மும்பை, November 19, 2018 /PRNewswire/ --
UBM இந்தியாவால் மும்பையில் உள்ள தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைக்கான தெற்காசியாவின் மிகப்பெரிய வர்த்தக நிகழ்ச்சி
Mumbai, வணிக மையத்தில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையில் தென் ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியான OSH இந்தியாவின் 7 வது பதிப்பை, இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM இந்தியா வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியன்று Mumbai, Bombay Exhibition Centre ல் திட்டமிடப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை விவாதிக்கவும், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையில் மிகவும் சிக்கலான சில சவால்களுக்கு தீர்வுகாணவும் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்களையும், ஆலோசகர்களையும், வர்த்தக நிபுணர்களையும், முக்கிய அரசாங்க அதிகாரிகளையும் ஒரு பொது தளத்தின் கீழ் கொண்டுவருகிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/785410/OSH_Mumbai_Logo.jpg )
உலகளவில் 120 கண்காட்சியாளர்களை ஈர்த்து மற்றும் பணியிடத்தில் சிறந்த நடைமுறைகளை இணைத்துக்கொள்வதற்கான வழிகளை மேம்படுத்தி, குறிப்பாக அதற்கேற்ப ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக OSH இந்தியா, பாதுகாப்புத் துறைக்காக நடைபெறும் நாட்டின் உறுதியான வருடாந்திரக் கண்காட்சி ஆகும். கண்காட்சியானதுDirectorate of Industrial Safety & Health (DISH), Government of Maharashtra, Indian Technical Textile Association (ITTA); British Safety Council (BSC), International Power Access Federation, Indian Society of Ergonomics (ISE), MRO Association of India, Safety Appliances Manufacturers Association (SAMA), Taloja Industrial Association மற்றும் Thane Manufacturer Association ஆகியோரால் ஆதரவளிக்கப்படுகிறது.
பொருத்தமான கூட்டாளிகள், சமூக கட்டிட முயற்சிகள் மற்றும் தடங்கள் வழியாக சிறந்த OSH நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அமல்படுத்துவது இந்நேரத்தின் தேவையாகும். தொழில்துறை அறிக்கையின் படி, உலகளாவிய தொழிலாளர் தொகுப்பில் 75 சதவிகிதம் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர், அதில் ஒவ்வொரு வருடமும் 125 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியிட விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர். மக்கள்தொகையின் ஒரு பெரும் பகுதி உழைக்கும் வயதிற்கு உரியதாகயிருப்பதால் இந்த பணியாளர்களின் உணர்வுபூர்வமான நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுத்து, சிறந்த திறமைகளை தக்கவைத்து நல்ல உற்பத்தித்திறனை உறுதிப்படுத்த நிறுவனங்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக வாகன மற்றும் எண்ணெய், எரிவாயு, கட்டுமானம், போன்ற உற்பத்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் உள்ள நிறுவனங்கள் தொழில்ரீதியான அபாயங்களை அறிந்திருக்கின்றன மேலும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு உழைக்கின்றன. அரசாங்கங்கள் உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும், பணியிட பாதுகாப்பை மையமாகக் கொண்ட வளங்களை வழங்குகின்றன, மேலும் உலகளாவிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்திய போதிலும், பல்வேறு நிலைகளில் போதிய கல்வி இல்லை, பொதுமக்கள் விழிப்புணர்வு இன்னமும் இல்லை, ஏனெனில் நிர்வாகங்களும், பணியிடமும் எப்பொழுதும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்காது. எனினும், பல நிறுவனங்கள் விழிப்புணர்வு உருவாக்க பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்ய முயற்சித்திருக்கின்றன, ஒரு செறிவு மற்றும் ஒத்திசைவு மூலோபாயம் இடத்தில் தெளிவாக இல்லை. UBM இந்தியாவின் OSH இந்தியா இந்த முக்கிய இடைவெளியை பூர்த்தி செய்ய உதவுகிறது.
