பெங்களூரு, July 18, 2018 /PRNewswire/ --
IMA® (இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்ஸ்) அதன் வருடாந்திரStudent Leadership Conference (எஸ்எல்சி) நிகழ்விற்காக விண்ணப்ப செயல்முறையை அறிமுகப்படுத்த உள்ளது .
(Photo: https://mma.prnewswire.com/media/719367/Kavya_Ramesh_IMA_SLC_USA.jpg )
இந்திய பல்கலைக் கழகங்களில் வணிகம், கணக்கியல், நிதி அல்லது வியாபார நிர்வாகம் ஆகியவற்றில் பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடமிருந்து தனித்தன்மைவாய்ந்த வெளிநாட்டில் கற்கும் வாய்ப்பிற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. IMA வால் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆறு வெற்றிபெற்ற மாணவர்கள், யுஎஸ்ஏ, மிசௌரியின் செயின்ட் லூயிஸ் -இல் 1-3, 2018 நவம்பர் மாதம் நடைபெறும் வருடாந்திர மாணவர் தலைமை மாநாட்டிற்கு அதாவது 'வெற்றிக்கான நுழைவாயில்' பயணத்திற்கு செல்ல முடியும் 'வெற்றிக்கான வாயில்' அனைத்து செலவுக்கும் நிர்வாகத்தால் பணம் கொடுக்கப்படும்.
"IMA's மாணவர் தலைமை மாநாடு நிர்வாக கணக்கியலில் தங்கள் வேலை வாய்ப்புகளை கண்டறிய உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு தருகிறது. அவர்கள் தற்போதைய தொழில்துறை போக்குகள் மற்றும் வேலை சந்தை தேவைகளுடன் தங்கள் திறன்-அமைப்பை மேம்படுத்தும் வாய்ப்பும் பெறுவார்கள்" என்று Fenil Vadakken, IMA வின் இந்திய நாட்டின் தலைவர் விளக்கினார்.
விருப்பமுள்ள மாணவர்கள் அவர்கள் எதற்காக SLCயில் கலந்துகொள்ள விரும்புகிறார்கள், அவர்களின் விருப்பங்கள் மற்றும் தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பை பற்றி நேர்மறை தாக்கத்தை விளக்கும் விதத்தில் இரு-நிமிட வீடியோவை சமர்பிக்க அழைப்பு விடுக்கப்படுகிறார்கள்
இதனுடன் சேர்த்து, மாணவர்கள் மாநாட்டிலிருந்து அவர்கள் பெற்ற தகவல் மற்றும் உள்நோக்குகளை தங்கள் சக மாணவர்களுடன் எவ்வாறு பகிர்வார்கள் என்ற திட்டத்தையும் விளக்க வேண்டியுள்ளது. இது பிராந்திய பல்கலைக் கழகங்களுக்குள் நிர்வாக கணக்கியல் கம்யூனிட்டிகளை உருவாக்கும் IMA's நோக்கத்தின் ஒரு பகுதியாகும். முழு விண்ணப்ப விவரங்கள் இந்த website ல் காணலாம்.
பதிவுகள் IMAவின் தற்சார்பான நீதிபதிகளால் பரிசீலிக்கப்படும், அவர்கள் விதிகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ள கோட்பாடுகளின்படி பத்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். IMA சமூக வலைதள சேனல்கள் வழியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் வீடியோக்கள் விளம்பரப்படுத்தப்படும்.
கடந்த வருடம், எகிப்து, யுஏஈ, கத்தார் மற்றும் இந்தியாவிலிருந்து டெக்சாஸின் , ஹூஸ்டனில் நடைபெற்ற மாநாட்டிற்கு IMA ஐந்து மாணவர்களை அனுப்பியது. மாநாட்டில், மாணவர்களுக்கு உலக பொருளாதார தலைவர்களை சந்திக்கவும் மேலும் மாற்றும் அமர்வுகளில் கலந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.
"மாணவர்களுக்கு SLC ஒரு சிறந்த பிளாட்ஃபார்ம். இது நமக்கு தன்னம்பிக்கையையும் தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவும் உதவுகிறது, உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் நிர்வாக கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பையும் இது அளிக்கிறது," இவ்வாறு கடந்த வருடம் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெயின் பல்கலைக்கழகத்தின் மாணவியான Kavya Ramesh தெரிவித்தார். தற்போது அவர் இளம் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநராவார்.
"வியாபாரத்தில் கணக்கியல் மற்றும் பொருளாதார தலைவர்களாக வெற்றிகரமாக மேம்படவும், நீண்ட நாள் வேலை வாய்ப்பு பெறவும் விரும்பும் நபர்களுக்கு மாணவர் தலைமை மாநாடு ஒரு தனித்தன்மை வாய்ந்த கற்றுக்கொள்ள, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்பு கிடைக்கும் ஒரு தளமாகும். ஒவ்வொரு தகுதிவாய்ந்த மாணவர்களும் தங்கள் வீடியோ விண்ணப்பங்களை அனுப்ப நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்," இவ்வாறு Rishi Malhotra, IMA வின் கல்வி &சமுதாய உறவுகள் நிர்வாகி நிறைவுரையாற்றினார்.
வீடியோ விண்ணப்பங்கள் 2018, ஜூலை மாதம் 25 ஆம்தேதி புதன்கிழமை வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் மற்றும் விதிகள் மற்றும் நிபந்தனைகளை வாசிக்கவும், வருகை தரவும் http://bit.ly/SLC2018IMEA.
IMA®பற்றி (Institute of Management Accountants)
Accountant/International Accounting Bulletin ஆல் 2017 Professional Body of the Year என பெயரிடப்பட்ட IMA®, மிகப்பெரியது மற்றும் நிர்வாக கணக்கியல் தொழிலை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள மிகவும் நம்பத்தகுந்த அமைப்பாகும். உலகெங்கிலும், ஆய்வு, CMA® (Certified Management Accountant) திட்டம், தொடர்கல்வி, நெட்வொர்க்கிங், மற்றும் மிக உயர்ந்த வணிக நெறிமுறை பயிற்சிகளின் ஆலோசனை மூலம் தொழிலுக்கு IMA துணை புரிகிறது. 140 நாடுகளில் 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் student chapters கொண்ட உலக நெட்வொர்க் IMA ஆகும். Montvale, N.J., USA, தலைமையிடமாக கொண்ட IMA அதன் நான்கு உலக பிராந்திய பிரிவுகள் மூலமாக உள்ளூர் சேவைகளை அளிக்கிறது: அமெரிக்கா, ஆசியா/பசிபிக், ஐரோப்பா, மற்றும் மத்திய கிழக்கு/ இந்தியா. IMA பற்றி அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் http://www.imanet.org.
Media Contact :
Janice Sevilla
[email protected]
+91-9847005818
Communication Specialist
Institute of Management Accountants
Share this article