குருகிராம், இந்தியா, July 20, 2018 /PRNewswire/ --
ஸ்மார்ட்டர் டிஜிட்டல் நெட்வொர்க்கில் அனைத்திலும் சிறந்த சர்வதசே தொழில்நுட்ப தலைவராக விளங்கும் ஸ்ட்ரெலைட் டெக்(BSE: 53237) (NSE: STRTECH), ஜூன் 30, 2018ல் நிறைவுற்ற முதல் காலாண்டிற்கான பொருளாதார முடிவுகளை இன்று போஸ்ட் செய்துள்ளது.
(Logo: http://mma.prnewswire.com/media/568301/Sterlite_Logo.jpg )
கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக மொத்த வருமானத்தில் 47% CAGR வளர்ச்சியுடன் , நிறுவனமானது வரலாற்று ரீதியாக நிலையான வளர்ச்சியை காட்டியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, Q1 FY19 மட்டும் அதன் மொத்த இலாபத்தை இருமடங்காக பெற்றுள்ளது, வருமானங்கள் மற்றும் விளிம்பு சுயவிவரங்களின் (மார்ஜினல் புரோஃபைல்) விரிவாக்கம் ஆகியவற்றால் இயக்கப்படும் வளர்ச்சியே இதற்கு காரணமாகும்.
எதிர்கால வளர்ச்சிக்காக கட்டமைத்தல்
வலுவான காலாண்டுடன், நிறுவனமானது ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளின் வடிவமைப்பு, கட்டமைப்பு நிர்வாகம் போன்றவற்றை வலுப்படுத்துவதை தொடர்கிறது, மேலும் அது தன்னையே ஃபைபரின் உறுதியான வளர்ச்சியில் கட்டமைக்கிறது மற்றும் அதன் உத்திகளுடன் ஒத்திசைவு பெற்ற சந்தை வாய்ப்புகளையும் கட்டமைக்கிறது.
தினசரி வாழ்க்கையில் தாக்கதை ஏற்படுத்தும் மேலும் விரைவாக வளரும், வர்த்தகத்தில் இருப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். எங்களது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளான ஃபைபர் கட்டமைக்கப்பட்ட நெட்வொர்க், நுகர்வோர்களிடையே வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். நாம் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான தரவு பாதுகாப்பைஉறுதி செய்வதுடன் மேலும் Telcos, குளோபல் இன்டர்நெட் கம்பெனிஸ் அன்ட் என்டர்பிரைசஸ் - ஹைபர் கனெக்ட்டிவிட்டியையும் வழங்குகிறோம்.' இவ்வாறு Dr Anand Agarwal, சிஈஓ, ஸ்டெரிலைட் டெக் கூறினார். எங்களது மூலோபாய நிலை, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய ஆழ்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, வலுவான பெருநிறுவன விதிமுறை மற்றும் கட்டுப்பாடு ஆகியவையே எங்களது தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாகும், என்றும் அவர் கூறினார்
தொடர்ச்சியான காலாண்டு நிதி வளர்ச்சி- Q1 FY19 முடிவுகள்
ஃபைபர் -டூ-த ஹோம், டேட்டா மையங்கள் மற்றும் இன்டெர்நெட் தொடர்பான அப்ளிகேஷன்கள், போன்ற அதன் அடுத்த வளர்ச்சி சுற்றான 5G backhaul உட்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், நிறுவனம் அதன் முக்கிய நிதி செயல்பாடு அளவீடுகள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதை காட்டுகின்றன. Q1 FY19 க்கான முக்கிய வளர்ச்சி புள்ளிகள்:
FY20ல் நிறுவனமானது $100 மில்லியன் மொத்த வருமான வளர்ச்சிக்கான மூலோபாய வழிகாட்டியையும் வழங்கியுள்ளது, இது சமீபத்தில் வெளியிடப்பட்ட கையகப்படுத்தலுடன் அடையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sterlite Technologies பற்றி:
