கிரேட்டர் நொய்டா, இந்தியா, November 27, 2018 /PRNewswire/ --
இந்தியா எக்ஸ்போ மார்ட்,கிரேட்டர் நொய்டாவில் CPhI & P-MEC India வின் 12 வது பதிப்புடன் ஒரு வார காலம் முழுவதும் நடைபெறும் புத்தம் புதிய நிகழ்ச்சிகள்
இந்தியாவின் முன்னனி B2B கண்காட்சி ஒருங்கிணைப்பாளரான UBM India, பரவலாக பாராட்டப்பட்ட India Pharma Week ன் வீக்கின் மூன்றாவது பதிப்பை கொண்டு வர உள்ளது அதனுடன் அதன் முன்னணி கண்காட்சியான CPhI and P-MEC Indiaவின் 12 வது பதிப்பும் நடைபெறும். ஒரு வாரம் நடைபெறும் இந்த கொண்டாட்டமானது பல புத்தம் புதிய நிகழ்ச்சிகளுடன் 9 ஆம்தேதி முதல் 14 ஆம்தேதி வரை டிசம்பர் மாதம் நடைபெறும் . வர்த்தக தலைநகரமான மும்பையிலிருந்து தூரத்தில் உலகத்தரம் வாய்ந்த இடமான இந்தியா எக்ஸ்போ மையம்,கிரேட்டர் நொய்டாவில் தென் ஆசியாவின் மிகப்பெரிய மருந்துத்துறை நிகழ்ச்சி முதன்முறையாக ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இது முக்கிய பங்குதாரர்கள் மற்றும் மருந்துத்துறையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் ஒரு வாரம் பெரிய குடையின் கீழ் நெட்வொர்க் செய்யவும் கொண்டாடவும் மிகப்பெரும் வாய்ப்பை வழங்குகிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/789327/India_Pharma_Week_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/789348/CPhI_P_MEC_India_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/789328/India_Pharma_Awards_Logo.jpg )
CPhI & P-MEC India கண்காட்சியின் 12 வருடத்தை கொண்டாடும்போது வர்த்தகம், அறிவு ,தலைமைத்துவம்,கண்டுபிடிப்பு, அங்கீகரிப்பு மற்றும் மருந்துத்துறையில் நெட்வொர்க்கிங் ஆகிய தலைப்புகளின் கீழ் 7க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை India Pharma Week ஒருங்கிணைக்கிறது. India Pharma Week , தான் உருவான மற்றும் மேம்பட்ட நகரத்திற்கு ஒரு பாராட்டுரை அளிக்கும் விதமாக மும்பையில் ஃபார்மா தலைவர்களின் கோல்ஃப் விளையாட்டை ஒருங்கிணைக்கும். அடுத்த காட்சி கிரேட்டர் நொய்டாவிற்கு நகரும் அங்கே IPW ஃபார்மா இணைப்பு கூட்டம், ஃபார்மாவில் பெண்கள், இந்திய ஃபார்மா விருதுகள், நெட்வொர்க்கிங் ஈவினிங், the CPhI & P-MEC India கண்காட்சி மற்றும் மூடப்பட்ட-கதவு CEO வட்டமேசை போன்ற பல்வேறு நிகழ்ச்சித்தொடர்களுடன் நடைபெறும். அதன் ஆற்றல் மூலைகளை மனதில் கொண்டு வடக்கு பகுதியின் மூலைகளிலும் முழுமையான மருந்து சுற்றுப்புறத்தை மேம்படுத்தவும் ஊட்டமளிக்கவும் டெல்லி- என்சிஆர் பகுதிக்கான இந்த மாற்றம் உதவும்.
2006 ல் தொடங்கப்பட்ட CPhI & P-MEC India கண்காட்சியானது குறிப்பிட்ட அளவிலான வர்த்தகத்துடன் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்து பார்வையாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்களுடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. Pharmexcil, CIPI மற்றும் IDMA போன்ற ஆட்சிக்குழுக்களால் இது அங்கீகரிக்கப்பட்டு தொடர்ச்சியான உதவியைப் பெற்று வருகிறது. இந்த வருட பதிப்பானது 42க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 1600க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை காணப்போகிறது . Pharmexcil, CCCMHPI & CCPIT கண்காட்சியின் சிறப்பு பாகமாக சிறப்பு கூடாரங்களை ஏற்படுத்தப்போகின்றன.
