புது டெல்லி, September 14, 2018 /PRNewswire/ --
பொருட்காட்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 25% வளர்ச்சியடைந்துள்ளது
பிரகதி மைதானில் UBM India வழங்கும் வட இந்தியாவின் மிகப் பெரிய நகை வர்த்தக கண்காட்சி
UBM India நடத்திய The Delhi Jewellery and Gem Fair (DJGF) 7வது பதிப்பில் முன்னணி நகைக் கடைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகர்கள் மற்றும் துறை சார்ந்த முக்கிய நபர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த மூன்றுநாள் கண்காட்சி (செப்டம்பர் 29 - அக்டோபர் 1, 2018) புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானில் நடைபெற உள்ளது. இது இரத்தினம் மற்றும் நகை துறையில் ஏற்பட்டுள்ள சில புதிய ட்ரெண்ட்களைக் காட்சிப்படுத்தும். இந்த கண்காட்சி The Bullion & Jewellers Association, Delhi Jewellers Association, Maliwara Jewellers Association & Karol Bagh Jewellers Association ஆகிய முக்கிய சங்கங்களின் ஆதரவுடன் நடைபெறும் இந்த கண்காட்சி, நகை துறையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/742912/Delhi_Jewellery_Gem_Fair.jpg )
700+க்கும் அதிகமான பிராண்டுகள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 25% வளர்ச்சியடைந்துள்ளது. இந்தக் கண்காட்சி நகை விற்பனை நிறுவனங்களுக்கு ஏற்ற நகைகள் மற்றும் இரத்தினங்களை வாங்குவதற்கான முக்கியமான இடமாக வளர்ச்சியடைந்துள்ளது.
DJGF நகை மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம், இரத்தினம், முத்து வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள், விலையுயர்ந்த உலோகம் மற்றும் நகைகளில் கற்களைப் பதிக்கும் வர்த்தகர்கள் மற்றும் வழங்குநர்கள், மற்றும் அரசு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் சந்திக்க, தொடர்பு கொள்ள, நெட்வொர்க்கை ஏற்படுத்த மற்றும் அவர்களின் வணிகத்தை வளர்க்க ஒரே இடத்தில் சந்திக்கின்றனர். இந்த ஆண்டு, இந்த கண்காட்சி மூன்று நாட்களும் 'Gemstone Identification', 'Synthetic Diamonds HPHT and CVD' 'Diamond Assortment and Valuation' மற்றும் 'Diamond Grading to Trading' பற்றிய கருத்தரங்குகளை நடத்துகிறது. இந்த கண்காட்சி பொருட்களை வாங்க, வணிகத்தை நடத்த, அறிவைப் பரிமாறிக் கொள்ள, சந்தைப் போக்குகளைத் தெரிந்துகொள்ள மற்றும் மிக முக்கியமாக, சமீபத்தில் பின்னடைவை சந்தித்திருக்கும் துறையை திடப்படுத்த மிகச் சிறந்த மேடையாக உள்ளது.
இந்த ஆண்டு கண்காட்சியில் பங்கேற்பவர்களின் பட்டியலில் இவர்களும் உள்ளனர்: Shilpi Jewels, Vikas Chain, Unique Chain, Riddhima Chain, Swarnshilp, Rohtak Chain, Heera Jewellers, Shri Balaji Gold, Royal Chain மற்றும் Classic Solitaires போன்றோர். இதனைத் துவங்கும் வகையில், UBM India பாரிலி, சண்டிகர், மற்றும் டெஹ்ராடுன் போன்ற வட இந்திய நகரங்களில் வெற்றிகரமாக வெளியரங்கு காட்சிகளை நடத்தியது.
DJGFஇன் 7வது பதிப்பின் அறிவிப்பு குறித்தும், நகை துறைக்கு வட இந்தியாவில் வளர்ந்துவரும் வாய்ப்புகளைக் குறித்தும் பேசிய Mr. Yogesh Mudras, Managing Director, UBM India கூறியதாவது, "கற்கள் மற்றும் நகைக் கழகம் ஆகியவை நாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளன, அழகியல் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் இரட்டைப் பயன்பாட்டைக் கொண்டுள்ளன. நாட்டின் பன்முகத்தன்மை காரணமாக நகைகள் எப்பொழுதும் ஒரு கலாசார பிணைப்பைக் கொண்டுள்ளன, எனவே, அதன் பயன்பாடு நம் மரபுகளில் வேரூன்றியுள்ளது. நகை துறையில் தனக்குள்ள நிபுணத்துவத்தைக் கொண்டு உலகளவிலும் இந்திய அளவில் டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் இந்த ஆண்டு சென்னை மற்றும் மும்பையில் இரண்டு புதிய கண்காட்சிகள் என பல நகரங்களிலும் கண்காட்சிகளை நடத்தும் UBM India, Delhi Jewellery and Gem Fairஇன் 7வது பதிப்பிற்கு ஏற்பாடு செய்ய கச்சிதமான நிலைப்பாடைக் கொண்டுள்ளது. வட இந்தியா, முகலாய பழங்கால வடிவமைப்பைக் கொண்ட நகைகள், தங்கம், வைரம் மற்றும் குந்தன் நவரத்தினம் போன்ற பளபளக்கும் நகைகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் முக்கிய சந்தையாகும். நகை மீது மக்களுக்கு இருக்கும் இந்த அன்பைப் புரிந்துகொண்டிருக்கும் UBM India, Delhi Jewellery and Gem Fair மூலம் இந்தத் துறையின் திடத்தை மேலும் அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது."