இந்த கண்காட்சியில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை விவாதிக்கவும், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையில் மிகவும் சிக்கலான சில சவால்களுக்கு தீர்வுகாணவும் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் புகழ்பெற்ற கண்காட்சியாளர்களையும், ஆலோசகர்களையும், வர்த்தக நிபுணர்களையும், முக்கிய அரசாங்க அதிகாரிகளையும் ஒன்றாக இணைத்துக் கொண்டுவருவதை இலக்காக கொண்டுள்ளது. பாதுகாப்பு மேலாளர்கள், ஆலோசகர்கள், பாதுகாப்பு நிறுவனங்களிலிருந்து நபர்கள், பேரழிவு முகாமைத்துவ வல்லுநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தியாளர்கள், மின் ஒப்பந்தம் / பொறியியலாளர்கள், வசதி மேலாளர்கள், தளவாடங்கள் வல்லுநர், நகராட்சி அதிகாரிகள், கணினி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இந்தியா முழுவதும் மற்றும் உலகளாவிய சந்தையில் இருந்து நகரங்களை திட்டமிடுபவர்கள் போன்ற நிபுணர்கள் OSH இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார்கள்.
எக்ஸ்போவில் ஒரு புதுமை மண்டலம் அடங்கும், இது தொழில்முறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தொழில்துறைக்கு பெருமளவில் பயனளிக்கும் புதுமையான தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் காட்சிப்படுத்தவும் ஒரு தளமாக அமைந்திருக்கும். புதுமையான தயாரிப்பு / சேவை அல்லது தொழில்நுட்பம் 'சிறந்த தயாரிப்பு கண்டுபிடிப்பு விருது' பெற வாய்ப்பு உள்ளது இந்த விருது உடனடியாக மேடையிலேயே வழங்கப்படும். இதோடு கூடுதலாக, எக்ஸ்போவில் தயாரிப்பு தொடக்கம் மற்றும் IPAF வகுப்பறை அரங்கத்தை காட்சிப்படுத்தும்.
இக்கண்காட்சியில், துறையின் பல்வேறு முன்னனி துறையினரின் பங்களிப்பும் உள்ளது, அதில் அடங்குபவை, Acme Safetywears Limited, Bata India Limited, British Safety Council, Cortina China Limited, Draeger Safety India Pvt Ltd, E.I. Dupont India Pvt Ltd, Fall Arrest Systems & Technologies Pvt Ltd, Godrej Interio, Highfield International, ID Overseas Private Limited, Indomax, Joseph Leslie & Co. LLP, Kaizen India, Karam Industries, Marvel Gloves, Midas Safety Pvt. Ltd, Narayana Hrudayala Limited (Narayana Health), NEBOSH, Oshkosh India Private Limited (JLG), Prolite Autoglo Limited, Saurya HSE Pvt Ltds, Superhouse Limited, Teijin India Pvt Limited, TATA Communications Limited, Udyogi International Pvt Ltd, Unicare Emergency Equipment Pvt Ltd, Uviraj Global (P) Ltd, Venus Safety & Health Pvt Ltd, Youngwoo Ind. Co. Ltd. and Black & Decker மற்றவர்களுள் அடங்குவர். இந்த ஆண்டு, 150 க்கும் அதிகமான பிராண்டுகள், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இலங்கை, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, அயர்லாந்து, மத்திய கிழக்கு மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச பங்கேற்பு காணப்படும்.
