ஹைதராபாத், இந்தியா, August 6, 2018 /PRNewswire/ --
UBM India வழங்கும் இந்தியாவின் முழுமையான பகுப்பாய்வு, ஆய்வக மருந்தாக்க இயந்திரங்கள் மற்றும் ஒப்பந்த சேவைகள் நிகழ்ச்சி
CPhI / P-MEC India என்ற உலகளாவிய முன்னணி ஃபார்மா வர்த்தகக் கண்காட்சி மற்றும் மாநாட்டு அமைப்பாளரான UBM India, PharmaLytica 2018 இன் 5ஆம் பதிப்பு பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி இந்தியாவின் மொத்த மருந்து தலைநகரமான ஹைதராபாத்தில், HITEX Exhibition Center-இல் ஆகஸ்டு 10 & 11, 2018 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/726649/PharmaLytica_2018.jpg )
தென்னிந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, மருந்தாக்கம் (பார்மா) குறித்த PharmaLytica 2018 கண்காட்சியானது , மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சமீபத்திய தொழிற்துறை போக்குகள், புதுமைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளவும், வர்த்தகத்தை பகுப்பாய்வு ஆய்வகங்கள், இயந்திரங்கள், பேக்கேஜிங் மற்றும் இதர சார்பு தொழில்களுடன் இயங்கவும் வழிவகுக்கும். இந்த கண்காட்சி Pharmexcil, Confederation of Indian Pharmaceutical Industry (CiPi) and Indian Drug Manufacturers' Association (IDMA)உள்ளிட்ட சங்கங்களின் பேராதரவினை பெற்றதாகும்.
PharmaLytica வின் தற்போதைய பதிப்பில், நாடு முழுவதிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். கிர்லோஸ்கர், ஸ்டாண்டர்ட் குரூப் ஆஃப் கம்பெனிஸ், பிரை-ஏர் ஆசியா, அலிஒன் இன்டஸ்ட்ரீஸ், ரோட்டோமார்க் இன்னவேஷன்ஸ், காந்தி ஆட்டோமேசன், மேக் பார்மாடெக், ஆட்டோகேல் சல்யூஷன்ஸ், ஹீலியோஸ் கான்க்ரியூ, எஸ்.கே. ஃபார்மா மெஷினரி, என்பிஎம் மெஷினரி, ஜிஎம்எம் ஃபாவ்ட்லர், எல்ஜி எக்விப்மென்ட்ஸ், ஃபர்ஸ்ட் சோர்ஸ் லேப், அபெக்ஸ் குரோமடோகிராபி, வால்பிட் இன்ஜினீயர்ஸ், இண்டெக்ரேட்டட் க்ளீன்ரூம் டெக்னாலஜி, டம்ரா மெஷின்ஸ், சிக்மா சயின்டிபிக் கிளாஸ், மற்றும் பல பிரபல தொழில் நிறுவனங்கள் இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.
இந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக இடம்பெறும் PharmaLytica கருத்தரங்கில், பல நுண்ணறிவார்ந்த அமர்வுகள் மற்றும் சமீபத்திய தொழிற்துறை போக்குகள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறும். கலந்துரையாடல்களில் இடம்பெறவிருக்கும் விவாதத் தலைப்புகளில், ஃபார்மாசூட்டிகல் தொழிற்துறையில் தகவலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற 'A Smart Pharma Manufacturing for Operational Excellence'; 'Latest in Pharmaceutical, Analytical & Lab'; 'Technology Edge' மற்றும் தர கலாசார மருத்துவம் தொடர்புடைய சவால்கள் குறித்த 'Cost-Quality Efficiency'; 'Setting Quality Culture Parameters', 'A distant view of Indian Pricing & Regulatory: US Perspective'; 'Presentation of Case study on Pharmacoeconomics'; 'Is Regulatory Compliance much more than good manufacturing Practices (GMP)?' மற்றும் 'Regulatory, Pricing & Patients - Equilibrium' போன்றவை அடங்கும்:
இந்த எக்ஸ்போவின் தொட்டு உணர்தல் அம்சத்தை மேம்படுத்துவதற்காக, மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களில் ஒன்றான புதுமை அரங்கு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது . இதில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் புதுமை படைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் கண்காட்சியாளர்களால் வழங்கப்படும்.
இந்த கண்காட்சி ஆனது, 2019 ஆம் ஆண்டில், வலிமையான ஃபார்மா சந்தையைக் கொண்டுள்ள மேற்கு பிராந்தியத்தில், தனது எல்லைகளை விஸ்தரிக்கின்ற நோக்கில் மும்பையில், முதன்முதலாக PharmaLytica - வை நடத்தவுள்ளது. ஆய்வக மற்றும் பகுப்பாய்வு ஃபார்மா இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் போன்ற துறைகளில் தென் மேற்கு சந்தையை இலக்கு வைத்துள்ள PharmaLytica, இந்த பிராந்தியத்தில் தனது வெற்றியானது தொடர வேண்டும் நோக்கில் APIமற்றும்Excipients zoneஆகியவற்றையும் தொடங்குகிறது. இந்த நடவடிக்கையானது, இந்தக் கண்காட்சியின் புரஃபைலை 'ஒன்-ஸ்டாப்-ஷாப் ஃபார் ஆல்எண்ட்-டு-எண்ட் பார்மா சல்யூஷன்ஸ் அண்டர் ஒன் ரூஃப்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தும்.
