The Chennai Jewellery and Gem Fair (சென்னை நகை மற்றும் இரத்தின கண்காட்சி) -ன் மார்ச் பதிப்பை UBM India அறிவிக்கிறது
சென்னை, March 7, 2019 /PRNewswire/ --
தென் இந்தியாவின் சிறப்பு திறமையுடன் மெகா இரத்தினங்கள் மற்றும் நகை கண்காட்சி
- UBM India ஆல் நடத்தப்படும் இந்தியாவின் முன்னணி ஜூவல்லர்களுக்கான மூன்று நாள் பிரபல வர்த்தக கண்காட்சி
- கண்காட்சியின் சில முக்கிய கவர்ச்சிகரமான அம்சங்களாவன Hall of Fame, Artisans Zone, தொழில்துறையுடன்தொடர்புடைய உள்நோக்கு செமினார்கள் மற்றும் நெட்வொர்க்கிங் நைட்
இந்தியாவின் மிகப்பெரிய நகை கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான UBM India, தென் இந்தியாவின் ப்ரீமியம் சர்வதேச நகை கண்காட்சியின் மார்ச் பதிப்பை - the Chennai Jewellery & Gem Fair (CJGF) அறிவித்தது. கண்காட்சியானது 100க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் மற்றும் 30 பிரபல ஜூவல்லரி பிராண்டுகளின் பங்கேற்புடன் , சென்னை வர்த்தக மையத்தில் 8 ஆம்தேதி - 10 ஆம்தேதி மார்ச், 2019 வரை முக்கிய நகை அசோசியேசன் - Chennai Jewellers Association (CJA) ஆல் ஆதரவு செய்யப்பட்டு நடக்க உள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/828492/CJGF_March_Logo.jpg )
தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா மற்றும் பிற இந்திய மாநிலங்கள் மற்றும் தொழில்துறை போன்றவைகளிலிருந்து 600க்கும் அதிகமான நகைத்துறை கூட்டமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பின் மூலம் கண்காட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது இதில் முக்கிய துணையாக Diamond Association Bangalore ( DAB ), All Kerala Gold & Silver Merchants Association ( AKGSMA ), Surat Jewellery Manufacturers Association ( SJMA ), Gems & Jewellery Association of Rajkot and The Jewellers's Association ( JAB ) ஆகிய அமைப்புகளும் உள்ளன.
உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய நகை சந்தைகளை புரிந்துகொண்டுள்ள அதன் உறுதிப்படுத்தப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கண்காட்சி உண்மையில் சர்வதசே அனுபவத்தை வழங்கும். தங்கம், வெள்ளி, இரத்தின கற்கள், இயந்திரம் மறுறம் விலையுயர்ந்த நகைகள், கருத்தரங்குகள், ஒர்க்ஷாப்புகள், பேனல் கலந்துரையாடல்கள், ஃபேஷன் ஷோ மற்றும் Hall of Fame போன்ற உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் நடைபெறப்போகும் கண்காட்சியானது முக்கிய பங்குதாரர்கள் மற்றும் பிரபலங்களின் விருப்பமான கண்காட்சியாக அமையும்.
தென் இந்தியாவின் டிசைனர் நகை தயாரிப்பின் மீது சிறப்பு கவனத்துடன் இந்திய நகை சந்தையின் முக்கிய வாயிலாக இந்த கண்காட்சி அமையும். இது நகை மொத்தவியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம் மற்றும் இரத்தினக்கற்கள், முத்து சப்ளையர்கள்மற்றும் வியாபாரிகள், precious metal மற்றும் jewellery mounting வியாபாரிகள் மற்றும் சப்ளையர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒரே குடையின் கீழ் சந்திக்க, இணைக்க ,நெட்வொர்க் மற்றும் தங்கள் வியாபாரத்தை வளர்க்க ஒரு சிறந்த தளத்தை வழங்கும். நல்ல பெயர் பெற்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாங்குபவர்கள் ஆகியோரை கண்காட்சி கவருவதை தொடர்கிறது இது கண்காட்சி, தொழில்துறையில் நம்பிக்கையான மற்றும் உறுதியான ஒரு இடத்தை அடைந்துவிட்டதை காட்டுகிறது. இந்தியாவில் டையர் 1, 2 மற்றும் 3 நகரங்களுடன் கூட துபாய்,சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் பங்கு கொண்டனர்.