OSH இந்தியவானது தொடர்ந்து துறையில் அளவையும் ஆழத்தையும் கொண்டு வளர்ந்துவருகிறது, இதனால் 'Innovation Zone Partner' - Amazon; 'VIP Partner' - Jayco; 'Gold Partners' - Acme Safetywear and Venus Safety; 'Silver Partner' - Atlas Protective; 'Registration Partner' - Karam; 'Lanyard Partner' - Allen Cooper (Superhouse); 'Visitor Bag & Cafeteria Partner' - Black & Decker; 'Badge Partner' - Uviraj Global; 'Safe Escape Partner' - Prolife Autoglo; 'Confined Space Entry Partner' - Drager; 'Technology Partner' - Tata Communications; 'Safety Footgear Partner' - Sketchers; 'Health Partner' - Narayana Hospital; 'Associate Conference Partner' - Youngwoo; 'Conference Session Partners' - Safestart, Godrej Interio and FALL Arrest System & Technologies போன்ற தொழில்துறை தலைவர்கள் மற்றும் முக்கிய கூட்டாளிகள் கவரப்படுகின்றனர்.
OSH India 2018 அறிவிப்பில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், "ஒரு அலுவலகம், தொழிற்சாலை போன்ற எதுவாக இருந்தாலும் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் குறைந்த பட்சம் எட்டு முதல் பத்து மணிநேரம் வரை பணியாற்றுவதால், பணி என்பது மக்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதனால், எனவே, பணியிட உற்பத்தித்திறனைப் பெறுவதற்கும் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு நலன்களை மேம்படுத்துதல் என்பது ஒரு முக்கிய அம்சமாகும். பாதுகாப்பற்ற பணியிடங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உலகளாவிய ரீதியில் நிறுவனங்களின் தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு இணக்கங்களின் முக்கியத்துவமானது கவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்துறைமயமாக்கப்பட்ட நாடுகளை விட வளர்ந்து வரும் நாடுகளில் விபத்தால் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வேறுபாடு முதன்மையாக சுகாதார மற்றும் பாதுகாப்பு திட்டங்கள், தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் மேம்பட்ட முதல் உதவி மற்றும் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் மீதான முடிவெடுக்கும் செயல்முறைகளில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் பங்கு ஆகியவை காரணமாக உள்ளது. OSH இந்தியா 2018, இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்குள் உலகளாவிய ரீதியிலான சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை சந்திக்கவும் அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதால் அவர்களின் புதுமைகள் மற்றும் அறிவை காட்சிப்படுத்துவதோடு நிறுவனங்களுக்கான தெளிவான தீர்வுகளை வழங்குவதன் மூலம் OSH விழிப்புணர்வு மற்றும் தரநிலைகளை உயர்த்துவதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது."
"இது, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஒரு நிலையான அடிப்படையில் வழங்கும் ஒரு தொழிற்துறை ஆகும். இயற்கையாகவே, இந்த கண்காட்சியில் சப்ளையர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கான கற்றல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் ஆகியவற்றுடன் ஒரு மகத்தான வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது "என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எக்ஸ்போவின் சிறப்பம்சங்களில் ஒன்றான, இரண்டு நாள் சக்தி வாய்ந்த OSH மாநாடானது தொழிற்துறை பிரதிநிதிகளுடன் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதையும், கருதுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. OSH