குருகிராம் , இந்தியா, October 29, 2018 /PRNewswire/ --
#IMC2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட , இந்த தொழில்துறைக்கே முதன்மையான ஃபைபர்- டூ- த பாயின்ட் தீர்வானது வடிவமைப்பு திறன், ஃபைபரைசேசன் மற்றும் மெய்நிகராக்கல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து FTTx நெட்வொர்க்குகளுக்கு விரைவுத்தன்மையை வழங்குகின்றன.
உலக தரவு நெட்வொர்க் தீர்வுகள் நிறுவனமாக Sterlite Tech (BSE: 532374) (NSE: STRTECH), சேவை தீர்வுகளை end-to-end FTTxகளாக வழங்கும் புத்தம்புதிய FTTx MANTRATM ஐ இன்று அறிமுகபடுத்தியது. சர்வதேச தகவல் தொடர்பு சேவை வழங்குநர்கள், தரவு மையங்கள் மற்றும் குடிமக்கள்நெட்வொர்க்குகள் ஆகியவற்றுக்கான 5ஜியின் அனைத்து எதிர்கால தேவைகள், இன்டர்நெட்ஆஃப் திங்ஸ் (IoT) அப்ளிகேசன்கள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் அளவு, தன்மை மற்றும் விரைவுத்தன்மைக்கான ஃபைபர்- டூ-த பாயின்ட்டின் ரோல் அவுட்டை இந்த தீர்வு அனுமதிக்கிறது.
(Logo: https://mma.prnewswire.com/media/568301/Sterlite_Logo.jpg )
வடிவமைப்பு கண்டுபிடிப்பு மற்றும் சேவை பொறியியலில் திறமை ஆகியவற்றை ஒரே தொழில்நுட்ப தளத்தில் ஒருங்கிணைக்க, நிறுவனமானது FTTx MANTRATMஐ- மேசிவ் அஜைல் நெட்வொர்க் டிரான்ஃபர்மேசன் ( பெரும் விரைவுத்திறன் கொண்ட நெட்வொர்க் பரிமாற்றம்)ஐ உள்நாட்டிலேயே மேம்படுத்தியது. இது பின்வரும் மிகத்திறம் வாய்ந்த ஐந்து Iக்களின் ஆற்றலையும் ஒருங்கே இணைக்கிறது- நுண்மதியுடைய ஆப்டிக்கல் ஃபைபர் தயாரிப்புகள், ஒருங்கிணைந்த நெட்வொர்க் வடிவமைப்பு, புதுமையான மெய்நிகராக்கம், ஹைபர்- ஸ்கேல் நெட்வொர்க் பயன்படுத்தலின் ஒருங்கிணைந்த வழிமுறை, பாகுபடுத்தல் மற்றும் பெரிய தரவுகளை பயன்படுத்தும் அறிவுத்திறம் வாய்ந்த மென்பொருள் தீர்வுகள் .
Dr. Anand Agarwal, Group CEO, Sterlite Tech கூறுகையில் , ' தரவு மற்றும் ஃபைபர் நெட்வொர்க்குகளுக்கான தேவையை அடைய தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குநர்கள், செயலற்ற நிலை - இல்லாமை உடன் அதிக விரைவுத்தன்மையுடன் நெட்வொர்க்கை மறு வடிவமைப்பு செய்ய வேண்டும் என கூறினார். ' டிஜிட்டர் நெட்வொர்க்குகளுக்கான தொழில்நுட்ப நங்கூரமாக விளங்கும் ஃபைபர் , ஒவ்வொரு வீடு அல்லது நிறுவனத்தையும் இணைக்கத்தேவையான வடிவமைப்பு திறன், ஆழமான ஃபைபரைசேசன் மற்றும் மெய்நிகராக்கலை ஒருங்கிணைந்த தீர்வாக அளிக்கிறது. எங்களது சிலிக்கான் முதல் மென்பொருள் வரையிலான திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம், அதனை முழுமையாக செயல்படுத்தும் FTTx MANTRATM வை ஒரு தீர்வாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்த சேவையுடன் தினசரி வாழ்வின் அனுபவத்தை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம்.' என்று கூறினார்.
