13-வது Renewable Energy India 2019: பசுமை ஆற்றலுக்கு ஆதரவாக 20% அளவுக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது
- இந்தக் கண்காட்சியில் 729 கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். சாதனை அளவாக 36,909 பார்வையாளர்கள் பங்கேற்று கண்டுகளித்துள்ளனர்
- 1,000 லிட்டர் எரிபொருளை மிச்சப்படுத்தியும் 180 மரங்களை நட்டும் பசுமை இயக்கத்திற்கு ஒரு முன்மாதிரியை REI Expo 2019 ஏற்படுத்தியிருக்கிறது
- 'Giving the Business of Power...the Power to Do Business' என்ற தலைப்பில் அமைந்த மாநாடு வெற்றியடைந்தது
புது டெல்லி, Oct. 21, 2019 /PRNewswire/ -- Informa Markets in India (முன்னர் UBM India) 13-வது Renewable Energy India - REI மூன்று நாள் கண்காட்சியை (18 - 20 செப்டம்பர் 2019) கிரேட்டர் நொய்டாவில் உள்ள இன்டியா எக்ஸ்போ சென்டரில் நடத்தியது இந்த ஆண்டு REI எக்ஸ்போ 2019-க்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 20% அதிகரித்திருக்கிறது. காற்று, நீர்மின்திறன், மற்றும் உயிர்த்திரளுடன் சூரிய ஆற்றல்மீது உரிய கவனம் செலுத்தி அதிக முழுமையான அணுகுமுறையின்மீது இந்தக் கண்காட்சி கவனம் செலுத்தியது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, டிரான்ஸ்மிஷன் மற்றும் பகிர்மானத்தில் உள்ள ஒழுங்குறைக் கட்டமைப்பிலும் அதன் சவால்களிலும்ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்களின் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை இந்தக் கண்காட்சி ஒருங்கிணைத்தது. இந்த மூன்று நாள் கண்காட்சியில் 729 கண்காட்சியாளர்களும். பார்ட்னர்களும் கலந்துகொண்டதோடு, 36,909 பார்வையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கண்காட்சி அரங்குகள் 18,162 ச.மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. 27 கருத்தரங்கு அமர்வுகள் நடத்தப்பட்டு அதில் உலகெங்குமிருந்து அழைக்கப்பட்டிருந்த 243 பேச்சாளர்களின் உரைகள் பல்வேறு தலைப்புகளில் இருந்தன. இதில் 1,287 பேராளர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
கண்காட்சியின் 3 நாட்களில், சூரிய மற்றும் காற்று மின்சக்தித் துறையில் ஈடுபட்டுள்ள இன்ஸ்டாலர்கள், நிறுவனஙக்ள், வங்கிகள், முதலீட்டாளர்கள், மின்உற்பத்தியாளர்கள், ரூஃப்டாப் மற்றும் கிரவுண்டு மவுண்டிங் சொலூஷன் புரொவைடர்கள், சிஸ்டம் இன்டகிரேட்டர்ஸ், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள், மற்றும் ஃபிரைட் ஃபார்வர்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து மின்சக்திக்கான மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கான தேவையைத் தீர்ப்பது பற்றியும், ரெசிடென்ஷியல் சோலார் மற்றும் அக்ரோபோட்டோவோல்டாக்ஸில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றியும் பெரிய அளவிலான திட்டங்களில் கடைபிடிக்க வேண்டிய சிறந்த நடவடிக்கை வழிகாட்டுதல்கள் பற்றியும் பேசினர். அதிக கூர்மையானதாகவும் இலக்கினை எட்டும் வகையிலும் இருப்பதற்காக, Business to Business (B2B) கூட்டங்கள் இரு வெவ்வேறு மண்டலங்களில் நடத்தப்பட்டன. உற்பத்தி வாய்ப்பு தொடங்கி, நிலம் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிக்கல்களினால் ஏற்படும் பெரிய திட்டங்களுக்கான சவால்கள், DISCOM-னால் ஏற்படுத்தப்படும் ரூஃப்டாப் சவால்கள், குறைந்த விலைப்புள்ளிகள், பேமண்ட் பிரச்சனைகள், நெட்-மீட்டரிங், மற்றும் நிதியளிப்புவரை பல விஷயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
REI 2019-ன்போது 37 முதன்மை CEO-களின் CEO Conclave, ஃபினான்சியல் லீடர்ஷிப் ஃபோரம், குவாலிட்டி ரவுண்ட் டேபிள் & ஃபியூச்சர் ஆஃப் PV, 6-வது இன்டோ-ஜெர்மன் எனர்ஜி சிம்போசியம், 1-வது SBC Empowering women summit India, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் புதுமை மற்றும் தனிச்சிறப்பினை அங்கீகரிக்கும் வகையில் 5-வது Renewable Energy India awards ஆகியவையும் நடைபெற்றன.
CEO Conclave-ன்போது நடைபெற்ற முக்கியமான விவாதம் 'Decarbonisation and Digitalisation - A Visionary Debate'., என்ற தலைப்பில் அமைந்தது. புவி வெப்பமடையும் சூழலில் டிகார்பனைசேஷன் மற்றும் டிஜிட்டலைசேஷன் ஆகியவற்றை மனதில் கொண்டு திறன்மிக்க ஆற்றலின் புதி யுகத்திற்குச் செல்வது பற்றி விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டது.