எக்ஸ்போவின் வரலாற்றில் முதன்முறையாக எம் ஆர் ஓ-வில் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் பணிச்சூழலியலில் சிறந்த நடைமுறைகள் தொடர்பான விவாதங்கள் இருக்கும். மாநாட்டில் பிரதான அமர்வுகளும் குழு கலந்துரையாடல்களும் நாடு முழுவதும் இருந்து தொழில் வல்லுநர்கள் மற்றும் முன்னணி சர்வதேச அமைப்புக்களால் கலந்து கொள்ளப்படும். மாநாட்டில் விவாதத்தின் தலைப்புகள் பின்வருமாறு: 'நிர்மாணத் தொழிலில் OSH உடன் தொடர்புடைய சட்டம் மற்றும் சட்டம் அமல்படுத்தும் சவால்கள்'; 'நிர்மாணத் தொழிலில் OSH ன் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துதல்'; 'OSH சம்பந்தப்பட்ட சிமெண்ட் உற்பத்தியில் மனதை மாற்றுதல்'; 'விபத்து தடுப்பு: இடர் மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடு உத்திகள்'; 'சரியான OSH மூலோபாய நன்மைகளை நிறுவனங்கள் எப்படி செயல்படுத்துவது'; 'புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி செய்யும் வசதிக்கான சிறந்த பாதுகாப்பு நடைமுறைகள்'; விபத்து தடுப்பு: அபாய மதிப்பீடு மற்றும் கட்டுப்பாட்டு மூலோபாயங்களுக்கு அப்பால் செல்லும் நடத்தை அடிப்படையிலான பாதுகாப்பு; 'HSE அங்கீகாரத்தின் பங்கு மற்றும் அதன் தேவை; 'தொழிலாளர் நலனுக்கான தொழில் அபாயங்களுக்கு போராடுதல்'; 'ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு'; தொழில்துறை சுகாதார மேம்பாட்டாளர்களால் அடையாளம் காணப்பட்டு கட்டுப்படுத்தப்படவேண்டிய தொழில் அபாயங்களின் பல்வேறு வகைகள்'; 'மருந்தியல் தொழிற்துறையில் ஒரு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வேலை சூழலை உறுதிப்படுத்துதல்'; 'பணியிடங்களை மாற்றுவதல் மற்றும் பணியாளர் உடல் நலனில் அதன் தொடர்பான தாக்கம்'; 'அபாயகரமான சம்பவங்களைக் கையாள்வதற்கான தொழில்துறை கொள்கையை தரப்படுத்துதல்'; மற்றும் 'பாதுகாப்பு இணக்கத்திலிருந்து பாதுகாப்பு கலாச்சாரம் வரை' இதன் மத்தியில் நடைபெறும். திரு
மாநாட்டில் ஸ்ரீ H.R Jagannath, CEO, Air India Engineering Services Ltd; திரு. Bharat Londhe, Head EHS, Primal Group; திரு. Arvind Bodhankar, Corporate Head - Health Safety Environment & Sustainability, Tata Motors Ltd; திரு. Pankaj Singh, Director - Health & Safety, ACC Ltd (LafargeHolcim Group); திரு. Durgannad Thakur, General Manager & Head - Safety, Vodafone Idea Ltd; திரு. Gaurang Baxi, Chief Safety Officer, Tata Power; திரு. Sunil Bailwar, Head - Safety, Hindalco; திரு. Abhay Pathak, Team Lead Assessir EHS, Quality Council of India - National Accreditation Board for Certification Bodies (NABCB); திரு. B. Sandhya, Scientist D, Bureau of Indian Standards; Dr. Chandran T., Vice President - Head HSE, Reliance Project Management Group; திரு. Thakur Pherwani, Head EHS, Amazon India; Anirban Chatterjee, Assistant Vice President - EHS, Yes Bank; திரு. Aniruddha Agnihotri, Environmental Sustainability, Health & Safety, Tata Consultancy Services; திரு. Jay Mukhopadhyay, Chief Manager - HSE, ACC Ltd; திரு. Devesh Ghuley, Head - Safety, Tata Housing Development Co; திரு. Birendra Verma, Jt. President - Safety, திரு. Aditya Birla Group; Dr. Hasit Dangi, Vice President - Operations & QA, National Peroxide Ltd; திரு. Suvek Salanka, Additional General Manager - Safety, Peninsula Land Ltd மற்றும் திரு. Amar Dalvi, General Manager ஆகிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றவர்கள் மத்தியில் அடங்குவர்.