CJGFன் மார்ச் பதிப்பின் அறிவிப்புநிகழ்ச்சியில் பேசுகையில் , Mr. Yogesh Mudras பின்வருமாறு கூறினார், ' சிறந்த ஒப்பனை பொருளாகவும் மற்றும் மூலதனமாகவும் கருதப்படும் இரு பயன்பாடு கொண்ட இரத்தினங்கள் மற்றும் நகைகள் நாட்டில் பல வருடங்களாக முக்கிய இடத்தை பெற்றுள்ளன, மேலும் உலகளவில் நகை நுகர்வில் 29 சதவீத பங்களிப்பு செய்வதாக உள்ளது. நாட்டிற்குள் தென் இந்தியாவே முன்னணி தங்க நுகர்வோராக தொடர்ந்து வருகிறது. Chennai Jewellers Association உடன் இணைந்துள்ள CJGF 2019 கண்காட்சியின் மார்ச் பதிப்பானது பாரம்பரிய நகை மற்றும் தற்போதைய மேல்நாட்டு பாணி, மாற்றுமுறை, ஸ்டேட்மென்ட் நகைகளை பார்வைக்கு வழங்கும். 2019 நகை டிரென்டுகள் என்ற நோக்கில் உறுதியான , அடுக்குகளில், அதிகளவு எடையுடைய இரத்தின கற்களுடன் கூடிய கழுத்தை ஒட்டிய நகைகள் மற்றும் போல்ட் ஹூப்கள் இடம்பெறும் . தெற்கு பிராந்தியத்தில் நகையில் சிறந்த அனுபவம் மற்றும் மேம்பாட்டை கொண்ட தொழில்துறையின் படைப்புகளை காட்சிப்படுத்த சிறந்த வாய்ப்பாக இந்த கண்காட்சி அமையும்.'
'உண்மையான சர்வதேச அனுபவத்தை வழங்கவும் மேலும் ப்ரீமியம் கண்காட்சியாளர்களின் இருப்பினாலும் மேலும் Hall Of Fame, Artisans Zone, மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்குகள் , 100க்கும் அதிகாமன வாங்குபவர்- விற்பவர் சந்திப்பு இணைக்கவும் மற்றும் வியாபார ஒப்பந்தங்களை அமைக்கவும், நெட்வொர்க்கிங் நைட், அறிவு கருத்தரங்குகள் மற்றும் இயந்திரங்களின் லைவ் டெமா , uber stylish மற்றும் வரப்போகும் திருமண சீசனில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அக்ஷயா திருதியைக்கான தயாரிப்பு ஆகிய பல அம்சங்கள் கொண்டவையாகவும் இந்த கண்காட்சி அமையும் .' என்று மேலும் கூறினார்.
வரப்போகும் கண்காட்சியைப் பற்றி விமர்சிக்கையில் Mr. Yogesh Shah, President, Chennai Jewellers Association பின்வருமாறு கூறினார், 'முப்பதாண்டுகளாக நகை தொழில்துறையில் ஒருங்கிணைந்த அங்கமாக UBM உள்ளது. இந்த போர்ட்ஃபோலியாவில் அதன் அனுபவத்தின் காரணமாக, மார்ச் 2019 மாதம் Chennai Jewellery and Gem Fair ஐ UBM India ஒருங்கிணைக்கிறது. வர்த்தகத்திறகான சிறந்த முயற்சியான இந்த கண்காட்சி UBM ஆல் நடத்தப்படுகிறது, இது அறிவு மற்றும் சந்தை போக்குகளுக்கான வாய்ப்பு மற்றும் மிகச்சிறந்த மூலமாகவும் அமைகிறது.தெற்கு பிராந்தியத்தில் நகைத்துறையில் விரிவாக்கம் செய்வதற்கு துணை புரியவும் மற்றும் அனுபவத்தை பாராட்டுவதற்குரிய இடமாகவும் உள்ள CJGF March 2019 மூலமாக UBM India இணைவதில் நாங்கள் மகிழ்கிறோம்.
