InnoPack Pharma Confex-ன் 9-வது கண்காட்சியை இந்த ஆண்டு இணையவழி நடத்த Informa Markets in India தயாராகி விட்டது
- Informa Markets in India-வின் சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டமாக மருந்து பேக்கேஜிங் மற்றும் இந்தியாவில் டிரக் டெலிவரிக்கான முதன்மை தளம் உள்ளது
மும்பை, இந்தியா, ஆக. 21, 2020 /PRNewswire/ -- பல வெற்றிகரமான மருந்துத்துறை சார் மாநாடுகளை நடத்திவரும் Informa Markets in India-ன் ஒரு அங்கமான CPhI Conferences India, 9-வது வருடாந்திர InnoPack Pharma Confex-ஐ வரும் செப்டம்ப 3 மற்றும் 4, 2020 ஆகிய இரு நாட்களில் இணையவழி நடத்தவிருக்கிறது. Informa Markets in India-வின் சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த டிஜிட்டல் நிகழ்வு இருக்கும். இந்த முன்முயற்சி 5 முக்கிய துறைகளுக்கும், 5 பிரபல பிராண்டுகள் மற்றும் 5 வெவ்வேறு சமூகங்களுக்கும் சேவையாற்றுகிறது. இவை அனைத்துமே ஒரே பவர் பூஸ்டர் மாதத்தில் நடக்கிறது.
மருந்துத் துறையில் உள்ள முன்னணியாளர்கள் ஒன்றுகூடவும், நெட்வொர்க் ஏற்படுத்திக் கொள்ளவும், தங்களுடைய யோசனைகளையும் அறிவையும் பகிர்ந்துகொள்ளவும் ஒரு மிகப் பெரிய தளமாக இந்த Confex அமையும். மருந்து பேக்கேஜிங் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதாக அமையும். இந்த இரண்டு நாள் பல-தட அறிவார்ந்த மாநாட்டில் மருந்து பேக்கேஜிங் தொழிலின் பல்வேறு பிரிவுகளில் முன்னணியில் உள்ளவர்கள் ஒன்று கூடுகின்றனர், B2B நெட்வொர்க்கிங், புதுமையான தீர்வுகளை வெளிக்கொணரும் கண்காட்சி, 6 கருத்துப்பட்டறைகள், பேக்கேஜிங் முன்னணியாளர்களின் வட்டமேசை அமர்வு மற்றும் இந்தியா பேக்கேஜிங் விருதுகள் ஆகியன இந்த 5-வது கண்காட்சியில் இடம் பெற உள்ளன. இந்த Confex-ல் 50+ கண்காட்சியாளர்களும், 100+ பேச்சாளர்களும் & பயிற்சியாளர்களும் மற்றும் 100+ விருதுக்கான வேட்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய மருந்துத் துறை ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் மத்தியில் உள்ளது, உலகெங்கும் இத்துறையில் மக்கள் தொகையியல்சார், தொற்றுநோயியல்சார், மற்றும் பொருளாதாரம் சார்ந்த மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருப்பதோடு, தன்னுடைய உற்பத்தி முறைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது, உலகத்தரமான மருந்துகளை உற்பத்தி செய்வதற்காக கடுமையான தரக் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டியதிருக்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் 83.6 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தையாக இருந்து மருந்து பேக்கேஜிங் துறை 2024-க்குள் 111.9 பில்லியன் டாலராக அதாவது 2019-2914 காலத்தில் CAGR 6.0%-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளி இணக்கம் மற்றும் வசதி காரணமாக வாய்வழி மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தொற்றுநோய்களும் அதிகரித்து வருகிறது BRIC (Brazil, Russia, India, and China) நாடுகள் போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் மருந்துத்துறையில் பேக்கேஜிங்கு அதிகரித்து வரும் தேவைதான் இந்த வளர்ச்சிக்கான காரணமாகக் கருதப்படுகிறது. மேலும், பாதுகாப்பு, செயல்படுந் திறன், மற்றும் நோயாளிக்கு ஏற்ற தயாரிப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வழக்கமான ஊசிமூலம் செலுத்தத்தக்க மருந்துகளுக்காக அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவைப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான அதிகரித்துவரும் தேவை வரும் ஆண்டுகளில் ஊசிமூலம் செலுத்தத்தக்க டிரக் டெலிவரி சந்தையின் வளர்ச்சியைத் தூண்டும். இந்தியாவில் மருந்து பேக்கேஜிங் துறை சந்தையில் மிக வேகமாக மாறிவரும் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப மாறிவருகின்றன. ஏனென்றால் பல இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடம் பெயர்கின்றன.
