பூனா, இந்தியா, October 18, 2018 /PRNewswire/ --
பல இந்திய கடல் தளங்கள் மற்றும் இந்திய- மேற்பார்வையிலுள்ள தீவுகளையும் இணைக்கிறது, இந்த மட்டத்தில் உள்ள இந்தியாவின் முதன்முதல் ஒருங்கிணைந்த டிஜிட்டல் பாதுகாப்பு நெட்வொர்க்
உலகளாவிய தரவு நெட்வொர்க் தீர்வுகள் நிறுவனமான Sterlite Tech (BSE: 532374) (NSE: STRTECH), இந்திய கடற்படை டிஜிட்டல் நெட்வொர்க்கின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் மேலாண்மை கொள்முதல் ஆணையை பெற்றுக்கொண்டதை இன்று அறிவித்தது.
(Logo: https://mma.prnewswire.com/media/568301/Sterlite_Logo.jpg )
கடற்படை டிஜிட்டல் நெட்வொர்க்கின் வடிவமைப்பு, செயல்படுத்தல், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு உள்ளடங்கிய பல- வருட ஒப்பந்தமானது இது ரூ.3,500கோடிக்கான புராஜெக்டாகும். இந்த புராஜெக்டிற்கான முன்கூட்டிய கொள்முதல் ஆணையை(APO) நிறுவனம் பிப்ரவரி2018 அன்றே அறிவித்தது.
உலகில் உள்ள சிறந்த கடற்படைகளுக்கு இணையாக இந்திய டிஜிட்டல் பாதுகாப்பு தரத்தை இந்த நெட்வொர்க் வழங்கும். தற்சார்பான உயர்-கொள்ளளவு தொலைதொடர்பு நெட்வொர்க் உருவாக்கம், இந்திய கடல் தளங்கள் மற்றும் இந்திய மேற்பார்வையிலிருக்கும் தீவுகளை இணைத்தல் உள்ளடக்கியதே இந்த புராஜெக்டாகும். உயர் பாதுகாப்பான தரவு மையங்களை நிறுவுதல் மற்றும் மென்பொருள்- விளக்க பெரிய தரவு பொருளடக்க டெலிவரி நெட்வொர்க்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்த புராஜெக்டாகும்.
'இந்தியாவின் எல்லைகள் வரை நீண்டிருக்கும் இடங்களையும் பாதுகாக்கும் இந்திய கடற்படைக்கு வலுவூட்ட இந்த மட்டத்தில் இந்தியாவில் முதன்முதலில் செய்யப்பட்டும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் நெட்வொர்க் இதுவே ஆகும்' என்று Dr. Anand Agarwal, Group CEO, Sterlite Tech கூறினார். 'தற்போதைய சுற்றுப்புற விழிப்புணர்வு மற்றும் விரைவான முடிவு எடுத்தலை கொண்டு வரும் முன்னேறிய பாதுகாப்பு தீர்வுகளுடன் புதிய- தலைமுறை அப்ளிகேசன்களை இயக்க எங்களது தொழில்நுட்பங்கள் இந்திய கடற்படைக்கு உதவும். எதிர்கால தயாரிப்பிற்காகவும்,நெட்வொர்க் புதுமைக்கான தயாரித்தலுக்காகவும், பெரிய தரவு பாகுபடுத்தல் மற்றும் தனிப்பட்ட நிறுவன அப்ளிகேசன்களுக்காகவும் நமது கடற்படையை அது நிலைநிறுத்தும்'
'அனைத்து திறன்களும் நிறைந்த எங்களது நெட்வொர்க் இந்திய கடற்படைக்கு நெட்வொர்க் மீதுள்ள அனைத்து டிஜிட்டல் ஆபத்துகளையும் கண்டறியவும் தீர்க்கவும் வழி செய்யும். இதனால் இந்திய கடற்படைக்கு பாதுகாப்பு மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல் கிடைக்க வழி கிடைக்கும்' என்று KS Rao, CEO - Telecom Services Business, Sterlite Tech கூறினார். 'நாங்கள் கடந்த சில மாதங்களாக எங்களது தரப்பு சுற்றுப்புறஅமைப்பு மற்றும் வேலைவாய்ப்பை விரைவுபடுத்தி , வேலைக்காக எங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கிறோம்' என்றும் அவர் கூறினார்.
இந்திய பாதுகாப்புத்துறைக்கு ஊடுருவ - இயலாத ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளை கட்டமைப்பதில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் வழங்கியதில் Sterlite Tech தனது திறமையை நிரூபித்துள்ளது, மேலும் இந்தியாவின் மிகவும் மேம்பட்ட கட்டளை கட்டுப்பாட்டு மைய தொழில்நுடப்பத்தில் முன்னோடியாகவும் திகழ்கிறது.
