பெங்களூரு, August 2, 2018 /PRNewswire/ --
இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் சேவைகள் வழங்குனர் ANAROCK Property Consultants, தொழில்துறை அனுபவம் வாய்ந்த Mayank Saksena, தங்களது நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர்- Land & Head - South India Residential Services ஆக சேர்ந்துள்ளதை அறிவித்தது.
(Logo: https://mma.prnewswire.com/media/701435/ANAROCK_Logo.jpg )
இந்த நியமனத்திற்கு முன்பு Mayank Saksena, Land Services international property consultants JLL Indiaல் மேனேஜிங் டைரக்டராக பணியாற்றினார், அவர் India Leadership Council (ILC)லும் ஒரு பாகமாக இணைந்திருந்தார். பத்துவருடங்களுக்கும் மேலான அவரது பணிக்காலத்தில் அந்த நிறுவனத்தில் பல ஹை-டிக்கெட் நில ஒப்பந்தங்களை முடித்தார் மேலும் ஆணைகளை கையகப்படுத்தினார். அவை நாட்டில் மிகப்பெரிய நகரங்களில் உள்ள சில மிகப்பெரிய நில பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது.
அவரது 16 வருட பணிக்காலத்தில், அவர் முக்கிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், பெருநிறுவன முதலாளிகள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் சார்பாக பல பரிவர்த்தனைகள் மற்றும் கையகப்படுத்தல்களை முடித்துள்ளார். அவர் நிலம் -தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு மிகப்பிரபலமான வல்லுநராவார் மேலும் பேன் இந்தியா ரியல் எஸ்டேட் சந்தைகளில் திறம் வாய்ந்த தலைவராவார்.
Santhosh Kumar, Vice Chairman - ANAROCK Property Consultants, பேசும்போது, "இந்தியாவின் முதன்மையான முழு -டெக் ரியல் எஸ்டேட் சேவைகள் வழங்குனரான ANAROCK'ன் இந்த புதியநியமனம் முக்கியமானது மேலும் பரிணாமத்தின் அடித்த படியாகும். Mayank ஒரு வலுவான மேம்பாட்டாளர்- மேசைக்கு நில பரித்தனைகளுக்காக கவனம் வாய்ந்த வளர்ச்சி திட்டப்பணிகளை கொண்டு வருபவர். அவர் தெற்கு இந்தியாவில் எங்களது நில வர்த்தகத்தை உருவாக்குவதிலும் முன்னணி பங்கு வகிப்பார். பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளில் உள்ள அவரின் வலுவான மேம்பாட்டளார்களுடனான உறவுடன், Mayankற்கு பல்வேறு வர்த்தக மாதிரிகளைப் பற்றிய புரிதலும் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் சந்தை நிலவரப் புரிதலும் சிறப்பாக உள்ளது."
ANAROCKல் சேருவதைப் பற்றி தனது மகிழ்ச்சியை Mayank Saksena வெளிப்படையாக தெரிவித்தார். '‘Anuj Puri மற்றும் Santhosh Kumar இருவருடனும் பல வருடங்களாக வேலைசெய்துள்ளேன், இந்தியாவின் மிகவும் திறமையான ரியல் எஸ்டேட் நிபுணர்களால் நடத்தப்படும் நிறுவனத்தில், எனக்கு மிகவும் பழக்கமான வர்த்தக சூழ்நிலையில், வேலைக்கு சேருவது வீட்டிற்கு திரும்பியதை போல இருக்கிறது,'’ இவ்வாறு அவர் கூறுகிறார். '‘ரியல் எஸ்டேட் வாழ்க்கை சுழற்சியில் நிலம் தான் அடிப்படையானது, மேலும் வியாபாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கான வளர்ச்சியில் எனது அனுபவத்தை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களிடம் ஏற்கனவே பல உயர்-நிலை ஆணைகள் வரிசையில் காத்திருக்கின்றன. மேலும், ANAROCKற்கு தெற்கு இந்தியா முக்கிய இருப்பிட வளர்ச்சிக்கான பகுதியாகும்.'’
