தேசிய பாதுகாப்பு நாள் 2020 (National Safety Day 2020) வெற்றிகரமாக பெங்களூருவில் நிறைவடைந்தது
- OSH South India-வுடன் இணைந்து Department of Factories, Boilers, Industrial Safety & Health, Karnataka State Safety Institute வழியாக Govt of Karnataka இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது
BENGALURU, March 13, 2020 /PRNewswire/ --- ஒரு தேசிய மாநாட்டையும் கண்காட்சியையும் (confex) உள்ளடக்கிய The National Safety Day (NSD) 2020 கடந்த 4 மார்ச் 2020 அன்று St. John`s Auditorium, Koramangala, Bengaluru-வில் நடைபெற்றது. Occupational Health and Safety-யின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் Bengaluru-வில் நடந்த முதலாவது நிகழ்ச்சியானது OSH South India-வுடன் இணைந்து Department of Factories, Boilers, Industrial Safety & Health, Karnataka State Safety Institute வழியாக Govt of Karnataka-னால் ஏற்பாடு செய்யப்பட்டு Informa Markets in India-வினால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்த ஒரு நாள் Confex நிகழ்ச்சியை Volvo Construction Equipment India Pvt. Ltd-ன் VP & GM-ஆன Sri. B. R. Indushekar; Meritor HVS (India) Ltd.-ன் பிரசிடென்டும் MD-யமான Dr. N. Muthukumar; Taegutec India Pvt Ltd-ன் MD-யான Sri. L. Krishnan; Department of Factories, Boilers, Industrial Safety & Health-ன் டைரக்டரான Sri. K. Srinivas; National Safety Council, Karnataka Chapter-ன் சேர்மேனான Sri. V.A. Gundappa; National Safety Council, Karnataka Chapter-ன் செக்கரட்டரியான Sri. P.C. Venkateswarlu; GE BE Ltd-ன் MD-யான Sri. Mahesh Kapri; Department of Factories, Boilers, Industrial Safety & Health-ன் அடிஷனல் டைரக்டரான Sri. T.R. Ramesh, Informa Markets in India-வின் குரூப் டைரெக்டர் – சேஃப்டி & செக்யூரிட்டி போர்ட்ஃபோலியோ-வான Mr. Pankaj Jain மற்றும் Informa Markets in India-வின் பிராஜெக்ட் செக்ரிட்டரி-சேஃப்டி போர்ட்ஃபோலியோ-வான Mr. Prashant Jain ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியல் கலந்துகொண்ட நிறுவனங்களில் Mallcom (India) Ltd, Safeboy Safety Solutions, ID Overseas Private Limited, Ambetronics Engineers Pvt. Ltd., Sawalka KEL Pvt. Ltd., NIST Institute Pvt. Ltd., ION Science India Pvt. Ltd., Hindsiam Protective Equipments LLP, Enaco Safety Products Pvt. Ltd, Brady Company India Pvt. Ltd, MSA India Limited, Advance Engineering Corporation, iFluids Engineering, Prolite Autoglo Limited, Teijin Aramid, Power Tools & Tackles, Three S Instruments Pvt. Ltd., ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அடிப்படை அளவிலேயே ஒரு பாதுகாப்புக் கலாச்சாரத்தை உருவாக்குவதும், நல்ல விளைவுகளைப் பெற யுத்திசார் திட்டமிடலும் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதும்தான் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்தச் சூழலில் இந்த ஒரு நாள் confex நிகழ்ச்சிக்கு 'Shaping the Future of Occupational Safety & Health' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், தொழிற்சாலைகளில் விபத்தில்லா நிலையை சாதிப்பதன் தேவை பற்றி விரிவாகப் பேசப்பட்டு வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற உரைகளின் தலைப்புகளுள், எர்கனாமிக்ஸ் ரிஸ்க் அசெஸ்மெண்ட் (Ergonomics Risk Assesment), சேஃப் ஹேண்ட்லிங் ஆஃப் பாய்லர்ஸ் (Safe Handling of Boilers), மேஜர் ஃபயர் இன்சிடென்ட்ஸ் இன் ஃபேக்டரீஸ் (Major Fire Incidents in Factories), ஹசார்டஸ் மெட்டீரியல்ஸ் ஹேண்ட்லிங் & சேஃப்டி இன் டிரான்போர்ட்டேஷன் (Hazardous Materials Handling & Safety in Transportation), கெமிக்கல்ஸ் ஆக்சிடன்ட்ஸ் (Chemicals Accidents), ரீடிஃபைனிங் சேஃப்டி மேட்ரிக்ஸ் ஃபார் கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ஸ் (Redefining Safety Metrics for Construction Sites) ஆகியவை அடங்கும், மேலும், "தி லீடர்ஸ் ரோல் இன் என்ஹேன்சிங் சேஃப்டி கல்ச்சர் அன்டு என்ஃபோர்ஸ்மெண்ட் ஆஃப் லீகல் மான்டேட் ஆன் ஆக்குபெஷனல் சேஃப்டி - கீ சேலஞ்சஸ் & ரெஸ்பான்சிபிலிட்டீஸ் (The Leader's Role in Enhancing Safety Culture and Enforcement of Legal Mandate on Occupational Safety - Key Challenges & Responsibilities) என்ற தலைப்பில் குழுவிவாதமும் நடைபெற்றன.