Sterlite Technologies Ltd (BSE: 532374) (NSE: STRTECH), சாமர்த்தியமிக்க டிஜிட்டல் நெட்வொர்க்குகளை வடிவமைத்து, கட்டமைத்து மற்றும் பராமரிக்கும் உலகத்தொழில்நுட்ப தலைவராகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டுள்ள Sterlite Tech, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் மென்பொருளை டிஜிட்டல் வெப்- ஸ்கேலில் அளிக்கிறது. நிறுவனத்திற்கு இந்தியா, சீனா & பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளும் இந்தியாவில் இரு மென்பொருள் டெலிவரி மையங்களும் உள்ளன. பிராட்பேன்ட் ஆய்வுக்கான சிறப்பு மையம் மற்றும் அடுத்த ஜெனரேசன் நெட்வொர்க்குகள் பயன்பாடுகளுக்கான ஸ்மார்ட்டர் நெட்வொர்க்குகளின் மையம் ஆகியவை கொண்டுள்ள ஒரே நிறுவனமாக Sterlite Tech இந்தியாவில் விளங்குகிறது. ஆயுதம் தாங்கிய படையினருக்கான ஊடுருவ- இயலாத ஸ்மார்ட்டர் டேட்டா நெட்வொர்க், பாரத்நெட்டிற்கான நகர பிராட்பேண்ட், ஸ்மார்ட் சிட்டிகளின் மேம்பாடு மற்றும் ஹை- ஸ்பீடு ஃபைபர் - டூ- த - ஹோம் (FTTH ) நெட்வொர்க்குகள் விரிவாக்கம் போன்ற புராஜெக்டுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிக விவரங்களுக்கு வருகை தரவும் http://www.sterlitetech.com
முன்-நோக்கிய மற்றும் எச்சரிக்கை அறிக்கைகள்: Sterlite Technologies Limited அதன் வளங்களுடன் தொடர்புடைய சில வார்த்தைகள் மற்றும் அறிக்கைகள் இதில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் Sterlite Technologies' எதிர்பார்க்கப்படும் நிதி நிலைமை, வியாபார கோட்பாடு, Sterlite Technologies'ன் எதிர்கால மேம்பாடு மற்றும் இந்தியாவின் பொருளாதார நிலை போன்றவற்றை முன்நோக்கு அறிக்கைகள் காட்டுகின்றன. தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்துகள், உண்மையான முடிவுகளுக்கு காரணமான எதிர்பாராத நிலைமைகள் மற்றும் பிற காரணங்கள், Sterlite Technologies'லிமிடெட்டின் செயல்பாடுகள் அல்லது சாதனைகள், அல்லது தொழிற்துறை முடிவுகள், அம்மாதிரி முன்-நோக்கும் அறிக்கைகளில் வெளிப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட விஷயங்களிலிருந்து வேறுபட்ட தகவல்கள் ஆகியவையும் இம்மாதரி அறிக்கைகளில் விரிவாகக் விவரிக்கப்பட்டுள்ளது. அம்மாதிரி முன்நோக்குஅ றிக்கைகள் Sterlite Technologies'ன் நிகழ்கால, எதிர்கால வியாபார கோட்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் Sterlite Technologies' இயங்கப்போகும் சூழ்நிலை போன்ற பல கற்பிதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் முக்கிய காரணிகள், அம்மாதிரி முன்நோக்கு அறிக்கைகளிலிருந்து அரசாங்க கொள்களைகளில் மாற்றம் அல்லது இந்திய சட்டத்தில் மாற்றம் மேலும் குறிப்பாக Sterlite Technologies' தொழிற்சாலையின் நிர்வாகத்தில் மாற்றம் மேலும் இந்தியாவில் பொது பொருளாதாரம், வியாபாரம் மற்றும் கடன் நிபந்தனைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் செயல்பாடு அல்லது சாதனைகளில் மாறுபட்ட பலன்களையும் காணலாம். உண்மையான முடிவுகளுக்கு காரணமாகும் கூடுதல் காரணிகளாக, Sterlite Technologies' கட்டுப்பாட்டில் இல்லாத, ஆனால் Sterlite Technologies'ஐ கணிசமான அளவில் பாதிக்கும் ஆபத்து காரணிகளாக தேசிய பங்குச்சந்தை இந்தியா மற்றும் மும்பை பங்குச்சந்தை, இந்தியா போன்ற பலவற்றையும் கூறலாம். இந்த விவரங்கள் http://www.nseindia.com மற்றும் http://www.bseindia.comல் கிடைக்கும்.
Corporate Communications
Sumedha Mahorey
Phone: +91-22-30450404
Email: [email protected]
Investor Relations
Vishal Aggarwal
Phone: +91-20-30514000
Email: [email protected]
Share this article