உயர்- தொழில்நுட்ப தீர்வின் திரை விலக்கிய Anuj Jain, Business Head (FTTH and Enterprise), Jio, கூறுகையில் , ' நாங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே Sterlite Tech எங்களது கூட்டாளியாக உள்ளது. எங்களது வாடிக்கையாளர்களின் மதிப்பின் பங்கை நாங்கள் விரிவுபடுத்துகையில், எங்களது நெட்வொர்க் கூட்டாளியான Sterlite Tech இறுதி மைல்கள் வரை எங்களது டிஜிட்டல் தீர்வுகளை கொண்டு செல்ல உதவுகிறது. மிக உயர்ந்த தரம் மற்றும் மிக மலிவான விலையில் யாருடனும் எங்கேயும் எப்போதும் நம்மை இணைக்கும் இடைஞ்சல் இல்லாத மற்றும் ஒருங்கிணைந்த சேவையை இறுதி மைல்களை வரை வழங்க உதவுகிறது. இது வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதுடன் இந்திய மக்களின் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும்' இதனுடன் மேலும் கூறுகையில் , ' தொலைதூரபகுதிகளில் விரைவான பெருஅலைக்கற்றை ஊடுருவலை ஏற்படுத்த இந்த FTTx MANTRATM தீர்வு உதவும் மேலும் இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவிற்கு இடையே உள்ள டிஜிட்டல் இடைவெளியை நிரப்பும்.' என்று Jain உறுதியளித்தார்.
5ஜி, IoT, உலகத்தரவு நுகர்வில் மெய்நிகராக்கம் மற்றும் மிகுதிப்படுத்திய உண்மைத்தன்மை ஆகியவற்றுடன் அனைத்து கருவிகளிலும் தடையில்லான பயனர் அனுபவத்தை எதிர்பார்க்கும் நுகர்வோர்களின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றினால் Sterlite Tech , வாடிக்கையாளரை நேரடியாக சென்றடையும் விரைவான மற்றும் எளிதான ஃபைபர் உட்கட்டமைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது. இந்த புத்தம்புதிய கையடக்க தொழில்நுட்பமானது முந்தைய தேர்ந்தெடுப்பவர்களின் நுகர்வோர் பெரிய அலைக்கற்றை சேவைகளை சந்தைப்படுத்தும் நேரத்தை குறைக்கிறது மேலும் நெட்வொர்க் பயன்படுத்தலுக்கான மூலதனம் மற்றும் செயல்பாட்டு செலவையும் குறைக்கிறது.
27 ஆம்தேதி அக்டோபர் 2018 அன்று ஏரோசிட்டி, புது டெல்லி, இந்தியாவில் நடைபெற்ற இந்தியா மொபைல் சந்திப்பு 2018ல் ஹால் பி, பூத் 1.4ல் Sterlite Tech உலகின் மிகமிக மெல்லியதான 432F கேபிள், LEAD360 எக்சிகியுசன் வழிமுறை, டிஜிட்டல் வணிகத்துடன் நெட்வொர்க் மெய்நிகராக்கல் வழிமுறை மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை தளம் மற்றும் பல உற்சாகம் தரும் அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் தனது புதுமையான தரவு நெட்வொர்க் திறன்களை வழங்கும் FTTx MANTRATM வையும் காட்சிப்படுத்தியது.
Sterlite Technologies பற்றி:
Sterlite Technologies Ltd (BSE: 532374) (NSE: STRTECH), சாமர்த்தியமிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளை வடிவமைத்து, கட்டமைத்து மற்றும் பராமரிக்கும் உலகத்தொழில்நுட்ப தலைவராகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டுள்ள Sterlite Tech, தயாரிப்புகள்,சேவைகள் மற்றும் மென்பொருளை டிஜிட்டல் வெப்- ஸ்கேலில் அளிக்கிறது. நிறுவனத்திற்கு இந்தியா,சீனா & பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளும் இந்தியாவில் இரு மென்பொருள் டெலிவரி மையங்களும் உள்ளன. பிராட்பேன்ட் ஆய்வுக்கான சிறப்பு மையம் மற்றும் அடுத்த ஜெனரேசன் நெட்வொர்க்குகள் பயன்பாடுகளுக்கான ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளின் மையம் ஆகியவை கொண்டுள்ள ஒரே நிறுவனமாக Sterlite Tech இந்தியாவில் விளங்குகிறது. ஆயுதம் தாங்கிய படையினருக்கான ஊடுருவ- இயலாத ஸ்மார்ட்டர் டேட்டா நெட்வொர்க், பாரத்நெட்டிற்கான நகர பிராட்பேண்ட், ஸ்மார்ட் சிட்டிகளின் மேம்பாடு மற்றும் ஹை- ஸ்பீடு ஃபைபர் - டூ- த - ஹோம் (FTTH ) நெட்வொர்க்குகள் விரிவாக்கம் போன்ற புராஜெக்டுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதிக விவரங்களுக்கு வருகை தரவும் http://www.sterlitetech.com
தொடர்புகள் :
ஊடக தொடர்புகளுக்கு
LK Pathak
Phone: +91-9925012059
Mail: [email protected]
முதலீட்டாளர் தொடர்புகளுக்கு
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Mail: [email protected]
Corporate Communications
Sumedha Mahorey
Phone: +91-22-30450404
Mail: [email protected]
Share this article