உணவு, ஆரோக்கியம் மற்றும் பேக்கேஜிங்குக்கான இந்திய துணைக் கண்டத்தின் அதிக ஒருங்கிணைந்த B2B கண்காட்சி
மும்பை, Oct. 25, 2019 /PRNewswire/ -- ஒரு முன்னணி B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான Informa Markets in India (முன்னர் UBM India) - உணவு, ஆரோக்கியம், பேக்கேஜிங் மற்றும் பிராசஸிங் துறைகளுக்கான 14-வது Food Ingredients India & Health Ingredients (Fi India & Hi) கண்காட்சியையும் 2-வது ProPak India-வின் கண்காட்சியையும் இன்று வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
Dr Pallavi Darade - FDA Commissioner of Maharashtra அவர்களாலும் Dr. Yogesh Kamat - Director FFSAI (Western Region); Dr Prabodh Halde - உடனடி முந்தைய President AFSTI & Mr Piruz Khambatta - Rasna International ஆகியோராலும் Fi India & Hi கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. ProPak India கண்காட்சியின் தொடக்க விழாவில் Mr C. K. Raganathan - Founder, CavinKare India Pvt Ltd; Mr Samir Limaye, President, Institute of Packaging Machinery Manufacturers of India (IPMMI); Mr Yogesh Mudras, Managing Director for Informa Markets in India மற்றும் Mr. Rahul Deshpande, Group Director for Informa Markets in India ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைமை விருந்தினரான, Dr. Pallavi Darade - FDA Commissioner of Maharashtra பேசும்போது, "இது மும்பைக்கும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் இந்தியாவிற்கும்கூட பெருமை மிக்கதாக உள்ளது என நான் நம்புகிறேன். இத்தகைய கண்காட்சியை ஏற்பாடு செய்ததற்காக இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். மகாராஷ்டிரா இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் எப்போதுமே முன்னிலையில் உள்ளது. உணவுத் தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட கண்காட்சிகளில் குறிப்பாக B2B தொடர்பு ஏற்படும் வகையிலான கண்காட்சிகளில் அது உணவு உட்பொருட்கள், சுகாதாரம் அல்லது பேக்கேஜிங் என்ற இந்த எல்லாத் துறைகளையும் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் ஒரு குடையின்கீழ் கூடும்போது அதிக உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்."
அருகருகில் அமைந்த கண்காட்சிகள் இத்துறையைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் உணவு உட்பொருட்கள், பிராசஸிங் தொழில்நுட்பம் மற்றும் பேக்கேஜிங் சம்பந்தமான தயாரிப்புகளையும் தீர்வுகளையும் ஒரு மிகப்பெரிய குடையின்கீழ் காண சரியான வாய்ப்பை அளித்தது. Fi India & Hi-யானது அதிக தரமான உட்பொருட்களை வாங்கும் வாய்ப்புகளை துறைக்கு அளித்த அதே நேரம், ProPak India கண்காட்சி மருந்துகள், அழகூட்டும் பொருட்கள், அப்ளையன்ஸ்கள், தொழில்துறை சிஸ்டம்கள் மற்றும் எந்திரங்கள் இவற்றலிருந்து கிடைக்கும் தயாரிப்புகள் சார்ந்த பேக்கேஜிங் தீர்வுகளை அளித்தது.
