INMEX SMM India 2019-ல் மிகச்சிறந்த பிராண்டுகளைக்கொண்ட ஷிப்பிங் மற்றும் கடல்சார் துறையைச் சேர்ந்த 260-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காட்சிப்படுத்துகின்றன
படைசார் சுற்றுலாவை, துறைமுகத் துறையை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது
இந்தியா - வங்காள தேசத்திற்கிடையில் நவம்பர் 1 அன்று கடற்படைப் பயிற்சி தொடங்குகிறது
மும்பை, Oct. 7, 2019 /PRNewswire/ -- Informa markets India-வினால் நடத்தப்படும் 11-வது INMEX SMM கண்காட்சி பாம்பே எக்சிபிஷன் சென்டரில் தொடங்கியது. இந்த மூன்று நாள் கண்காட்சியில் 260-க்கும் மேற்பட்ட .நிறுவனங்கள் பங்கேற்றுள்ளார்கள். INMEX SMM India Expo 2019 உலகம் முழுவதுமிருந்து வாங்குபவர்களையும் தயாரிப்பாளர்களையும் தங்கள் தொழிலை நடத்த ஒருங்கிணைக்கிறது. உலகளாவிய தொழில்துறை முன்னணியாளர்கள், முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள், அரசு முகமைகள் மற்றும் முக்கிய வர்த்தக அமைப்புகள் விரும்பிக் கூடும் இடமாகவும், அவர்களுக்குள் நெட்வொர்க்கை ஏற்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறியவும், சேவைகளையும் தயாரிப்புகளையும் வெளிவிடவும் வாய்ப்பாக உள்ளது.
INMEX SMM-வானது Shipping Corporation of India (தலைவர், Inmex SMM 2019 Advisory Board) ஓய்வுபெற்ற CMD-யான Sabyasachi Hajara; Simon Bennett, துணை பொதுச் செயலர், International Chamber of Shipping; Michael Duck, செயல் உதவித் தலைவர் - ஆசியா, Informa Markets; Pravir Pandey, உதவித் தலைவர், Inland Waterways Authority of India; Rear Admiral K G Vishwanathan, Flag Officer Doctrines and Concepts, Indian Navy; Kailash Kumar Aggarwal, Jt Secretary, Sagarmala, Ministry of Shipping; Sanjay Bhatia, தலைவர், Mumbai Port Trust, தலைவர், Indian Ports Association and Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், Informa Markets, மற்றும் Mr Abhijit Mukherjee, குழு இயக்குனர், Informa Markets in India ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
துறைமுகத் துறை, குரூய்ஸ் சுற்றுலா, பசுமை துறைமுகம் போன்றவற்றை மேம்படுத்துவதன் வழியாக கப்பல் மற்றும் கடல்சார் துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு வழிகள் பற்றி மாநாட்டில் பங்கேற்ற பல நிபுணர்கள் பேசினார்கள். சாகர்மாலா திட்டம், மகாராஷ்டிராவில் நீர்வழி சுற்றுலா மற்றும் பிற துறைமுகங்கள், இந்தியாவுக்கும் வாங்காள தேசத்திற்கும் இடையில் குரூய்ஸ் லைன் போன்றவை அதிக அளவில் பேசிப்பட்டுள்ளன.
நீர் சுற்றுலா பற்றிப் பேசிய Inland Waterways Authority of India-ன் துணைத்தலைவரான Pravir Pandey பேசும்போது, "இந்தி அரசுக்கும் வங்காள தேசத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இருவழி கப்பல் போக்குவரத்து கடந்த மார்ச் மாதத்தில் பயணித்து பயணிகளை ஏற்றிச் சென்றது. நவம்பர் 1 முதல், வழக்கமான இருவழி கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது."
