Informa Markets in India சிறந்த நடைமுறைகள் & பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு செயல்விளக்கமளித்தது; AllSecure-உடன் வர்த்தகக் கண்காட்சிகளை நடத்தியது
மும்பை, இந்தியா, Nov. 2, 2020 /PRNewswire/ -- வர்த்தகக் கண்காட்சிகளை நடத்தத் தொடங்கும் பொறுப்பை ஏற்று, Informa Markets in India டிசம்பர் மாதத்தில் ஆறு நேரடி B2B நிகழ்ச்சிகளை கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதி செய்யும் அரசு வழிகாட்டு நெறிகளின்படி பங்குரிமையாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் முன்னிருத்தும் ஒரு மறு-தொடக்க பாதுகாப்புத் தரமான 'AllSecure'-யின் துணையோடு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்திய அரசின் Ministry of Home Affairs (MHA) ஒரு விரிவான SOP-யுடன் B2B கண்காட்சிகளை நடத்திக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கியவுடனேயே இந்த அறிவிக்கை வெளிவந்திருக்கிறது. இதனோடு, அரசு B2B சந்தையை 'தொழில் மற்றும் வர்த்தக முன்னேற்றத்திற்கான முக்கியமான ஊக்கம்' என அங்கீகரித்திருக்கிறது.
இந்தப் புதிய சூழலில் உண்மையான வர்த்தகக் கண்காட்சிகளை நடத்த, 'AllSecure' எனப்படும் பாதுகாப்புத் தரத்தை Informa Markets in India தயாரித்திருக்கிறது. மேம்பட்ட விரிவான நடவடிக்கைகளைக்கொண்ட AllSecure கண்காட்சிகளில் பங்கேற்பவர்களுக்கு தாங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில்தான் பங்கேற்கிறோம் என்ற உறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. சமூக இடைவெளி, பாதுகாத்து & கண்டறியவும், சுத்தம் & சுகாதாரம் மற்றும் இந்தக் கொள்கைகளின் விரிவான விளக்கங்கள் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த சர்வதேச நெறிமுறைகள் உள்ளன.
Informa Markets in India-வின் மேனேஜிங் டிரெக்டரான திரு. Yogesh Mudras இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "B2B நிகழ்ச்சிகளையும் & கண்காட்சிகளையும் மீண்டும் நடத்தத் தொடங்குவதற்காக உரிய நேரத்தில் முடிவெடுத்தமைக்காக இந்திய அரசுக்கு குறிப்பாக, Ministry of Home Affairs மற்றும் Ministry of Commerce-க்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். B2B நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புகள் சார்பாக, 2020-ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உண்மையான வர்த்தகக் கண்காட்சிகளை அரசின் SOP-ள் மற்றும் Informa-வின் 'AllSecure' சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரங்களின்படியும் நடத்தவிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
மேலும் பேசுகையில்: "வர்த்தகக் கண்காட்சிகளை நடத்துவதில் மேலும் இடைவெளி ஏற்பட்டால், இந்தத் துறையை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய கடைசிக் கட்டத்தில் அதை மீண்டெழுந்து வர இந்தக் கண்காட்சிகள் உதவும். பொருளாதாரத்தின் வினையூக்கிகள் என்ற முறையில், வர்த்தகக் கண்காட்சிகளை மீண்டும் நடத்தத் தொடங்குவது என்பது அரசின் குறிக்கோளான Atmanirbharta (சுய-சார்பு)-க்கு உறுதுணையாக அமையும். புதிய இயல்பு 2020 டிஜிட்டல் நிகழ்வுகளில் உள்ள அருமையான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் எம்முடைய பங்குரிமையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் எங்களுக்கு வாய்ப்பளித்தது. பொது முடக்கக் காலத்தில் 85-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை எங்களால் நடத்த முடிந்தது. வரும் காலங்களில், நேரடி மற்றும் மெய்நிகர் தளங்களை இணைத்து திருப்புமுனையாக அமையவிருக்கும் மேம்பட்ட கண்காட்சிகளை நடத்தவிருக்கிறோம். எம்முடைய பங்குரிமையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கான திறன்மிக்க, அருமையான மற்றும் மிகச்சிறந்த தீர்வுகளை அளிக்க இவை எங்களுக்கு உதவும். எம்முடைய வரிசையான உண்மையான வர்த்தகக் கண்காட்சிகளில் அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்."
உண்மையான வர்த்தகக் கண்காட்சிகள், நடைபெறும் நாட்கள், மற்றும் அவர்கள் சேவையாற்றும் துறைகளாவன:
- 8-வது வருடாந்திர InnoPack F&B 2020 Confex: 4 டிசம்பர், புது டெல்லி (உணவு & பானங்கள் பேக்கேஜிங்)
- Fi India & Hi: 8-10 டிசம்பர், புது டெல்லி (உணவு மற்றும் சுகாதார உட்பொருட்கள்)
- ProPak India: 8-10 டிசம்பர், புது டெல்லி (பிராசஸிங் & பேக்கேஜிங்)
- Renewable Energy India Expo: 10-12 டிசம்பர், கிரேட்டர் நொய்டா (புதுப்பிக்கத்தக்க & பசுமை ஆற்றல்)
- Delhi Jewellery & Gem Fair: 12-14 டிசம்பர், புது டெல்லி (ஜெம் & ஆபரணம்)
- Hyderabad Jewellery Pearl & Gem Fair: 18-20 டிசம்பர், ஹைதராபாத் (ஜெம் & ஆபரணம்)
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bangalore மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
ஊடகத் தொடர்பு:
Informa Markets in India
Roshni Mitra - [email protected]
Mili Lalwani - [email protected]
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article