CPhI & P-MEC's பத்து வருட நிறைவைக் கொண்டாட 2016ல் India Pharma Week பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சப்ளையர் ஃபைன்டர், CPhI TV, லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் ஆப்ஸ், டெக் வால்ஸ், மேட்ச்மேக்கிங்- லைவ் ஃபார்மா கனெக்ட்,கண்காட்சியாளரின் காட்சிக்கூடம் மற்றும் கண்டுபிடிப்பு கேலரி போன்ற பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாததாக என்றும் நினைவில் நிற்பதாக இருக்கும்.
திரு.யோகேஷ் முத்ராஸ், மேனேஜிங் டைரக்டர், UBM India IPW 2018 ல் பேசுகையில்,
'UBM's ன் தலைமை ஒப்பந்த தளமான CPhI & P-MEC India உடன் கண்காட்சிகளின் மிகப்பிரம்மாண்ட ஊர்வலங்கள் நிறைந்த ஒரு வார India Pharma Week மூன்றாவது பதிப்பை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்- மேலும் IPWக்கு தகுதி வாய்ந்த அரிய தளமான உலகத்தரம் வாய்ந்த Delhi NCR ல் உலகின் முன்னணி மருந்துத்துறை நெட்வொர்க்கிங் நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மத்திய, கொள்கை உருவாக்குபவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் அரசாங்க அமைப்புகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நமது கண்காட்சியை நடத்துவதால் நமது சமூக உருவாக்க முயற்சிகள் விரிவடையும். வியாபாரத்தை தவிர்த்து, இந்திய மருந்துத்துறையின் வளர்ச்சி- 2020 பார்வை, கூட்டு முயற்சிகள் மூலமாக மருந்து தொழில்துறையை மாற்றுதல் மற்றும் இந்தியாவில் நெறிமுறைகள் கொள்கைகளை வலுப்படுத்தும் மூலோபாயங்கள் போன்ற பல சமூக்கத்திற்கு தேவையான பல்வேறு விவாதங்களும் நடைபெறும்.
'அடுத்த பத்தாண்டுகளில் மருந்து உட்கட்டமைப்பில் US$ 200 பில்லியனுக்கு அதிகமான செலவாணியை கணக்கிடுவதுடன் நாட்டின் அனைத்து மூலைகளிலும் வாங்கக்கூடிய விலையில் அனைத்து மருந்துகளும் கிடைப்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்தியாவை உலக மருந்து உற்பத்தியில் என்ட் டூ என்ட் தலைவராக உருவாக்கும் நோக்கத்துடன் கூட R&D யில் முதலீடு மற்றும் இணக்கத்தேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ;2020 பார்வை நிகழ்ச்சி இங்கு நடைபெறும்.2017-18ல் பாதிக்கப்பட்ட 46 இணைப்பு சந்தைகள் இந்த நிகழ்வுகளினால் நிறுவனங்கள் தங்கள் விற்பனையில் 9 சதவீதத்தை R&Dல் மறுமுதலீடு செய்யவும் ஊக்கப்படுத்துகின்றன. இதே வழியில் சென்றால் சந்தேகமில்லாமல் மேலும் புதிய கண்டுபிடிப்பு , வெளிப்பாடு மற்றும் பிரிவின் மீது அதன் உறுதியை வலுப்படுத்த பேடன்டுகள் போன்றவற்றின் மூலம் நாடு மருந்துத்துறையில் முன்னணியில் செல்லும்.' இவ்வாறு அவர் மேலும் கூறினார்.
IPW ன் கீழ் நிகழ்ச்சிகள்:
ஃபார்மா தலைவர்கள் கோல்ஃப் :
9 ஆம்தேதி அன்று திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் மருந்து நிறுவனங்களின் தலைவர்கள் கோல்ஃப் விளையாட்டை விளையாடுவார்கள். மகிழ்வுக்காகவும் மேலும் நெட்வொர்க்கிங் நாளுக்காகவும் குளிர்கால சூரியனின் கீழ் கிட்டத்தட்ட 25 தலைவர்கள் இந்த விளையாட்டை விளையாடி மகிழ்வர். பிரம்மாண்டமான CPhI & P-MEC இந்திய கண்காட்சி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் நடைபெறும் இந்த வார்ம் அப் கோல்ஃப் நட்பு ரீதியான விளையாட்டு எண்ணிக்கையிலடங்கா வியாபார வாய்ப்புகளையும் மற்றும்தொடர்புகளையும் ஏற்படுத்தும்.
