IFSEC இந்தியா 2019: தொழில்நுட்ப மாற்றம், உலகளாவிய விழிப்புணர்வு, துறையின் சிறந்த நடைமுறைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிராண்ட்களின் கண்காட்சி
Informa Markets in India நடத்தும் தெற்காசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிகழ்வு கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ளது
- இந்தியாவில் பாதுகாப்பு சந்தை 14% CAGR இல் வளர்ச்சியடைந்துவருகிறது
- இந்தியாவில் தனியார் பாதுகாப்புத் துறை 70 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது
- பவர் இன்சைட்ஸ் இன்டு தி வேர்ல்டு ஆஃப் செக்யூரிட்டி குறித்த அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கிய மாநாடு
புது டெல்லி, Dec. 20, 2019 /PRNewswire/ -- Informa Markets in India தெற்காசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்ச்சியான The International Fire & Security Exhibition and Conference (IFSEC) India Expo கிரேட்டர் நொய்டாவில் உள்ள India Expo Martஇல் டிசம்பர் 19 – 21 தேதிவரை தனது 13வது பதிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
Assochamஐ ஸ்ட்ராட்டஜிக் பார்ட்னராகவும், Mitkat Advisoryஐ நாலேட்ஜ் பார்ட்னராகவும் கொண்டிருப்பதுடன் American Society for Industrial Security (ASIS) Mumbai, ASIS Bengaluru, Asian Professional Security Association (APSA), Central Association of Private Security Industry (CAPSI), Electronic Security Association of India (ESAI), Indian Institute of Drones (IID), Global Association of Corporate Security (GACS), SECONA ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் இந்தக் கண்காட்சி சர்வதேச அளவில் பிரபலமான கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், வணிக நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒரு பொதுவான மேடையின் கீழ் கொண்டுவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சீனா, தைவான், தென் கொரியா, மலேசியா, லிதுவேனியா, செக் குடியரசு, யூ.கே., ரஷ்யா, யூ.எஸ். மற்றும் ஜப்பான் போன்ற 15க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. இது 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் உலகளவில் புகழ்பெற்ற பிராண்டுகள், முக்கிய அரசாங்க அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் வணிக வல்லுநர்களை ஒன்றிணைக்கும். கண்காட்சியின் வருகையாளர் பட்டியலில் CSOக்கள், அட்மின் ஹெட்கள், CIOக்கள், CTOக்கள், ஃபெசிலிட்டி ஹெட்கள், பர்சேஸ் மேனேஜர்கள், சிஸ்டம் இண்டெக்ரேட்டர்ஸ் மற்றும் டீலர்களும் டிஸ்ட்ரிப்யூட்டர்களும் அடங்கியிருப்பார்கள்.
விரைவான நகரமயமாக்கல், வளர்ந்து வரும் மக்கள் தொகை, துறைகளின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் வெகுஜன போக்குவரத்து அமைப்புகள், ரீட்டெய்ல் உயர்வு, பயங்கரவாத நடவடிக்கைகளின் அதிகரிப்பு, அதிகரித்து வரும் குற்ற விகிதங்கள் ஆகியவை இந்தியாவில் பாதுகாப்பு சந்தையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன, இது CAGRஇல் 14% வளர்ந்து வருகிறது. தொழில்துறை வளாகங்கள், பொது உள்கட்டமைப்பு, குடியிருப்பு வளாகங்கள் போன்ற கூடுதல் உள்கட்டமைப்புகளை உருவாக்கியதன் மூலமும், 'ஸ்மார்ட் சிட்டிஸ்' மற்றும் 'மேக் இன் இந்தியா' போன்ற அரசாங்க முயற்சிகள் வழங்கியிருக்கும் பெரும் வாய்ப்பையும் இந்த வளர்ச்சி தூண்டுகிறது. இந்தியாவில் உள்ள தனியார் பாதுகாப்புத் துறையும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது, இது துறையின் அளவு அதிகரிக்கும் போது பன்மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IFSEC India Expo தனது எல்லைக்குள் கொண்டுவரும் தெற்காசியா பகுதி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்று வரும்போது குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் வளர்ச்சியடைந்துவரும் மண்டலமாகும்.
பள்ளிகள் மற்றும் ATMகளில் காவலர்களை கட்டாயமாக்குவது மற்றும் பல்வேறு இடங்களில் CCTV கேமராக்களை நிறுவுவது போன்ற அரசாங்க கொள்கைகள் இதற்கானத் தேவையை துரிதப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, தோராயமான கணக்கீட்டின்படி இந்தியாவில் சுமார் 15 லட்சம் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன, 24 மணி நேர அடிப்படையில் கட்டாயமாக 3 பாதுகாப்பு காவலர்கள் இருந்தால் இது 45 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை மட்டுமே தருகிறது.
