8-வது OSH India கண்காட்சி மும்பையில் கோலாகலமாகத் தொடங்கியது
தொழில் பாதுகாப்பு & சுகாதாரத் துறைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தித் தக்கவைக்கிறது
Informa Markets in India-னால் நடத்தப்படும் தொழில் பாதுகாப்பு & சுகாதாரத் துறைக்கான தெற்காசியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சி
மும்பை, Nov. 29, 2019 /PRNewswire/ -- ஒரு முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), மும்பையில் உள்ள Bombay Exhibition Centre-ல் 8-வது OSH India கண்காட்சி தொடங்கியது. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்காக இரு நாட்கள் (நவம்பர் 28-29) நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பற்றிப் பேசவும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த விஷயங்களில் அத்தியாவசியமான சவால்களில் சிலவற்றுக்கு தீர்வுகளைத் தேடவும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளை ஒரே தளத்தில் ஒன்றிணைத்தது.
OSH India, 2019-ன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் - National Safety Council-ன் Director General-ஆன Mr. Lalit Gabhane; மகாராஷ்ட்ரா அரசின் Chief Fire Officer & Fire Advisor-ஆன Mr. Santosh Warick; British Safety Council-ன் Chief Executive-ஆன Mr. Mike Robinson; Indian Association of Occupational Health-ன் National President-ஆன Dr. Sidram K Raut மற்றும் Safety Appliances Manufacturers' Association-ன் President-ஆன Mr. Hemant Sapra; Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr. Yogesh Mudras மற்றும் Informa Markets in India-வின் Group Director-ஆன Mr. Pankaj Jain மற்றும் பல துறை சார்ந்த பிரமுகர்கள்.
ஒரு துறைரீதியான நிகழ்வு என்ற முறையில் OSH India-விற்கு Tata Communications, Udyogi, Mallcom, Lifegear, Dupont, Ansell, முதலான துறை சார்ந்த முன்னணி கண்காட்சியாளர்கள் கலந்துகொண்டது அதன் தேவையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு, இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, சீனா, யு.கே, பெல்ஜியம், இலங்கை, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, அயர்லாந்து, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 180-க்கும் மேற்பட்ட பிராண்டுகளும் கலந்துகொண்டனர்.
மும்பையில் நடக்கும் 8-வது OSH India பற்றி Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr Yogesh Mudras பேசும்போது, "ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சராசரியாக 4.75 மில்லியன் மக்கள் தொழிலாளர்களாகிறார்கள். பலமான கார்ப்பரேட் பாதுகாப்புக் கலாச்சாரத்தில், மிகச் சிறந்த திறமைசாலிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், நல்ல உற்பத்தியை உறுதி செய்யவும் இந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தோடு அவர்களுடைய உணர்வுரீதியான நலனையும் நிறுவனங்கள் முன்னுரிமையளித்துகு் கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானம் போன்ற உற்பத்தி மற்றும் சார்புடைய துறைகளில் உள்ள நிறுவனங்கள் தொழில் இடர்கள் பற்றி வழிப்புணர்வு பெற்று வருகிறார்கள், கடந்த காலத்தில் நடந்த விபத்துக்கள் காரணமாக, உதாரணமாக சமீபத்தில் ஒரு எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையத்தில் நடந்த மிகப்பெரிய தீவிபத்து போன்றவை காரணமாக ஒரு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஒழுங்குமுறை விதிகள் வழியாக அரசுகளும் உட்கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தி வருகின்றன. அதிகரித்து வரும் உலகளாவிய முதலீடுகளோடு சேர்த்து பணியிடப் பாதுகாப்பு சம்பந்தமான வளங்களையும் அளித்து வருகின்றன. தொழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின்மீது அதிக கவனம் செலுத்தினாலும், பல்வேறு நிலைகளில் இன்னும் போதுமான தெளிவு இல்லை, பொதுமக்களிம் போதுமான விழிப்புணர்வு இல்லை. நிர்வாகமும், தொழிலாளர்களும் பாதுகாப்பினை மிக முக்கியமான விஷயமாக எப்போதும் நினைப்பதில்லை. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பயிற்சி வகுப்புகளை நடத்த பல நிறுவனங்கள் முன்முயற்சிகளை எடுத்திருந்தாலும், ஒரு தெளிவான முழுமையான மற்றும் பிணைப்புடைய யுத்தி இருப்பதில்லை. OSH India வழியாக Informa Markets in India நாட்டில் அதிகரித்துவரும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் தொழில்துறையின் குறிக்கோளை எதிரொலிக்கிறது. தன்னுடைய கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாகவும் புத்தாக்கங்கள் மற்றும் அறிவைக்கொண்டு இந்த இடைவெளியை நிரப்ப முயற்சித்துள்ளது" என்றார்.
