பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை 8.75% வரை உயர்த்தியது
புனே, இந்தியா, June 7, 2018 /PRNewswire/ --
- மூத்த குடிமக்கள் இப்போது 36 - 60 மாத முதலீட்டுக்கு 8.75% வட்டி ஈட்டலாம்
- தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு 36 முதல் 60 மாதங்கள் வரையான முதலீட்டுக்கு 8.65% வட்டி கிடைக்கும்
பூனா, ஜூன் 5, v2018. பஜாஜ் ஃபினெர்வ்ஸ் நிறுவனத்தின் கடன் மற்றும் முதலீட்டு நிறுவனமான பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட், தனது ஃபிக்சட் டெபாசிட்க்கான வட்டியை மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீதமாகவும், தற்போதுள்ள கடன் மற்றும் எஃப்.டி வாடிக்கையாளர்களுக்கு 8.65 சதவீதமாகவும் உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகிதத்தை கூட்டு வட்டி விருப்பத்தின் கீழும் கூட்டு வட்டி இல்லாத வருடாந்திர அடிப்படையிலும் வழங்குகிறது.. புதிய Qபிக்சட் டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு 8.10%க்கு பதிலாக 8.40% வழங்கப்படும்..
பஜாஜ் ஃபினான்ஸின் ஃபிக்சட் டெபாசிட் ICRAவின் MAAA (நிலையான) மதிப்பீடு' மற்றும் CRISILன் 'FAAA / நிலையான 'மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, சரியான காலத்தில் வட்டி செலுத்துதல் மற்றும் பிரதான பணத்தின் பாதுகாப்பு பற்றிய மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை இது குறிக்கிறது.
2014ம் ஆண்டில், பஜாஜ் ஃபினான்ஸின் ஃபிக்சட் டெபாசிட் வணிகம் ரூ.200 கோடியில் துவங்கியது. 2018ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதியன்று இது ரூ.7,569 கோடியாக உள்ளது. சில்லறை முதலீட்டாளர் சமூகம் மற்றும் நிதி ஆலோசகர்கள் இடையே இத்திட்டம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதற்கு இது சாட்சியாகும்.
பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட் ரூ. 1,00,000.முதல் முதலீடு செய்யும் 15 மாதத் திட்டத்தை துவக்கியுள்ளது. இதில் புதிய வாடிக்கையாளர்களுக்கு 7.85% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.20% வரை வட்டி விகிதம் இருக்கும்.
ஃபிக்சட் டெபாசிட் நிதியின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம்
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 8.40% லிருந்து 8.75% ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது 0.35% உயர்வு.
குறைந்தபட்ச வைப்புத்தொகை மற்றும் கால நிலையில் நெகிழ்ச்சி
பஜாஜ் பைனான்ஸ் ஃபிக்சட் டெபாசிட்களில் வாடிக்கையாளர்கள் ரூ. 25,000 முதல் முதலீடு செய்யலாம். சேமிப்பு காலம் 12 முதல் 60 மாதங்கள் வரை மாறுபட்ட அளவில் இருக்கலாம்.
15 மாத சிறப்பு காலம்
குறுகிய கால முதலீடாக அதிகபட்சம், 15 மாதங்களுக்கான வைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பித்து, ரூ. 1,00,000 முதல்,முதலீடு செய்து 7.85% ஈட்ட முடியும்.
பஜாஜ் ஃபினான்ஸ் லிமிடெட் குறித்து:
பஜாஜ் பிஸ்ஸெர்வ் குழுமத்தின் கடன் மற்றும் முதலீட்டு நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் இந்தியாவில் 21 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இந்திய சந்தையில் மிகவும் பரவலான NBFCகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பூனாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் நிதி சார்ந்த பொருட்களில், நுகர்வோர் கடன்கள், வாழ்க்கைமுறை கடன், தனிநபர் கடன்கள், சொத்துக்களுக்கு எதிரான கடன், சிறு வணிகக் கடன்கள், வீட்டுக் கடன்கள், கடன் அட்டைகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனக் கடன்கள், கட்டுமான உபகரணங்களுக்கான கடன்கள், பத்திரங்களுக்கு எதிராக கடன், கிராமப்புற கடன் வசதிகளாக தங்க நகைகளுக்கு எதிராகக் கடன்கள், வாகன மறு நிதியளிப்பு கடன்கள் ஆகியவை வழங்கப்படுகிறது.. தற்போது நாட்டில் உள்ள பல NBFC கலை ஒப்பிடுகையில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மிக உயர்ந்த கடன் மதிப்பீட்டான FAAA / நிலையைப் பெற்றிருப்பதில் பெருமிதம் கொள்கிறது.
மேலும் அறிய https://www.bajajfinserv.in/ வருகை தரவும் அல்லது +91-92660-02288ல் மிஸ்டு கால் கொடுக்கவும். T & C பொருந்தும்.
மீடியா தொடர்பு:
Ashish Trivedi
[email protected]
+91-9892500644
Bajaj Finance Ltd
Share this article