NSD 2020 வெற்றிகரமாக நிறைவடைந்தது குறித்துப் பேசிய, Informa Markets in India-ன் Managing Director-ஆன Mr. Yogesh Mudras பேசும்போது, "கடந்த 30 ஆண்டுகளாக ஆக்குபேஷனல் ஹெல்த் அன்டு சேஃப்டி (OHS) என்பது மிக முக்கியமான தலைப்பாக ஆகியிருக்கிறது. இந்தியச் சூழல் இன்று சிக்கலானதாக உள்ளது. சுரங்கம், உற்பத்தி, துறைமுகம் மற்றும் கட்டுமானம் போன்ற மிக முக்கிய பொருளாதாரத் துறைகளின் தேவைகளை OHS பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ளது. ஆனால், விவசாயம், சேவைத் தொழில்கள் போன்ற அமைப்புசாரா துறைகளில் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உடல்நலக் கவனிப்பு கைவிடப்பட்டிருக்கிறது. ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வேலைச்சூழல் என்பது ஒவ்வொரு தொழிலாளரின் உரிமை. எனவே, வேலை செய்யும் சூழலில் தொடர்புடைய அபாயங்களைக் கண்டறிந்து தவிர்ப்பது என்பது இன்று உலக அளவில் நிறுவனங்களின் இன்றியமையாத தேவையாக உள்ளது. மேலும், உட்கட்டமைப்புகளின் மேம்பாட்டின்மீதும் பணியிடப் பாதுகாப்பின்மீதும் அரசுகள் வலியுறுத்தும் இந்த சமயத்தில் FDI பெருகி வரும் இந்த சமயத்தில், இந்தியாவில் OHS துறையினர் தங்களுடைய புத்தாக்கங்களை காட்சிப்படுத்தவும் தங்களுடைய அறிவை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது" என்றார்.
அவர் மேலும் பேசுகையில், "National Safety Day 2020 வழியாக தொழில் நலன் மற்றும் பாதுகாப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பை அளித்ததற்காகவும், தெளிவான நடைமுறைத் தீர்வுகளை அடைய வழிவகுத்ததற்காகவும் Department of Factories, Boilers, Industrial Safety and Health மற்றும் Karnataka State Safety Institute ஆகியவற்றுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். துறையில் உள்ள புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பப் புதுமையாக்கங்களுக்கு இந்தத் துறையில் அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன. சப்ளையர்களும் சேவையாளர்களும் நம்முடைய Confex பரஸ்பரம் அறிந்து நெட்வொர்க் செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தெற்கு வட்டாரத்தில் இந்த நிகழ்வு எங்களுடைய இருப்பை வலுப்படுத்தியிருக்கிறது. இதனால், Bengaluru-வில் வரும் ஜூலை 2-3-ல் திட்டமிடப்பட்டிருக்கும் OSH South India-வை நடத்த இது மேலும் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்" என்றார்.
Informa Markets பற்றி
தொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
Informa Markets மற்றும் இந்தியாவில் எம்முடைய தொழில் பற்றி
Informa Markets என்பது உலக அளவில் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுவாகவும் மிகப்பெரிய B2B ஈவன்ட்ஸ் ஆர்கனைசராகவும் உள்ள Informa PLC-யின் துணை அமைப்பாகும். Informa Markets in India (முன்னர் UBM India) என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராக உள்ளது. சிறப்புச் சந்தைகளும் வாடிக்கையாளர் சமூகங்களும், உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் கண்காட்சிகள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் சேவைகள், மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் நடத்துவதன் மூலம் பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறோம். இந்தியாவில் Mumbai, New Delhi, Bengaluru மற்றும் Chennai-யில் Informa Markets தன்னுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informa.com/ என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
தொடர்புக்கு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Informa Markets in India
Photo- https://mma.prnewswire.com/media/1121255/National_Safety_Day.jpg
Share this article