மும்பை, May 29, 2018 /PRNewswire/ --
அலைபேசியை - அடிப்படையாக கொண்ட பணம் செலுத்தும் நெட்வொர்க்குகளில் இந்தியாவின் மிகப்பெரும் நெட்வொர்க்காக விளங்கும் MoneyOnMobile, Inc. (OTCQB: MOMT), புதிய பயோமெட்ரிக்- அடிப்படையிலான ATM கேஷ் - அவுட் தீர்வு வெளியீட்டை அறிமுகப்படுத்தியது. முதல் கட்டத்தில், நிறுவனம் 3,000 பிரிவுகளை இயக்கியுள்ளது, மேலும் வரும் மாதங்களில் மேலும் 3,000 செயலகங்களை எதிர்பார்க்கிறது. அறிமுகப்படுத்தலுக்கு முன்னரே MoneyOnMobileக்கு இந்த பிரிவில் 5,000 MOM ATM பிரிவுகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
(Logo: https://mma.prnewswire.com/media/650303/MoneyOnMobile_Logo.jpg )
இந்த புதிய பயோமெட்ரிக் MOM ATM, தனது நமது பாங்கிங் பார்ட்னர்களின் ஓபன் பேங்கிங் APIs மற்றும் இந்திய அரசாங்கத்தின் தேசிய அடையாள அமைப்பாக கருத்தப்படும் ஆதார்- இரண்டையும் இணைக்கிறது. நுகர்வோர்கள் தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை தங்கள் கைவிரல்களை ஸ்கேன் செய்வதன் மூலம் பெற முடியும் இது புதிய பயோமெட்ரிக் ரீடர் மூலம் சாத்தியமாகிறது- இந்த கைவிரல் பதிவு ரீடர் நுகர்வோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் டெபிட் கார்டுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் முந்தைய MOM ATM மற்றும் டெபிட் கார்டு ஸ்வைப் செய்வதை பயன்படுத்தும்போது, பங்குபெறும் கூட்டாளிகள் பணத்தை தங்களின் பணப்பையிலிருந்து அளிக்கிறார்கள் . MoneyOnMobile's பணம்செலுத்தல் தளம் நமது சில்லறை வியாபாரிகள் மற்றும் நமது வங்கி கூட்டாளிக்ள் இருவரையும் இணைக்கிறது மேலும் முழு பணபரிவர்த்தனையையும் தடையற்றதாக ஆதார் அடையாள அமைப்பு மாற்றுகிறது.
ஆதாரால் இயக்கப்பட்ட பணம் செலுத்தல் முறை (Aeps) , இந்திய அரசாங்கத்தின் முயற்சி, இதன் மூலம் ,வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கை அணுக தங்கள் அடையாளமாக ஆதார்- ஐபயன்படுத்த முடியும். பணம் செலுத்துதல், பணம் பெறுதல் மற்றும் இருப்பு விசாரணை போன்ற அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை வங்கி கணக்கு வைத்திருப்பவர் செய்ய முடியும்.
'நமது MOM ATM தயாரிப்பு வரிசை மற்றும் மொத்த எண்ணிக்கையிலான பயன்படுத்தல்களையும் 2018க்குள் விரிவுபடுத்துவதை நமது நோக்கமாகும் , மேலும் இந்த பயோமெட்ரிக் அடிப்படையிலான MOM ATM கேஷ்அவுட் தீர்வு நமது நோக்கத்தை அடைவதற்கான வலிமையான படியாகும். ரோல் அவுட்டிற்கு முன்னர் (இயங்குவதற்கு முன்னர்) நம்மிடம் தோராயாமாக5,000 MOM ATM பிரிவுகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. வரும் மாதங்களில் புதிய பயோமெட்ரிக் அடிப்படையிலான MOM ATM உடன் இந்த எண்ணிக்கையானது 11,000 க்கும் மேல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, மற்றும் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் 30,000 பிரிவுகள் இயங்க வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது' இவ்வாறு ஹெரால்டு மான்ட்கோமெரி (Harold Montgomery) , CEO and Chairman, MoneyOnMobile கூறினார்.
ரஞ்சீத் ஓக் Ranjeet Oak, Head-India Operations, MoneyOnMobile பேசுகையில் , 'MoneyOnMobile ஆல் AePS - அடிப்படையிலான பயோமெட்ரிக் சேவை அறிமுகம் , இந்தியாவெங்கும் 700க்கும் அதிகமான நகரங்களில் பரவியிருக்கும் நமது சில்லறை வியாபார கூட்டாளிகளிடம் ஒருமுறை மட்டும் வருகை தருவதால் தங்கள் வங்கி கணக்கை எளிதாகவும் விரைவாகவும் அணுக, நமது குறைவான வங்கி நுகர்வு கொண்ட நுகர்வோர்களுக்கு உதவி செய்கிறது. எங்களது சில்லறை வியாபாரிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சேவை , அவர்களின் பரிந்துரைகளை விரைவாக மாற்றியமைக்க முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.' என்று கூறினார்.