இவை தவிர, கல்கத்தாவுக்கும் பனாரசுக்கும் இடையில் ஆறு பன்னாட்டு அளவிலான கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தக் கப்பல்கள் அதிக சொகுசானவை என்பதால் இரு ஆண்டுகளுக்கு முன்னரே முன் பதிவு செய்யப்படுகின்றன. கல்கத்தாவிலிருந்து பல்வேறு இடங்களுக்கும், Murshidabad, Sultangunj போன்ற கங்கை நதிக்கரை நகரங்களிடையேயும் இந்தக் கப்பல்கள் பயணிக்கின்றன. இந்த கப்பல் நிறுவனங்கள் உள்ளூர் கப்பல் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். இந்தக் கப்பல்கள் மிதக்கும் ஜெட்டிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா செல்வோர் அங்கு இறங்கி உள்ளூர் பகுதியில் முழு நாளையும் கழிக்கின்றனர். அதே போன்று பிரம்மபுத்திராவிலும் நடக்கிறது, Karavadi-யில் இயக்கப்பட்ட மியான்மரிலிருந்து வந்த பிரபலமான பான்டவ் கப்பல் கங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Mumbai Port Trust மற்றும் Indian Ports Association-ன் தலைவரான Sanjay Bhatia பேசம்போது, "கப்பல் போக்குவரத்தைப் பொருத்தவரை, Bandar துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் Dwarka-வும் அடுத்து வரவிருக்கிறது. மும்பைக்கும் கோவாவுக்கும் இடையில் இயங்கிவரும் கப்பலும் Ganpatipule-க்கு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகவே நாங்கள் Kanhoji Angre தீவை மேம்படுத்தி வருகிறோம்."
சர்வதேச கண்காட்சியோடு, INMEX SMM இந்தியா மாநாடு இந்தியாவில் கப்பல் மற்றும் கடல்சார் துறையைப் பற்றிய முழுமையான புரிதலை அளிக்க மிகவும் சிக்கலான பிரச்சனைகள், தலைப்புகள் மற்றும் துறையின் போக்குகள் பற்றிய துறைசார்ந்த நுண்ணறிவை அளிக்கிறது. 'India's Maritime Leadership' (இந்தியாவின் கடல்சார் தலைமைத்துவம்); 'The Maritime World of Tomorrow - Preparedness for Industry 4.0 and Preparing people for the smart shipping era' (நாளை கடல்சார் உலகம் - இன்டஸ்ட்ரி 4.0-வுக்கான தயார்நிலை மற்றும் ஸ்மார்ட் ஷிப்பிங் யுகத்திற்கு மக்களைத் தயாரித்தல்); 'Women in Maritime' (கடல்சார் துறையில் பெண்கள்); 'India's Marine highways - 'What is Driving Growth Today? (இந்தியாவிளன் கடல்வழி நெடுஞ்சாலை - இன்று வளர்ச்சியை தூண்டுவது எது?) போன்ற தலைப்புகளில் அமர்வுகள் இருந்தன. சாகர்மாலா (Sagarmala) பற்றிய ஒரு பார்வை.'
சாகர்மாலா திட்டத்திற்குத் தலைமை ஏற்றுள்ள கப்பல்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரான Kailash Kumar Aggarwal பேசும்போது, "துறைமுகத் துறையை ஊக்குவிக்க புத்தாக்கங்களை அடையாளம் காண்பதுதான் இந்தத் திட்டத்தின் மையாக உள்ளது. துறைமுகங்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், துறைமுகங்களின் திறனை மேம்படுத்தவும், துறைமுகங்களை நவீனப்படுத்தவும், துறைமுகங்களிடையே இணைப்பை அதிகரிகவும் சுமார் 600 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரிய துறைமுகங்களின் அருகில் தொழில்களை வளர்ப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமே. துறைமுகத் துறை சார்ந்த திட்டங்கள் பற்றி சமூகங்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் துறைமுகங்களின் அருகில் வாழும் சமூகத்தை வளர்ப்பதும் முக்கியமாக உள்ளது. துறைமுகத் துறையை தொழில்நுட்ப முன்னேற்றமடையச் செய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. இந்த அனைத்துத் திட்டங்களுமே பல்வேறு துணைத் தலைப்புகளின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன்மீது நமது கவனம் இருக்கும்."