Fi India & Hi மற்றும் ProPak India கண்காட்சித் தொடக்க விழாவில் பேசிய Informa Markets in India-வின் Managing Director-ஆன Mr Yogesh Mudras, "இந்தியாவில் உணவு உட்பொருட்கள் மற்றும் பதனிடல் துறையானது நகரமயமாக்கல், 20% CAGR வளர்ச்சியடைந்து வரும் இந்திய உணவுச் சுவை சந்தை போன்ற மாறிவரும் சமூக பொருளாதார மாற்றங்கள் காரணமாக விரைவான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. உணவுப் பண்டங்களின் தரச் செந்தரங்கள் பற்றிய அதிகரித்த வழிப்புணர்வு காரணமாக உட்பொருட்களின் தரத்தின்மீது செலுத்தப்படும் கவனத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இவைதான் தயாரிக்கப்பட்ட உணவிற்கு காரணமாக உள்ளன. உணவுப் பதனப்படுத்துதலில் மிக முக்கியமாக உள்ள நுட்பமான பேக்கேஜிங் சம்பந்தமாகவும் துறைக்குள் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. தயாரிப்பு கெட்டுப்போகாமல் இருக்கும் நாட்களை அதிகரிப்பதோடு பதப்படுத்திய பொருட்களின் ஊட்ட மதிப்பையும் நீட்டிக்கும் மேம்பட்ட பேக்கேஜிங் நுட்பங்களையும் நாம் வளர்க்க வேண்டியதுள்ளது. இங்குதான் நம்முடைய Fi India & Hi மற்றும் ProPak இரண்டும் இத்துறைக்கு முக்கியமான பணியை ஆற்றுகின்றன. உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பம் மற்றும் உணவு உட்பொருட்கள் போன்றவற்றை சர்வதேச பார்வைக்கு வழங்கியுள்ளன. உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான மூலப்பொருள் அடித்தளத்திற்கு உந்துசக்தியாக அமைந்திருக்கிறது."
இந்தியாவின் இரு உணவு மையங்களாக உள்ள மும்பை மற்றும் டெல்லி வட்டாரத்தில் இந்த கண்காட்சிகள் மாற்றி மாற்றி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.
Fi India and Hi
14 ஆண்டுகளாக நடத்தப்படும் Fi India இந்த கண்காட்சியில் பல புதுமையான சிறப்பம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, a) ஒரு Live Master Class - இதில் பிரபல சமையற்கலை நிபுணரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஹோஸ்டான Rakhee Vaswani-யின் ஃபியூஷன் & மூலக்கூறு அடிப்படையிலான சுவைமிக்க தயாரிப்புகள், b) ஒரு Trending Zone - ஆரோக்கியம் & உணவு உட்பொருட்களில் உலகளாவிய பானிகளையும் புதுமையான உட்பொருட்களையும் முன்வைத்தது, c) ஒரு Self Guided Tour - பான உட்பொருட்கள், மாற்று புரதங்கள், மரபுரீதியான வட்டார உட்பொருட்கள் மற்றும் ஆரோக்கியமான முதுமை ஆகியவற்றில் புதுமை & கண்டுபிடிப்பினை எடுத்துக் காட்டியது, d) Technical Seminars Association of Food Scientist & Technologist (AFSTI Mumbai Chapter) & Health & Dietary Supplements Association (HADSA) ஆகியோரால் 'Product Development: Science and Technology' என்ற தலைப்பின்கீழ் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் 'Emerging Scenario of Lifestyle, Food & Health Ingredients' என்ற தலைப்பின்கீழ் Carrageenan & Bilberry எக்ஸ்ட்ராக்டுகள் போன்ற உணவுகளுக்கான சாதனங்களை எடுத்துக்காட்டியது, e) Innovative launches சில பிராண்டுகளால் நடத்தப்படும் இதில் முழுமையான, சுவை அனுபவத்தையும், புதிய யோசனைகளும் அலோசனைகளும் உணவுத் தயாரிப்புகள் பற்றி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு, இந்தக் கண்காட்சியில் 800-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் கலந்துகொண்டன. Health Foods & Dietary Supplements Association (HADSA), Association of Food Scientist & Technologist (I) - (AFSTI), Mumbai Chapter மற்றும் All India Food Processor Association (AIFPA) ஆகியவை இதற்கு தங்களுடைய முழுமையான ஆதரவை அளித்தன. இதில் கலந்துகொண்டு முக்கியமான கண்காட்சியாளர்களில் Fine Organic Industries Ltd.; K. P. Manish Global Ingredients P. Ltd.; Synthite Industries Pvt. Ltd.; Ace International LLP; Danisco India Pvt. Ltd.; Flavaroma Flavours & Fragrances Pvt. Ltd.; Hexagon Nutrition Pvt. Ltd.; Roha Dyechem Pvt. Ltd.; Azelis (India) Private Ltd.; Brenntag Ingredients (India) Private Ltd.; Keva Flavours Pvt. Ltd.; Norex Flavours Private Ltd.; IMCD India Pvt. Ltd. ஆகியோர் அடங்குவர்.
