உலகளாவிய மருந்துத் துறையின் வளர்ச்சிக் கதையை எழுத 13-வது CPhI & P-MEC India Expo தயாராகி வருகிறது
- தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய பார்மா நிகழ்வு வரும் 26 நவம்பர் முதல் 28 நவம்பர் 2019-வரை India Expo Mart - Greater Noida-வில் தொடங்கவிருக்கிறது.
- ஒட்டுமொத்த பார்மா துறையையும் ஒன்றிணைக்கும் இந்த கண்காட்சியில் 16 நாடுகளிலிருந்து சுமார் 1,600-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்யாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்
- புத்தாக்கத்தைத் தூண்டவும் பொருத்தமான தீர்வுகளையும் அறிமுகப்படுத்தவும் 08-க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஈடுபாடுகள் IPW-வின் அங்கமாக இருக்கும்
புது டெல்லி, Nov. 25, 2019 /PRNewswire/ -- ஒரு முன்னணி B2B கண்காட்சி ஏற்பாட்டளரான Informa Markets in India (முன்னர் UBM India), தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய பார்மா நிகழ்வான CPhI & P-MEC India Expo-வை நடத்தத் தயாராகி வருகிறது. உலகளாவிய மருந்துத் துறையை முன்னோக்கி நடத்திச் செல்லும் வகையில் இந்த கண்காட்சியில் பார்மா துறை முழுவதிலுமிருந்து முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இந்தத் துறையின் புத்தாக்கத்தையும் வளர்ச்சியையும் தூண்டுவதற்கு இந்த நிகழ்ச்சி யோசனைகளை வாரி வழங்கும் இடமாக அமையும்.
2019-ல் நெட்வொர்க்கிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், CPhI & P-MEC India கண்காட்சி வரும் 26 முதல் 28 நவம்பர், 2019-வரை Delhi-NCR, Greater Noida-வில் உள்ள India Expo Centre-ல் மூன்று நாட்கள் நடைபெறும். Pharmexcil, CIPI மற்றும் IDMA போன்ற ஆட்சிக்குழுக்கள் இந்த கண்காட்சிக்கு தங்களுடைய ஆதரவை அளிக்கின்றன.
IPW 2019 பற்றிப் பேசிய Informa markets in India-ன் Managing Director-ஆன Mr Yogesh Mudras, பேசும்போது, "இந்த ஆண்டு 13-வது CPhI & P-MEC India expo-வை டெல்லி NCR-ல் மீண்டும் நடத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டும்கூட IEML, Greater Noida-வில் பெருமளவிலான அதரவைத் தொடர்ந்து இந்த கண்காட்சி பெறும். இந்தியாவிடமிருந்து உயர் தரமான, குறைந்த விலையுள்ள மருந்துத் தீர்வுகளை இத்துறை தேடுகையில், சந்தை அளிக்கக்கூடிய எல்லா சமீபத்திய பானிகள் மற்றும் புத்தாக்கங்களைக் கண்டறிவதற்கான ஒரு உகந்த தளமாக இந்த கண்காட்சி அமைகிறது. மேலும், இந்தக் கண்காட்சி நடக்கும் இடம் மைய அரசின், கொள்கை தயாரிப்பாளர்களின், தூதரகங்களின், மற்றும் அரசு அமைப்புகளின் அருகில் அமைந்திருப்பதால், சமூகக் கட்டமைப்பு முயற்சிகளுக்கு இது உதவும். தொழில் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் தவிர்த்து, முக்கியமான உரையாடல்களாக, "இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சி, புதிய தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பின் வலிமையை அடையாளம் காணுதல், சமூகம் ஆழமாகச் சிந்தித்து செயல்படச் செய்வது" போன்ற தலைப்புகள் அமைகின்றன" என்றார். மேலும் அவர் பேசும்போது, "CPhI மற்றும் P-MEC India-வைப் பொருத்தவரை, இத்துறையில் உள்ளவர்கள் தங்களுடைய தொழிலை மேம்படுத்திக்கொள்ளவும், மருந்துத் துறையை புத்தாக்கங்களைக்கொண்டு மாற்றியமைக்கவும் ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பெருமை கொள்கிறோம்" என்றார்.
44 நாடுகளிலிருந்து வரும் 1,600 கண்காட்சியாளர்கள் தங்களுடைய தீர்வுகளைக் காட்சிப்பத்துகின்றனர். இந்தக் கண்காட்சியில் The Global Organization for EPA and DHA (GOED), China Chamber of Commerce for Import & Export of Medicines & Health Products (CCCMHPIE), China Council for the Promotion of International Trade (CCPIT) மற்றும் Pharmaceuticals Export Promotion Council of India (Pharmexcil) ஆகியவற்றுக்கான சிறப்பு காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தியா தவிர்த்து, சீனா, அமெரிக்கா, யுனைடட் கிங்டம், பிரேசில், தாய்லாந்து, தாய்வான், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர், ஸ்லோவேனியா, ஸ்பெய்ன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, போலந்து, ஹாங்காங், ஜப்பான் மற்றும் ரசியா உட்பட்ட நாடுகளிலிருந்து பல நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
CPhI & P-MEC India முதலில் 2006-ல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தெற்காசியாவின் முன்னணி மருந்துத்துறை மாநாடாக உள்ளது. மருந்து கண்டுபிடிப்பு முதல் தயாரிக்கப்பட்ட மருந்தை விற்பது வரை உள்ள சப்ளை செயினின் ஒவ்வொரு அங்கத்தையும் இந்தக் கண்காட்சி தொடுகிறது. இந்தக் கண்காடசிகள் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சியடைந்து இந்திய பார்மாத் துறையின் கதையை அளவிடும் அளவியாக மாறியிருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்களும் தொழிலின் குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளள பார்வையாளர்களும் பங்கேற்றுக்கொள்கின்றனர்.