"இந்திய துறைமுகங்களும் கப்பல் சுற்றுலாவுக்கான அவற்றின் தயார்நிலையும்" பற்றியும் இந்தக் கண்காட்சி கவனம் செலுத்தியது. துறைமுக உட்கட்டமைப்பு வளர்ச்சி சம்பந்தமான விஷயங்களின்மீதும் மாநாடு அமைந்தது. அதில், 'Making Ports a Partner in Business Development' (தொழில் வளர்ச்சியில் கூட்டாளியாக துறைமுகங்களை ஆக்குவது); 'Port Dynamics in the 21st Century' (21-வது நூற்றாண்டில் துறைமுகத்தின் இயங்கியல்); 'Digital Transformation and Modernisation of Ports' (டிஜிட்டல் மாற்றமும் துறைமுகங்களின் நவீனத்துவமும்) மற்றும் 'India's Marine Highways -What is Driving Growth ' (இந்தியாவின் கடல்சார் நெடுஞ்சாலைகள் - வளர்ச்சியைத் தூண்டுவது எது) போன்ற தலைப்புகளில் உரைகள் இருந்தன. ஒரு B2B பையர்ஸ் நிகழ்ச்சியானது கண்காட்சியாளர்களுக்கும் வாங்குபவர்களுக்குமிடையே ஒரு சிறப்பு சந்திப்பை ஏற்படுத்தியது.
துறைமுகத் துறை பற்றிப் பேசிய Mumbai Port Trust மற்றும் Indian Ports Association-ன் தலைவரான Sanjay Bhatia பேசும்போது, "உலகெங்கும், ஐந்து நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் குறைந்தது மூன்று நிறுவனங்கள் மும்பையில் சொந்தத் துறைமுகத்தைத் தொடங்கியுள்ளன. 2017-18-ல், நம்மிடம் 40 ஷிப்ஸ் காலிங் இருந்தன, 2018-19-ல் நம்மிடம் 106 கப்பல்கள் வந்தன. இந்த 2019-20-ல், நம்மிடம் 206 கப்பல்கள் வந்துள்ளன. எனவே, நாம் ஆரம்ப நிலையிலிருந்து இரண்டாவது கட்டத்திற்கு விரைவில் செல்வோம். நான் உண்மையில் ஒரே ஒரு துறைமுகம் பற்றித் தெரிவித்தேன். ஐந்து துறைமுகங்கள் இணைக்கப்படவுள்ளன. அதற்காக ஒரு பெர்த்தை ஒதுக்கி வைத்திருக்கிறோம். இந்த நோக்கத்திற்காக நான் ஏற்கனவே இரண்டாவது பெர்த்தை வைத்து விட்டேன். மூன்றாவது பெர்த்தையும் நாம் ஒதுக்க வேண்டியதிருக்கும். இந்த ஆண்டு முதல், மியாமியைப் போன்று ஒரு குறிப்பிட்ட நாளில், மொத்தம் 4 கோடி கப்பல்களை மொத்தம் வைத்திருக்கலாம். ஐந்து துறைமுகங்களை இணைத்தால், இது புதிதாக வரும் தொழிலாக வளரும்."
மேலும் அவர் பேசும்போது, "விமான நிலையத்தைப் போன்று சர்வதேச கப்பல் முனையம் ஜூன் 2020-ல் கட்டி முடிக்கப்படும். உள்நாட்டு முனையத்தை நாம் ஏற்கனவே முடித்திருக்கிறோம். மும்பையிலிருந்து கோவாவுக்கு கப்பல் போக்குவரத்தை நாம் தொடங்கியிருக்கிறோம். நாம் தற்போது உருவாக்கிவரும் ஒரு கிலோமீட்டர் வாட்டர் ஃபிரண்ட் அடுத்த இரு மாதங்களில் நிறைவடையும். 11 கிலோமீட்டர் வாட்டர் ஃபிரண்ட் போன்ற பெரிய திட்டங்கள் கருத்தளவிலும் திட்டமிடல் அளவிலும் உள்ளன."