நாள் 1 ல் பணி மற்றும் அபாயத்தின் எதிர்காலம் பற்றிய ஒரு விளக்கத்தை திரு Mike Robinson, CEO, British Safety Council, வழங்குவார். தனது தொழிற்துறை முன்னோக்கை பற்றி திரு Mike Robinson கூறுகையில், "வேலை மற்றும் பணியிடங்கள் முன்னெப்போதையும் விட விரைவாக மாறி வருகின்றன. புதிய, விரைவாக உருவாகிவரும் தொழில்நுட்பம் நம் நட்பு மற்றும் நம் எதிரி ஆகும். அதே சமயத்தில், நாம் எப்படி வேலை செய்கிறோமோ அதற்கேற்றார் போல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கட்டுப்பாட்டை அளிக்கிறது. இது நம்மை நாடுகள் கண்டங்கல் அனைத்திலும் மற்றவர்களுடன் எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்ய அனுமதிக்கிறது மற்றும் ஒத்துழைக்கிறது, ஆனால் அது வேலைகள் மற்றும் மக்களின் தேவையை அதிகரிக்கச் செய்கிறது.வெவ்வேறு வேலை பாங்கினைக் கோறும் பழைய தொழிலாளர்களின் தேவைகளுக்கும், X மற்றும் Y தலைமுறைகளின் எதிர்பார்ப்புகளுக்கும் தொழிலாளர் சந்தைகள் இணங்க வேண்டும். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை அழுத்தங்களின் விளைவாக நிறுவனங்கள் புதிய கோரிக்கைகளை எதிர்கொள்கின்றன."
"இந்த மாற்றங்கள் தொடர்பானவற்றை நான் பார்ப்பதோடு பணியாளர்களுக்கு அதனால் ஏற்படும் ஆரோக்கிய, நல, பாதுகாப்பு ஆபத்துகளையும் நான் பார்க்கிறேன். வியாபாரங்கள் எவ்வாறு அவற்றுக்கு தயாராவது என்பது பற்றிய சில ஆலோசனைகளையும் நான் வழங்குவேன். தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பது பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நமது பார்வைடன் கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். எனவே அறிவை பகிர்ந்துகொள்வது, முக்கிய தொழிற்துறை வல்லுனர்களுடன் உறவுகளை உருவாக்குதல், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வருவதற்கு இது சரியான தளமாகும்," என்று மேலும் திரு ராபின்சன் கூறினார்.
OSH இந்தியா 2017 கண்ணுறவிருக்கும் 'OSH இந்தியா பாதுகாப்பு விருதுகள் 2018' இது இந்தியாவில் இயங்கும் தொழில்கள், நிறுவனங்கள், கூட்டணிகள் மற்றும் பொது அல்லது தனியார் துறைகளில் பணியிட சுகாதார மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்காகத் திறந்திருக்கும். இவ்வருடம், OSH விருதுகள் மொத்தம் 120 பரிந்துரைப்புகளை பெற்றுள்ளன, இதில் தொழில் செங்குத்துத் தொகுப்புகளான கட்டுமானம், மருந்துகள், இரசாயனங்கள், FMCG, BPO, வங்கி, சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் & எரிவாயு, ஆட்டோமொபைல்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து, ஆற்றல், SME க்கள், வேளாண்மை, சுகாதாரம், உணவு, இரும்பு & எஃகு, ஐ.டி, ரப்பர் தொழில் மற்றும் பல அடங்கும். இந்த விருதுகள் விண்ணப்பதாரர்களிடையே போட்டித் திறனை வளர்ப்பதில் கருவியாக இருந்தன, புதுமைகளை ஊக்குவிப்பதில் மற்றும் இந்தியாவில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள சிந்தனைத் தலைமையை ஊக்குவித்து, மேம்படுத்த முடிந்தன. 29 வது நவம்பர் அன்று விருதுகள் இரவு திட்டமிடப்பட்டு, அறிவுமேதைகள் மற்றும் முன்னோடிகளில் ஒன்றாக இணைந்து, கவர்ச்சி மற்றும் பொழுதுபோக்கின் இரவில் குறிக்கப்படும் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்.