சவால்களுக்கு தீர்வு அளிப்பதற்காக சமூகத்தை இணைப்பதிலும் அதில் சிறந்த தரங்களை ஏற்படுத்துவதிலும் 'Make in India', 'Start-Up India, 'Stand Up India', மற்றும் 'Skill India' போன்ற முக்கிய அரசு முன்முயற்சிகளில் அது ஆற்றும் செயல்பாட்டிலிருந்து 4-வது ஆண்டாக நடைபெறும் The India Pharma Week தோன்றியுள்ளது. நவம்பர் 25 அன்று ஒப்பற்ற பேச்சாளர்களின் உரை வீச்சினைக் கொண்ட Pre-Connect Congress-உடன் தொடங்கும் இந்தக் கண்காட்சி Greater Noida-வில் CEO வட்டமேசை மற்றும் பார்மா துறையில் பெண் தலைவர்கள் ஆகியவை முறையே நவம்பர் 26 மற்றும் 27 அன்று நடைபெறும். India Expo Centre-ல் நடைபெறும் IPW நிகழ்வுகளுடன்கூட, துறை சார்ந்த தலைவர்களும், நிபுணர்களும் ஒன்றிணைந்து, நெட்வொர்கை ஏற்படுத்தவும், ஒரே குடையின்கீழ் கொண்டாடவும் வாய்ப்பை நல்கும். Delhi-NCR வட்டாரத்தில் நடத்தப்படுவதால், மைய அரசின் அதிகார வட்டாரம் உட்பட்ட வடக்குப் பிரிவு மையங்களில் முழுமையான மருந்துசார் சூழலமைப்பை ஏற்படுத்தி வளர்க்க உதவும்.
இந்த ஆண்டுக் கண்காட்சியின்போது, ICSE கூட்டம் நடக்கும் இடம், ஒரு Live Pharma Connect, ஒரு Innopack Theatre மற்றும் ஒரு Exhibitor Showcase போன்றவை இருக்கும். இதன் மூலம் IPW என்பது இந்திய மற்றும் உலகளாவிய பார்மா நிறுவுனங்கள் தங்களுடைய அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், ஒத்துழைப்பை அளிக்கவும், கூட்டுமுயற்சிகளில் இறங்கவும், கொண்டாடவும், துறையில் தீர்வுகாண வேண்டிய பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஒரு உண்மையான வாய்ப்பை வழங்கும்.
மேலும், சுவாரசியமான விவாதங்களும் அமர்வுகளும் The Women Leaders in Pharma-ன் ஒரு அங்கமாக அனுபவங்களை வெளிப்படுத்தும் விதத்தில் நடத்தப்படும். 'Following your purpose Talking' என்ற டாக் ஷோ வழியாக இந்த அனுபவங்கள் வெளிப்படுத்தப்படும். குறைத்து மதிப்பிடுவது, ஸ்டீரியோடைப்பிங், செக்சிஸம், மற்றும் மார்ஜினலைசேஷன், போன்ற தடைகள் உட்பட்ட பல்வேறு விஷயங்கள் பற்றிய உரையாடல்கள் நடைபெறும். தலைமைத்துவத்துக்கு வந்த பெண்களின் கதைகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், எல்லா பெண் தலைவர்களுக்கும் மற்றும் தலைமைத்துவத்துக்கு வரத் துடிக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்படும். இவற்றோடு, பிற சுவாரசியமான அமர்வுகளுள் "பர்ப்பஸ்ஃபுல் இன்க்ளூஷன் - அக்சலரேட்டிங் த்ரூ டைவர்சிட்டி அன்டு பிரரேக்கிங் தி ஸ்டீரியோடைப்" போன்ற அமர்களும் அடங்கும்.
மூன்று நாள் கண்காட்சியில் கலந்து கொள்ளவிருக்கும் முக்கியமான கண்காட்சியாளர்களுள் ACG, Cadmach, IMA-PG SpA, Excellence United, NPM Machinery, Maharshi, Parle Global, Signet Chemical Corporation Pvt Ltd, Hetero Labs Limited, Shah TC Overseas Private Limited, Swati Spentose Pvt Ltd, Chemet, Gangwal Chemicals Pvt Ltd, Nectar Lifesciences Limited, Anshul Life Sciences, Colorcon Asia Pvt Ltd, Oceanic Pharma Chem Pvt Ltd, Pioma Chemicals, MSN Laboratories Pvt Ltd., Esschem Overseas Pvt Ltd., Scope Ingredients Pvt Ltd, Granules India Pvt Ltd., Supriya Lifesciences Ltd., Aurobindo Pharma Ltd., Vita Pharma Agencies, மற்றும் Dow Chemical ஆகியோர் அடங்குவர்.
Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை இன்ஃபோர்மா மார்க்கெட் உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் (Informa Markets) மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றியும்
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும்.
Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India)
ரோஷினி மித்ரா
[email protected]
மிலி லால்வாணி
[email protected]
+91-22-61727000
நிகழ்வு லோகோ: https://mma.prnewswire.com/media/1034304/CPHI_and_P_MEC_India_Logo.jpg Informa லோகோ: https://mma.prnewswire.com/media/956845/Informa_Markets_Logo.jpg
Share this article