INMEX SMM India Show 2019 பற்றி Informa Markets in India-வின் Managing Director-ஆன திரு. யோகேஷ் முத்ராஸ் பேசும்போது, "உலக மக்கள் தொகை அதிகரித்து வரும்போது, நாட்டின் வளர்ச்சியிலும் நீடித்த மேம்பாட்டுக்கும் மலிவான மற்றும் திறன்மிக்க கடல் போக்குவரத்து அவசியமாகிறது. இந்திய கப்பல் துறையானது நாட்டின் நீடித்தி வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் முக்கியமான பங்காற்றுகிறது. சராசரியாக, அளவில் இந்தியாவின் 95 விழுக்காடு வர்த்தகமும், அதன் மதிப்பில் 70 விழுக்காடு வர்ததகமும் கப்பல் போக்குவரத்து வழியாகவே நடக்கிறது. சுமார் 7,517 கிமீ கடற்கரையைக் கொண்ட இந்தியா உலகில் பதினாறாவது மிகப்பெரிய கடல்சார் நாடு என்பதால், கடல்சார் புரட்சியை ஏற்படுத்தும் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் சாத்தியம் உள்ளது. இந்தியச் சந்தையில் அதிக தாக்கத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்ட Informa Markets in India மற்றும் Hamburg Messe மற்றும் Congress GmbH நாங்கள் சேவயைளிக்கும் துறைகளின் பட்டியலில் கடல்சார் மற்றும் கப்பல் துறையையும் இணைப்பதில் பெருமை கொள்கிறோம்."
"சில ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல் தளங்களுக்கு உட்கட்டமைப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளதோடு, சாகர்மாலா திட்டம் போன்ற ஒருங்கிணைந்த முன்முயற்சிகளை எடுத்திருக்கிறது. மேஜர் போர்ட்ஸ் பில் இந்த Port Boards-க்கு அதிக தன்னாட்சியை அளிக்கும். இந்தியாவின் துறைமுகத் திறனை 3,130 MT-க்கு உயர்த்தும் Maritime Agenda 2020 மற்றும் சூழலுக்கு உகந்த 'Project Green Ports' ஆகிய முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை, சந்தேகமே இல்லாமல் கப்பல் மற்றும் கடல்சார் துறையில் நீடித்த வளர்ச்சியை விரைவுபடுத்தும்," என்று மேலும் கூறினார்.
INMEX SMM India தொடங்கப்பட்டதிலிருந்து, கப்பல் கட்டுமானம், கப்பல்கட்டுந் துறைககள், ஃபிட்டிங்குகள் மற்றும் சாதனம், சரக்கு கையாளும் அமைப்புகள், மின் பொறியியல் / மின்னணுவியல், தொழில்நுட்பம், துறைமுகங்கள் மற்றும் துறைமுகத் தொழில்நுட்பம், கடல் பொறியியல், கடல்சார் ஆஃப்ஷோர் தொழில்நுட்பம், கப்பல் ஆயுத அமைப்புகள் மற்றும் இந்தியச் சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்செய்வதற்கு உதவும் தூர்வாரல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒட்டுமொத்த கடல்சார் துறையினராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. தொழில்துறை நிபுணர்கள் தவிர்த்து, கப்பல் உரிமையாளர்கள், கப்பல் நிர்வாக நிறுவனங்கள், ராணுவ அமைச்சகம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், National Shipping Board, மற்றும் Directorate of Procurement மற்றும் Directorate of Quality Assurance, Indian Navy ஆகியவற்றிலிருந்து முக்கிய பிரமுகர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள்.