OSH India 2019-ல் துறை நிபுணர்களின் உரைகள் -
மகாராஷ்டிரா அரசின் Chief Fire Officer and Fire Advisor-ஆன Mr. Santosh Warick நிகழ்ச்சியில் தன்னுடைய உரையில், "இந்தியாவில் ஒரு தீ விபத்தின்போது அதற்கான பதிலிறுப்பு நேரம் வளர்ச்சியடைந்த நாடுகளைவிட மிக அதிகமாக இருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் பதிலிறுப்பு நேரம் 8 முதல் 10 நிமிடங்களுக்குள் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பிற காரணங்கனால், மும்பை மற்றும் டெல்லியில் இந்த பதிலிறுப்பு நேரம் 20 முதல் 30 நிமிடங்களாக உள்ளது" என்றார்.
Informa markets in India-வினால் நடத்தப்பட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என அழைக்கப்பட்ட இரு நாள் கண்காட்சியில் Warick அவர்களும் மற்ற முக்கிய பிரமுகர்களும் உரையாற்றினார்கள். மேலும் அவர் பேசும்போது, "தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கை, பயிற்சி பெற்ற நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை தீயணைப்புப் பணியில் உள்ள இடைவெளி இந்தியாவில் 80 விழுக்காடாக உள்ளது. மும்பையிலும்கூட இந்த இடைவெளி 30 விழுக்காடாக உள்ளது. மகாராஷ்டிராவில் 50,000-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் உள்ளன. அடிமட்ட நிலையிலிருந்து பிரச்சனையைச் சமாளிப்பது மிக மிகக் கடினமாக உள்ளது. நிர்வாகத்தின் உயர்மட்டத்தின் ஆழுந்த ஈடுபாடு இதற்கு அவசியம். அப்போதுதான் பாதுகாப்புக் கலாச்சாரத்தையும், தொழில் தொடர்ச்சியையும் மனதில் ஆழப் பதிய வைக்க முடியும்" என்றார்.
"சுகாதாரமும் பாதுகாப்பும் உரிமையாளரின் மற்றும் குடியிருப்பவரின் பொறுப்பு மட்டுமே. பல விபத்துகளுக்கு கவனமின்மையே முக்கியமான காரணமாக உள்ளது. எச்சரிக்கையாக இருப்பதும், எல்லா விதிமீறல்களையும் தவிர்ப்பதும் அவசியம். ஏனெனில் இவைதான் மிகப்பெரிய விபத்துகளுக்குக் காரணம். ஒரு தொழிலாளிக்கான பயிற்சி என்பது ஒரு தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும்," என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய British Safety Council-ன் Chief Executive-ஆன Mr. Mike Robinson, பேசும்போது, "உலக அளவில், பதற்றம், மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் காரணமாக 57 விழுக்காட்டு வேலை நாட்கள் வீணாகின்றன. சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் இடையில் உண்மையில் ஒரு முக்கியமான பிணைப்பு உள்ளது. மோசமான மன நலம் வேலையில் விபத்து ஆபத்தை அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. நீங்கள் ஒரு ஆரோக்கியமான பணியாளராக இல்லாவிட்டால் ஒரு பாதுகாப்பான பணியாளராக உங்களால் இருக்க இயலாது என்று ஒரு பழமொழி உள்ளது. எனவே, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மையில் மற்றும் சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை தனித்தனியாகப் பார்ப்பதைவிட ஒரு ஒருங்கிணைந்த முறையில் நிர்வகிப்பது அதிக பலனளிக்கும் என்று ஆராய்ச்சிகள் ஏற்கனவே தெரிவிக்கின்றன" என்று மேலும் தெரிவித்தார்.
National Safety Council-ன் Director General-ஆன Mr. Lalit Gabhane பேசுகையில், "கடந்த இரண்டு மூன்று பத்தாண்டுகளோடு ஒப்பிடுகையில், இத்துறை மிக அதிக வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. ஆனால், தொழிலாளர்கள், குடிமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியதுள்ளது. OSH அதற்காகவே வேலை செய்கிறது. Maharashtra Fire Services போன்ற அரசு அமைப்புகளும் இந்தியா முழுவதும் வழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு பிரச்சாரங்களையும் திட்டங்களையும் கொண்டு வருகின்றன.
