896 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்திய ISSA Global Biorisk Symposium வெற்றிகரமாக நிறைவடைந்தது
- ISSA மற்றும் Informa Markets US-உடன் இணைந்து Informa Markets in India-வினால் Biorisk Mitigation & Infection Control-காக நடத்தப்படும் ஒரு மெய்நிகர் நிகழ்வு
மும்பை, இந்தியா, Dec. 29, 2020 /PRNewswire/ -- Facilities Management Show போன்ற முன்னணி கண்காட்சிகளை நடத்தும் Informa Markets in India மெய்நிகர் வடிவில் ISSA மற்றும் ISSA-வின் ஒரு பிரிவான Global Biorisk Advisory Council® (GBAC)-உடன் இணைந்து முதலாவது இந்திய ISSA Global Biorisk Symposium-ஐ வெற்றிகரமாக நடத்தி முடித்தது. கடந்த 11 டிசம்பர் 2020 அன்று நடந்த மெய்நிகர் நிகழ்வில் நாவல் கொரோனாவைரஸ் மற்றும் பிற தொற்று ஏற்படுத்தும் காரணிகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், அதிலிருந்து மீளும் வகையிலும் சுத்தம் செய்யும் சேவையாற்றும் தொழிலாளர்களுக்கு உதவும் 896-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
ISSA, இன்டர்நேஷனல் சர்வீசஸின் துணைத் தலைவரான செல்வி Dianna Steinbach; Public Health Foundation of India-வின் தலைவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான பேராசிரியர் K. Srinath Reddy; டாக்டர் Raman R. Gangakhedkar; Indian Council of Medical Research-ன் நேஷனல் சேர்-ஆன டாக்டர் C. G. Pandit; Informa Markets, US-ன் குரூப் டைரக்டரான செல்வி Lindsay Roberts மற்றும் Informa Markets In India-வின் மேலாண் இயக்குநரான திரு. Yogesh Mudras ஆகியோரின் முன்னிலையில் இந்த மெய்நிகர் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
ISSA Global Biorisk Symposium-யின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய Informa Markets In India-வின் மேலாண் இயக்குநரான திரு. Yogesh Mudras பேசும்போது, "தொடரும் பெருந்தொற்று காரணமாக உலகம் எதிர்பார்க்காத சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சந்தையில் முன்னிலையில் இருப்பதற்காக உலகளாவிய அளவில் சந்தைகள் புத்தாக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, விரைவான தொழில்நுட்ப மேம்பாடு வாய்ப்புகளையும் சவால்களையும் அளிக்கும் வேளையில், சந்தையில் முன்னிலையில் இருப்பதற்காக புத்தாக்கம் செய்வது என்பது முதல்நிலையில் உள்ளது. Informa Markets in India கடந்த சில ஆண்டுகளாக Facilities Show India போன்ற கண்காட்சிகள் வழியாக, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் பணியிடங்களின் சேவைகள் மற்றும் வசதிகள் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தேவைகளையும் விழிப்புணர்வையும் உருவாக்கவும் தக்கவைக்கவும் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது. Biorisk Symposium-ஐ தொடங்கியதன் மூலம், நிபுணர்கள் தங்களுடைய அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், போக்குகளைக் கண்டறியவும், வேலை செய்யும் இடங்களில் பொது நலன் சூழல்களுக்குத் தயாரிக்கவும், தடுக்கவும், நிர்வகிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு உதவும் தீர்வுகளைத் தேடவும் ஒப்பிடமுடியாத அனுபவத்தையும் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். Raman R Gangakhedkar பேசும்போது, "மக்கள்தொகை பெருக்கத்தின் பல பாதகமான