PharmaLyticaவின் 5வது பதிப்பு குறித்த அறிவிப்பின்போது உரையாற்றுகையில், UBM India வின் நிர்வாக இயக்குநர் திரு. யோகேஷ் முத்ராஸ் கூறியதாவது, "கடந்த பல வருடங்களாக,PharmaLytica, ஃபார்மா துறையிலுள்ள முக்கிய பிரிவுகளில் முழு மதிப்புத் தொடர் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான முன்னணி சந்தை தளமாக வளர்ச்சியடைந்துள்ளது. கண்காட்சி மற்றும் முக்கியமாக, அதன் பகுதியான மாநாடு ஆகியவை, சந்தைப் போக்குகளுக்கான எதிர்வினையாற்றவும் இத்துறையின் மாறுகின்ற அமைப்புகள் குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துவதற்கு முனைகிறது. இந்தியாவில் ஒரு தனித்துவ மருந்து பாதுகாப்பு சூழமைவை நிறுவுவதற்கும் இது முக்கிய பங்காற்றும்.
"2020 க்குள், இந்தியா ஏறுமுக வளர்ச்சியின் காரணமாக, உலக அளவில் முதல் மூன்று மருந்து சந்தைகளில் ஒன்றாகவும், முழுமையான அளவில் 6வது மிகப்பெரிய சந்தையாகவும் ஆகக் கூடிய சாத்தியமுள்ளது. மருந்தாக்க நிறுவனங்கள் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும், R&D செலவினங்களை அதிகரிப்பதிலும், உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதிலும், புதிய ஆய்வு முறைமைகளை அறிமுகப்படுத்துவதிலும் பெருமளவிலான முயற்சிகளை மேற்கொள்கின்றன.PharmaLytica வில், மருந்தாக்க நிறுவனங்களை இந்திய மருந்துத் துறையின் வளரும் வர்த்தகங்களிலுள்ள புதுமைகளுடன் இணைந்து கொண்டுசெல்வதில் நாம் கவனம் செலுத்துவோம். மருந்தாக்கத் துறையில் நமது வளரும், நிகரற்ற பங்களிப்பையும், கண்காட்சி , சார்பு பகுதி உள்ளிட்ட இத்துறையின் வளர்ச்சியோடு இணைந்து வளர்க்கிறது என்ற உண்மையையும் கண்டு, நாம் PharmaLytica வை 2019 இல் மும்பைக்குக் கொண்டு செல்வதில் மகிழ்கிறோம். இணையாக நாம் நமது பங்களிப்பையும் அதிகரிக்கிறோம். சந்தேகத்துக்கிடமின்றி இது தெற்குப் பிராந்திய சந்தையுடன் கூடுதலாக வலுவான மேற்குப் பிராந்திய சந்தைக்கும் பெரும் மதிப்பை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
உலகின் மருந்தகம் என்று பெயர் பெற்றிருக்கும் இந்திய ஃபார்மா பொருளாதாரம், சமீபத்திய தசாப்தங்களில் அதன் துரித வளர்ச்சிக்காகக் கொண்டாடப்படுகிறது. 2017 இல் மருந்தாக்கத் துறையின் மதிப்பு 33 பில்லியன் US$ஆகும். நாட்டின் மருந்தாக்கத் துறை 22.4 சதவீத CAGR உடன் 2015-20 இல் 55 பில்லியன் US$ ஐ எட்டும் அளவுக்கு விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-18 இல் 17.27 பில்லியன் US$ ஆக இருந்த இந்திய மருந்தாக்கத் துறையின் ஏற்றுமதி 2020 இல் 20 பில்லியன் US$ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு பொருளாதார ஊக்கிகள் மற்றும் ஃபார்மா பூங்காக்கள், சார்பு துறைகளுடன் இணைந்து, ஒத்த மருந்துகள் மற்றும் உயிரியல் மருந்துகள் பிரிவுகள் போன்றவற்றையும் ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தி செலவினங்களைக் குறைத்தல் போன்ற அரசாங்கக் கோட்பாடுகள் ஆகியவை நாட்டில் இத்துறையின் வளர்ச்சிக்கான முக்கிய உந்து சக்திகளாகும். இந்தியாவை அடி-முதல்-முடி வரையிலான மருந்து உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் கொண்டு வர அறிமுகப்படுத்தப்பட்ட 'Pharma Vision 2020' முதலீடுகளையும் ஊக்குவித்துள்ளது.
இந்நிகழ்வு குறித்து மேலும் அறிந்துகொள்ளவும் நிகழ்வில் இலவசமாக கலந்துகொள்ள பதிவு செய்துகொள்வதற்கும் http://www.ubmindia.in/pharmalytica என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
UBM Asia பற்றி:
UBM Asiaசமீபத்தில், உலகின் முன்னணி B2B தகவல் சேவை குழுமமும் உலகிலேயே மிகப்பெரிய B2B நிகழ்வுகள் ஏற்பாட்டாளருமான Informa PLC இன் அங்கமாக ஆனது. ஆசியாவில் எங்களது இருப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள தயவுசெய்து http://www.ubm.com/asia ஐப் பார்வையிடவும்.
PharmaLyticaவைப் பற்றி:
PharmaLyticaஅமைப்பாளரானUBM, ஜூன் 2018இல் Informa PLCஉடன் இணைந்ததன் மூலம் ஒரு முன்னணி B2B தகவல் சேவை குழுமமாகவும், உலகிலேயே மிகப்பெரிய B2B நிகழ்வுகளின் அமைப்பாளர் ஆகவும் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் எங்களது இருப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள தயவுசெய்துhttp://www.ubm.com/india என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஊடகம் தொடர்பான கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ளவும்:
Prachi Kumar
[email protected]
+91-7718866668
UBM India
Share this article