CPhI & P-MEC: மருந்து தொழில்துறை இந்தியாவில் உயர்ந்த தரம் மற்றும் குறைந்த விலை ஃபார்மா தீர்வுகளை எதிர்பார்க்கும் இந்த வேளையில் , CPhI & P-MEC இந்தியா சந்தையில் சமீபத்திய போக்குகள் மற்றும் கண்டுபிடிப்புகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான மிகப்பொருத்தமான நிகழ்ச்சியாகும். நிகழ்ச்சியானது 12 ஆம்தேதி முதல் 14 ஆம்தேதி டிசம்பர் வரை திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் இந்திய மருந்து இயந்திரங்கள், தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் தொழில்துறையில் மூவர்ஸ் மற்றும் ஷேக்கர்களை சந்திப்பதற்கு வாய்ப்பை வழங்குகிறது இது போட்டி நன்மையின் மூலமாக அவர்களது வியாபாரம் வளர வழிவகுக்கிறது.
இந்திய ஃபார்மா விருதுகள் மற்றும் நெட்வொர்க்கிங் நெட் :
12 ஆம்தேதி டிசம்பர் 2018 அன்று இந்திய மருந்துத்தொழில்துறை தனது 6 வது வருட முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளை கொண்டாட இந்திய ஃபார்மா விருதுகளை வழங்க உள்ளது. அங்கீகரித்தல் &நெட்வொர்க்கிங் பாதையின் ஒரு பாகமான இந்திய ஃபார்மா விருதுகள் 2018 தொழில்துறை ஜாம்பவான்கள், தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை ஒருங்கே இணைக்கிறது . அதிகரிக்கும் நாமினேசன்கள் ,பங்குரிமைகள் மற்றும் வருடாவருடம் அதிகரிக்கும் பார்வையாளர்கள் போன்றவற்றின் விருதுகளின் பயணம் மிகவும் சுவையானதாக மாறி வருகிறது. நாட்டிலுள்ள மருந்து நிறுவனங்களின் ஒரு தளமாக மட்டுமல்லாமல் அதில் இருக்கும் தனிநபர் சாதனைகளை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இந்திய ஃபார்மா விருதுகள் விளங்குகின்றன. அதனால் மருந்து உலளின் மிகச்சிறந்த தளமாக செயலாற்றி வருகின்றன. மிகவும் வெளிப்படையான செயல்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய ஃபார்மா விருதுகள் தொழில்நுட்பமுறையிலும் செயல்முறையாகவும் நடத்தப்படுகின்றன மேலும் மருந்து தளத்தில் உங்கள் பிராண்டை வெளிப்படுத்த சிறந்த தளமாகவும் விளங்குகின்றன மேலும் தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளை குறிக்கும் இந்த நிகழ்ச்சி நடுநிலையான ஜூரி பேனலின் மூலம் இது செய்யப்படுகிறது.
ஃபார்மா இணைப்பு கூட்டம் : உலக தொழிற்சாலைகளை விட இந்திய ஃபார்மா சந்தை முன்னணியில் உள்ளது. மேலும் இந்த பிரிவை தூண்ட, 'எண்ணுதல், கண்டுபிடித்தல் , ஒருங்கிணைத்தல்' என்ற தீம்களுடன், மருந்து கண்டுபிடிப்பில் அடுத்த முக்கிய என்ட் டூ என்ட் ஹப்பாக திகழும் மேகிங் இந்திய ஃபார்மா நோக்கத்தை அடையும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயல்பட ஃபார்மா இணைப்பு கூட்டம் வழிவகுக்கிறது. 12 ஆம்தேதி டிசம்பர் 2018அன்று திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் 'கூட்டு முயற்சிகள் மூலமாக மருந்து தொழில்துறை உட்கட்டமைப்பை மாற்றுதல்', இந்தியாவில் நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தும் கொள்கைகள், மருந்துத்துறைப் பிரிவை மாற்றுவதில் டிஜிட்டலைசேசனின் பங்கு ,' மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை புகுத்துதல் போன்ற பல தலைப்புகளில் விவாதங்களும் நடைபெறும்.
CEO வட்டமேசை : கடந்த 2 வருடங்களாக, IPWவின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது நடைபெற்றுவருகிறது. 12 ஆம்தேதி டிசம்பர் அன்று திட்டமிடப்பட்டுள்ள 3வது பதிப்பில் நடைபெறும் இது சிந்தனையைதூண்டும் ஆழமான விவாதங்கள் நடைபெறும் முன்னணி மருந்து கம்பெனிகளின் CEOs களின் மூலாபாய சந்திப்பாக திகழ்கிறது ,மூடிய கதவு CEO வட்டமேசை மாநாடான இது மிகப்பெரும் வெற்றியா க அமைந்துள்ளது.