'Giving the Business of Power...the Power to Do Business' என்ற கருப்பொருளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த REI 2019 கண்காட்சிக்கு International Solar Energy Society, Indo-German Energy Forum SO, BloombergNEF, Mercom Communications, Bridge to India, World Business Council for Sustainable Development (WBCSD), Natural Resources Defense Council, Global Energy Storage Alliance, Standards and research, leading associations like Indian Bio Gas Association, Indo German Energy Forum, Solar Business Club, All India Solar Industries, APVIA, Indo German Chamber of Commerce, Skill Council for Green Jobs, National Solar Energy Federation of India மற்றும் GIZ, போன்றவர்கள் அதரவளித்தனர்.
கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைப் பற்றிப் பேசிய Informa Markets in India-வின் நிருவாக இயக்குநரான திரு. Yogesh Mudras பேசும்போது, "RE துறையில் இன்னும் அதிக வளர்ச்சியை நாடு எதிர்பார்க்கும் இந்த சமயத்தில் இத்துறையில் உள்ளவர்கள் இணையவும், தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், மிகச்சமீபத்திய போக்குகள் மற்றும் புதுமைகள் பற்றி அறிந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகள் பற்றி அறியவும், சமநிலையான தொழில்நுட்பக் கலவையை மேற்கொள்ளவும், அடுத்த வளர்ச்சிக் கட்டத்திற்கு துறையை வழிநடத்திச் செல்லவும் ஒது தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பது நம்முடைய இந்த ரினீவபுள் எனர்ஜி இன்டியா எக்ஸ்போ (Renewable Energy India Expo)-வின் இலக்காக இருந்தது. புதுக்கவல்ல ஆற்றல் துறையில் இந்தியா ஒரு முக்கியமான முதலீட்டாளராக ஆகி வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் $90 பில்லியன் அளவுக்கு இத்துறைக்காக ஒதுக்கியுள்ளது. இத்தகைய மிகப்பெரிய முதலீட்டை செய்வதற்கான முன்முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது. அதே நேரம், இதில் ஈடுபட்டுள்ள எல்லா பங்குரிமையாளர்களும் உறுப்பினர்களும் இணைந்து அதே நோக்கத்துடன் உழைப்பது அவசியம். இந்த ஆண்டு, CEO வட்டமேசை, ஃபினான்சியல் லீடர்ஷிப் ஃபோரம், விருது வழங்குதல் பொன்ற பல நிகழ்ச்சிகளோடு "Giving the Business of Power…. The Power to Do Business' என்ற தலைப்பில் அமைந்த கருத்தரங்கம் வழியாக இந்திய உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் புத்தாக்கங்களின்மீது நாம் கவனம் செலுத்தினோம். புதுப்பிக்கவல்ல ஆற்றல் வளங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. அந்த வேகத்தைத் தொடர, அதற்கு எதிராக உள்ள சவால்களுக்குத் தீர்வு காண வேண்டும், இந்தியாவின் பசுமைத் திட்டத்திற்கு உதவ வேண்டும். தனித்துவமான முனைப்புடைமை மற்றும் முக்கிய பங்குரிமையாளர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பினாலும் RE துறைக்கான அத்தகைய தளமாக REI எக்ஸ்போ அமைந்தது" என்று குறிப்பிட்டார்.
REI எக்ஸ்போ 2019 முழு நிகழ்வையும் நடத்தி முன் வைத்ததோடு நில்லாமல், பசுமை இயக்கத்திற்கும் அதன் தாக்கத்திற்கு் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவும் முன்முயற்சி எடுத்தது. பார்வையாளர்களுக்காக மின் வாகனங்கள் நிகழ்வின்போது இயக்கப்பட்டன. மூன்று நாட்களில் அந்த வாகனங்கள் சென்ற தூரம் 12,000+ கிமீ. பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 2500. இதன் மூலம் சுமார் 1,000 எரிபொருள் சேமிக்கப்பட்டது. மிகவும் குறிப்பாக 3.25 டன் அளவுக்கு Co2 புகைவெளியீடு குறைக்கப்பட்டது. கண்காட்சி ஒரு தாக்கத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை, அதை எப்படிச் செய்வது என்றும், உலகை வாழச் சிறந்த இடமாக எப்படி மாற்றலாம் என்றும் செய்து காட்டியது.
Renewable Energy India (REI) கண்காட்சி பற்றி:
REI (Informa Markets in India)-வினால் நடத்தப்பட்டது. Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து https://www.renewableenergyindiaexpo.com/ என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets in India பற்றி
Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் தொழில் அறிவு, மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும், துறை விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும், நாடு முழுவதும் பயிற்சிகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம்.
இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து http://www.informamarkets.com/ என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
ரோஷினி மித்ரா
[email protected]
மிலி லால்வாணி
[email protected]
+91-22-61727000
Logo: https://mma.prnewswire.com/media/997528/REI.jpg
Photo : https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article