Sterlite Technologies பற்றி:
Sterlite Technologies Ltd (BSE: 532374) (NSE: STRTECH), சாமர்த்தியமிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளை வடிவமைத்து, கட்டமைத்து மற்றும் பராமரிக்கும் உலகத்தொழில்நுட்ப தலைவராகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டுள்ள Sterlite Tech, தயாரிப்புகள்,சேவைகள் மற்றும் மென்பொருளை டிஜிட்டல் வெப்- ஸ்கேலில் அளிக்கிறது. நிறுவனத்திற்கு இந்தியா,சீனா & பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளும் இந்தியாவில் இரு மென்பொருள் டெலிவரி மையங்களும் உள்ளன. பிராட்பேன்ட் ஆய்வுக்கான சிறப்பு மையம் மற்றும் அடுத்த ஜெனரேசன் நெட்வொர்க்குகள் பயன்பாடுகளுக்கான ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளின் மையம் ஆகியவை கொண்டுள்ள ஒரே நிறுவனமாக Sterlite Tech இந்தியாவில் விளங்குகிறது. ஆயுதம் தாங்கிய படையினருக்கான ஊடுருவ- இயலாத ஸ்மார்ட்டர் டேட்டா நெட்வொர்க், பாரத்நெட்டிற்கான நகர பிராட்பேண்ட், ஸ்மார்ட் சிட்டிகளின் மேம்பாடு மற்றும் ஹை- ஸ்பீடு ஃபைபர் - டூ- த - ஹோம் (FTTH ) நெட்வொர்க்குகள் விரிவாக்கம் போன்ற புராஜெக்டுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதிக விவரங்களுக்கு வருகை தரவும் http://www.sterlitetech.com
முன்-நோக்கிய மற்றும் எச்சரிக்கை அறிக்கைகள்: Sterlite Technologies Limited அதன் வளங்களுடன் தொடர்புடைய சில வார்த்தைகள் மற்றும் அறிக்கைகள் இதில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் Sterlite Technologies' எதிர்பார்க்கப்படும் நிதி நிலைமை, வியாபார கோட்பாடு, Sterlite Technologies'ன் எதிர்கால மேம்பாடு மற்றும் இந்தியாவின் பொருளாதார நிலை போன்றவற்றை முன்நோக்கு அறிக்கைகள் காட்டுகின்றன. தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்துகள், உண்மையான முடிவுகளுக்கு காரணமான எதிர்பாராத நிலைமைகள் மற்றும் பிற காரணங்கள் , Sterlite Technologies'லிமிடெட்டின் செயல்பாடுகள் அல்லது சாதனைகள், அல்லது தொழிற்துறை முடிவுகள், அம்மாதிரி முன்-நோக்கும் அறிக்கைகளில் வெளிப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட விஷயங்களிலிருந்து வேறுபட்ட தகவல்கள் ஆகியவையும் இம்மாதரி அறிக்கைகளில் விரிவாகக் விவரிக்கப்பட்டுள்ளது.அம்மாதிரி முன்நோக்குஅ றிக்கைகள் Sterlite Technologies'ன் நிகழ்கால, எதிர்கால வியாபார கோட்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் Sterlite Technologies' இயங்கப்போகும் சூழ்நிலை போன்ற பல கற்பிதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் முக்கிய காரணிகள், அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளிலிருந்து அரசாங்க கொள்களைகளில் மாற்றம் அல்லது இந்திய சட்டத்தில் மாற்றம் மேலும் குறிப்பாக Sterlite Technologies' தொழிற்சாலையின் நிர்வாகத்தில் மாற்றம் மேலும் இந்தியாவில் பொது பொருளாதாரம், வியாபாரம் மற்றும் கடன் நிபந்தனைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் செயல்பாடு அல்லது சாதனைகளில் மாறுபட்ட பலன்களையும் காணலாம்.உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் கூடுதல் காரணிகளாக , Sterlite Technologies' கட்டுப்பாட்டில் இல்லாத , ஆனால் Sterlite Technologies'ஐ கணிசமான அளவில் பாதிக்கும் ஆபத்து காரணிகளாக தேசிய பங்குச்சந்தை இந்தியா மற்றும் மும்பை பங்குச்சந்தை ,இந்தியா போன்ற பலவற்றையும் கூறலாம். இந்த விவரங்கள் http://www.nseindia.com மற்றும் http://www.bseindia.comல் கிடைக்கும்.
ஊடக தொடர்புகள்
LK Pathak
Phone: +91-9925012059
Mail: [email protected]
முதலீட்டாளர் உறவுகள்
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Mail: [email protected]
கார்ப்பரேட் தொலைதொடர்புகள்
Sumedha Mahorey
Phone: +91-22-30450404
Mail: [email protected]
Share this article