InnoPack Pharma Confex-ன் ஒன்பதாவது கண்காட்சியை அறிவித்துப் பேசிய Informa Markets in India-வின் Managing Director-ஆன திரு. Yogesh Mudras, பேசும்போது, "தரம் மற்றும் வடிவமைப்பைப் பொருத்தவரை InnoPack மிகச்சிறந்த மருந்து பேக்கேஜிங் தீர்வுகளை வழங்கி வந்திருக்கிறது. முன்னணி நிபுணர்களின் அணல்பறக்கும் குழுவிவாதங்கள் இந்த ஆண்டு இணைய வழி நடைபெறும். துறையில் உள்ள முக்கிய போக்குகளையும் பிரச்சனைகளையும் பற்றி விவாதிப்பார்கள், உலகம் முழுவதும் உள்ள சமீபத்திய புத்தாக்கங்களைப் பற்றியும் பேசுவார்கள். 2 நாட்கள் நடைபெறும் இந்த InnoPack Pharma Virtual Confex ஒரு பொருத்தமான நேரத்தில் நடைபெறுகிறது. COVID 19 பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக பேக்கேஜிங் தயாரிப்பாளர்கள் சப்ளை செயின் முறிந்திருப்பதை அனுபவிக்கிறார்கள், இதனால் உலகின் பல பகுதிகளில் உற்பத்தி குறைந்திருக்கிறது. இந்தக Confex பல்வேறு நெட்வொர்க்கிங் நடவடிக்கைகள் வழியாக தொடர்ந்து ஈடுபடுவதை உறுதி செய்யும், மருந்து பேக்கேஜிங்கில் தொடர்ந்து வரும் சவால்களைப் பற்றியும் தீர்வுகளைப் பற்றியும் விவாதிக்கும்" என்றார்.
"Informa Markets in India-வின் சூப்பர் செப்டம்பர் - விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக .Innopack Confex-ஐ அளிப்பதல் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். Covid-19 சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள இடைவெளியைப் போக்கும் விதத்தில், Informa Markets in India, தன்னுடைய தொலைநோக்குப் பார்வையோடு, சமூகத்திற்குச் சேவையாற்றுவதற்காக தன்னுடைய டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய உதவுகிறது," என்று மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கண்காட்சி மாநாட்டு நிகழ்வில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் கருத்துப்பட்டறைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் இன்னும் பெரிதாகியிருக்கிறது. இந்த ஆண்டு கருத்துப்பட்டறையில் பேசப்படவிருக்கும் தலைப்புகளில் டெக்னாலஜீஸ் ஃபார் ஆன்டி - கோவிட் கம்ப்ளெய்ண்ட் பேக்கேஜிங் டிசைன் மற்றும் பேஸியன்ட் சென்ட்டிக் பேக்கேஜிங் டிசைன்ஸ், சஸ்டெய்னபிலிட்டி அன்டு ரீசைக்ளிங் பிளாஸ்டிக் ஃபார் பேக்கேஜிங், ஸ்டெரிலைசேஷன் & கோல்டு செயின் போன்ற பல தலைப்புகள் அடங்கும். இந்த மாநாட்டின் மையப்பொருளாக பேக்கேஜிங்கின் புதிய சகாப்தத்தை புத்தாக்கங்கள் வழியாக தொழிலைப் பெருக்குதல் என்ற கருத்து இருக்கும்.
இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் அமர்வுகளில் Abbott-ன் PM Serialization & Liaison Regulatory & Government Affairs-ஆன திரு. Marcel De Grutter; World Packaging Organisation-ன் குளோபல் அம்பாசடரான Chakravarthi AVPS; Amneal Pharmaceuticals-ன் தலைவரான Sanjay Jain; Aurobindo Pharma Limited-ன் பொது மேலாளரான Chandi Prasad Ravipati; Dr Reddy's Laboratories-ன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறையின் தலைவரான Dr Pirthi Pal Singh; Abbott-ன் பேக்குஜிங் டெவலெப்மெண்டின் தலைவரான Rajesh Mishra மற்றும் பல முக்கிய பேக்கேஜிங் நிபுணர்கள் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு பாலிசி வடிவமைப்பாளர்கள், சங்கங்களிலிருந்து துறை தலைவர்கள், முக்கிய மருந்து மற்றும் உயிரி மருந்து நிறுவனங்களின் தலைவர்களும் இதில் கலந்து கொள்வார்கள். Confex-யினை MSME-களும் பெரிய நிறுவனங்களும் வரவேற்று அதில் தங்களுடைய ஈடுபாடு மற்றும் பங்கேற்பைக் காட்டி வருகிறார்கள். இதில் பங்கெடுக்கும் முக்கியமான நிறுவனங்களில் Aurobindo, Dr Reddy's, Zydus, Piramal, Wockhardt ஆகியவை அடங்கும்.
Confex-ஐ தொடர்ந்து, Informa Markets in India தனது 5-வது India Packaging Awards-ஐ நடத்தும். இந்த ஆண்டு டிஜிட்டல் தளத்தில் நடத்தப்படவிருக்கிறது. இந்த வளர்ந்து வரும் துறையின் வெற்றியாளர்களை உலகளாவிய பார்வையாளர்கள் முன்னால் பெருமைப்படுத்தும். செப்டம்பர் 3 அன்று இணையவழி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி பார்மா பேக்கேஜிங் துறையின் சிறந்த விஷயங்களை வெளிக்கொண்டுவர ஆர்வமாக உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது, விருதுகளையும் அங்கீகாரங்களையும் வழங்கும் நிகழ்ச்சியோடு பிரசன்டேஷன்களும் தனித்த தயாரிப்பு வெளியீடுகளும்கூட இருக்கும். தயாரிப்பு வகைகளில் அடங்குவன - பேக்கேஜிங் வடிவமைப்பு, ஆன்டி-கவுன்டர்ஃபீட்டிங், இன்டகிரேட்டட் டிரக் டெலிவரி சிஸ்டம்ஸ், சஸ்டெய்னபுள் பேக்கேஜிங், R&D, மெஷினரி, என்ஹேன்ஸ் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் இந்த ஆண்டின் பேக்கேஜிங் டீம்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.http://www.informa.com/
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1230602/Innopack_Pharma_Logo.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1230603/Informa_Markets_Super_September.jpg
Share this article