அம்சங்கள் மற்றும் குறைவான கல்வியறிவு வீதம் போன்றவை இருந்தாலும், கொரோனாவைரஸ் பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்திருக்கிறது. விரைந்து நடவடிக்கை எடுத்த கொள்கை வகுப்பவர்கள், குடிமக்கள் உட்பட்ட பல்வேறு பங்குரிமையாளர்களுமே இதற்குக் காரணம். COVID-19 அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு உயிரியல் போரை நாம் முறியடிக்க வேண்டும். பெருந்தொற்று பரவிய முதல் சில மாதங்கள் நாம் Personal Protective Equipments(PPEs), உயிரியல் வினையூக்கிகள், ஆக்சிஜன் வென்டிலேட்டர்கள், ஆய்வகங்களுக்கான RT-PCR எந்திரங்கள் போன்ற பல விஷயங்களில் நாம் தயார் நிலையில் இல்லாதிருந்தாலும், அடுத்த ஐந்து மாதங்களுக்குள், எல்லா விஷயங்களிலும் நாம் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது. ஆய்வகத் திறன் அதகரித்தது, நம்முடைய மருத்துவர்கள் சோர்வின்றி உழைத்தார்கள். நாடு முழுவதும் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவு ஆய்வக திறன் இருந்தாலும், நாம் சரியான முறையில் அதைப் பயன்படுத்த வேண்டியதிருந்தது. அதிகமான சுதந்திரத்துடன்கூடிய மக்களாட்சி நடைபெறும் நாடாக இருந்தாலும், காலத்தின் தேவையைக் கருதி குடிமக்களும் பொதுமுடக்க விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள்" என்றார்.
Public Health Foundation of India-வின் தலைவரான பேரா. K. Srinath Reddy, பேசும்போது, பெருந்தொற்றுகளைத் தவிர்ப்பதற்கு சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதன் தேவையையும் சிறந்த நகர்ப்புறத் திட்டமிடலைப் பின்பற்றுவதன் தேவையையும் வலியுறுத்தினார். புது டெல்லியில் உள்ள All India Institute of Medical Sciences-ன் முன்னாள் இதயவியல் துறையின் தலைவராகவும், அமெரிக்காவில் National Academy of Medicine-க்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இந்தியரும், பல பெருமைமிக்க சர்வதேச மற்றும் தேசிய முனைவர் மற்றும் ஃபெல்லோஷிப்பைப் பெற்றவருமான பேரா. Srinath Reddy பேசும்போது, "விலங்குகளில் உள்ள நுண்ணுயிரிகள் அவை வாழும் காட்டு விலங்குகளிலிருந்து தொடர்ந்து மனிதர்கள் வாழும் இடங்களுக்கும், வேலை செய்யும் இடங்களுக்கும் படிக்கும் மற்றும் பயணிக்கும் இடங்களுக்கும் பரவிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்த அபாயத்தைக் குறைப்பதற்கு நாம் எல்லா மட்டங்களிலும் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது, சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பது தொடங்கி நகர்ப்புற வாழ்க்கையையும் பணியிடங்களையும் மறுவடிவமைப்பு செய்வதுவரை பல வேலைகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது. உலகளாவிய அபாயத்தைப் போக்க உலகளாவிய உந்துதலை அளிக்க உலகளாவிய அறிவுப் பகிர்வு தேவைப்படுகிறது" என்றார்.
ISSA International Services-ன் துணைத் தலைவரான செல்வி Dianna Steinbach தன்னுடைய தொடக்கவுரையில் பேசும்போது, "ISSA Biorisk Symposium உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு உரிய தகவல்களை கிடைக்கச் செய்யவும், தற்போதைய உலகளாவிய பெருந்தொற்றின்போது இருப்பது போன்று சுத்தம் செய்தல் மற்றும் தொற்று நீக்கலைப் புரிந்துகொள்ளவும் உதவுவதற்காக வேலை செய்கிறது. அவர்கள் சேவையாற்றும் நிறுவனங்களிலும் சமூகங்களிலும் முக்கியமான வேறுபாட்டை உருவாக்க இது உதவும்" என்றார்.