இந்தக் கண்காட்சியில் ஆரோக்கிய உட்பொருட்களின் தயாரிப்புகளுக்கென தனியானதொரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்தக் கண்காட்சியில் சீன காட்சிக்கூடம் மற்றும் ஒரு சர்வதேச காட்சிக்கூடம் இந்த ஆண்டு இடம் பெற்றிருந்தன. சீனா, இலங்கை, தைவான், தாய்லாந்து, கனடா, அமெரிக்கா, போலந்து, ஃபிரான்சு, ஸ்பெய்ன், கிரீஸ், ரஷியா, நெதர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் போன்ற 12 நாடுகளிலிருந்து சர்வதேச பங்கேற்பாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.
ProPak India
இந்தியாவின் தொடர்ந்து வளர்ந்து வரும் பிராசஸிங் மற்றும் பேக்கேஜிங் துறைகளுக்கு தன் சேவையை வழங்கிவரும் ProPak India,ஆசியாவின் மிகப்பெரிய பிளாட்ஃபார்மான ProPak Asia-வினால் இடத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட அமைப்பாகும். இந்தியத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது கண்காட்சிக்கு, Indian Flexible Packaging & Folding Carton Manufacturers Association (IFCA); Association of Food Scientists and Technologists (India) (AFSTI) ; Authentication Solution Providers' Association (ASPA) and SIES school of packaging ஆகிய அமைப்புகள் ஆதரவளித்துள்ளன.
பல துறைகளில் பேக்கேஜிங் மற்றும் பிராசஸிங்குக்கு ProPak India சேவையளிக்கிறது. இந்தக் கண்காட்சியில், ஆட்டோமேஷன், டெஸ்டிங் மற்றும் அளவீடு, ஃபைலிங் மற்றும் சீலிங் மெஷினரி, கார்ட்டூனிங் மெஷினரி, தெர்மோஃபார்மிங், ரொபாட்டிக்ஸ், சேமிப்பு மற்றும் போக்குவரத்து, பொருட்கள் மற்றும் நுகர்பொருட்கள், இணை சேவைகளுடன் முழுமையான உற்பத்தித் துறைக்கும் சேவையளிக்கும் 180-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சி அரங்குகளை அமைத்திருந்த சில நிறுவனங்களில் Bossar Packaging Pvt Ltd; Ishida India Pvt Ltd.; Nichrome India Ltd.; WOLF; Target Innovation; Bry Air; Galaxy Sivtek; Michelman Pvt Ltd.; Goma Process Technologies Pvt Ltd.; Pactech Machinery LLP; Control Print ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள், அரசு நிறுவனங்கள், மற்றும் தயாரிப்பு மேம்பாடு, R&D, QC/QR லேபிளிங், பேக்கேஜிங் டெவலப்மெண்ட், கொள்முதல், சப்ளை செய்ன், வாங்குதல், மற்றும் மார்க்கெட்டிங்கோடு தொடர்புடைய பிற முக்கிய தொழில்துறையினருக்கு இந்தக் கண்காட்சி பலனளித்துள்ளது. அவர்கள் இணைந்து புதிய போக்குகள் மற்றும் தீர்வுகள் பற்றிய யோசனைகளை பரிமாறிக்கொள்ளவும், ஒரே முகவரியின்கீழ் தொழில் நடத்தவும் உதவின. இந்தக் கண்காட்சியில் ஜெர்மனி, இத்தாலி, தைவான், ஸ்பெய்ன், ஆஸ்திரியா, கனடா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து உட்பட்ட 13-க்கம் மேற்பட்ட நாட்டினர் பங்கேற்றனர். இதில் தனியாக ஒரு சீனா காட்சிக்கூடமும் அமைந்திருந்தது.