இந்த நேரத்தில், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் மட்டும் விற்கப்படாமல் இருப்பாக தேங்கி நிற்கும் வீடுகளின் எண்ணிக்கை முறையே 85,000, 27,500 மற்றும் 28,500 ஆகும்.
"Q2 2017 ஐ ஒப்பிடும்போது, விற்கப்படாத இருப்புநிலை பெங்களூருவில் 24%ம், ஹைதாராபாதில் 11%ம் மற்றும் சென்னையில் 10%ம் குறைந்துள்ளது. இது தெற்கு இந்தியாவின் சந்தை மேம்பட்டு வருவதை காட்டுகிறது மேலும் அதுதான் தேவை மறுசீரமைப்பிற்கு சரியான காலமாகும்" என்று Saksena கூறினார். இருப்புநிலை மூடப்பட்ட நிலையை திறப்பதில் நிரூபிக்கப்பட்ட திறமைகள் கொண்ட '‘ANAROCK'ற்கு ஏற்கனவே தெற்குப்பகுதியின் அதன் வலுவான இருப்புநிலை, இப்போது நாம் முழுதாக சந்தையில் நம்மை வெளிப்படுத்த சரியான தருணத்தை காட்டுகிறது.'’
Mayank Saksena, ANAROCK' பெங்களூரு அலுவலகத்தில் இருந்து செயல்படுவார் மேலும் அவரது ரோல்(அதிகாரம்) உடனடியாக அமலுக்கு வருகிறது.
ANAROCK Property Consultants பற்றி:
பரந்த அளவில் நிறைவு தரும் வர்த்தகங்களை வழங்கும் இந்தியாவின் முன்னணி சுயாதீன ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவனமாக ANAROCK விளங்குகிறது. ANAROCKன் சேர்மன் Anuj Puri, மிகவும் மதிக்கப்படும் தொழில்துறை வல்லுநர் மற்றும் இந்தியா மற்றும் உலக ரியல் எஸ்டேட் வாய்ப்புகள் கொணரும் செயல்திறனில் 30 வருட அனுபவம் கொண்ட முன்னணி தலைவர் ஆவார். நுகர்வோரின் தேவைகளை ஆழமாக புரிந்துகொண்டுள்ள மேலும் நிறுவனத்திடம் வலுவான அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட டைனமிக் சீனியர் குழுவை அவர் தலைமையேற்று நடத்துகிறார். முதலீட்டாளர்கள், மேம்பாட்டாளர்கள், குடியிருப்பவர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆகியோரின் தேவைகளுக்காக ANAROCK செயலாற்றுகிறது. இருப்பிட பரிவர்த்தனைகள் மற்றும் ஆலோசனை, சில்லறை பரிவர்த்தனைகள் மற்றும் ஆலோசனை, மூலதன சந்தைகள் உறையிடும் கடன், பங்கு மற்றும் இடைமட்ட நிதியளித்தல், முதலீடு மேலாண்மையை பராமரிக்கும் தனியுரிம நிதிகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கலந்தாய்வு ஆகியவை எங்களது முக்கிய மூலோபாய வர்த்தக பிரிவுகளாகும்.1,500க்கும் அதிகமான தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்சார் வல்லுநர்களைக் கொண்ட ANAROCK ன் தலைமையகம் மும்பையில் உள்ளது. நாட்டில் அனைத்து முக்கிய சந்தைகளிலும் அலுவலகங்களுடன் உள்ள மேலும் துபாயில் தனிப்பட்ட சேவைகளையும் அளித்துவரும் ANAROCK, 80,000க்கும் அதிகமான சேனல் கூட்டாளிகளுடன் உலகளவில் கால்தடம் பதித்துள்ளது. அதன் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் கூட்டாளிகளுக்கும் பிரதான வாக்குறுதி மற்றும் பார்வையாக ANAROCK பிரதிபலிப்பது -மதிப்பிற்கு மேல் மதிப்பு ஆகும்
வருகை தரவும்: http://www.anarock.com
Media Contact:
Arun Chitnis
[email protected]
+91-9657129999
Head - Media Relations
ANAROCK Property Consultants
Share this article