"இதுதான் இந்தியாவில் ISSA-வின் முதலாவது நிகழ்வாகும். உலகெங்கும் 80 நாடுகளிலிருந்து 10,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள 100 ஆண்டு அனுபவமுள்ள நிறுவனமான ISSA உலகம் சுத்தம் செய்தலைப் பார்க்கும் விதத்தை மாற்ற முயற்சிக்கிறது, கட்டப்பட்ட சூழலையும் அதில் குடியிருப்போரையும் பாதுகாக்கும் சுத்தம் செய்யும் நிறுவனங்களையும், தொற்றுத் தடுப்பு ஊழியர்களையும், வசதிசார்ந்த தொழில்முறையாளர்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை மற்றும் தயார்நிலை மற்றும் மீள்தன்மையிலும், மற்றும் இடர் காலத்தில் தலைமைத்துவம் பற்றிக் கற்றுக்கொண்ட பாடங்களையும் சிறந்த நடைமுறைகளையும் வர்த்தக, நிறுவன மற்றும் குடியிருப்புகளை சுத்தம் செய்யும் தொழில்துறையினருக்கு அளிக்கும் வகையில் ISSA Global Biorisk வடிவமைக்கப்பட்டது. சுத்தம் செய்யும் நிறுவன ஊழியர்கள், சுற்றுச்சூழல் சேவையாளர்கள், ஃபாரென்சிக் ரெஸ்டோரேஷன் டீம்கள், உயிரிப்பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான திரவங்கள் சிந்தினால் அதை சரிசெய்யும் குழுக்கள், மற்றும் அலுவலகங்கள், உணவகங்கள், விடுதிகள், விமான நிலையங்கள், மாநாட்டு மையங்கள், அரங்கங்கள் மற்றும் எல்லா அளவிலான பொது இடங்கள் போன்ற இடங்களை நிர்வகிப்பவர்களுக்கு இந்த நிகழ்வு உகந்ததாக இருக்கும். இந்த நிகழ்வின் கோல்டு பார்ட்னராக SEKO-வும் சில்வர் பார்ட்னராக SCHEVARAN-வும், சில்வர் பார்ட்னராக AEROWEST-ம் இருந்தனர்.
பேங்காக் (மெய்நிகர் வடிவிலும், நேரடியாகவும் டிசம்பர் 3-4-ல் நடைபெற்றது) மற்றும் ஷாங்காய் (China Clean Expo (CCE) & Hotel Plus ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மெய்நிகர் வடிவில் செப்டம்பர் 10, 2020-ல் நடைபெற்றது) ஆகிய இடங்களில் நடைபெற்ற முக்கூட்டு சிந்தனையரங்கின் ஒரு பகுதியாக இது நடைபெற்றது.
பயோரிஸ்க் மேனேஜ்மெண்ட் - தி ஜர்னி அஹெட் என்ற தலைப்பின்கீழ் சர்வதேச மற்றும் இந்திய சிந்தனையாளர்களும் தலைவர்களும் கூடும் இடமாக இந்த கருத்தாழமிக்க மாநாடு அமைந்தது. இந்த மாநாட்டில் கீழ்க்காணும் தலைப்புகளில் உரைகள் இடம்பெற்றன: 'பயோரிஸ்க் மேனேஜ்மென்ட் – எ ஸ்டிரடீஜிக் ஃபிரேம்ஒர்க் ஃபார் ஆக்ஷன் (பேனல் டிஸ்கஷன்)'; 'மேக்கிங் சிட்டீஸ் லிவபுள், சேஃப், அன்டு ரெசிலியன்ட் டு அவாய்டு ஃபியூச்சர் பென்டமிக்ஸ் (பேனல் டிஸ்கஷன்)'; 'வாட் யு கேன் லேர்ன் ஃபிரம் சக்சஸ்ஃபுல் போஸ்ட் கோவிட்-19 ரியோப்பனிங் ஸ்டிரேட்டஜீஸ்'; 'ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்-நியூ வேய்ஸ் ஆஃப் ஒர்க்கிங் விதின் பப்ளிக் அவுட்பிரேக்ஸ் அன்டு பேண்டமிக்ஸ்'; 'குளோபல் ஹெல்த் இன்டெலிஜென்ஸ் நெட்வொர்க் (GPHIN) – ஏர்லி