இந்த ஆண்டு நடக்கும் இந்தக் கண்காட்சிக்கு -- National Small Industries Corporation (NSIC), International Powered Access Federation (IPAF), Indian Society of Ergonomics (ISE), Indian Technical Textiles Association, Safety Appliances Manufacturers Association (SAMA), Air India Engineering Services Ltd (AIESL), National Accreditation Board of Certifying Bodies (NABCB), Board of Certified Safety Professionals (BCSP), MRO Association, Safety Training நிறுவனங்கள் மற்றும் பல இதற்கு ஆதரவளிக்கின்றன.
இந்த ஆண்டு நடைபெறும் கருத்தரங்கில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிப் பகிர்ந்துகொள்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதனோடு இணைந்து கண்காட்சியானது பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் உள்ள மிக முக்கியமான சவால்களுக்குத் தீர்வுகளை அடையாளம் காண உதவுகிறது. மாநாட்டில் உள்ள முக்கிய அமர்வுகளிலும் குழுவிவாதங்களிலும் துறையில் நாடு முழுவதிலும் உள்ள நிபுணர்களும் முன்னணி சர்வதேச நிறுவனங்களும் கலந்துகொண்டுள்ளன. மாநாட்டில் பேசிய உரைகளின் தலைப்புகளில் சில: 'லீடர்ஷிப் இன் ஹெல்த் அன்டு வெல்பீயிங்: ஸ்டாப்பிங் த ரைஸ் இன் பிரசன்டீயிசம்'; 'OSH விஷன் ஜீரோ'; 'லேட்டஸ்ட் ரிஃபார்ம்ஸ் இன் ஆக்குப்பேஷனல் சேஃப்டி அன்டு ஹெல்த லாஸ் இன் இன்டியா அன்டு த வே ஃபார்வர்டு: கீ சேலஞ்சஸ் இன் தெயர் இம்ப்ளமென்டேஷன்'; 'எ பவர்டாக் ஆன் இம்ப்ரூவிங் ஹியூமன் பெர்ஃபார்மன்ஸ் அன்டு சேஃப்டி'; கருத்துப் பட்டறைத் தலைப்பு "எலக்ட்ரோஸ்டாட்டிக் ஹசார்ட்ஸ் ரிஸ்க் அசெஸ்மெண்ட் அன்டு தெயர் அலிவியேஷன்'; 'த நீடு ஃபார் பெர்மிட் டு ஒர்க் சிஸ்டம்ஸ் ஃபார் கிரிட்டிக்கல் ஆப்பரேஷன்ஸ்'; 'ரோல் அன்டு நீட் ஃபார் அக்ரெடிட்டேஷன் இன் HSE பை NABCB' போன்ற தலைப்புகளில் அமர்வுகள் இருக்கும்.
இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பாதுகாப்பை ஊக்குவிக்க, OSH India 2019-வில் ஒரு SAFETY FASHION WALK நடத்தப்பட இருப்பதோடு, பெருமைமிக்க OSH India AWARDS 2019-ம் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகளை எடுத்திருக்கும் இந்தியாவில் இயங்கும் தொழில்கள், நிறுவனங்கள், அலையன்ஸ் மற்றும் பொது அல்லது தனியார் துறைகளில் உள்ள தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. கட்டுமானம், பார்மா, கெமிக்கல்ஸ், FMCG, BPO, வங்கித்துறை, சுத்திகரிப்பு நிலையங்கள், ஆயில் & எரிவாயு, ஆட்டோமொபைல்ஸ், லாஜிஸ்டிக்ஸ் & போக்குவரத்து, மின்சாரத்துறை, SME-கள், அக்ரோ, சுகாதாரப் பராமரிப்பு, உணவு, இரும்பு & ஸ்டீல், ஐடி, ரப்பர் தொழில்துறை பல துறைகளிலிருந்து இந்த ஆண்டு 220 OSH Awards-கான விண்ணப்பங்கள் வந்திருந்தன. விண்ணப்பதாரர்கள் மத்தியில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்குள் சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் இந்த விருதுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. நவம்பர் 28 அன்று நடைபெறவிருக்கும் இந்த விருது இரவு நிகழ்ச்சியானது தொழில்துறையின் நிபுணர்களும் முன்னோடிகளும் இணைந்த கொண்டாட்டமாகவும், கவர்ச்சிகரமான பொழுதுபோக்கு மிக்க இரவாகவும் இருந்தது.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் 365 வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும்.
Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
Roshni Mitra
[email protected]
Informa Markets in India
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Informa Markets in India
Photo: https://mma.prnewswire.com/media/1037095/dignitaries_OSH_India.jpg
Logo: https://mma.prnewswire.com/media/1034992/OSH_India.jpg
Logo: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article