IFSEC India கண்காட்சியின் 13வது பதிப்பு அறிவிப்பு குறித்து பேசிய Informa Markets in Indiaவின் நிர்வாக இயக்குநர் திரு யோகேஷ் முத்ராஸ், "தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதன் அவசியத்தை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளன. குற்றச் செயல்கள், பயங்கரவாதம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற சவால்கள் இருப்பதால், நகரங்கள் தங்கள் சமுதாயத்தினரை நவீனகால எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக்கவும், குடிமக்களிடையே பாதுகாப்பு உணர்வைத் தூண்டுவதற்கும் இந்த சவால்களை நிர்வகித்து, கட்டுப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்நாட்டு பாதுகாப்பிற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், அதிகரித்து வரும் நகரமயமாக்கல், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பு மற்றும் மக்களுக்கு குறைவான போலீஸ் விகிதாசாரம் ஆகியவற்றைக் கொண்டு இந்தியா ஒரு பாதிக்கப்படக்கூடிய மற்றும் வளர்ச்சியடைந்துவரும் மண்டலமாக உள்ளது, இவை நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்கும் தேவையை ஏற்படுத்தும் மிக முக்கியமான காரணிகளாகும். இதேபோல், உலகளவில், மற்றும் இந்தியாவில் பல நிறுவனங்கள் பல காரணிகளைக் கருத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பு உத்தியைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளன, இவற்றில் சில, சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இல்லை. இது கண்காணிப்பதற்கு உதவுவதுடன், தவிர்க்கக்கூடிய விபத்துகளை சமாளிக்கவும் உதவும். இது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் முன்னணி நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சந்தையைத் திறந்துள்ளது, உலகளாவிய வருவாய் பாதுகாப்பு வன்பொருள், மென்பொருள் மற்றும் சேவைகளுக்கு இந்த ஆண்டு 103 பில்லியன் டாலர்களை செலவிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, க்ளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி சென்சார் ஒருங்கிணைப்பு போன்ற சில போக்குகள் இந்தியாவில் கண்காணிப்புத் துறையை மாற்றத்திற்கான பாதையில் வைத்திருக்கின்றன, " என்று கூறினார்.
"IFSEC India 2019 இந்த வளர்ந்து வரும் தொழில்துறையின் முன்னேற்றத்திற்கான ஒரு ஊடகமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் இது தொழில்துறை நிறுவனங்கள் கூட்டாக சிந்திக்கவும், புதுமைப்படுத்தவும், போக்குகளைக் கண்டறியவும் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு முன்னுதாரணத்தை தற்காப்பு அணுகுமுறையிலிருந்து கண்காணிக்கத்தக்க, மறுமொழி அளிக்கத்தக்க அணுகுமுறையாக மாற வைக்கிறது," என்று மேலும் அவர் தெரிவித்தார்.
IFSEC India இறுதி பயனர்கள் மற்றும் வழங்குநர்களுக்கு கடுங்கண்காணிப்புடன் சேர்த்து CCTV & சர்வைலன்ஸ், பயோமெட்ரிக்ஸ் & RFID, இண்டெக்ரேட்டட் சிஸ்டம்ஸ், அக்சஸ் கண்ட்ரோல், GPS சிஸ்டம்ஸ், வீடியோ மேனேஜ்மெண்ட், பார்க்கிங் ஆட்டோமேஷன், டிரான்ஸ்போர்ட், பெரிமீட்டர் ப்ரொட்டெக்ஷன், IoT, ஸ்மார்ட் ஹோம்ஸ், செக்யூரிட்டி & சேஃப் சிட்டீஸ் ஆகியவைத் தொடர்பானவற்றை ஏற்கனவே உள்ள தனது வலிமையான தொகுதி, ப்ராடக்ட்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் சேர்க்கும். முக்கிய உலகளாவிய பிராண்டுகள் மற்றும் விநியோகஸ்தர்களில் Premier Plus Partners: Aditya Infotech, CP Plus,Enterprise Software solutions Limited (eSSL), Ezviz, Globus Infotech, Markon, Ozone Overseas, Prama Hikvision, Syrotech,Teltonika மற்றும் Facego,Hogar, Netgear, Perto Catrax, Pictor, Seagate, True View, Zebronics போன்ற Premier Partners போன்றோரும் உள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது போட்டியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் துறையில், IFSEC India Expo அதிக தாக்கத்தை ஏற்படுத்தும், தகவல்தொடர்பு செய்முறைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு நெட்வொர்க்கை ஏற்படுத்தி கொள்ளவும் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள், தொழில் சிறந்த நடைமுறைகள் மற்றும் போக்குகள், சவால்கள், சந்தை நுண்ணறிவு பற்றி கற்றுக்கொள்ளவும் மற்றும் அவர்களின் வணிகத்தையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதர்கான சிறந்த தீர்வுகளைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த ஆண்டு கண்காட்சி மிகச் சிறந்த புதுமைகளைக் கொண்டிருக்கும் முக்கிய கண்காட்சியாளர்களுக்கும், அதிக விலை கொடுத்து டிக்கெட்டை வாங்குபவர்களுக்குமிடையே முக்கிய தொடர்பை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழியாக பிரத்யேக, தனியார் 5 நட்சத்திர லான்ஜான ரெகலியா லான்ஜை உருவாக்கியுள்ளது. இதனை 'அழைப்பிதழ் மட்டும்' அடிப்படையில் தனி உரையாடல்களை நடத்தவும் மற்றும் அதிக விலை பிசினஸுக்காகவும் மட்டும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு தொடர்ந்து ஒரு கடினமான பணியாக இருப்பதால், இந்தக் கண்காட்சியுடன் சேர்த்து பவர் இன்சைட்ஸ் இன்டு தி வேர்ல்டு ஆஃப் செக்யூரிட்டி என்னும் தலைப்பில் இரண்டு நாள் மாநாட்டை நடத்துவதன் மூலம் உலக பாதுகாப்பு சந்தையில் பெறப்பட்ட பொருத்தமான நுண்ணறிவுகளையும், ஏரியல் வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பத்தையும் முனைப்புடன் இணைக்க முடிவெடுத்துள்ளது. இந்த மாநாட்டில் ஸ்ரீ D.R. Karthikeyan, சேர்மன், Assocham Homeland Security Council; Lt. Gen. J. K. Sharma, AVSM, உத்தர பிரதேச அரசாங்கத்தின் அட்வைசர்; பேராசிரியர் Anmol Deshmukh, போலீஸ் மற்றும் சைபர் ஆலோசகர், உள்துறை, மஹாராஷ்டிரா அரசு; Col V S சந்த்ராவத், SM, CPP, PSC, க்ரூப் ஹெட் செக்யூரிட்டி, Adani Enterprises Limited; Cdr Sandeep Kumar, இயக்குநர் ரிஸ்க் & செக்யூரிட்டி, Vedanta Limited - Aluminium and Power; Sahima Hannan Datta, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை செக்யூரிட்டி மேலாளர், Shell India Markets Pvt Ltd.; Maj Gen R. C. Padhi, முன்னால் கூடுதல் சர்வேயர் ஜெனரல் & ஓய்வுபெற்ற பேராசிரியர், Centurion University; Sachin Punni, ரீஜினல் செக்யூரிட்டி இயக்குநர்-APAC, Cardinal Health; Ashish Nangia, தலைவர்- சேஃப்டி & செக்யூரிட்டி ஆப்பரேஷன்ஸ், இந்தியா & APAC, Intuit; Air Cmde Kedar R Thaakar, சீனியர் ஃபேகல்டி, Gujarat Forensics State University; Brig K A Mahabir (Retd), சீஃப் செக்யூரிட்டி & அட்மினிஸ்ட்ரேஷன் ITC Limited - Hotels Division; Rakesh Sharma, துணைத் தலைவர், GCSO- கார்ப்பரேட் செக்யூரிட்டி, Barclays; Col Ajay Bakshi, Cairn, CSO, கார்ப்பரேட் & ஆஃப்ஷோர் செக்யூரிட்டி, Cairn Oil & Gas (Vedanta Ltd); Herverinder Pal Singh, க்லோபல் சேஃப்டி & செக்யூரிட்டியின் ஏரியா இயக்குநர் - தெற்காசியா, Marriott Hotels; Jeetendra Kumar Singh, சீஃப் செக்யூரிட்டி அதிகாரி, Fortis Healthcare; Maj. Rohit Sharma, இணைத் துணைத் தலைவர் - செக்யூரிட்டி & ROW, Sterlite Power Transmission Limited போன்ற துறையின் முக்கிய ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள திட்டமிடப்பட்ட சில பிரபலமான தலைப்புகள் 'தெற்காசியாவில் வளர்ந்து வரும் பாதுகாப்பு இயக்கவியல்- கார்ப்பரேட் பாதுகாப்பு மற்றும் இழப்பு தடுப்புக்கான தாக்கங்கள்'; 'சி.எஸ்.ஓ.க்களிடமிருந்து அதிகரித்துவரும் எதிர்பார்ப்புகள் - நெருக்கடிகளைத் தடுப்பது மற்றும் வணிக தொடர்ச்சியை உறுதி செய்வது'; 'ஒரு நிறுவனத்தின் பாதுகாப்பு அபாயங்களின் முழு கோணத்தையும் புரிந்துகொள்வது'; 'கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களில் பாதுகாப்பான நகரங்கள், ஸ்மார்ட் வளாகங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பாதுகாத்தல்'; 'பாதுகாப்பு அமைப்புகளை ஸ்மார்ட்டானதாக, புத்திசாலித்தனமானதாக, திறமையானதாக மற்றும் சுயமாக கற்கக்கூடியதாக மாற்ற AI ஐப் பயன்படுத்துதல்' போன்றவையாகும்.