'AePS-based MOM ATM அறிமுகப்படுத்தியதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம் இது இந்தியாவில் குறைவான வங்கி நுகர்வு கொண்ட600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இறுதி கட்ட நிதி சேவைகளை வழங்கும் மற்றொரு சேவையாகும். நமது சில்லரை விற்பனையாளர்களும் MoneyOnMobile இரண்டும் , கேஷ்-அவுட் பரிவர்த்தனை செய்யப்படும் அளவு அடிப்படையில் வருவாய் பெற முடியும், இது நமது MOM ATM வருவாயில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும், என்று Will Dawson(வில் டாசன்) , Chief Operating Officer, MoneyOnMobile கூறினார்
சமீபத்திய கையடக்க MOM ATM முறை போலவே AePS-அடிப்படையிலான MOM ATM பயன்படுத்தியும் நுகர்வோர் பணத்தை பெறலாம், ஆனால் இயந்திரத்தின் மூலமாக கார்டை தேய்த்து பணத்தை பெறுவதற்கு பதிலாக பயோமெட்ரிக் ரீடர்-ல் தங்கள் கைவிரல் பதிவை நுகர்வோர் வைக்க வேண்டும். அமைப்பு, ஒருமுறை அவர்களின் அடையாளத்தை அங்கீகரித்தபிறகு, சில்லறை வியாபாரி கேஷ் அவுட் விண்ணப்பதை ,கையடக்க MOM ATM போலவே செயல்படுத்தலாம்
MoneyOnMobile, Inc பற்றி.
MoneyOnMobile, Inc., என்பது இந்தியாவை முன்னிலைப்படுத்திய மொபைல் பணம் செலுத்தல்களுக்கான தொழில்நுட்பமாகும் மேலும் மொபைல் பணம் செலுத்தல் சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். இந்தியர்கள் தங்கள் அலைபேசியை பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த அல்லது ஒரு அலைபேசியிலிருந்து மற்றொரு அலைபேசிக்கு நிதியை மாற்ற MoneyOnMobile உதவுகிறது. இதனை எளிதான எஸ்எம்எஸ் உரை (டெக்ஸ்ட்) செயல்பாடு அல்லது MoneyOnMobile அப்ளிகேஷன் அல்லது இன்டர்நெட் சைட் மூலமாக பயன்படுத்தலாம். இந்தியாவெங்கும் MoneyOnMobile க்கு 350,00க்கும் அதிகமான சில்லறை விற்பனை இடங்கள் உள்ளன.
பாதுகாப்பான துறைமுகம் அறிக்கை
இந்த அறிவிப்பானது ஏதேனும் நிறுவனத்தின் எந்தவொரு பத்திரங்களையும் வாங்குவதற்கான சலுகையையோ அல்லது விற்பதற்கான வாய்ப்பையோ கொண்டிருக்கவில்லை. இந்த வெளியீடானது சில முன்னோக்கு அறிக்கைகளை கொண்டுள்ளது அது ஆபத்துக்கள் மற்றும் நிச்சயமின்மை கொண்டுள்ள நமது சமீபத்திய எதிர்பார்ப்புகள், முன்கணிப்புகள் மற்றும் ஊகங்கள் அடிப்படையிலானது. இன்றைய நாள்வரை நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முன்னோக்கு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 6, 2017 ஃபைல் செய்யப்பட்ட நமது ஃபார்ம் 10-கே யில் வெளியிடப்பட்டுள்ள ஆபத்து காரணிகள் உள்ளிட்ட நமது வர்த்தகத்துடன் தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் நிச்சயமின்மை காரணமாக அம்மாதிரி முன்னோக்கு அறிக்கைகளில் அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் உட்கிடக்கையாய் உள்ளதைவிட நமது உண்மையான முடிவுகள் பொருள்ரீதியாக வேறுபடலாம் .எதிர்காலத்தைப் பற்றிய நமது எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், நோக்கங்கள் அல்லது கோட்பாடுகள் ஆகிய அறிக்கைகள் உள்ளிட்ட முன்னோக்கு அறிக்கைகள் மற்றும் 'எதிர்நோக்கு' , 'நம்பிக்கை', 'செய்யலாம்', 'மதிப்பிடு', 'உளங்கொல்', 'கூடும்', 'செய்யலாம்' மற்றும் 'என்று' அல்லது அதைப் போன்ற வார்த்தைகள் முன்னோக்கு வார்த்தைகளாக அடையாளப்படுத்தப்படும். புதிய தகவல், எதிர்கால நிகழ்வுகள் அல்லது பிறவற்றின் முடிவினால் இந்த செய்தி வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள தகவலை புதுப்பிப்பதற்கு நாங்கள் எந்த பொறுப்பும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
Web site: http://www.MoneyOnMobile.in
Twitter: https://twitter.com/MoneyOnMobile
Facebook: https://www.facebook.com/MoneyOnMobile.Official/
LinkedIn: https://www.linkedin.com/company/moneyonmobile
YouTube: https://www.youtube.com/c/MoneyOnMobileofficial
ஊடக தொடர்பு :
Navaz Damania
[email protected]
+91-9167122661
Vice President - Corporate Communications
MoneyOnMobile
.
Share this article