வார்னிங் சிஸ்டம் ஃபார் குளோபல் பப்ளிக் ஹெல்த் த்ரெட்ஸ்'. இதில் பேசிய முக்கிய பேச்சாளர்களில் Atomic Energy Regulatory Board -ன் அறிவியலாளரும் முன்னாள் வைஸ் சேர்மேனுமான டாக்டர் R. Bhattacharya; National Environmental Engineering Research Institute, CSIR, Ministry Of Science and Technology-ல் Health and Toxicity Cell-ன் தலைமை அறிவியலாளரும் தலைவருமான டாக்டர் K. Krishnamurthi; JM, RBP, Certified Forensic Operator®, Certified Bio-Forensic Restoration Specialist®-ஆன Patricia (Patty) Olinger; College of Public Health-ல் UNMC Department of Environmental, Agricultural and Occupational Health-ன் இணை பேராசிரியரான John Martin Lowe; ஆர்க்கிடெக்ட் Jit Kumar Gupta; International Institute for Environment and Development, UK-ல் Human Settlements துறையின் தலைமை ஆராய்ச்சியாளரான டாக்டர். Aditya Bahadur; WRI India Ross Centre for Sustainable Cities-ன் ED-யான திரு. Madhav Pai; UN-Habitat India-வின் வேஸ்ட் மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட்டான செல்வி. Swati Singh Sambyal ஆகியோர் அடங்குவர்.
ISSA Global Biorisk Symposium-ன் நிபுணர்கள் குழுவும் தெரில்துறை மற்றும் உலகளாவிய கல்வியாளர்களும் COVID-19 நோயை உருவாக்கக்கூடிய வைரஸான SARS-CoV-2 சார்ந்த பல்வேறு தலைப்புகளில் பேசினர். முன்னணி தொழிலாளர்களுக்கான பயிற்சி, சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் செயல்முறைகள், மற்றும் பங்குரிமையாளர்களுடன் தொடர்புகொள்ளுதல் ஆகியவற்றுக்கான யுத்திகளும் இதில் அடங்கும்.
உலகளாவிய சுத்தம் செய்தலுக்கான துறை சங்கமான ISSA-யின் ஒரு பிரிவான Global Biorisk Advisory Council® (GBAC) மற்றும் Informa Markets-உடன் இணைந்து ISSA Global Biorisk Symposium நடத்தப்பட்டது. ISSA Global Biorisk Symposium உலக அளவில் பல மெய்நிகர் கருத்தரங்கங்கள் ஒருங்கிணைத்துள்ளன. நுண்கிருமி-நோய் உண்டாக்கும் காரணிகளின் அபாயத்தை பகுப்பாய்வு செய்தல், தணித்தல், பதில்நடவடிக்கை எடுத்தல், மீட்டல் போன்ற விஷயங்களில் ஆழமான அறிவைக் கொண்டுவரும் வகையில் ISSA Global Biorisk Symposium வடிவமைக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கின் நிபுணர்கள் வர்த்தக, நிறுவன, மற்றும் சுத்தம் செய்யும் சமூகத்தினருக்குப் பலனளிக்கும் முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளை அளிக்கின்றனர். ISSA Global Biorisk Symposium வலைதளமான www.issashow.com/symposium/en/home.html-ல் எல்லா கருத்தரங்குகளின் எல்லா சமீபத்திய தகவல்களும் தொடர்ந்து இடம்பெறும்.