"The 6th edition of Delhi Jewellery and Gem Fair in 2017 reinforced a sense of trust in the jewellery market and saw a remarkable growth of 54% in unique visitor footfalls. We are extremely delighted with the fair's success year- on- year and we will continue to showcase new jewellery trends, an unmatched jewellery portfolio and conduct knowledge sharing seminars to draw wider trade audiences," he further added.
"2017இல் நடைபெற்ற Delhi Jewellery and Gem Fairஇன் 6வது பதிப்பு, நகை சந்தையில் நம்பிக்கை உணர்வை மீண்டும் வலியுறுத்தியது மற்றும் பிரத்யேக பார்வையாளர்களின் எண்ணிக்கை 5% அதிகரித்தது. கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் வெற்றியடைவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் புதிய நகை ட்ரெண்டுகள், ஈடு இணையற்ற நகைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து காட்சிப்படுத்தி, நிறைய வர்த்தக பார்வையாளர்களைக் கவரும் வகையில் கருத்தரங்குகளை நடத்துவோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
DJGF 2018இல், Retail Jewellers Guild Awardsஇன் நான்காவது பதிப்பும் நடைபெறும். UBM Indiaவின் பிரத்யேக முயற்சியான இது, பான் இந்தியா அளவில் சில்லறை நகை வணிகத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிபுணத்துவம் மற்றும் முயற்சிகளை அங்கீகரித்து, கெளரவிக்கிறது. 3 ஆண்டுகாலங்களில் RJGA மிகவும் வெளிப்படையான, சிறந்த விருதுகளை இந்தத் துறைக்கு வழங்குகிறது. இது நாட்டில் பல்வேறு மூலைகளிலும் உள்ள பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை சமமாகப் பரிசீலனை செய்து இந்த விருதுகளை வழங்குகிறது.
Retail Jewellers Guild Awards, Ernst & Youngஐ ஆலோசனையாளராகக் கொண்டு முறையான, நிபுணத்துவமிக்க நடைமுறை மூலம் ரீட்டெய்ல் ஜுவல்லரி துறையில் நாட்டின் மிகச் சிறந்த திறமையாளர்களை கவனிக்கிறது. இந்த ஆண்டு பல பிரிவுகளில் விருதுகள் சில்லறை நகை துறையின் பல்வேறு செயல்பாடுகளை மனதில் கொண்டு வழங்கப்படுகின்றன. இதில் 'Store of the Year', 'Excellence in Design', 'Marketing Excellence' மற்றும் 'Operational Excellence' ஆகியவை அடங்கியிருக்கும்.
Walk of Fame for the Retail Jewellery, RJGA 2018இன் சிறப்பம்சமாக இருக்கும். இது பிரபல பிராண்டுகளின் சிறந்த பொருட்களை பிரத்யேகமாகக் காட்சிப்படுத்தும். இந்த ஆண்டும், விருதுகள் வழங்கும் விழாவில் பிரபலங்களின் கண்கவரும் ஃபேஷன் நிகழ்ச்சிகள், துறையில் முன்னிலை வகிப்பவர்களின் கருத்துக்கள், பொழுதுபோக்கு மற்றும் நெட்வொர்க்கிங் அமர்வுகள் ஆகியவை நடைபெறும்.
DJGF பற்றி:
DJGFஐ UBM ஏற்பாடு செய்யும், உலகின் முன்னணி B2B தகவல் சேவைகள் குழு மற்றும் உலகின் மிகப் பெரிய B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக மாறுவதற்கு ஜூன் 2018இல் இன்ஃபர்மா உடன் இணைந்து செயல்படுகிறது. DJGF பற்றிய மேலும் தகவலுக்கு https://delhi.jewelleryfair.in/ஐ பார்க்கவும் மற்றும் ஆசியாவில் எங்களின் இருப்பைத் தெரிந்துகொள்ள http://www.ubm.com/global-reach/ubm-asia ஐ பார்க்கவும்.
UBM Asia பற்றி:
UBM Asia சமீபத்தில் முன்னணி B2B தகவல் சேவைகள் குழுவாகவும் உலகின் மிகப் பெரிய B2B நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளராகவும் மாறியுள்ளது. ஆசியாவில் எங்களின் இருப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள http://www.ubm.com/asiaவை பார்க்கவும்.
ஊடகம் தொடர்பான ஏதேனும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:
ஊடகத் தொடர்பு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article