கண்காட்சியின் சில முக்கிய சிறப்பம்சங்களில் அடங்குவன a) 'Meet the Expert' zone - பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் துறையின் நிபுணர்கள் பதிலளிக்கும் வகையில் ஒரு தனித்த பகுதி b) 'Packaging Theatre'- உலகளாவிய பேக்கேஜிங் துறையில் வளர்ச்சிக்கு உதவும் சமீபத்திய காரணிகளைப் பற்றிய ஒரு பார்வையை இது அளித்தது. மேலும், சந்தைப்போக்குகள், போட்டி வாய்ப்பு, சந்தைப் பகுப்பாய்வு, விலை அமைப்பு, திறன், தொழில் விநியோகம் மற்றும் 2023-கான துறையின் முன்கணிப்பு ஆகியவை பற்றிய பார்வையை இது வழங்கியது. c) 'Women in Processing and Packaging' - 2-வது முறையாக நடைபெறும் இந்த சிறப்பம்சத்தில் துறையைச் சார்ந்த பெண் நிபுணர்கள் ஒரே இடத்தில் கூடி, தங்களுடைய வெற்றிக் கதைகளையும், அறிவையும் 3 முக்கிய தூண்களான - தலைமைத்துவம், தொழில்முனைவு மற்றும் பாலின சமத்துவம் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் உதவியது.
கண்காட்சியோடு, ProPak-ல் 3 நாள் மாநாடும் நடைபெற்றது - துறையின் பானிகள், சவால்கள் மற்றும் துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி இதில் பேசப்பட்டன. இங்கு பேசிப்பட்ட பிற தலைப்புகள் - "பிளாஸ்டிக் ஸ்டிராடஜீஸ் ஃபார் ஃபியூச்சர் – சேலஞ்சஸ் & ஆப்பர்சூனிட்டீஸ்", "பிளாஸ்டிக் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்", "ஃபூட் பிராசஸிங் இன் தி ஈரா ஆஃப் டி-குளோபலைசேஷன்", "பேக்கேஜிங் – எ சிக்னிஃபிகண்ட் ரிசோர்ஸ் ஃபார் பிராண்ட் கிரியேஷன் & பிராடக்ட் மார்க்கெட்டிங்", "நியூவர் கான்செப்ட்ஸ் & வேல்யூ ஆடட் பேக்கேஜிங் சிஸ்டம்ஸ்", "டெக்னாலஜி ஃபோக்கஸ் – மெஷினரி சிஸ்டம்ஸ் & சஸ்டெய்னபுள் பேக்கேஜிங்", "டிரெண்ட்ஸ் அன்டு ஃபியூச்சர் லேன்ட்ஸ்கேப்ஸ் இன் ஆன்டி-கவுண்டர்ஃபீட்டிங் பேக்கேஜிங்", "ஸ்பாட்லைட் ஆன் விமன் இன் பிராசஸிங் & பேக்கேஜிங்", மற்றும் "த நியூ பேக்கேஜிங் லேண்ட்ஸ்கேப் – ஸ்மார்ட் பேக்கேஜிங் ஃபார் டிஜிட்டல் கன்சூமர்ஸ்".
Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் (Informa Markets) மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றியும்
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் எலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-9833279461
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
ரோஷினி மித்ரா
[email protected]
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
Logo: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Photo:https://mma.prnewswire.com/media/1015246/Fi_India_and_Hi_and_ProPak_India_Inauguration.jpg
Photo:https://mma.prnewswire.com/media/1015247/Fi_India_and_ProPak.jpg
Share this article