Informa Markets in India-வின் விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்துடன் இணைந்து SATTE தன்னுடைய விர்ச்சுவல் அவதாரமான 'SATTE GenX'-ஐ நடத்துகிறது
- ஆசியாவின் முன்னணி பயண மற்றும் சுற்றுலாக் கண்காட்சியிடமிருந்து இத்துறைக்கான மிகச் சிறந்த பயண மற்றும் சுற்றுலா நிகழ்வு
மும்பை, இந்தியா மற்றும் புது டெல்லி, Oct. 5, 2020 /PRNewswire/ -- தெற்காசியாவின் மிகப்பெரிய பயண மற்றும் சுற்றுலா கண்காட்சியான SATTE Informa Markets in India-வுடன் இணைந்து வரும் அக்டோபர் 5-6, 2020 ஆகிய நாட்களில் தெற்காசியாவின் முதன்மையான விர்ச்சுவல் பயணக் கண்காட்சியான SATTE GenX-ஐ நடத்துகிறது. Informa Markets in India செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020-ல் நடத்தும் தொடர்ச்சியான கண்காட்சிகள் மற்றும் இ-மாநாடுகளின் விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த டிஜிட்டல் நிகழ்வு இருக்கும். உரிய சமூகங்களும் தொழில்களும் பொதுமுடக்கத்தின் கட்டுப்பாடுகளை வெற்றிகொள்ளவும், தொழில் இலக்குகளை எட்டவும் பொருளாதாரம் தன்னுடைய பாதையில் திரும்பி வரத் தயாராகும் வேளையில் ஒரு உந்துதலைத் தரவும் இந்த விர்ச்சுவல் B2B கொண்டாட்ட முயற்சி உதவும்.
தொடரும் COVID-19 காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளுள் ஒன்று பயணம் மற்றும் சுற்றுலாத் துறை. கடைசியாக மீட்சிபெறக்கூடியது என்ற எதிர்பார்க்கப்படும் துறையும் இதுவாகத்தான் இருக்கும். இந்த சவால்மிக்க நேரத்தில், SATTE தன்னுடைய புதிய டிஜிட்டல் முன்முயற்சியைக்கொண்டு, இலக்கு மக்களைத் தொடர்புகொள்ள தாங்கள் விரும்பும் இடத்திலிருந்து தொழிலை நடத்த துறையைச் சார்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. SATTE GenX என்பது பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில்துறையை மீண்டும் மெதுவாகத் தொடங்கும் துறையின் பரந்தளவிலான திட்டத்தில் ஒன்றாக உள்ளது.
இந்தோனேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து, மாலத்தீவுகள், பங்களாதேஷ் மற்றும் துபாய் போன்ற நாடுகளின் கண்காட்சியாளர்கள் பிளாட்டினம் பார்ட்னர்களாகப் பங்கேற்பதாக இதுவரை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். Fiji மற்றும் Utah ஆகியோர் SATTE GenX-யின் கோல்டு பார்ட்னர்களாவர். மொரீசியஸ், ஜெர்மனி மற்றும் சோமதீரம் ஆகியோர் சில்வர் பார்ட்னர்களாக உள்ளனர். அதிகமான காண்காட்சியாளர்களை பங்கேற்கச் செய்ய SATTE GenX அவர்களைத் தொடர்புகொண்டு வருகிறது.
இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு ஆலோசனை அமைப்பான The Services Export Promotional Council (SEPC) இந்தியாவின் உள்நாட்டுச் சுற்றுலாவைப் புதுப்பிக்கும் முயற்சியைத் தொடங்க SATTE GenX-உடன் கைகோர்த்திருக்கிறது.
