IMA® இந்தியாவில் பெண்களின் கணக்கியல் தலைமைத்தொடரை நடத்துகிறது
பெங்களூரு, April 23, 2019 /PRNewswire/ --
கணக்கியல் மற்றும் நிதியியல் தலைமை பதவிகளில் பெண்கள் சந்திக்கும் சவால்களை சுட்டிக்காட்டுகிறது
IMA® (Institute of Management Accountants) மத்திய கிழக்கு மற்றும்இந்தியாவில் கணக்கியல் மற்றும் நிதியியல் தொழில்நுட்பவல்லுநர்களுக்கான பெண்களின் கணக்கியல் தலைமைத் தொடரின் மூன்றாவது பதிப்பை நடத்துகிறது. பெங்களூருவில் 17 ஆம்தேதி ஏப்ரல் 2019 அன்று நடத்தப்படும் மாநாடு Amazon மற்றும் The University of Manchester ஆல் ஆதரவளிக்கப்படுகிறது. வர்த்தக தலைமையில் 'இருக்கும் 'கண்ணாடி சீலிங்கை ' உடைத்து நிதியியல் மற்றும் கணக்கியல் துறையில் பெண் தொழில்நுட்பவல்லுநர்களை உற்சாகப்படுத்துவதை இந்த தொடர் நோக்கமாக கொண்டுள்ளது மேலும் வியாபாரங்கள்மற்றும் முடிவு எடுக்கும் பாத்திரங்களுக்கான போட்டித்தன்மையுள்ள தலைவர்களை உருவாக்க பெண்களை தூண்டுகிறது .
(Logo: https://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/873913/IMA_Ginger_White.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/873912/Hanadi_Khalife.jpg )
கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் இருக்கும் பெண்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் முடிவு எடுக்கும் பதவிகளை அடைய தங்கள் தொழிலில் சந்தித்த சவால்கள் மற்றும் பிரச்சினைகளை கலந்தாலோசிக்க பெண் தொழில்நுட்பவல்லுநர்களை இந்த தொடர் ஒன்றிணைத்துள்ளது. வியாபாரம் மற்றும் நிதிப்பிரிவில் முதன்மையான இந்திய பெண்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று தங்கள் அனுபவங்கள் மற்றும் கணக்கியல் தலைமையில் நோக்கங்களை பகிர்ந்துகொண்டனர்.
Ginger White, CMA, CSCA and IMA Chair, 2018-2019 மேலும் ஐந்தாவது முறையாக IMA's சீனியர் தன்னார்வலராக பங்கேற்றார். Sangeeta Shankaran Sumesh, Executive Director & CFO, Dun & Bradstreet Technologies & Data Services; Shalini Puchalapalli, Category Director at Amazon India; Sandhya Sriram, VP Finance, Wipro; Saraswathy Srikanth, Controller, Mphasis; Niranjana, Head Finance, L&T; Shalini Koshy, Senior Diversity Program Leader, Amazon and Latha Sharma, Associate Director Finance, Accenture, ஆகியோர் தங்கள் துறைகளின் சார்பில் பெண் தலைவர்களாக பங்கேற்றனர்.
நாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சி, Urmila Mitra, Founder & Director, Finishing Touches Image Consulting அறிமுகம் மற்றும் வரவேற்புடன் தொடங்கி Ginger White ஆல் வர்த்தகத்தில் பணியாள் தலைமையின் முக்கியத்துவத்தை பற்றிய பேச்சுடன் தொடர்ந்தது. VUCA (volatile, uncertain, complex and ambiguous) உலகில் தரசெயல்திறனை வழங்கும் தனது கருத்துகளை Sangeeta Shankaran Sumesh பகிர்ந்துகொண்டார். அடுத்ததாக பேசிய Shalini Puchalapalli 'The Power of saying No'பற்றி பேசினார். அமர்வில் அடுத்து Sandhya Sriram, Saraswathy Srikanth, Niranjana, Shalini Koshy, Latha Sharma மற்றும் Ginger White ஆகியோர் C-suite நோக்கிய தங்களது பயணத்தை பற்றி 'Journey to the C-suite' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துரையாடினர்.
'இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைந்துவரும் இந்த வேளையில், போர்டில் டைரக்டராக குறைந்தபட்சம் ஒரு பெண் தலைவரை கொண்டுள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை கொண்டுள்ள முதல் வளரும் நாடாக இந்தியா விளங்குகிறது, போர்டுரூமில் பாலின வேறுபாட்டின் மதிப்பை உணர நிறுவனங்களுக்கு உதவுகிறது' , இவ்வாறு Hanadi Khalife, Director, MEA and India Operations at IMA கூறினார். 'உலகளவில் , பல்வேறு பிரிவுகளில் பெண்களால் தலைமையை ஏற்க முடியும் ஆனால் பல்வேறு பகுதிகளில் இன்னும் அது பெரிய சவாலாகவே அமைந்துள்ளது 'என்றும் அவர் கூறினார்.
'வியாபார செயல்திறன் இயக்குநர்களாக விளங்கும் கொள்கை,நிதியியல் திட்டமிடுதல் மற்றும் ஆராய்வு உள்ளடக்கிய பணிகளை மேலாண்மை கணக்கியலாளர்கள் செயல்படுத்துகின்றனர். ஆராய்விற்கான ஒரு கூட்டமைவு, பயிற்சி மேம்பாடு,கல்வி, அறிவு பகிர்தல் மற்றும் வலிமை கொடுத்தல் ஆகியவற்றை வழங்க நமது பெண் உறுப்பினர்களுக்கு முழுஅளவில் நாங்கள் உதவ விரும்புகிறோம்' இவ்வாறு Ginger White கூறினார்.
'கல்வி அணுகல் மேம்பாட்டுடன், மாறிவரும் சமூக விதிகள் ,மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், ஆகிவயற்றால் பெண்கள் தங்கள் திறன்களை போதுமான அளவு மேம்படுத்தியுள்ளனர், நிர்வாக மட்டத்தில் முக்கிய பதவிகளையும் தொழில்களையும் பெற்றுள்ளனர். அவர்கள் தனியார் துறைகளில் போட்டிகளை திறமையாக எதிர்கொள்கின்றனர் மேலும் தங்கள் சொந்த நிறுவனங்களை நிறுவி தாங்களே முதலாளிகளாகவும் மாறியுள்ளனர்' இவ்வாறு Khalife கூறினார்
சமீப காலங்களில் , போர்டுகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் 12.4 சதவீதமாக அதிகரித்து 140 டைரக்டர்களாக மாறியுள்ளது. இது இந்தியா உலக சராசரியை அடைய உதவியுள்ளது, அது ஒட்டுமொத்தமாக 15 சதவீதமாகும். 2016 ஆம் ஆண்டு போர்டு சேர்களில் பெண்கள் 3.2 சதவீதம் இருந்தனர், Deloitte's Women in the boardroom அறிக்கையின்படி பெண் சிஈஓக்கள் 6.6 சதவீதம் இருந்தனர்
IMA® பற்றி (Institute of Management Accountants)
The Accountant/International Accounting Bulletin ஆல் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு Professional Body of the Year ஆக பெயரிடப்பட்ட IMA®, மேலாண்மை கணக்கியல் தொழில் துறையில் முக்கிய கவனம் கொண்டுள்ள மிகவும் பெரிய மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டிணைப்பாகும். உலகளவில் , IMA ஆனது ஆராய்ச்சி, CMA® (Certified Management Accountant) புரோகிராம், தொடர்கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் மிக உயர்ந்த நெறிமுறை வியாபார பயிற்சிகளில் துணை வலிமை கொடுத்தல் போன்ற பலவற்றின் மூலம் தொழில்துறைக்கு வலிமை சேர்க்கிறது. IMA விற்கு உலகளவில் 140 நாடுகளில் 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்நுட்ப மற்றும் மாணவர் சேப்டர்கள் உள்ளன மேலும் இதன் தலைமையகம் Montvale, N.J., USA அமைந்துள்ளது, IMA அதன் நான்கு உலக பிராந்தியங்கள் மூலமாக தனது உள்ளூர் சேவைகளை வழங்குகிறது The Americas, Asia/Pacific, Europe, and Middle East/India. IMA பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் http://www.imamiddleeast.org.
Share this article