Mr. Rajesh Vummidi, Chairman, Chennai Jewellers Association பேசுகையில் , " 'புதிய தோற்றத்தில் Chennai Jewellery and Gem Fair (CJGF) அறிமுகப்படுத்தப்படும். வியாபார வாய்ப்புகளை உருவாக்கவும் சந்திக்கவும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் சிறந்த தளமாக விளங்கும் இது இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு நகைகளை வழங்கும் முக்கிய சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது. நமது வியாபாரத்தின் எல்லையை விரிவுபடுத்தி அவசிய இணைப்புகளை விரைவாக உருவாக்க CJGF-மார்ச் 2019 வாய்ப்பை வழங்குகிறது.' என்று தெரிவித்தார்.
கண்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளாவன :
- An Artisans' Zone: தனிப்பட்ட நகை வடிவமைப்பை உருவாக்கும் கைவினைஞர்களின் புதுமையான திறன்களை இந்த பிரிவு எடுத்துக்காட்டும். மினியேச்சர்கள் மற்றும் வெள்ளி சூட்டுகள் உள்ளிட்ட சில காட்சிப்படுத்தல்கள் இடம்பெறும்.
- Hall of Fame: தங்கம், வைரம் மற்றும் பழமையான நகைகள் போன்ற நகை வடிவமைப்புகளை இது காட்சிப்படுத்தும்
- Three days insightful Seminar: (மூன்று நாள் உள்நோக்கு கருத்தரங்கு)- வண்ண கற்களை கண்டறிதல் மற்றும் இயற்கையான மற்றும்செயற்கையான வண்ண கற்கள் பற்றிய விழிப்புணர்வு போன்ற தலைப்புகளில் All Gem Lab London LLP தலைமையின் கீழ் கலந்துரையாடும் நிகழ்ச்சி கண்காட்சியில் இடம்பெறும்.
ஐந்து- மாநில நகை கண்காட்சிகளில் ஒன்றான CJGF (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி) வருடம் முழுவதும் UBM India ஆல் நடத்தப்படுகிறது, உலகளவில் UBM plc உலகின் மிகப்பெரிய நகை வர்த்தக நிகழ்ச்சியை The Hong Kong Jewellery & Gem Fair ஒருங்கிணைக்கிறது
CJGF பற்றி:
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் CJGF வருடத்திற்கு இருமுறை நடைபெறும் நிகழ்வாகும் இது ஜூன் 2018ல் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் B2B முன்னணி தகவல் சேவைகள் குழுவான Informa PLC உடன் இணைந்துள்ள UBM ஆல் ஒருங்கிணைக்கப்படும். CJGF பற்றி அதிக தகவல்களுக்கு தயவுசெய்து https://chennai.jewelleryfair.in/mar வருகை தரவும் மற்றும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி தெரிந்துகொள்ள http://www.ubm.com/global-reach/ubm-asiaவருகை தரவும்.
UBM Asia பற்றி:
உலகின் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் B2B முன்னணி தகவல் சேவைகள் குழுவான Informa PLC உடன் சமீபத்தில் UBM Asia ஒரு பாகமாக இணைந்துள்ளது. ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி தெரிந்துகொள்ள தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
UBM India
Roshni Mitra
+91-22-61727000
MiliLalwani,
[email protected]
UBM India
Share this article