முதலாவது SATTE GenX பற்றிப் பேசிய Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான Mr. Yogesh Mudras பேசும்போது, "தொடரும் பெருந்தொற்றுச் சூழல் இந்தியாவின் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையையும், அதனுடன் இணைந்த தொழில் பிரிவுகளையும் பெருமளவு முழுமையாகவே முடக்கிவிட்டது. மிகக் குறைவான சர்வதேச விமானசேவைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளோடு சேர்த்து தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு உள்நாட்டிற்கு வரும் மற்றும் உள்நாட்டு பயணத்தை முடக்கிவிட்டது. பொது முடக்கம் படிப்படியாக நீக்கப்பட்டு, மாநிலங்களுக்கிடையிலும் மாவட்டங்களுக்கிடையிலும் மக்களின் போக்குவரத்து சுலபமாக்கப்படும் சூழலில், நாட்டிற்குள்ளேயேகூட சுற்றுலா மீண்டும் பழைய நிலையை அடைய நீண்ட காலம் எடுக்கும். இத்துறைக்கான முன்முயற்சியாக இருக்கும் SATTE GenX மிக மேம்பட்ட வலைதள அடிப்படையில் எந்தெந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு தளங்கள் திறக்கப்பட்டுள்ளன, வரும் வாரங்களில் எவையெல்லாம் திறக்கப்பட வாய்ப்புள்ளது, அல்லது வரும் மாதங்களில் சுற்றுலா வரைபடத்தில் எவையெல்லாம் இடம் பிடிக்கும் வாய்ப்புள்ளது என்ற பட்டியல் தொடர்ந்து காட்டப்படுவதை உறுதி செய்யும். பயணிகளுக்கு ஒப்பிட முடியாத தரத்தை முன்வைப்பதன் மூலமும், தன்னம்பிக்கையை அளிப்பதன் மூலமும், இந்தக் கண்காட்சி வழியாக ஒரு கிளிக் மூலம் பல சேரிடங்களையும் நம்பிக்கையான சப்ளையர்களையும் அளிப்பதன் மூலம் நெருக்கடியான சூழலில் வர்த்தகத்தை நடத்த ஒரு ஒழங்குபடுத்தப்பட்ட அமைப்பை வழங்குவதும் சந்தை மாற்றங்களுக்கு உதவுவதுமே இந்த முயற்சியின் நோக்கம்."
"SATTE GenX என்பது எம்முடைய விர்ச்சுவல் B2B கொண்டாட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சேர்க்கையாகவும் ஒரு பங்களிப்பாளராகவும் உள்ளது. பசுமை ஆற்றல், மருந்து, பயணம் மற்றும் சுற்றுலா, பேக்கேஜிங், தொழில் பாதுகாப்பு & சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற துறைகளுக்கு இந்த டிஜிட்டல் கொண்டாட்டத்தினால் பல மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, ஒரு மேம்பட்ட கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் திட்டமிட்டிருக்கும் டிஜிட்டல் கொண்டாட்டம் எம்முடைய உண்மையான கண்காட்சிகளுக்கு இணையாகவும் ஊக்கமளிப்பதாகவும் நிச்சயமாக இருக்கும்" என்று மேலும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலாச் செயலாளர்கள், பயண முகவர்கள், திருமணத்தைத் திட்டமிடுபவர்கள் பொன்ற பல பார்வையாளர்கள் SATTE GenX-ல் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விர்ச்சுவல் கண்காட்சியின்போது மாநாடுகளும், பல அமர்வுகளும், உரையாடல்களும், பிரசன்டேஷன்களும் இடம்பெறும். 'அவுட்பவுண்டு டிராவல்: ரீஇன்வென்டிங் ஸ்டிராடஜி', 'குரூய்ஸ் டூரிசம்: இஸ் இன்டியா ரெடி டு ரைட் தி வேவ்?', மற்றும் 'ரீபிராண்டிங் இன்டியா: தி பிக் பிக்சர்', 'டூரிசம் அசோசியேஷன்ஸ்: மேனேஜிங் எ குளோபல் கிரைசிஸ்', 'ஹாஸ்பிட்டாலிட்டி: தி ஃபியூச்சர் ஆஃப் ஹோட்டல் இன்டஸ்ட்ரி', 'ஸ்டேட்ஸ்: ஐடென்டிஃபையிங் அன்டு டெவெலப்பிங் நியூ டெஸ்டினேஷன்ஸ்" போன்ற தலைப்புகளில் இந்த மாநாட்டின்போது பேச்சாளர்களின் உரைகளும் இடம் பெறும்.
தொழில்துறையின் பலமான ஆதரவுடன், Indian Association of Tour Operator (IATO), Skal Asia, Travel Agents Association of India (TAAI), Association of Domestic Tour Operators of India (ADTOI), Travel Agents Federation of India (TAFI), IATA Agents Association of India (IAAI), India Convention Promotion Bureau (ICPB), Network of Indian MICE Agents (NIMA), Outbound Tour Operators Association of India (OTOAI), Pacific Asia Travel Association (PATA), Association of Bhutanese Tour Operators (ABTO), BD Inbound and Enterprising Travel Agents Association (ETAA) போன்ற சர்வதேச மற்றும் இந்திய பயண வர்த்தகச் சங்கங்களால் SATTE GenX தொடர்ந்து ஆதரிக்கப்படுகிறது.
பதிவு செய்வதற்கு, தயவுசெய்து கீழ்க்காணும் இணைப்பில் கிளிக் செய்யவும் - https://sattegenxvirtualexpo
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra - [email protected]
Mili Lalwani - [email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/1294646/SATTE_GenX_Logo.jpg
Share this article