இந்த ஆண்டு, IFSEC இந்தியா விருதுகளின் 4வது பதிப்பை நடத்த உள்ளது. BFSI, சில்லறை விற்பனை, உற்பத்தி, மின்சாரம், உடல்நல பராமரிப்பு, PSUs, IT & ITES மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்துறை பிரிவுகளில் மின்னணு, பொருள் மற்றும் தீ பாதுகாப்புக்கு பின்னால் உள்ளவர்களை கெளரவிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. வலுவான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திரைக்குப் பின்னால் தொடர்ந்து பணியாற்றும் CSOக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் சிறப்பையும் புதுமைகளையும் இந்த விருதுகள் அங்கீகரிக்கும். IFSEC இந்தியா விருதுகளுக்கான செயல்முறை ஆலோசகர்கள் EYஆகும்.
Informa Markets பற்றி
Informa Markets, துறைகளுக்கும் சிறப்பு சந்தைகளுக்கும் வர்த்தகம் செய்ய, புதுமையாகச் செயல்பட மற்றும் வளர்ச்சியடைய மேடைகளை உருவாக்கியுள்ளது. எங்களின் போர்ட்ஃபோலியோவில் 550க்கு மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் மார்க்கெட்டுகளில் உள்ள பிராண்டுகள் உள்ளன. இதில் உடல்நல பராமரிப்பு மற்றும் மருந்தியல், கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் ஆடை, ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, ஆகியவை சில. நாங்கள் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் நேரடி கண்காட்சிகள், நிபுணர் டிஜிட்டல் பொருளடக்கம் மற்றும் நடவடிக்கை எடுக்கத்தக்க டேட்டா தீர்வுகள் ஆகியவற்றின் மூலம் ஈடுபட, அனுபவம் பெற மற்றும் பிசினஸ் செய்ய வாய்ப்புகளை அளிக்கிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக, நாங்கள் பல வகையான தனித்துவமிக்க சந்தைகளுக்கு உயிர்கொடுத்து, வாய்ப்புகளைப் பெற்று, ஆண்டின் 365 நாட்களும் உழைக்க அவர்களுக்கு உதவுகிறோம். மேலும் தகவலுக்கு, www.informamarkets.comஐ காணவும்
Informa Markets மற்றும் இந்தியாவில் எங்கள் பிசினஸ் பற்றி
Informa Markets, Informa PLCக்கு சொந்தமானது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழுவாகும் மற்றும் உலகிலேயே மிகப் பெரிய B2B நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளராகும். இந்தியாவில் உள்ள Informa Markets (முன்பு UBM India) இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது தனிப்பட்ட சந்தைகள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகம் செய்ய, புதுமையாகச் செயல்பட மற்றும் வளர்ச்சியடைய கண்காட்சிகள், டிஜிட்டல் பொருளடக்கம் மற்றும் சேவைகள், மற்றும் கலந்தாய்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உதவுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவிலான கண்காட்சிகள், 40 கலந்தாய்வுகள் ஆகியவற்றை நாடு முழுவதிலும் துறை விருதுகள் மற்றும் பயிற்சிகளுடன் சேர்த்து நடத்துகிறோம்; இதன் மூலம் பல துறை முழுவதிலும் வணிகம் செய்கிறோம். இந்தியாவில் Informa Markets மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகத்தைக் கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.informa.comஐ காணவும்.
எந்த ஊடகம் பற்றிய தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
Informa Markets in India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-6172700
லோகோ: https://mma.prnewswire.com/media/1056200/IFSEC_India_Logo.jpg
லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article