ISSA பற்றி
விநியோகிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்புப் பிரதிநிதிகள், மொத்த விற்பனையாளர்கள், கட்டட சேவை ஒப்பந்ததாரர்கள், இருப்பிட சேவையாளர்கள், இருப்பிட சுத்தம் செய்பவர்கள், மற்றும் தொடர்புடைய சேவை உறுப்பினர்கள் உட்பட 9,300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ISSA சுத்தம் செய்யும் துறைக்கான வர்த்தக சங்கங்களில் உலகில் முன்னிலையில் உள்ளது. மனித உடல்நலம், சுற்றுச்சூழலில் ஒரு முதலீடாக சுத்தம் செய்தலை ஊக்குவிக்கத் தேவையான தொழில் கருவிகளை அதன் உறுப்பினர்களுக்கு அளிப்பதன் மூலம் சுத்தம் செய்தலை உலகம் கண்ணோக்கும் விதத்த மாற்றுவதில் இச்சங்கும் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் IL, நார்த்புரூக்-ஐ தலைமையிடமாகக் கொண்ட இதன் வட்டார அலுவலகங்கள் ஜெர்மனியின் மேய்ன்ஸ், கனடாவின் ஒயிட்பியிலும், ஆஸ்திரேலியாவில் பரமட்டாவிலும், தென் கொரியாவின் சியோவிலும், சீனாவின் ஷாங்காயிலும் அமைந்துள்ளன. கூடுதல் தகவல்களுக்கு, issa.com, ISSA-ன் LinkedIn குழுவின் கலந்துரையாடலில் இணையுங்கள், ISSA-வின் Facebook பக்கத்திலும் Twitter கணக்கையும் பின்பற்றுங்கள். கூடுதல் தகவல்களுக்கு, issa.com என்ற வலைதளத்தைப் பாருங்கள், அல்லது அழைக்கவும் 800-225-4772 (வட அமெரிக்கா) அல்லது 847-982-0800.
ISSA-வின் ஒரு பிரிவான GBAC
ISSA-வின் ஒரு பிரிவாக உள்ள Global Biorisk Advisory Council (GBAC)-ல் நுண்கிருமி-நோய் உண்டாக்கும் காரணிகளின் அபாயத்தை பகுப்பாய்வு செய்தல், தணித்தல், பதில்நடவடிக்கை எடுத்தல், மீட்டல் போன்ற விஷயங்களில் நிபுணாகள் உள்ளனர். அவர்கள் உயிரியல் அபாயம் மற்றும் நிகழ்நேர பிரச்சனைகளை தணிக்க, விரைவாகச் சரிசெய்ய மற்றும் / அல்லது மீண்டுவர முயற்சிக்கும் அரசு, வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பயிற்சிகளையும், வழிகாட்டுதலையும், சான்றளிப்பையும், இடர் மேலாண்மை உதவியையும் தலைமைத்துவத்தையும் வழங்கி வருகிறார்கள்.
உயிரிஇடர் மேலாண்மைத் திட்ட மதிப்பீடு மற்றும் பயிற்சி, Forensic Restoration® பதிலிருப்பு மற்றும் சீராக்கம், GBAC STAR™ ஃபசிலிட்டி அக்ரெடிட்டேஷன் புரோகிராம், பயிற்சி மற்றும் கட்டட உரிமையாளர்கள் மற்றும் ஃபசிலிட்டி மேலாளர்களுக்காக தனிநபர்களுக்கான சான்றளிப்பு ஆகியவை நிறுவனத்தின் சேவைகளில் அடங்கும். கூடுதல் தகவல்களுக்கு www.gbac.org என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. நேரடி கண்காட்சிகள், இலக்கு டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் உலகெங்கும் வாய்ப்புகளை சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு நாங்கள் அளித்து வருகிறோம். மருந்து, உணவு, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு உட்பட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் நாங்கள் இணைக்கிறோம். உலகின் முன்னணி சந்தை-உற்பத்தி நிறுவனம் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.informamarkets.com/en/regions/asia/India.html என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra - [email protected]
Mili Lalwani - [email protected]
Logo: https://mma.prnewswire.com/media/1308707/ISSA_Logo.jpg
Logo: https://mma.prnewswire.com/media/1388220/Facility_Virtual_Expo.jpg
Logo: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article