கடல்சார் துறையில் முன்னிலை வகிக்கும், ABB India Limited, SSI Solutions India Pvt Ltd., Goltens India Private Limited., India Futuristic Marine Pvt Ltd., Vacman Sanitation Solutions Pvt Ltd., Wiska India, West Coast Marine Yacht Services Pvt Ltd., Dempo Shipbuilding & Engineering Pvt Ltd., Dalwin Marine Turbo Engg Pvt Ltd., Reintjes Middle East LLC, Volvo India Pvt Ltd (Volvo Penta), Navicom Technology International Pvt Ltd., Man Diesel & Turbo India Private Limited, Mandovi Drydocks, Parikh Power, Ras Tek Group, Subhadra Metals Pvt Ltd., Synergy Shipbuilders/ Siddarth Engineering & Shipbuilding Co., Pvt Ltd., Vijai Marine Shipyard, Marks Marine Radio Pvt Ltd and Vanson Engineering Pvt Ltd ஆகியவை இந்தக் கண்காட்சியில் பங்கேற்கிறார்கள். இதில் ஜெர்மனி, சீனா மற்றும் கொரியாவிலிருந்தும் காட்சி அரங்குகள் இடம் பெறும்.
அடுத்து வரவிருக்கும் பல்வேறு மிகப்பெரிய திட்டங்களுக்கு கடல்சார் மற்றும் கப்பல் துறை தயாராகி வரும் முக்கியமான வேளையிலும், செயல்பாட்டுத் திறமையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் வேளையிலும் INMEX SMM 2019 நடக்கிறது. சாகர்மாலாவுக்கான தேசியத் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், 7,500 கிலோமீட்டர் கடற்கரை முழுவதும் ஏற்கனவே உள்ள 12 பெரிய துறைமுகங்கள் மற்றும் 200 சிறிய துறைமுகங்களை முற்றிலும் புதிதாக மாற்றுவதோடு 6 புதிய மிகப்பெரிய துறைமுகங்களை உருவாக்க உள்ளது. FY18-ன்போது, நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து 679.36 மில்லியன் டன்களாக (MT) இருந்தது, கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது 4.77 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது. FY19-ல் (ஆகஸ்ட் 2018-வரை) சரக்குப் போக்குவரத்து 5.13 விழுக்காடு உயர்ந்து 288.38 மில்லியன் டன்களாக உயர்ந்தது. இந்தியாவில் மொத்த வணிகத்தில் சுமார் 95 விழுக்காட்டினை துறைமுகங்கள் கையாளுவதால், வளர்ந்துவரும் வர்த்தகம் நாட்டின் சரக்குப் போக்குவரத்துக்கு குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்களிப்புச் செய்துள்ளது.
இன்றியமையாப் பண்டங்களின் சர்வதேச போக்குவரத்தின் முதன்மை வழியாக இத்துறை செயல்படுகிறது. இத்துறை சர்வதேச நிறுவனங்களை அதிகமாகக் கவர்ந்திழுக்கும் துறையாக உள்ளது. இது தவிர, இந்திய அரசு துறைமுகங்களுக்கான தானியங்கு வழிகள் மற்றும் துறைமுகக் கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் திட்டங்களில் 100 விழுக்காடு அயல்நாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அனுமதிக்கிறது. துறைமுகங்களையும், உள்நாட்டு நீர்வழிகளையும், உள்நாட்டு துறைமுகங்களையும் ஏற்படுத்தி, பராமரித்து இயக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டு வரி விடுமுறைகளையும் இந்திய அரசு அளிக்கிறது.
Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India) பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
மிலி லால்வாணி
[email protected]
+91-9833279461
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1005629/INMEX_SMM_India_Logo.jpg
புகைப்படம்: https://mma.prnewswire.com/media/1005628/INMEX_SMM_2019_Inauguration.jpg
Share this article