Food & Hotel India 2019 ல் 10 நாடுகளிலிருந்து பங்கேற்க உள்ள 120க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள்
- 18 ஆம்தேதி – 20 ஆம்தேதி செப்டம்பர் 2019 - Bombay Exhibition Center - மும்பை, இந்தியா
- இந்தியாவின் உண்மையான உயர்மதிப்பு கொண்ட சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் (ஹாஸ்பிட்டாலிட்டி) வர்த்தக கண்காட்சி
மும்பை, Aug. 27, 2019 /PRNewswire/ -- இந்தியாவின் முன்னணி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒன்றான Informa Markets in India (முன்னர் UBM India என அழைக்கபட்டது), அதன் உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியின் 2வது பதிப்பை, Food and Hotel India (FHIn) 2019 அறிவித்துள்ளது. கண்காட்சியானது 18 ஆம்தேதி – 20 ஆம்தேதி செப்டம்பர் 2019 ல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை Bombay Exhibition Centre (BEC), NSE NESCO Complex, Off Western Express Highway, Goregaon East, Mumbai- ல் நடைபெற உள்ளது.
ஆசியாவின் நன்கறியப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியாக கருதப்படும், FHIn (இந்தியாவில் அதன் இரண்டாவது வருடத்தில்) தொழில்துறை வல்லுநர்கள், தங்கள் வெற்றித் தயாரிப்புகள் மற்றும் சந்தைக்கான தீர்வுகளை காட்சிப்படுத்த வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச ஹாஸ்பிட்டாலிட்டி செயின்ஸ், ஆலோசகர்கள், சப்ளையர்கள், முதலீட்டாளர்களுடன் கூட்டணி உருவாக்க வாய்ப்புகளை அளிக்கிறது மற்றும் பல கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் அவர்களுடன் நெட்வொர்க்கிங் செய்யவும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது.
12 நாடுகளுக்கு இடையே நடைபெறும் 20 க்கும் அதிகமான முன்னணி உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சிகளில் FHIn 2019 மிகவும் முதன்மையான மற்றும் செல்வாக்குமிக்க வகையைச் சேர்ந்தது. Food and Hotel Asia Singapore, HOFEX and Hotelex, மற்றும் பல இதில் அடங்கியுள்ளன.
Mr. Yogesh Mudras, Managing Director, Informa Markets in India, கூறுகையில், "உணவு மற்றும் பானங்கள் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும், தொழில்துறைகளின் முக்கிய திறவுகோலாக, இந்திய உணவு மற்றும் விருந்தோம்பல் தொழில்துறை உருவாகி வருகிறது. தொழில்துறை வல்லுநர்கள் துடிப்புடன் இயங்குவதற்கு அவசியமான, மறைந்திருக்கும் திறன் மற்றும் மாறிவரும் போக்குகளை நாங்கள் தற்போது அதிகம் காண்கிறோம். நிலையற்ற நுகர்வுகளால் இயக்கப்படும் அதன் 1.30 பில்லியன் வலுவான நுகர்வோர்களால், விருந்தோம்பல் உணவுப்பிரிவு தொடர்ந்து வளர்ச்சியடைந்து விடுகிறது மற்றும் 2019-2023 ல், வருடாந்திர முதலீடாக $0.5-0.6 பில்லியனை துறை அடையும் எனவும் 2023க்குள் $2.8 பில்லியன் வரை மொத்த முதலீடு அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது."
அவர் மேலும் தொடர்ந்தார்,"உள்ளூர் சந்தைகளைத் தவிர்த்து 70 சதவீத சில்லரை விற்பனைகளுடன் உலகின் ஆறாவது பெரிய சந்தையாக இந்திய உணவு மற்றும் மளிகைப்பொருள் சந்தை உள்ளது, சர்வதேச பிராண்டுகள் தங்கள் வளர்ந்துவரும் சந்தைகளுக்காக தேடும் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகளையும் இந்தியா வழங்குகிறது. அர்த்தமுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளுடன், தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் மூன்று நாள் தீவிர வளர்ச்சி வாய்ப்புகளை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். எங்களது முன்னால் நிறுவனமான UBM அலுவலக ரீதியாக Informa Markets உடன் இணைந்துள்ளது, இந்த விரிவுபடுத்தப்பட்ட அமைப்பு உலகளவில், பிராந்திய அளவில் மற்றும் உள்ளூர் பகுதியில் வர்த்தக கூட்டணிகள், வர்த்தகம், ஆராய்ச்சி மற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளின் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும்."
Hospitality Strategy Summit (HSS2019): (தொழில்துறை அறிவு பரிமாற்றத்துக்காக), India International Culinary Classic (IICC): (தங்கள் உணவு திறமைகளை இந்தியா எங்கும் காட்சிப்படுத்துவதற்காக), IndiaBarista Championship (IBC): (காஃபி தொழில்நுட்பவல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் அறிவைப் பரிமாறும் தளமாக), Prowein Education Campaign India, (எதிர்காலத்திற்கான மதுமான வணிக விளையாட்டு திட்டத்தை கலந்தாலோசிக்க) Raw to Refresh: (உணவு தயாரிப்புகளை தனிச்சுவையுடைய உணவுப்பதார்த்தங்களாக மாற்றும் ஒர்க்ஷாப்), Journey to Entrepreneur: (ப்ரீமியம் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்களால் நடத்தப்படும் ஊடாடும் அமர்வு), Food Styling: (ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்டுகளின் செஃபுகளுக்கான ஒர்க்ஷாப்.) இந்த நிகழ்ச்சி உணவு அலங்கரித்தல் பற்றிய புதிய உள்நோக்குகளையும் Master Class on Kitchen Design & Planning, Purchase Managers Forum, Hospitality Tech Conclave மற்றும் Hospitality Leaders Roundtable அடங்கிய F&B தொழில்நுட்ப வல்லுநர்களை கவரும் பல அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடாடும் அமர்வுகள் கொண்டதாக FHIn 2019 கண்காட்சி இருக்கும்.
