நாட்களும் வியாபாரம் செய்ய நாங்கள் உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும்www.informamarkets.com.
Informa Markets பற்றி மற்றும் இந்தியாவில் எங்களது வியாபாரம்
உலகில் முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Informa PLCக்கு சொந்தமானது Informa Markets.
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான Informa Markets ( UBM India என முன்னர் அழைக்கப்பட்டது) இந்தியாவில் வல்லுநர் சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்கள் ஆகியவற்றுக்கு உதவவும், கண்காட்சிகள், டிஜிட்டல் கருத்து மற்றும் சேவைகள் மற்றும் மாநாடுகள் & கருத்தரங்குகள் மூலம் உள்ளூரிலும் உலகம் முழுவதும் வியாபாரம் செய்யவும், புதிதாக தொழில் துவங்கவும் மற்றும் வளர்ச்சி பெறவும் உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவிலான கண்காட்சிகள், 40 மாநாடுகள் இவற்றுடன் தொழில்துறை விருதுகள் மற்றும் பயிற்சிகளையும் நாடெங்கிலும் அளிக்கிறோம்; அதன்மூலம் பல தொழில்துறைகளுக்கிடையே வர்த்தகத்தை வளர்க்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில், Informa Markets க்கு அலுவலகங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் www.informa.com.
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
Informa Markets in India:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
லோகோ: https://mma.prnewswire.com/media/960525/DJGF.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article