தொழில்துறை பேச்சு மற்றும் தொடக்கம்:
திரு, Arpan Jani, Chief Marketing Officer, Venus Safety & Health Pvt. Ltd., கூறுகையில், "இந்தியாவில், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பது உலக தரங்களுடன் ஒப்பிடுகையில் மிக ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இருப்பினும், தொழில் தற்போது விரைவான வேகத்தில் வளர்ந்து வருவதோடு சர்வதேச போக்குகளை கவர்கிறது. ஒரு தயாரிப்பாளராக, இந்திய பாதுகாப்புத் துறைக்கு வருகிற ஆண்டுகளில் பெரிய வளர்ச்சி சாத்தியம் இருப்பதை நாங்கள் காண்கிறோம். உள்கட்டமைப்பை கட்டமைப்பதற்கான அரசாங்க முன்முயற்சிகள் பாதுகாப்பு சாதனங்களுக்கான கோரிக்கைகளை முன்வைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றுகின்றன மற்றும் உற்பத்தியாளர்களுக்கான பெரிய வாய்ப்பை உருவாக்குகின்றன. OSH இந்தியா தற்போதுள்ள மற்றும் வாடிக்கையாளர்களுடனான எங்கள் உறவை வலுப்படுத்த உதவுமென நாங்கள் நம்புகிறோம். எங்கள் புதிய தயாரிப்பான - 'Head Mounted Powered Air Purifying Respirator' ஐ அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள தயாரிப்புகளையும் காட்சிப்படுத்த ஒரு சிறந்த தளமாகும். இந்திய வாடிக்கையாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கின்றனர், எனவே நமது நாட்டில் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய தொழில் நுட்பத்திற்கான ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நாங்கள் காண்கிறோம்." என்று கூறினார்.
திரு, KS Chari, Managing Director, Ion Science India Pvt. Ltd.,கூறுகையில், "Ion Science Limited, UK நிறுவனமானது PID தொழில்நுட்பம் மற்றும் VOC கண்காணிப்பாளர்களில் நன்கு அறியப்பட்ட பிராண்ட் ஆகும், அவற்றிற்கு தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான துறைகளில் பல்வேறுபட்ட உபயோகங்கள் உள்ளன. OSH இந்தியா 2018ல் எங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதனால், அயன் அறிவியல் இந்தியாவை இந்திய சந்தையில் நிறுவுவதில் ஒரு பெரிய படியாகும். எங்கள் வாடிக்கையாளர்களில் 70 சதவிகிதத்தை நேரடியாக அணுகுவதற்கும், தயாரிப்பு தரம் மற்றும் சேவைக்கு அர்ப்பணிப்பு பற்றிய கூடுதல் நிலை உறுதிப்பாட்டை வழங்குவதற்கும் அனுமதிக்கிறது. முக்கிய மறுசீரமைப்பு மற்றும் பெட்ரோலியத் தயாரிப்பு வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் இது உதவும், இது கருவி உற்பத்தியாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புவதாகும். கூடுதலாக, பிராந்திய துணை விற்பனையாளர்களுடனான உறவுகளை வளர்த்துக் கொள்வதில் இது ஒரு முக்கிய படியாகும், இது வரும் காலங்களில் நடக்கும்."
OSH Mumbai பற்றி:
UBM ஆல் ஏற்பாடு செய்யப்படும் OSH Mumbai, இது அக்டோபர் 2018 ல் Informa PLC உடன் இணைந்து B2B தகவல் சேவைகள் குழுவாகவும், உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளராகவும் மாறும். OSH Mumbai பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://www.oshindia.com/mumbai/ மற்றும் ஆசியாவில் எங்கள் இருப்பை பற்றி தெரிந்துகொள்ள www.ubm.com/global-reach/ubm-asia செல்லவும்.
UBM Asia பற்றி:
UBM ஆசியா சமீபத்தில் Informa PLC இன் ஒரு பகுதியாக மாறியது, இது ஒரு முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப்பெரிய B2B நிகழ்வுகள் அமைப்பாளர் ஆகும். ஆசியாவில் எங்கள் இருப்பை அறிய www.ubm.com/asia க்கு தயவுசெய்து செல்லவும்.
ஊடக தொடர்புக்கு:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Prachi Kumar
+91-7718866668
[email protected]
UBM India
Share this article