HPMF (Hospitality Purchase Managers Forum) PHA (Poona Hoteliers Association), iPHA (i Professional Housekeepers Association), FIFI (Forum of Indian Food Importers), WICA (Western India Culinary Association), AFSTi - Association of Food Scientists and Technologists (India), மற்றும் AHP (Association of Hospitality Professionals) போன்ற பல்வேறு முக்கிய அமைப்புகளால் FHIn 2019 ஆதரவு அளிக்கப்பட்டு உள்ளது.
நிதி ஆண்டு 2020ல் இந்திய உணவு தொழில்துறை US$482 பில்லியன்-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்புகளில், உலகெங்கும் வர்த்தகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. மற்றொரு வகையில், இந்தியாவில் மிக அதிக அந்நிய நேரடி முதலீட்டை(FDI) இழுக்கும் முதன்மையான 10 துறைகளில் ஒன்றாக இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை உள்ளது. சர்வதேச பிராண்டுகளுக்கான வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்த, இந்தியாவின் உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்தொழில்துறைக்கான தளத்தை FHIn முயற்சி வழங்குகிறது.
மூன்று நாள் நடைபெறும் கண்காட்சியில், அறிவுப் பகிர்வுக்கான மேடையை வழங்குவதற்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட,புதுமையான ஈடுபாடுகளுடன் கூடிய நிகழ்ச்சிநிரல் வடிவமைக்கப்பட்டு உள்ளது மற்றும் தொழில்துறையினரால் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கலந்தாலோசிப்பதற்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Informa Markets பற்றி
Informa Markets, வியாபாரம் செய்ய, தொழிலைப் புதிதாக துவங்க மற்றும் வளர்ச்சியடையத் தேவையான சிறந்த சந்தையிடங்களை உருவாக்கும் தொழில்துறைகளுக்கான தளமாகும். ஹெல்த்கேர், ஃபார்மாசூட்டிகல்ஸ், உட்கட்டமைப்பு, கட்டமைப்பு & ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, மருத்துவத்துறை, உணவு & குளிர்பானங்கள் மற்றும் ஹெல்த் & ஊட்டச்சத்து, மற்றும் பல சந்தைகளின் 550க்கும் அதிகமான சர்வதேச B2B நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகள் எங்களது போர்ட்ஃபோலியோவில் அடங்கியுள்ளன. நேரில் காணும் கண்காட்சிகள், ஸ்பெஷலிஸ்ட் டிஜிட்டல் உட்கருத்து மற்றும் செயல்படுத்தக்கூடிய தரவு தீர்வுகள் மூலமாக வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு உலகில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த, அனுபவிக்க மற்றும் வியாபாரம் செய்ய நாங்கள் வாய்ப்பை உருவாக்குகிறோம். உலகின் முன்னணி கண்காட்சிகள் ஒருங்கிணைப்பாளரான நாங்கள் வாழ்க்கைக்கான பல்வேறு சிறப்பு சந்தை வரம்புகளை கொண்டு வருகிறோம், வாய்ப்புகளை திறந்துவிடுகிறோம் மற்றும் ஆண்டின் 365 நாட்களும் வியாபாரம் செய்ய நாங்கள் உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும்www.informamarkets.com.
Informa Markets பற்றி மற்றும் இந்தியாவில் எங்களது வியாபாரம்
உலகில் முன்னணி தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான Informa PLCக்கு சொந்தமானது Informa Markets.
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான Informa Markets (UBM India என முன்னர் அழைக்கப்பட்டது) இந்தியாவில் வல்லுநர் சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்கள் ஆகியவற்றுக்கு உதவவும், கண்காட்சிகள், டிஜிட்டல் கருத்து மற்றும் சேவைகள் மற்றும் மாநாடுகள் & கருத்தரங்குகள் மூலம் உள்ளூரிலும் உலகம் முழுவதும் வியாபாரம் செய்யவும், புதிதாக தொழில் துவங்கவும் மற்றும் வளர்ச்சி பெறவும் உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் 25க்கும் அதிகமான பெரிய அளவிலான கண்காட்சிகள், 40 மாநாடுகள் இவற்றுடன் தொழில்துறை விருதுகள் மற்றும் பயிற்சிகளையும் நாடெங்கிலும் அளிக்கிறோம்; அதன்மூலம் பல தொழில்துறைகளுக்கிடையே வர்த்தகத்தை வளர்க்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில், Informa Markets க்கு அலுவலகங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் www.informa.com.
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
Informa Markets in India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Logo: https://mma.prnewswire.com/media/961654/FHIn_INDIA_Logo.jpg
Logo: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article