ஃபார்மாவில் பெண் தலைவர்கள்: இந்த மாநாடு, மருந்து தொழில்துறையில் பெண்களின் குறிப்பிட்ட மற்றும் தொடர்ந்த பங்களிப்பை ஒப்புக்கொண்டு அதைக் கொண்டாடும் முயற்சிகளையும் நோக்கமாக கொண்டுள்ளது. 13 ஆம்தேதி டிசம்பருக்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள மாநாடு பெண் அறிவுமேதைகளை உலகெங்கிலும் இருந்து பொதுவான தளத்திற்கு அழைத்து வருகிறது அங்கே அவர்கள் தங்கள் வெற்றி கதைகள், அனுபவங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை பகிருவர். ஃபார்மாவில் பெண் 3வது பதிப்பில் தலைமைத்துவம், தொழில்முனைவோர் மற்றும் பாலின வேறுபாடு என்ற 3 முக்கிய தூண்களைச் சுற்றும் அறிவுப்பூர்வமான 'பெண்ணிற்கு எல்லாம் கிடைத்துவிட்டதா? வாழ்க்கை மற்றும் வேலை சமநிலை மற்றும் எங்களது நிறுவனங்களை மேலும் மாற்றங்களுக்கு உட்படுத்தி உள்நுழைவு தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கான உத்திகள்' போன்ற விவாதங்கள் நடைபெறும் .
CPhI & P-MEC கண்காட்சி பற்றி:
மருந்து கண்டுபிடிப்பிலிருந்து பூர்த்தி செய்யப்பட்ட மருந்தளவு வரை, CROs, CMOs மற்றும் API யின் உற்பத்தியாளர்கள், ஜெனரிக்ஸ், எக்சிபியன்ட்ஸ் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு, ஃபைன் கெமிக்கல்ஸ்,பயோசிமிலர்ஸ், பூர்த்தி செய்யப்பட்ட மருந்து கண்டுபிடிப்புகள், ஆய்வக இரசாயனங்கள் மற்றும் பயோடெக்னாலஜி வரை சப்ளை செயினின் ஒவ்வொரு படியையும் நிறைவு செய்யும் விதத்தில், உலகளாவிய CPhIலிருந்து வந்த CPhI India, தென் இந்தியாவின் முன்னணி ஃபார்மா சந்திப்பு இடமாக மாறியுள்ளது.
மறுபுறத்தில் மருந்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், பகுப்பாய்வு உபகரணம், ஆட்டோமேசன் & ரோபோட்டிக்ஸ், பேக்கேஜிங் உபகரணம் மற்றும் சப்ளைஸ், தொழிற்சாலை / பணியிட உபகரணம், ஆட்டோமேசன் & கன்ட்ரோல்ஸ்,செயல்முறை உபகரணம், RFID, டேப்லட்டிங்/ கேப்சூல் நிரப்பிகள், அறை சுத்தப்படுத்தும் உபகரணம், நிரப்பும் உபகரணம் மற்றும் ஆய்வக தயாரிப்புகள் போன்றவற்றின் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கியதே P-MEC ஆகும்.
India Pharma Week பற்றி:
அக்டோபர் 2018ல் உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் ஒரு பாகமாக இணைந்துள்ள UBM ஆல் India Pharma Week மூன்றாவது பதிப்பு ஒருங்கிணைக்கப்படும். India Pharma Week பற்றிய அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும்http://www.cphi.com/india/pharma-week மேலும் ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி தெரிந்துகொள்ள தயவுசெய்து வருகை தரவும்http://www.ubm.com/global-reach/ubm-asia .
UBM Asia பற்றி: UBM Asia சமீபத்தில்தான் உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளரான Informa PLC உடன் ஒரு பாகமாக இணைந்துள்ளது, ஆசியாவில் எங்களது இருப்பை பற்றி தெரிந்துகொள்ள தயவுசெய்து வருகை தரவும் http://www.ubm.com/asia
ஏதேனும் ஊடக கேள்விகளுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
UBM India
Roshni Mitra(ரோஷ்னி மித்ரா)
[email protected]
Mili Lalwani(மிலி லால்வானி)
[email protected]
+91-22-61727000
Prachi Kumar(பிராச்சி குமார்)
[email protected]
+91-7718866668
UBM India
Share this article