நிரந்தர வைப்புநிதிகளுடன் ஓய்வூதியத்திற்கான முதலீட்டு திட்டம்
பூனா, இந்தியா, June 20, 2018 /PRNewswire/ --
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் பெரிய மைல்கல்களுக்காக திட்டமிடும்போது, தங்களின் ஓய்வூதியத்திற்கும் சேர்த்து திட்டமிட வேண்டும். ஓய்வு பெற்றதற்கு பின்னர் இதேமாதிரி வாழ்க்கைமுறையை உறுதி செய்ய, இளமைக்காலத்திலேயே பணத்தை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. நாம் ஓய்வு பெற்றதற்கு பிறகு பயன்படுத்தக்கூடிய பாடுபட்டு உழைத்த பணத்தை சேமிக்க பல்வேறு முதலீட்டு விருப்பத்தேர்வுகள் உள்ளன. இந்திய குடிமக்களுக்கள் பெரும்பான்மையோர், தங்கள் ஓய்வூதியத்திற்கான திட்டமிடலுக்கு பிரபல முதலீட்டு தேர்வாக நிரந்தரை வைப்பு நிதியையே தேர்ந்தெடுக்கின்றனர். நிரந்தர - வருமான முதலீட்டாளர்கள் தற்போது அதிக வட்டிக்கு நிறுவன FDயையும் கவனிக்கலாம். பஜாஜ் ஃபின்செர்வ்-ன் கடன் வழங்கும் மற்றும் முதலீட்டு உறுப்பான பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட், மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்பு நிதிக்கான தங்களின் வட்டியை 8.75% ஆக அதிகரித்துள்ளது.
பஜாஜ் ஃபின்செர்வ்-ன் கடன் வழங்கும் மற்றும் முதலீட்டு உறுப்பான பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட் குறைந்தபட்ச முதலீட்டு தொகையான ரூ. 25,000க்கும் சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. CRISIL ஆல் மதிப்பிடப்பட்ட 'FAAA/Stable' மற்றும் ICRA ஆல் மதிப்பிடப்பட்ட 'MAAA (Stable)' படி பஜாஜ் ஃபினான்ஸ் நிரந்தர வைப்பு நிதி, அசல் மற்றும் வட்டியை சரியான நேரத்தில் செலுத்தும் பாதுகாப்பு விஷயத்தில் அதிக தரம் வாய்ந்ததாக உள்ளது.
பஜாஜ் ஃபினான்ஸ் நிரந்தர வைப்பு நிதியின் முக்கிய அம்சங்கள் :
ஒட்டுமொத்த வைப்புநிதியை தேர்ந்தெடுக்கவும்
குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அசலுடன் சேர்த்து வட்டி பெறுவதையே ஒட்டுமொத்த வைப்புநிதி என்கிறோம் இதை ஒருவர் தேர்ந்தெடுத்தால் வட்டி வருமானம் அதிகரிக்கும்.
புதுப்பிதலினால் கூடுதல் வட்டி
நிரந்தர வைப்புநிதியில் முதலீடு செய்யப்பட்ட தொகை ஓய்வு பெற்றபிறகு பயன்படுத்துவதற்காக மட்டும் திட்டமிடப்பட்டு இருந்தால், ஒருவர் ஒவ்வொரு புதுப்பித்தலின்போதும் கூடுதலாக 0.10% வட்டியைப் பெற ஆட்டோ-ரெனுவல்( தானாகவே-புதுப்பித்தல்)-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
15 மாதங்களுக்கான சிறப்பு காலம்
வாடிக்கையாளர் அதிக தொகையை குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் 15 மாத வைப்புநிதி திட்டத்தை தேர்தெடுக்கலாம் மேலும் ரூ.1,00,000 லிருந்து தொடங்கும் வைப்பு நிதிகளுக்கு 7.85% வரை வட்டி பெறலாம்
பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட் :
பஜாஜ் ஃபின்செர்வ் குழுவின் கடன் வழங்கும் மற்றும் முதலீட்டு உறுப்பான பஜாஜ் பினான்ஸ் லிமிடெட், நாட்டில் 21 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட, இந்திய சந்தையில் பல்வேறு NBFCsகளில் பிரபலமான ஒன்றாகும். பூனாவைத் தலைமையகமாக கொண்ட, இந்த நிறுவனம் நுகர்வோர் நீடிக்கும் கடன்கள், லைஃப்ஸ்டைல் ஃபினான்ஸ், தனிநபர் கடன்கள்,சொத்து மீதான கடன், சிறு வியாபார கடன்கள், வீட்டு கடன்கள், கிரெடிட் கார்டுகள், இரு-சக்கர மற்றும் மூன்று-சக்கர வாகன கடன்கள், கட்டுமான இயந்திர கடன்கள், அடமானக்கடன்கள் மற்றும் கிராமப்புற கடன்களுடன் தங்க கடன்கள் மற்றும் ரிஃபினான்சிங் கடன்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வழங்குகிறது. இன்றைய நாளில் நாட்டிலேயே பிற NBFCs க்களைவிட FAAA/Stable அதிக கிரெடிட் மதிப்பு பெற்ற ஒரே நிறுவனமாக இது மதிப்பு பெற்றுள்ளது.
ஏதேனும் கேள்வி இருந்தால் பஜாஜ் ஃபினான்ஸ் FAQ பிரிவிற்கு செல்லவும் அல்லது பஜாஜ் ஃபினான்சின் கஸ்டமர் கேர் பிரதிநிதியை நேரடியாக அணுகவும்.
ஊடக தொடர்பு :
Ashish Trivedi
[email protected]
+91-9892500644
Bajaj Finance Ltd
Share this article